அதான் எல்லா விசேஷ தினமும் இன்னும் ஒரு வாரத்துக்கு இல்லைதானே? இன்றைக்குப் பூண்டு போட்டக் குழம்பைச் செஞ்சுடலாமா?
நம்ம வீட்டில் பூண்டு உபயோகம் கொஞ்சம் அதிகம்தான். பூண்டு சலுகை விலையில் கிடைக்கும்போது வாங்கியாந்து, உரிச்சுட்டு அப்படியே ஃப்ரீஸ் பண்ணிக்கலாம். இது ஒன்னோட ஒன்னு ஒட்டாம ஃப்ரீ ஃப்ளோவாத்தான் உறையும். தேவைப்படும்போது ஒரு கை அள்ளிக்கலாம் :-)
நெல்லுக்குத்த மாவரைக்க நீரிரைக்க மெசினு வரிசையில் பூண்டு மெசினு ஒன்னு நம்மாண்டை இருக்கு.
என்ன ஏதுன்னு உங்களுக்குச் சொல்ல நேத்து படப்பிடிப்பும் நடத்தியாச்:-)
போனவாரம் நாலு பொதி, ஒவ்வொன்னும் 400 கிராம் வாங்கிவந்து, முந்தாநாள் மெசினு வச்சு உரிச்சுதும் எடை பார்த்தால் 1427 கிராம்! நாட் பேட் . ஒரு 11% தான் தோல்.
மெசினு இல்லையா? நோ ஒர்ரீஸ்..... ஹாட் ஏர் அவனில் ஒரு மூணு நிமிட்ஸ் (225 டிகிரி) வச்சு எடுத்தால் தோலைச் சுலபமாக் கழட்டி விட்டுடலாம் :-)
தினம்தினம் சமையல் செய்யறது கூடப் பிரச்சனை இல்லை.... ஆனால் என்ன சமைக்கலாமுன்னு முடிவு செய்யறதைப்போல் தலைவலி வேறொன்னும் இல்லை....
நம்மவரிடம் கேட்டேன்... என்ன சமைக்கலாமுன்னு....
பூண்டுக் குழம்புன்னார்! ஓக்கே.... டன்!
பேன்ட்ரியை நோட்டம் விட்டப்பக் கொஞ்சம் சுண்டைக்காய் வத்தல் போன பயணத்துக்கு முன் போன பயணத்துலே வாங்கியாந்தது... கொஞ்சூண்டு பாக்கி இருக்கு. போன பயணத்துலே கொண்டு வந்த பொட்டலத்தைத்தான் குப்பையிலே கடாசிட்டாங்களே... ஏர்ப்போர்ட்லே :-( நாட்டுக்கே ஆபத்து உண்டாக்கும் மினி குண்டூஸ்?
சரி. இனி குழம்பலாம் வாங்க :-)
தேவையான பொருட்கள்:
புளி ஒரு நெல்லிக்காய் அளவு. ஊற வச்சுக் கரைச்சு வச்சுக்குங்க.
தக்காளி மூணு
வெங்காயம் பெருசா இருந்தால் ஒன்னு. சின்னதுன்னா ரெண்டு.
பூண்டு பற்கள் உரிச்சது ஒரு கைப்பிடி அளவு.
சுண்டைக்காய் வத்தல் கால் கப்
(நம்ம வீட்டுக்குன்னு தனி அளவைகள் இருக்கு என்பதால் புளி க்யூப் ஒரு நாலு. தக்காளி வெங்காய வதக்கல் க்யூப் ஒரு ஆறு )
இன்னும் கொஞ்சம் ருசியா இருக்கட்டுமேன்னு ஒரு ரெட் வெங்காயமும் சேர்த்தேன்.
குழம்புப்பொடி மூணு டீஸ்பூன் (நம்ம வீட்டுக்குழம்புப் பொடி கொஞ்சம் மைல்ட். உங்களுக்கு விருப்பம் என்றால் குழம்புப்பொடிக்குப் பதிலா ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ரெண்டு டீஸ்பூன் மல்லித்தூள் சேர்த்துக்கலாம்)
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
உப்பு ஒரு டீஸ்பூன் (நம்ம வீட்டுலே உப்பு குறைவு. நீங்க உங்க ருசிக்குச் சேர்த்துக்கலாம்)
நல்லெண்ணெய் ஒரு ஏழெட்டு டேபிள் ஸ்பூன் . ( சமையல் எண்ணெய் உங்களுக்கு எது வசதியோ அதையே பயன்படுத்தலாம்)
கறிவேப்பிலை,
கடுகு அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு கால் டீஸ்பூன் (ஒரு வாசனைக்குத்தான்)
பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
வெந்தியம் அரை டீஸ்பூன் (நான் கொஞ்சம் வெந்தியத்தை ட்ரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைச்சுத் தூளாகவும் வச்சுருக்கேன்)
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் ஏத்துங்க. தீ மிதமா எரியட்டும். எண்ணெய் ஊத்திக் காயவிடுங்க. எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து, கடுகு வெடிச்சதும் வெந்தியம், பெருங்காயத்தூள், சுண்டைக்காய் வத்தலைப் போட்டு வறுத்துக்கணும். ஆச்சா? இப்போ கறிவேப்பிலை சேர்க்கலாம்.
பூண்டு & வெங்காயம் சேர்த்து வதக்கணும். இதுக்கு ஒரு நாலைஞ்சு நிமிட்ஸ் ஆகலாம்
மஞ்சள் தூள், உப்பு சேர்க்கலாம் இப்போ. ஒரு நிமிட் ஆனதும் குழம்புப்பொடி சேர்த்து வதக்குங்க. கடாயில் இருக்கும் எண்ணெயிலேயே வதங்குனால் மிளகாய் நெடி போயிரும்.
அடுத்ததாக சேர்க்க வேண்டியது அரிஞ்சு வச்ச தக்காளித்துண்டுகள். (நான் எடுத்து வச்ச தக்காளி வெங்காய க்யூப்களைச் சேர்த்தேன். அடுத்து புளி க்யூப்ஸ் )
ஒரு கிளறு கிளறிட்டு, புளிக் கரைசல் சேர்த்துக் கூடவே கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க விடணும். ஒரு மூடியும் போட்டு வச்சுருங்க. அப்பப்பப் பார்த்துக் கொஞ்சம் கிளறிக்கொடுக்கணும் கேட்டோ.... இல்லைன்னா தண்ணீர் இல்லாம அடிப்பிடிச்சுரும்.
நாலு கொதி கொதிச்சவுடன், முந்திரிப் பருப்புகள் (!) மிதக்கும் பூண்டு, வத்தல் குழம்பு ரெடி!!
பூண்டு சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள், இதையே பூண்டை விட்டுட்டுச் செஞ்சுக்கலாம். வெறும் வத்தல் குழம்பு ரெடி :-)
குழம்புப்பொடி நம் வீட்டு வகை:
முந்தி அதாவது இந்தியாவில் வாழ்க்கை ஆரம்பிச்ச புதிதில் கால் கிலோ மிளகாய் வத்தல், அரைக்கிலோ தனியா விதை, அரைக் கப் துவரம் பருப்பு, அரைக் கப் கடலைப்பருப்பு, அரைக் கப் அரிசி, கால் கப் உளுத்தம் பருப்பு, கால் கப் மிளகு, கால் கப் சீரகம் எடுத்து வெயிலில் நல்லாக் காயவச்சு மெஷீனில் கொடுத்து அரைச்சு வச்சுக்குவேன்.
நாட்டை விட்டு வந்தவுடன் பார்த்தால் இங்கே நம்மூர் மாவு மில் போல ஒன்னுமே இல்லை. ஃபிஜியிலும் இப்படித்தான். வீட்டில்தான் அரைச்சுக்கணும்.
அதனால் சின்னதா ஒரு மாத்து வழி கண்டுபிடிச்சேன்.
மிளகாய்த்தூள் ஒரு கப், தனியாத்தூள் மூணு கப் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வச்சுக்குவேன். ஸ்பூனால் ரெண்டு கலக்கு கலக்கிக்கணும்.
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , அரிசி தலா ஒரு குழம்புக் கரண்டி, ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகு, ரெண்டு டேபிள் ஸ்பூன் சீரகம் எல்லாம் தனித்தனியா வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து எடுத்துக்கிட்டுக் கொஞ்சம் ஆறுனதும் மிக்ஸி ட்ரை ஜாரில் அரைச்சுச் சலிச்சு எடுத்துக்கணும். ஆச்சா?
இப்பப் பாத்திரத்தில் எடுத்து வச்ச பொடிகளுடன், இதையும் கலந்துட்டு, இன்னொருமுறை மிக்ஸியில் நாலு சுத்துச் சுத்தி எடுத்து வச்சால் துள்ஸீ'ஸ் குழம்புப்பொடி தயார்!
இன்னும் கொஞ்சம் குறுக்கு வழின்னு மேலே ரெண்டாவதாச் சொன்ன பருப்பு வகைகள், மிளகு சீரக சேர்க்கையை மட்டும் கூடுதல் அளவில் செஞ்சு தனியாகப் பொடிச்சு அப்படியே எடுத்து வச்சுருக்கேன்.
சின்ன பாட்டில் தான் குழம்புப் பொடிக்குன்னு எடுத்து வச்சுக்கிட்டு, அது தீரத்தீரக் கலந்து வச்சுக்குறேன்.
மிளகாய்த்தூள் ஒரு குழம்புக்கரண்டி, மல்லித்தூள் மூணு குழம்புக் கரண்டி, மேலே சொன்ன அரைச்சு வச்ச பொடிரெண்டு குழம்புக் கரண்டி !
சரியான சோம்பேறி............ :-)
PINகுறிப்பு: இந்தக் குழம்புப்பொடியை சாம்பாருக்குப் போடுவதில்லையாக்கும்!
இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!

16 comments:
பூண்டு உரிக்கும் மிஷின் பத்தி முன்னமேயே நீங்கள் எழுதியாச்சு. இப்போல்லாம் ஈஸி பீஸிக்கு நிறைய எழுதறார்ப்போல் தெரியுது.
வல்லிம்மாவும் வெந்தயக்குழம்பு பதிவு! நீங்களும்! சூப்பர் டேஸ்ட்.
கம கம பூண்டு வத்த குழம்பு....
பூண்டு மெசி, ஹாட் ஏர் அவன் எல்லாம் எனக்கு புதுசு....ஆன சூப்பரா இருக்கு...
பூண்டு மெஷினை எனக்கு பார்சல் செய்யவும்...
சுண்டைக்காய் போடாம இதே பக்குவத்துலதான் நானும் பூண்டு குழம்பு செய்வேன்...
மிளகாய் தூள் அரைக்க அரிசி சேர்ப்பதில்லைம்மா
எனக்கு இந்தப் பூண்டுவாசனையே பிடிக்காதுநல்ல நாட்களில் பூண்டு சாப்பிடக் கூடாதா
வாங்க நெல்லைத் தமிழன்.
ஈஸிபீஸி இண்டியன் குக்கிங் புத்தகத்தைச் சீக்கிரமா வெளியிடணுமுன்னு துடிச்சுக்கிட்டு இருக்கார் கோபால். அதைப் பார்த்து சமைச்சுச் சாப்பிடுவாராம்.... நான் போன பிறகு ! இதுலே ரசம் வைக்கிறதை எழுதலையான்னு கேட்டுக்கிட்டே இருக்கார் :-)
வாங்க ஸ்ரீராம்.
கைப்பக்குவம் வெவ்வேற இல்லையோ! வெவ்வேற ருசியும் கூட! வல்லியம்மா குழம்பு அமர்க்களமா இருக்குமுன்னு நினைக்கிறேன் :-)
வாங்க அனுராதா ப்ரேம்.
சீக்கிரம் வேலை முடிக்க மெசினு இருப்பது மகிழ்ச்சி. ஆனால் கழுவும் வேலை ஒன்னு வந்துருதே :-)
வாங்க ராஜி.
இப்ப மார்கெட்டில் இந்த மிசினைக் காணோமேப்பா ! நெசமாத்தான்.....
நானும் சுண்டைக்காய் வத்தல்குழம்பு, பூண்டுக்குழம்புன்னு எப்பவும் தனித்தனியாத்தான் செய்வேன். இந்த முறைதான் டு இ ன் ஒன் :-)
குழம்பு நீர்க்க இருந்தால் கொஞ்சம் அரிசி மாவைக் கலந்து கெட்டிப்படுத்துவது உண்டுதானே. இப்படி பொடியில் சேர்த்துட்டால் அந்த வேலை மிச்சம் :-)
வாங்க ஜிஎம்பி ஐயா.
அதென்னவோ நாள் கிழமைகளில் வெங்காயம், பூண்டு பொதுவா சமையலில் சேர்த்துக்கும் வழக்கம் இல்லை. நைவேத்யங்களுக்கும் இதேதான்.
ஆனால் ஃபிஜியில் இதெல்லாம் விலக்கே இல்லை. பூண்டு வெங்காயம் எல்லாம் சேர்த்த பலகாரங்களை பூஜையில் நைவேத்யமா வைப்பதுண்டு.
இப்படி பூண்டு அதிகளவு போடும் இதே குழம்பை எங்களூரில் குழந்தை பெற்று படுக்கையில் இருக்கும் பெண்களுக்கு கொடுப்பார்கள். ஆறேழு நாள் கொடுக்கும்போது அவர்கள் பழையபடி எழுந்து நடமாட ஆரம்பித்து விடுவார்கள். நல்ல மருத்துவக் குணங்கள் நிறைந்த குழம்பு இது டீச்சர்.
இதே சமையல்குறிப்பில் பூண்டைக் குறைந்த அளவும், புளியை சற்றுக் கூடுதலாகவும் சேர்த்து 'புளியாணம்' எனும் புளிக்குழம்பை எங்கள் வீடுகளில் செய்வார்கள். இந்தியாவில் காயல்பட்டிணம் பகுதியிலும் புளியாணம் காய்ச்சப்படுகிறது. ரசம் போலவும் இருக்கும். நல்ல சுவை.
டீச்சர் நிறைய சமையல் குறிப்புகள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். கண் பட்டுடாம இருக்கணும்.
பூண்டு நல்லதுன்னு மருத்துவம் தெளிவாகச் சொல்லியிருக்கு. பாரம்பரியமா பெரும்பாலான வீடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது. அதை ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று புரியவில்லை? வாடையினாலா?
பூண்டுக்குழம்பு பாக்கவே ருசியா இருக்கே.
கோபால் சார்கிட்ட செய்முறை கொடுத்து அவரை ரசம் வைக்கச் சொல்லி அதனை ஈஸி பீஸி சமையலில் சேர்த்துவிடுங்கள். 'அலை ஓய்ந்தவுடன்' தண்ணீரில் இறங்கப்போகிறேன் என்ற கதையாகிவிடப்போகிறது.
உங்களுக்கும், 'அவருக்குப் பயிற்சி அளிப்பதுதான் சாக்கு' என்று, கணினியில் இருக்கும்போது அவரைச் சமைக்கச் சொல்லிவிடுங்கள்.
வாவ்... நல்ல டேஸ்டி குழம்பு தான்!
பூண்டு வத்தல் குழம்பு சூப்பர்.
super super arumai arumai !!!
Post a Comment