Friday, June 14, 2019

நூதனசாலைக்குள் நுழைய **** ரூபாய் ! (பயணத்தொடர், பகுதி 104 )

அப்படி இப்படின்னு மணி ரெண்டாகப்போகுது..... இவ்ளோ நேரமா இந்த புத்தர் கோவிலில் இருந்துருக்கோம்?
இதுவே குறைச்சல்தான்.... நின்னு நிதானமாப் பார்க்கணுமுன்னா ஒரு முழுநாள் ஒதுக்கணும்!
பகல் சாப்பாட்டுக்கு எங்கியாவது போகலாமேன்னதுக்கு  , நம்ம மஞ்சு சொல்றார், 'ஒரு  ஃபுட் கோர்ட் இருக்கு'ன்னு....   சரி ன்னு அங்கே போறோம். பார்க்கிங் கிடைப்பது குதிரைக்கொம்பு ! வெளியே சாலை ஓரத்தில் நோ பார்க்கிங்கில் வண்டியை ஓரங்கட்டிட்டு அங்கேயே காத்திருக்கோம். நமக்கு முன்னால்  இதே போல நிறைய வண்டிகள் தலைப்பக்கம். ட்ராஃபிக் போலீஸ் வந்தால்  வண்டியை நகர்த்திக்கலாம்....   பார்க்கிங் லாட்டில் இருந்து வெளியே வரும் ஒவ்வொரு வண்டிக்கும் நம்ம வரிசையின் நீளம் குறைஞ்சுக்கிட்டே போய் கடைசியில் நமக்கும் இடம் கிடைச்சது.
பெரிய மால்தானாம் இந்த இடம். நமக்கு ஷாப்பிங் செய்ய வேணாம் என்பதால் உள்ளே போகாமல் வெளியே இருக்கும் சாப்பாட்டுக்கடைகளில் நோட்டம் விட்டோம்.  மஞ்சுவும், நம்மவரும் அவுங்களுக்குத் தேவையானவைகளை வாங்கிக்கிட்டாங்க. உணவின் நிறம் பார்த்தே பயந்து போயிட்டேன். இவ்ளோ காரம் என்னால் ஆகாது.....  ஒரு நார்த் இண்டியன் கடையில் 'ஸேவ்' பூரிக்குச் சொன்னேன்.  என்னைக் காப்பாத்தட்டும் :-)  அதனுடன் ஒரு ஐஸ்க்ரீமும் சேர்ந்தே காப்பாத்துச்சு!
நாங்க மூணுபேர் சாப்பிடும்போது,  காலியா இருந்த இன்னொரு இருக்கைக்கு ஒரு பெண்மணி வந்து' உக்காரலாமா'ன்னு கேட்டுட்டு உக்கார்ந்தாங்க. அவுங்க கையிலும் ஸேவ் பூரி!  ஆஹா....  பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னாங்க....    கணவர் இங்கே ஒரு  கம்பெனி நடத்தராறாம். அடிக்கடி வந்து போகும் டெல்லிவாசி.  நம்ம பயணத்திட்டத்தைக் கேட்டவங்க,  ஒரு சில ஹொட்டேல்களைப் பரிந்துரைச்சாங்க. பெருமாள் நமக்குத் தகவல் தர அனுப்பி இருக்கார்! விவரம் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டார் 'நம்மவர்'.

கொழும்பு ம்யூஸியம் போறோம் இப்போ! மசூதி, ஸ்டேடியம் எல்லாம்  போற போக்கில் பார்த்துக்கிட்டே ....  அதிக தூரமில்லை.  ஒரு கி மீட்டர்தான்.  பிரமாண்டமான வளாகம்.  பிரிட்டிஷ் கட்டடக்கலை.  ரெண்டு, மூணு  மாடிகள்தான் மேலே போகணும். ஆனால் நிறையக் கட்டடங்கள் அடுத்தடுத்துன்னு   பரவலா இருக்கே!
1877  ஜனவரி முதல்தேதி ஆரம்பிச்சுருக்காங்க. வரலாற்றின் சுருக்கம் வழக்கம்போல் மூன்று மொழியில். நான் தமிழில் உள்ளதை இங்கே போட்டுருக்கேன் பாருங்க !


வெளிநாட்டவர்களுக்கு ஆளுக்கு ஆயிரம் ரூ டிக்கெட்!   (இங்கே எங்கூர்லே யாரா இருந்தாலும்  இலவசம்தான் என்பது மனசுக்குள் வந்து போச்சு! )
பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்  வந்துருக்காங்க. அதென்னவோ பயணங்களில் எந்த ஊரிலாவது ம்யூஸியம்போனா, அன்றைக்கு அங்கே பள்ளிப்பிள்ளைகளும் வர்றநாளாவே அமைஞ்சுருது! நல்லதுதான். சரித்திரம் கொஞ்சமாவது தெரிஞ்சுக்கறது ரொம்பவே நல்லதுதான்!
அம்மிக்கல்லை இனி ம்யூஸியத்துலேதான்  பார்க்கணுமுன்னு கேலி செய்வோமே....   அது உண்மைதான் :-)
கற்கால குகை மனிதர்கள்னு இருந்த  காட்சியில், அப்போதைய மனிதர்கள் அசப்பில் எங்கூர் மவொரி மக்கள் (அந்தக்காலத்தில் இப்படி இருந்தாங்கன்னு எங்கூர் ம்யூஸியத்தில்  வச்சுருக்காங்க. அதைச் சொல்றேன்.... )போலவே இருக்காங்க. ஆதிமனிதர்களுக்கு ஒரே ஜாடை போல!
பொதுவா நாம் ம்யூஸியங்களில் பார்க்கும் கல், உலோகம், இன்னும் மற்ற பொருட்களினால் செய்யப்பட்ட ஹிந்து மதக் கடவுளர் சிலைகள்  ஏராளமா இருந்தாலும்,  விதவிதவிதமான புத்தர் சிலைகளும்  ஏகப்பட்டவை! பழங்கால ஓவியங்களுக்கும்  கணக்கு வழக்கில்லை.


விஷ்ணுதுர்கை
எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன்... என்ற வகையில்   கிடைச்ச புள்ளையார்  சிலைகள் மட்டும் ஒவ்வொன்னும் ஒரு  ரகம்!   ஹைய்யோ !!!  மொதல்லே புள்ளையாரைக் கும்பிட்டுத்தான் எதையும் செய்ய ஆரம்பிக்கணும் என்பது முன்னோர்கள் சொல்லி வச்சதில்லையோ !!! ஸோ....  இவர்  ஆதிகாலத்துலேயே வந்துட்டார் இல்லே!
மூஷிகவாஹனம்!நம்ம பெரிய திருவடி, அருமை!   இதுவரை இப்படிப் பார்த்த நினைவில்லை!  இவருக்கு அடுத்தாப்லே பெருமாள் !

ஒன்பதாம் நூற்றாண்டு சூரியன்! தலைக்குப்பின் சூரியக்கதிர் ?

அவலோகிதேஸ்வரர்!  என்னமா உக்கார்ந்துருக்கார் பாருங்களேன்!
 

அலங்காரப் பாத்திர வகைகளில் ஒரு சொம்பு அருமை!

(அல்மோஸ்ட் இதே போல ஒன்னு நம்மாண்டை இருக்குல்லே? அல்ப சந்தோஷம்தான்!  ஆனால் அவ்ளோ வேலைப்பாடெல்லாம் இல்லையாக்கும்.....   )

அந்தக் கால கிராம வாழ்க்கை எல்லாம் அப்படியே லைஃப் சைஸில் அழகா அமைச்சுருக்காங்க.  உழவு மாடு,  இங்கே எருமையா என்ன ????
( இனி யாரையும்  ஒன்னுத்துக்கும் லாயக் இல்லாத எருமைன்னு இனி சொல்லப்டாது !  )
ஒரு சித்திரம்!  யானைகள் பூட்டி ஏர் உழுதல் !

முகமூடி போட்டுக்கிட்டு பேய் ஓட்டறாங்க.


இந்தமாதிரி வேறவகை முகமூடிகளை நாம் பாலி பயணத்தில் பார்த்தது நினைவிருக்கோ?
இலங்கை கண்டியின்  அரசகுலத்தில் ஏழு மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செஞ்ச சிம்மாசனம் இது!  கடைசி மன்னர் ஸ்ரீவிக்ரம ராஜசிங்கே !  .  பிரிட்டிஷ் அரசு இலங்கையைப் பிடிச்சுக்கிட்ட   சமயம் அவர்களின் (நல்லதையெல்லாம் கொள்ளையடிச்சுக் கொண்டுபோகும் ) குணப்படி இந்த சிம்மாசனத்தையும்  கொண்டுபோயிட்டாங்க.  நம்ம ஷாஜஹானின் மயிலாசனம், சத்ரபதி சிவாஜியின் வீரவாள் எல்லாம் நினைவிருக்கோ?

இலங்கையரின் நல்லூழ்.... எட்டாம் எட்வர்டு திருப்பிக் கொடுத்துட்டாராம்.

இன்னும் பல பகுதிகள் இருக்குன்னாலும்,  எவ்ளோ நேரம் செலவழிச்சாலும் பார்த்து முடிக்க முடியாதுன்றதாலும், பார்த்தவரை போதுமுன்னு ஒரு நாலரை போல கிளம்பிட்டோம்.

நாம் அரும்பொருட் காட்சியகம்னு  சொல்றதைத்தான் இங்கே  நூதனசாலைன்னு சொல்றாங்க.
நாளைக்குக் காலை கொழும்புவை விட்டுப்போறோம் என்பதால்  முக்கியமான இன்னொரு இடத்தை இன்றைக்குப் பார்த்தால்தான் உண்டு !

தொடரும்....  :-)

11 comments:

said...

சட்டெனப் பார்த்தபோது அந்த கற்கால மனிதர்கள் கையில் ஸ்மார்ட்போன் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றியது!

சொம்பு அழகு.

said...

முகமூடி போட்டுக்கிட்டு ஏன் தெரியுமா பேய் ஓட்டறாங்க? பேய்க்கு தன்னை ஓட்டுவது யார் என்று அடையாளம் தெரியக்கூடாது என்றுதான்!!! பின்னர் வந்து தொல்லை கொடுக்குமே... ஹிஹிஹி...

said...

அருமை நன்றி

said...

எத்தனை எத்தனை பொருட்கள்.... தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆஹா.... பேயை ஏமாத்த இப்படி ஒரு ஐடியாவா!!!

மலேசிய நண்பர்கள் சொன்னது வீட்டுக்குள் நுழையும்போது முதலில் பார்வையில் படும்வகையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைச் சுவரில் மாட்டி வைக்கணுமாம். பேய் பிசாசுகள் வீட்டுக்குள் வரும்போது தங்களையே கண்ணாடியில் பார்த்துட்டு, இந்த வீட்டில் ஏற்கெனவெ பேய் இருக்கேன்னு ஓடிப்போயிருமாம்.

நம்ம வீட்டுக்கு வரும் பேய்க்கு இன்னும் கஷ்டம் அதிகம். கண்ணாடியைச் சட்டை செய்யாம வந்துருச்சுன்னா.... அதைவிடப்பெரிய பேய் இருப்பதைப் பார்த்துட்டு துண்டைக் காணோம், வெள்ளைத்துணியைக் கானோமுன்னு ஓட வேண்டி இருக்கும்!

சொம்பு அழகா இருந்து என்ன செய்ய? மரத்தடி ஒன்னு கிடைக்கலையே.... ஜமுக்காளம் கூட வச்சுருக்கேந்தான் !

கற்கால மனிதன் கையில் செல்..... முதல் செல்ஃபோனைக் கண்டு பிடிச்சவன் டமிலன்தான் இல்லே !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


நிறையப் பார்க்க வேண்டிய இடம். நம்ம பயணத்திட்டம்தான் சரி இல்லை. ஒருநாள் மட்டும் கொழும்புன்னு.... ரொம்பவே ஓடவேண்டியதாப் போயிருச்சு !

said...

மிக அருமை. எத்தனையோ பொருட்களை நீங்கள் பார்த்து எங்களுக்குக் காண்பித்துவிட்டீர்கள்.

ஆயிரம் ரூபாய் என்பது இலங்கை ரூபாய் இல்லையோ? நம்ம ஊர் கணக்குக்கு 600-700 வருமா?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பொதுவா சொல்றது நம்ம ஒன்னு அங்கே ரெண்டுன்னு.... அப்படிப் பார்த்தால் 500 வரும் :-)

said...

நம்ம பெரிய திருவடி, அருமை!....

அப்படி தான் எனக்கு தோணுச்சு கீழே நீங்களே சொல்லிடீங்க ...


அருமையான அருங்காட்சியகம்...

said...

மியூசியம் எடுத்த படங்கள் அருமை.