எனக்கு ரொம்பக் கடுப்பா இருக்கும் ஒரு சமாச்சாரம்.... உள்ளூர் பயணத்துக்கும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு முன்னால் ஏர்ப்போர்ட்டுலே இருக்கணும் என்றதுதான். நம்மவர் சொல்றார்.... இங்கெதான் எங்கெ போனாலும் கூட்டம் நெரியுதே.... அதான்னு...... ப்ச்....
பஸ் ஸ்டாண்டு மாதிரிதான் இப்ப விமான நிலையங்கள் எல்லாம்..... ஆனால் பஸ்ஸுலே கடைசி நிமிட்லே கூட ஓடிப்போய் ஏறிக்கலாம் :-)
பொழுது விடிஞ்சதான்னு ஜன்னல் திரையை விலக்கினால்.... கோம்தியில் மீன் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க.
காலையில் எழுந்து தயாராகி, கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சோம். இட்லி இப்ப ஒரு 'இன்ட்டர் ஸ்டேட் ஃபுட் ஐட்டம்' ஆகி இருக்கு. ருசியைப் பற்றிக் கவலை இல்லை. உருவம் சரியா இருந்தாப் போதும்! கூடவே பராவும் உண்டு:-)
நான் பரா, டோக்ளா, ஒரு போண்டா , கொஞ்சம் முளைப்பயிறு எடுத்துக்கிட்டேன். டோக்ளா இவுங்க நல்லா செய்ஞ்சுருவாங்க. நாம் செஞ்சாக் கொஞ்சம் கல்லாகிருது. அவரவருக்கு அவரவர் சமையல்தான் நல்லா வருது, இல்லயோ!
ஒன்பதரைக்கு வண்டிக்குச் சொல்லி இருந்தோம். வினோத் தான் வந்துருக்கார். சனிக்கிழமை என்றதால் அவ்வளவா ட்ராஃபிக் இல்லையாம். முக்கால்மணி நேரத்துலே ஏர்ப்போர்ட் வந்துட்டோம். இங்கேயும் அவ்வளவாக் கூட்டம் இல்லை. செக்கின் செஞ்சாச்சு. ஏற்கெனவே கூடுதல் எடைக்குக் காசு கட்டி இருந்ததால் பிரச்சனை ஒன்னும் இல்லைதான்.
நமக்கு 12.05 மணிக்குத்தான் ஃப்ளைட். அதுவரை நேரம் போக்கணுமே.... வேடிக்கை பார்க்க ரொம்ப இல்லை. கண்ணில் பட்டது சிக்கன் கடை. 'அடடா.... லக்நோவில் ரொம்ப விசேஷமாச்சே..... நேத்து ஊருக்குள் கண்ணில்பட்ட ஏராளமான கடைகளில் கூட எட்டிப்பார்க்கலை பாரேன்'னு என்னையே நொந்துக்கிட்டு சிக்கன் கடைக்குள் நுழைஞ்சேன்.
ஒரு கலர் மட்டும்னா கொஞ்சம் விலை கம்மி. ரெண்டு கலர் இருந்தால் கொஞ்சம் கூடுதல். ஒரு கலரே இருக்கட்டுமுன்னு தேடுனதில் நம்ம பச்சை கண்ணில் பட்டது. ப்ரோப்பர் பச்சை இல்லைன்னாலும்... பச்சைதான். ஒன்னு வாங்கிக்கிட்டேன்.
காத்திருக்கும் நேரம், பக்கத்து இருக்கையில் வந்து உக்கார்ந்த ஒரு பெண்மணி, என் கையில் இருக்கும் பையை நோட்டம் விட்டுட்டு விசாரிச்சாங்க. உள்ளுர் ஆள்தான். தில்லிக்கு ஒரு வேலையாப் போறாங்க. நாளைக்குத் திரும்பிருவாங்களாம். கொடுத்த விலை அதிகமோன்னு எனக்கொரு சம்சயம். ஏர்ப்போர்ட்லே எல்லாம் தீ பிடிச்ச விலை இல்லையோ? ஏறக்கொறைய சரியான விலைதானாம். என்ன ஒன்னு ஊருக்குள் நிறைய டிஸைன்கள், வகைகள் கிடைக்குமாம். போயிட்டுப் போகுது. அதான் இன்னொருக்கா ஒரு வாரம் வந்து தங்கப்போறோமே... அப்ப வாங்கினால் ஆச்சு :-)
தில்லி வந்து சேர்ந்தப்ப மணி ஒன்னேகால். சென்னை ஃப்ளைட் புடிக்கணும் இப்ப. உள்ளேயே ட்ரான்ஸிட் மக்களுக்குன்னு எதோ வழியைக் காமிச்சாங்கன்னு போனால்.... ஒரு Mazeக்குள் நுழைஞ்சமாதிரி இருக்கு. அசல் மொஃபஸல் பஸ் ஸ்டேண்டு மாதிரி இதுக்குள்ளே கூட்டம்! வேணுமுன்னே இந்த வழியை வச்சமாதிரித்தான் இருந்துச்சு.
இன் ஃப்ளைட் ஸ்நாக்ஸ் என்ற வகையில் ஒன்னு கொடுத்தாங்க. அதென்ன இனிப்புன்னு இந்த ஜெட் ஏர்வேஸ் ஃப்ளைட்டுகளில் எல்லாம் புளி உருண்டை ரெண்டு வைக்கிறாங்கன்னே தெரியலையே... :-) ரெண்டு மூணு ஃப்ளைட்டுலே இப்படிக்கிடைச்சது :-)
ஒருவழியா சென்னை வந்து சேர்ந்தோம். அஞ்சே முக்கால். ஒரு நாள் முழுசும் போயே போயிருச்சு. நம்ம ஸ்ரீராம் ட்ராவல்ஸ் சீனிவாசனை மறுநாள் முதல்தான் புக் பண்ணி இருக்கோம். இன்றைக்கு அவர் வேற இடத்துக்குப் போயிருக்காராம். டாக்ஸி ஒன்னு எடுத்துக்கிட்டுக் கிளம்பியாச்சு.
திநகருக்குள் நுழைஞ்சவுடனே நவராத்ரி கோலாகலம் கண்ணில் பட்டுச்சு. இடம்தெரியாம வேறேதோ வழியில் நுழைஞ்சுட்டார் போல டாக்ஸி ட்ரைவர். தெருவில் மேடையெல்லாம் போட்டு சிலர் பறை அடிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆயுதபூஜைக் கொண்டாட்டமாம். ஸ்ரீகிருஷ்ணர் குழலும் கையுமா ஜொலிச்சுக்கிட்டு இருந்தார். நல்ல கூட்டம்....
கொஞ்சம் சுத்திக்கிட்டுப் பாண்டிபஸார் தொட்டவுடன், நாமே வழி சொல்லி, நம்ம லோட்டஸுக்குப் போய்ச் சேர்ந்தோம். எதோ வீட்டுக்கு வந்தாப்லெ நிம்மதி ஆச்சு. புதுசா கண்ணாடி லிஃப்ட் போட்டுருக்காங்க. சூப்பர்! முந்தி போல க்ரில்லை இழுக்க வேணாம். அது கம்பியை இழுக்கறதுக்குள்ளே ...'க்ளோஸ் த டோர்'ன்னு கத்திக் கத்தியே நம்ம உயிரை எடுத்துரும்.
கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு ஒரு ஆட்டோ பிடிச்சு பாண்டிபஸார் கீதாகஃபேக்குப் போனோம்.
நம்ம பேட்டைக்குள் இருக்கோம் என்பதே மனசை மகிழ்ச்சியாக்கிடுது :-)
தீபக் கையால் இட்லியும் ஃபில்ட்டர் காஃபியும் கிடைச்சது. நல்ல பையர். வழக்கம்போல் நார்த்தான். தில்லி அம்பி.
வெளியே வந்தப்ப, நம்ம கீதா கஃபேயை ஒட்டியே இருக்கும் துணிக்கடையில் தொங்கிக்கிட்டு இருந்த டிஸைன் நல்லா இருக்கேன்னு வாங்கிக்கிட்டு, அப்படியே நம்ம டெய்லரிடம் கொண்டுபோய்க் கொடுத்துட்டு ரெண்டுநாளில் வேணுமுன்னு சொல்லிட்டு அறைக்குத் திரும்பிட்டோம்.
தொடரும்....... :-)
PINகுறிப்பு : சென்னைக்குப் பிறந்த நாள் சமயம் இல்லையோ இப்ப .... சென்னைப் பதிவாகவும் இதை வச்சுக்கலாம் :-)
பஸ் ஸ்டாண்டு மாதிரிதான் இப்ப விமான நிலையங்கள் எல்லாம்..... ஆனால் பஸ்ஸுலே கடைசி நிமிட்லே கூட ஓடிப்போய் ஏறிக்கலாம் :-)
பொழுது விடிஞ்சதான்னு ஜன்னல் திரையை விலக்கினால்.... கோம்தியில் மீன் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க.
காலையில் எழுந்து தயாராகி, கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சோம். இட்லி இப்ப ஒரு 'இன்ட்டர் ஸ்டேட் ஃபுட் ஐட்டம்' ஆகி இருக்கு. ருசியைப் பற்றிக் கவலை இல்லை. உருவம் சரியா இருந்தாப் போதும்! கூடவே பராவும் உண்டு:-)
நான் பரா, டோக்ளா, ஒரு போண்டா , கொஞ்சம் முளைப்பயிறு எடுத்துக்கிட்டேன். டோக்ளா இவுங்க நல்லா செய்ஞ்சுருவாங்க. நாம் செஞ்சாக் கொஞ்சம் கல்லாகிருது. அவரவருக்கு அவரவர் சமையல்தான் நல்லா வருது, இல்லயோ!
நமக்கு 12.05 மணிக்குத்தான் ஃப்ளைட். அதுவரை நேரம் போக்கணுமே.... வேடிக்கை பார்க்க ரொம்ப இல்லை. கண்ணில் பட்டது சிக்கன் கடை. 'அடடா.... லக்நோவில் ரொம்ப விசேஷமாச்சே..... நேத்து ஊருக்குள் கண்ணில்பட்ட ஏராளமான கடைகளில் கூட எட்டிப்பார்க்கலை பாரேன்'னு என்னையே நொந்துக்கிட்டு சிக்கன் கடைக்குள் நுழைஞ்சேன்.
ஒரு கலர் மட்டும்னா கொஞ்சம் விலை கம்மி. ரெண்டு கலர் இருந்தால் கொஞ்சம் கூடுதல். ஒரு கலரே இருக்கட்டுமுன்னு தேடுனதில் நம்ம பச்சை கண்ணில் பட்டது. ப்ரோப்பர் பச்சை இல்லைன்னாலும்... பச்சைதான். ஒன்னு வாங்கிக்கிட்டேன்.
காத்திருக்கும் நேரம், பக்கத்து இருக்கையில் வந்து உக்கார்ந்த ஒரு பெண்மணி, என் கையில் இருக்கும் பையை நோட்டம் விட்டுட்டு விசாரிச்சாங்க. உள்ளுர் ஆள்தான். தில்லிக்கு ஒரு வேலையாப் போறாங்க. நாளைக்குத் திரும்பிருவாங்களாம். கொடுத்த விலை அதிகமோன்னு எனக்கொரு சம்சயம். ஏர்ப்போர்ட்லே எல்லாம் தீ பிடிச்ச விலை இல்லையோ? ஏறக்கொறைய சரியான விலைதானாம். என்ன ஒன்னு ஊருக்குள் நிறைய டிஸைன்கள், வகைகள் கிடைக்குமாம். போயிட்டுப் போகுது. அதான் இன்னொருக்கா ஒரு வாரம் வந்து தங்கப்போறோமே... அப்ப வாங்கினால் ஆச்சு :-)
தில்லி வந்து சேர்ந்தப்ப மணி ஒன்னேகால். சென்னை ஃப்ளைட் புடிக்கணும் இப்ப. உள்ளேயே ட்ரான்ஸிட் மக்களுக்குன்னு எதோ வழியைக் காமிச்சாங்கன்னு போனால்.... ஒரு Mazeக்குள் நுழைஞ்சமாதிரி இருக்கு. அசல் மொஃபஸல் பஸ் ஸ்டேண்டு மாதிரி இதுக்குள்ளே கூட்டம்! வேணுமுன்னே இந்த வழியை வச்சமாதிரித்தான் இருந்துச்சு.
இன் ஃப்ளைட் ஸ்நாக்ஸ் என்ற வகையில் ஒன்னு கொடுத்தாங்க. அதென்ன இனிப்புன்னு இந்த ஜெட் ஏர்வேஸ் ஃப்ளைட்டுகளில் எல்லாம் புளி உருண்டை ரெண்டு வைக்கிறாங்கன்னே தெரியலையே... :-) ரெண்டு மூணு ஃப்ளைட்டுலே இப்படிக்கிடைச்சது :-)
ஒருவழியா சென்னை வந்து சேர்ந்தோம். அஞ்சே முக்கால். ஒரு நாள் முழுசும் போயே போயிருச்சு. நம்ம ஸ்ரீராம் ட்ராவல்ஸ் சீனிவாசனை மறுநாள் முதல்தான் புக் பண்ணி இருக்கோம். இன்றைக்கு அவர் வேற இடத்துக்குப் போயிருக்காராம். டாக்ஸி ஒன்னு எடுத்துக்கிட்டுக் கிளம்பியாச்சு.
திநகருக்குள் நுழைஞ்சவுடனே நவராத்ரி கோலாகலம் கண்ணில் பட்டுச்சு. இடம்தெரியாம வேறேதோ வழியில் நுழைஞ்சுட்டார் போல டாக்ஸி ட்ரைவர். தெருவில் மேடையெல்லாம் போட்டு சிலர் பறை அடிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆயுதபூஜைக் கொண்டாட்டமாம். ஸ்ரீகிருஷ்ணர் குழலும் கையுமா ஜொலிச்சுக்கிட்டு இருந்தார். நல்ல கூட்டம்....
கொஞ்சம் சுத்திக்கிட்டுப் பாண்டிபஸார் தொட்டவுடன், நாமே வழி சொல்லி, நம்ம லோட்டஸுக்குப் போய்ச் சேர்ந்தோம். எதோ வீட்டுக்கு வந்தாப்லெ நிம்மதி ஆச்சு. புதுசா கண்ணாடி லிஃப்ட் போட்டுருக்காங்க. சூப்பர்! முந்தி போல க்ரில்லை இழுக்க வேணாம். அது கம்பியை இழுக்கறதுக்குள்ளே ...'க்ளோஸ் த டோர்'ன்னு கத்திக் கத்தியே நம்ம உயிரை எடுத்துரும்.
கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு ஒரு ஆட்டோ பிடிச்சு பாண்டிபஸார் கீதாகஃபேக்குப் போனோம்.
நம்ம பேட்டைக்குள் இருக்கோம் என்பதே மனசை மகிழ்ச்சியாக்கிடுது :-)
தீபக் கையால் இட்லியும் ஃபில்ட்டர் காஃபியும் கிடைச்சது. நல்ல பையர். வழக்கம்போல் நார்த்தான். தில்லி அம்பி.
வெளியே வந்தப்ப, நம்ம கீதா கஃபேயை ஒட்டியே இருக்கும் துணிக்கடையில் தொங்கிக்கிட்டு இருந்த டிஸைன் நல்லா இருக்கேன்னு வாங்கிக்கிட்டு, அப்படியே நம்ம டெய்லரிடம் கொண்டுபோய்க் கொடுத்துட்டு ரெண்டுநாளில் வேணுமுன்னு சொல்லிட்டு அறைக்குத் திரும்பிட்டோம்.
தொடரும்....... :-)
12 comments:
நம்மூர்ப்பதிவு! படிக்கலாம் சுவாரஸ்யமாய்...
வடைய திங்க ஃபோர்க், கத்தியா?! ட்ட்ட்ட்ட்ட்ட்டூ மச்மா
சென்னை birthday பதிவா....சூப்பர் மா
வாங்க ஸ்ரீராம்.
நம்ம பக்கம் வந்துட்டோம். கொஞ்சம் ஃப்ரீயாச் சுத்தலாம் :-)
வாங்க ராஜி.
ஹாஹா... சில சமயம் இப்படித்தான் ஆகிருது :-)
வாங்க அனுராதா ப்ரேம்,
நன்றீஸ் !
நம்ம ஊர்னா நம்ம ஊர்தான் வி லவ் இட்
எப்ப சென்னைக்கு வருவிங்க அம்மா?
வாங்க ஜிஎம்பி ஐயா.
நன்றி!
வாங்க காவேரிகணேஷ்!
போன அக்டோபர் சென்னைக்கு வந்ததுதான் இப்ப நம்ம தியேட்டரில் ஓடுது :-) அடுத்த சென்னை விஜயம் அநேகமாக வரும் ஜூன் ஜூலையாக இருக்கலாம் !
என்னடா துளசி டீச்சர் சிக்கன் கடைக்குப் போயிட்டாங்களேன்னு நெனச்சேன். கடைக்குள்ள போனது மட்டுமில்லாம சிக்கன் வாங்கி பயன்படுத்தியும் இருக்கீங்கன்னு பதிவுல தெரிஞ்சிக்கிட்டேன். :)
லக்னோவி சிக்கன் வேலைப்பாடுகள் ரொம்ப சிலாகிச்சுச் சொல்வாங்க. கைவேலைப்பாடுங்குறதால விலை கூடுதலாவும் இருக்கும்.
சென்னைக்கு வந்தாச்சா... வருக. வருக.
ஆஹா நம்ம ஊருக்கு வந்தாச்சு! :) வருக வருக! பயணத்தில் தடாலடியா நாம சந்திச்சோமே! :) நினைவுகள்!
தொடர்கிறேன்.
Post a Comment