Wednesday, November 21, 2018

கரஞ்சி ஏரியில்...... !!!!!(பயணத்தொடர், பகுதி 36 )

மைஸூரு நோக்கிப் போறோம்.  சாலையையொட்டியே கபினி ஆறு போகுது!   சும்மாச் சொல்லக்கூடாது, ரொம்பவே பசுமை! அங்கங்கே சிவன் கோவில்கள்.  முகப்புவாசல் மேல் உக்கார்ந்துருக்கும் நந்திகள்.



ஒரு இடத்தில்  காடு போல் மரங்கள். அதுலே பறவைகள் எக்கச் சக்கம்! நாரைகள்தான் பெரும்பாலும்.....




வெறும் இருபத்தினாலு கிமீ பயணம்தானே...  அரைமணியில் மைஸூரு எல்லையைத் தொட்டாச்சு.  ஊருக்குள்ளே போன கொஞ்சநேரத்தில் கோபுரத்தோடு ஒரு கோவில். இப்ப மணி பனிரெண்டே முக்கால். கோவில்  மூடியிருப்பாங்க. அப்புறம் பார்க்கலாமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டேன்.
நாம் தங்கியிருந்த  அதே ராடிஸ்ஸன் ப்ளூவுக்கு முதலில் போனோம்.  அசோக், அவுங்க ட்ராவல் டெஸ்க்கில்   ஊர் திரும்பின விவரம், மற்ற சமாச்சாரங்கள் எல்லாம்  சொல்லப்போயிட்டார்.  நம்மை சாயங்காலம் ஏர்ப்போர்ட்டில் கொண்டு விடுவதுவரை அவருக்கு ட்யூட்டி.  மறுநாளில் இருந்து அவருக்கு வேலை யார்கூடவோ.....
நாங்களும் போய் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டோம்.  பகல் சாப்பாட்டுக்கு  அடுத்தாப்லெ இருக்கும் அம்ருதா ரெஸ்ட்டாரண்டுக்குப் போனோம்.அவரவருக்கு வேண்டியதை வாங்கியாச். எனக்கு இட்லிவடை. மடிகேரியை விட்டது முதல் இட்லி கிடைக்கவே இல்லைப்பா...  கூடவே ஒரு லஸ்ஸி.

 சாப்பிட்டானதும், கரஞ்சி பார்க்  போகலாமுன்னு 'நம்மவர்' சொன்னார்.  மகளுக்குக் கம்பி உள்ள மூக்குத்தி வாங்கணும். சென்னையில் கிடைக்கலை. இங்கே இருக்கான்னு  பார்த்துட்டுப்போகலாமுன்னு  சொன்னேன். போனால்....    ஒரு சில நகைக்கடைகள்தான் திறந்துருக்கு. ஞாயித்துக் கிழமைதான் காரணம்.

 நான் தேடும் வகையில் ஒன்னும் கிடைக்கலை.  ப்ச்...

சரி.  பார்க்குக்கே போகலாமுன்னா...போறவழியில் நான் போகணுமுன்னு  கொஞ்ச நேரத்துக்கு முன்னே  நினைச்சுருந்த கோவிலே  கண்ணில் பட்டது.  உள்ளே இருந்து எட்டிப் பார்க்கிறார் ஆஞ்சி.  'ஆஹா...கோவிலுக்குப் போயிட்டு, அப்புறமா பார்க்'ன்னதும், அது தனியார் கோவில்னு சொன்னார் அசோக்.   வண்டியைத் திருப்பிக் கோவிலாண்டை போனால்.... உள்ளே போகும் கேட் மூடி இருக்கு. மூணு மணிக்குத் திறப்பாங்களாம். சரி, பார்க்குக்கே போகலாம்.

அதென்னவோ சிலசமயம் இப்படிச் சுத்திச்சுத்தி வட்டம் போடும்படியா ஆகிருது.  கைவசம் கொஞ்சநேரமும் பாக்கி இருக்கே!
ஆளுக்குப் பத்து ரூபா டிக்கெட். கெமெராவுக்கு ஒரு  பத்து. அப்புறம் நம்ம தண்ணி பாட்டிலுக்கு ஒரு பத்து!  பாட்டிலுக்கு மேலே ஒரு ஸ்டிக்கர் ஒட்டிடறாங்க. நாம் பாட்டிலை உள்ளே எங்கேயும் தூக்கிப்போடாமத் திருப்பிக்கொண்டு வந்து காமிச்சால் நம்ம பத்து ரூபாய், நமக்குத் திரும்பக் கிடைச்சுரும். நல்ல ஐடியா இல்லே?  உள்ளே ப்ளாஸ்டிக் குப்பைகள் இருக்காது!









உள்ளே அழகா,நீட்டாத்தான் இருக்கு. ஒரு இருவது நிமிட் சுத்தியிருப்போம், மழை பிடிச்சுக்கிச்சு. அப்ப நாம் இந்த கரஞ்சி ஏரியின் படகுத்துறையாண்டே  வந்துருக்கோம்.  மழைக்கு ஒதுங்க இடமில்லை.  பையில் இருந்த ஒரு குடைக்குள் இருவர். பப்பாதி நனைஞ்சாச்சு.


அங்கிருந்த ஒரு பெஞ்சில், ஒரு பெண் குடையைப்பிடிச்சபடி உக்காந்து செல்ஃபோனில் நாத்தனார் பற்றி யாருக்கோ பேசிக்கிட்டே இருக்காங்க. இருவது நிமிட் விடாமப் பேசுறாங்கப்பா! தமிழ் இனிமையா?
மழையும் விட்டபாடில்லை, பேச்சும் விட்டபாடில்லை. கொஞ்சம் வேறெங்காவது நகர்ந்து போகவும்  காலி மரத்தடி இல்லை.  எல்லாம் ஃபுல் !  கொஞ்சம்  மழை 'மட்டும்' வலிமை இழந்த  விநாடி, பரபரன்னு நடந்து முகப்புக்கே வந்துட்டோம்.  போதும் பார்க். தண்ணிபாட்டில் காசை வாங்கிக்கிட்டுக் கிளம்பி கோவிலுக்குப் போலாம், வாங்க !

தொடரும்.......... :-)

6 comments:

said...

நன்றி

said...

தண்ணீர் பாட்டில் உத்தி அருமை.

said...

பதிவுல முதல்ல பாராட்ட வேண்டியது.... தண்ணி பாட்டில் திட்டம். நம்மூர்ல வேறொரு காரணத்துக்காக ஸ்டிக்கர் ஒட்டி கெட்ட பேர் வாங்குனாங்க. இவங்க நல்லதுக்காக ஸ்டிக்கர் ஒட்டி நல்ல பேர் வாங்குறாங்க. இதை எல்லா சுற்றுலா ஊர்களும் கடைப்பிடிக்கலாம்.

இந்த மாதிரி எடங்களுக்குப் போறப்போ மழைக்காலம் தவறான காலம். மழை பிடிச்சுக்கிட்டா ஒன்னும் பாக்கமுடியாது.

கர்நாடகாவில் இட்லி கெடைக்கலையா? அங்கதான் அரிசிரவையைப் போட்டு உதிர்ர மாதிரி இட்லி அவிச்சு இனிப்புச் சாம்பார்ல மெதக்கவிட்டுத் தருவாங்களே. ஏன் கெடைக்கலைன்னு தெரியலை.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

இங்கே பல இடங்களில் ப்ளாஸ்டிக் தடை இருப்பதைப் பார்த்தேன். ரொம்ப நல்ல சமாச்சாரம். இதனால் பல இடங்கள் சுத்தமாகவும் இருக்கு!

இவ்வளவு விழிப்புணர்வும், அறிவிப்புகளும் நம்ம பக்கங்களில் இல்லையே..... :-(

said...

வாங்க ஜிரா.

ரொம்ப நல்ல சமாச்சாரம் அது! இதையும் மீறி அங்கிருக்கும் குப்பைகள் ஒருவேளை நம்மாட்கள் போட்டதாகத்தான் இருக்கணும்.


மழைக்காலம் சல்யம்தான். ஆனால் எவ்ளோன்னுதான் கவனிச்சுப்பயணிக்கறது சொல்லுங்கோ. கிடைப்பது கிடைக்கட்டுமுன்னு இப்பெல்லாம் தோணிப்போச்சு. இங்கே குளிர்னு அங்கே வந்தால்... கொடிய வெயில். இல்லைன்னா இப்படி ஒரு மழை....

இட்லி கிடைக்காமல் என்ன? நாம் தங்கி இருந்த இடங்களில் அதுவும் காட்டுக் கேம்ப்களில் தான் இல்லை. சாதாரணமா ஊருக்குள் இருக்கும் ஹொட்டேல்களில் கிடைக்கறதே! நம்ம அசோக் அப்பப்ப ஊருக்குள் போய் சாப்பிட்டு வந்துருக்காரே...