வடக்கீஸ்கள் வடையத்தானே பரான்னு சொல்றாங்க. அப்போ.... இது இமாம் சுட்ட வடையோ? சேச்சே.... அப்படியெல்லாம் இல்லையாக்கும், கேட்டோ!
ரொம்ப ஒன்னும் பார்க்க நேரம் இல்லைன்னா கூட ரெண்டு இடம் கட்டாயம் போகணும். அதுலே ஒன்னு அண்ணன் சொன்ன இமாம்பரா. நம்ம ஹொட்டேலில் இருந்து ஒரு மூணரை கிமீ தூரம். ரெண்டே முக்காலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
வாசலில் பெரிய கூட்டம். எல்லாம் பயணிகள்தான். நம்மை வாசலில் இறக்கி விட்ட வினோத், பார்க்கிங் தேடிப் போயிட்டார். குதிரை வண்டிகள் வரிசை கட்டி நிக்குது. அதுலே போய் பழையகால வாழ்க்கையில் கொஞ்சம் லயிக்கலாமுன்னு ஆசை இருந்தாலும்............ நமக்கு இப்போ நேரக்குறைவு.... ஆகட்டும்.... பின்னொருக்கில்.....
இமாம்பரா உள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் இருக்கு. ரொம்ப அதிகம் இல்லை இருபத்தியஞ்சுன்னு நினைவு. கவுன்ட்டர் கிட்டேகூடப் போக முடியாமல் கூட்டம் நெரியுது.
இந்த வளாகத்துக்கு முகப்பே ரொம்பபெருசு. ஒரு ப்ரேமில் அடக்க முடியாது. எதிர்வாடைக்குப் போனால் க்ளிக்கலாம்தான். ஆனால் எங்கே இந்தக் கூட்டத்தில்..... எதிர்வாடையிலும் ரொம்பவே அழகான ஒரு கட்டிடம். ஏறக்குறைய இந்தப்பக்கம் இருப்பதைப்போலவேதான். ஆனால் சின்னது. உண்மையில் அது குலாப் வாடிகா என்னும் ரோஜாத் தோட்டத்துக்கான நுழைவு வாசல்தான். நேரக்குறைவு காரணம் உள்ளே போகலை.
பொதுவா காலையில் 6 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும் இடம்தான் இது. ஆனால் இன்றைக்கு வெள்ளிக்கிழமையாப் போயிருச்சே..... உள்ளே இருக்கும் மசூதியில் பகல் தொழுகை முடிஞ்சாட்டுதான் பயணிகளுக்கு அனுமதியாம். மூணு மணி ஆகிருமாம். போகட்டும் இன்னும் பத்து நிமிட்ஸ்தானே.... அதுவரை உங்களுக்கு இடத்தின் சரிதச்சுருக் (!) சொன்னால் ஆச்சு :-)
1784 வது வருசம், கொடிய பஞ்சம். அப்ப இந்தப் பகுதியை ஆண்டுக்கிட்டு இருந்தவர் நவாப் ஆஸஃப் உது தௌலா (Asaf-ud-Daula, Nawab of Awadh,) உச்சரிப்பு சரியா எழுதி இருக்கேனான்னு தெரியலை )சனம் பஞ்சம் பொழைக்கணுமுன்னா காசு வேணும். காசு சம்பாரிக்கணுமுன்னா வேலை வேணும். அதனாலே ஒரு வேலை உற்பத்தியா இந்தப் பெரிய கட்டடத்தைக் கட்ட ஆரம்பிக்கிறார். சனமும் வந்து வேலை செஞ்சு கூலி வாங்குது. ( இப்பத்தைய அரசு மாதிரி வோட்டுக்காக இலவசமும் கொடுக்கலை. அதை கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம மக்களும் கைநீட்டி வாங்கலை, பாருங்க)
1785 ஆம் வருசம் கட்ட ஆரம்பிச்சது கட்டி முடிச்சது 1791 ஆம் வருசம். சாதாரண மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உயரம் வரை வேலை செஞ்சுருக்காங்க. அதுக்கு மேலே கட்டடக்கலையில் தலை சிறந்த வல்லுநர்கள் வேலையை முடிச்சு வச்சுருக்காங்க. நாட்டின் இந்தப் பகுதிக்குப் பெயர் அவாத் என்பதாம். (ஓ ... அதுதான் நாம் இப்போ தங்கியிருக்கும் ஹொட்டேலின் பெயர்க் காரணமா? Hotel Clarks Avadh. ) இந்த அவாத் கட்டடக்கலைன்னே ஒன்னு இருக்காமே!
அந்தக் காலத்துலே இஸ்லாமிய மக்கள் கூடும் மண்டபம் (இமாம்பாடா) என்ற வகையில்தான் இதைக் கட்டி இருக்காங்க. தொழுகை நடத்திக்க பக்கத்துலேயே தனியா ஒரு மசூதியும் கட்டி இருக்காங்க.
அப்புறம் 1838ஆம் வருசம் இந்தப் பகுதியை ஆண்ட மூணாவது நவாப் முஹம்மத் அலி ஷா ( Muhammad Ali Shah, the third Nawab of Awadh) அவர்கள் இன்னொரு ஹால்/ கூடம் / இமாம்பரா) கட்டி இருக்கார். இது அளவில் கொஞ்சம் சின்னது, என்ற காரணத்தால் அதுக்கு ச்சோட்டான்னு பெயர் வந்துருக்கு. (நாம் ச்சோட்டாவுக்குப் போகலை. படாவே போதும் இப்போதைக்கு!)
அந்தக் காலத்துலே ஊருக்குள்ளே வர்றதுக்கே ஒரு நுழைவு வாசல் கட்டி வச்சுருக்காங்க. ரூமி தர்வாஸான்னு பெயர். இப்பவும் சாலையில் போகும்போது நாம் இதைக் கடந்துதான் போவோம்....
மணி மூணடிக்கப் போகுது.... டிக்கட் கவுன்ட்டர் திறந்துட்டாங்க போல.... வாசல் கூட்டம் கரைய ஆரம்பிச்சதும் நாமும் உள்ளே போனோம். வாசலுக்குள்ளே நுழைஞ்சால் கண் எதிரே பிரமாண்டமான கட்டடம். அதையொட்டியே நமக்கு வலப்பக்கம் அந்த மசூதி! ரெண்டு கட்டடங்களுக்கும் பொதுவா வளாகத்துலே அழகான தோட்டம். நல்லாவே பராமரிக்கிறாங்க போல!
அப்பதான் இந்த போர்டைப் பார்த்தேன்.....
அட ராமா..... இந்த ட வராதது வடக்கர்ஸுக்கு இல்லை போல!
வெள்ளைக்காரன் நாக்கு மடியாமக் கிடந்துருக்குன்னு கொஞ்சம் புரிஞ்சது. இங்கே பாருங்க ஹிந்தி மொழியில் ட, டா சரியாத்தானே இருக்கு.
தோட்டத்தைத் தாண்டி கட்டடத்துக்குச் சமீபம் போறோம். நல்ல நீ.......ளமான படிகள். அங்கேதான் படிகள் மேலே முடியும் இடத்தில் டிக்கெட் கவுன்டர். பெண்களுக்கான ஜன்னல் தனி என்பதால் எல்லாரும் வீட்டம்மணிகளை டிக்கெட் வாங்கிக்கிட்டு வரச் சொல்றாங்க போல. அதே சம்ப்ரதாயத்தை நாமும் கடைப்பிடிச்சோம் :-)
உள்ளே போனால் பரந்து விரிஞ்சு கிடக்கும் ஹால்கள்.... ஹைய்யோ!!! உள்கூரை மேலே ரொம்ப தூரத்தில் இருக்கு! ஒவ்வொரு ஹாலாப் பார்த்துக்கிட்டே போறோம். ஒரு பெரிய ஹாலின் நடுவில் சமாதி போல ஒன்னு! என்னன்னு பார்த்தால் இந்த இமாம்பாடாவைக் கட்டுன நவாப் ஆஸஃப் உதூ தௌலியின் சமாதிதானாம். சின்ன வயசுலேயே சாமிகிட்டே போயிருக்கார்.
அப்போ அவருக்கு வயசு 48தான். இருபத்தியாறு வயசில் ஆட்சிக்கு வந்து இருபத்தியிரண்டு வருசம் ஆட்சி செஞ்சுருக்கார். பெரிய கட்டடக்கலை ப்ரேமி ! நிறையக் கட்டடங்கள் இவர் காலத்தில் கட்டிவிட்டவைகள்தானாம். இந்த அவாத் ராஜ்யத்துக்கு தலைநகரா லக்நோவை தேர்ந்தெடுத்தது கூட இவர்தான். பழைய தலைநகரம் ஃபைஸாபாத்.
இந்த சமாதி தவிர சந்நிதிகள் போல அங்கங்கே நாலைஞ்சு இருக்கு. ஒரு சந்நிதியில் ஊதுவத்தி கூட ஏத்தி வச்சுருந்தாங்க. (பேசாம ஒரு கைடு வச்சுருந்தால் இன்னும் கொஞ்சம் விவரம் கிடைச்சுருக்கும். ப்ச்....) இன்னொரு சமாதி, இந்தக் கட்டடத்தை டிஸைன் செஞ்சவராம். முக்கியமான ரெண்டு பேரும் இதைவிட்டுப் போகாம இங்கேயே தங்கிட்டாங்க பாருங்க !!!
மேலே உயரத்தில் அங்கங்கே உப்பரிகை மாடங்கள் எல்லாம் பிரமாதம். உப்பரிகையில் இருக்கும் மரச்சட்டங்களைத் தவிர்த்து, இந்த முழுக்கட்டுமானத்தில் வேறெந்த மரங்களையுமே பயன்படுத்தலைன்னு ஒரு குறிப்பு சொல்லுது! அலங்கார விளக்குகளும் எக்கச்சக்கமா இருக்கு!
கொலுப்படிக்கட்டு போல ஒன்னு நடுவிலே பச்சை ஸாட்டின் துணி போர்த்திக்கிட்டு கம்பித் தடுப்புக்குள்ளே! என்னவா இருக்கும்?
முடிஞ்சவரை இங்கே சுத்திட்டு, அடுத்த பகுதியான பூல்புலையா (Bhulbhulaya) என்ற Labyrinth பார்க்கப்போறோம். இதுக்குன்னு தனியா செக்யூரிட்டி எல்லாம் இருக்காங்க. நாங்க போறப்ப இன்னொரு தம்பதிகளோடு என்னவோ வாக்கு வாதம் நடக்குது. விசாரிக்காம இருப்போமா? உள்ளே விடமாட்டேங்கறாங்களாம்! ஏனாம்? ஜோடியாப் போகத் தடா இருக்காம்! கைடு கூட இருந்தால் பரவாயில்லையாம். அனுமதி உண்டு. ஆனால் ஜோடிகள், ஜோடியாப் போகப்டாது! அப்போ நாங்க? ஸ்பெஷலா என்ன? நமக்கும் தான் இதே ரூல்ஸ்!
காரணம்? உள்ளே போகும் ஜோடிகள் கசமுசா பண்ணிடறாங்களாம்...... ஹே.... இவ்ளோ சனம் வந்து போகும் இடத்திலா? எப்படி? ஙே..... வழியே கண்டுபிடிக்க முடியாமக் காணாமப் போகக்கூடிய வகையில் உள்ளே அமைப்பு இருப்பதால் யாருக்கும் தெரியாது... எது நடந்தாலும்........
அந்தத் தம்பதிகள் மும்பைப் பயணிகள். சொந்தக்காரர் வீட்டு விசேஷத்துக்கு வந்துருக்காங்க. மறுநாள் கிளம்பிப் போயிருவாங்கன்றதால் இன்றைக்கு இங்கே சுத்திப் பார்க்க வந்தவங்க. நாமும் மறுநாள் கிளம்பறோமே..... செக்யூரிட்டி என்ன சொன்னாலும் கேக்கலை. இதுதான் இங்கே ரூல்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு அப்படியே உக்கார்ந்துருக்கார். க்ளிக் பண்ணிக்கிட்டேன்:-)
அப்பதான் நம்மவர் மத்யஸ்தம் செய்ய வழி கண்டு பிடிச்சார. எத்தனை தமிழ் சினிமா பார்த்துருக்கார்! பஞ்சாயத்து செய்யத் தெரியாமலா இருக்கும்? என்ன ஒன்னு கையில் சொம்புதான் இல்லை :-)
'ஜோடியாத்தானே போகக்கூடாது. ரெண்டு பெண்கள் மட்டும் போனால் பிரச்சனையா'ன்னதுக்கு , 'இல்லை லேடீஸ் போகலாமு'ன்னு சொன்னதும், நாங்க ரெண்டு லேடீஸ் படிகளேறி மேலே போயிட்டோம். கொஞ்சம் தயங்கறமாதிரி பார்த்தேன். 'முதல்லே நீங்க போயிட்டு வாங்க.... நாங்க அப்புறமா வர்றோமு'ன்னு சொன்னார் நம்மவர்.
கொஞ்சம் இங்கே அங்கேன்னு பார்த்துட்டுக் கொஞ்சம் இருட்டா இருந்த கீழ் பகுதிக்கு இறங்கிப்போய் பார்க்கலாமான்னு அவுங்க கேட்டாங்க. என்னவோ அவுங்க பெயரைக் கேக்காம விட்டுட்டேன் நான். முழங்கால் இருக்கும் நிலையில் போகணுமான்னு தோணுச்சு. ஆனால் நம்மால் அவுங்களுக்கும் பார்க்கமுடியாமப் போகுமேன்னு படிகளில் சின்ன தடுமாற்றத்தோடு இறங்கிப்போனால்..... அங்கேயும் சின்ன சுத்தலுக்குப்பின் ஒரு மொட்டை மாடிக்கு வந்துருந்தோம். ஹம்மா..... எவ்ளோ நீள மாடி!
நடந்து அந்த எதிர்முனைக்குப்போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட். அங்கே இருந்த சிலர், படம் எடுத்துக்கொடுங்கன்னு செல்லை நீட்டுனதால் அவுங்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டே பதில் உதவியும் வாங்கிக்கிட்டேன். கீழே என்ன ஆச்சோ .... ன்னு மனசில் சின்னதா ஒரு கவலை.
'இன்னும் கொஞ்ச நேரத்துலே அவுங்க ரெண்டு பேரும் வந்துருவாங்க'ன்னு ஆறுதலாச் சொல்லி வச்சேன்.
என்னைவிட மும்பைப்பெண்ணுக்கு அதிகக் கவலைன்னு முகத்தைப் பார்த்தால் தெரிஞ்சது..... சின்ன வயசில்லையோ.... நாங்க அங்கே இங்கேன்னு போய்ப் பார்க்கிறோம். கொஞ்சம் கவனமாத்தான்..... எங்கியாவது திரும்பி வர முடியாத மூலையில் மாட்டிக்கிட்டால்.... இந்த கலக்கத்துலே க்ளிக்கவும் மறந்தேன்னுதான் சொல்லணும்.
எந்தப் படிக்கட்டு எங்கே போகுதுன்னு தெரியாம மேலேயும் கீழேயுமா பிரிஞ்சு பிரிஞ்சு போற படிகள் நம்மை குழப்பத்தில் கொண்டு விட்டுருது. ரொம்ப உயரமாவும் வெற்றிடமாவும் இருக்கறதாலே எங்கே பார்த்தாலும் குரல்கள் கேக்குது, எதிரொலிக்குதுன்னு ... கூட்டமா பலர் ஒரே நேரத்துலே பேசறாங்களோ?
என்னதான் தடுத்து அணை போட்டாலும் காதலை ஜெயிக்க முடியுமோ.... அங்கங்கே சில பல இளஞ் ஜோடிகளைப் பார்த்தேன்தான்.... :-)
போகலாமான்னு அவுங்க கேட்டதும் சரின்னு ஒரு படி வழியா இறங்கப் போனால் நம்மவரின் குரல் போலக் கேட்டது. 'கொஞ்சம் இருங்க. அவுங்க மேலே வர்றாங்க போல'ன்னு சொல்லி முடிக்குமுன்பே கோபாலின் தலை தெரிஞ்சது கீழே கொஞ்ச தூரத்தில். ரொம்ப நேரம் ஆனமாதிரி இருந்ததே... அது உண்மையில் 18 நிமிட்ஸ்தான். பிரிவில் காலம் நீண்டு போகுது பாருங்க :-)
கணவரிடம் மனைவியை ஒப்படைச்ச பிறகுதான் எனக்கு நிம்மதியாச்சுன்னு சொல்றது உண்மை! அப்புறம் நாங்க ரெண்டு பேரும் இங்கே அங்கேன்னு புகுந்து போறோம். ஒரு இடத்து பால்கனியில் நின்னு பார்த்தால் கீழே நவாபின் சமாதி தெரியுது! நல்ல உயரத்தில் இருக்கோம். ஒரு இருபது மீட்டர் இருக்கலாம். நம்ம பாதையில் சிலர் வர்றதும் போறதுமா இருக்காங்க. ஒரு பெரிய குழு வந்தாங்க கைடு உதவியுடன்.
'வழி தெரியாம மாட்டிக்கப்போறோம். அந்த குழு பின்னாலேயே போயிடலாமு'ன்னு சொல்றார் இவர். 'அதெல்லாம் வேணாம். உங்களை வெளியே கொண்டு போக நானாச்சு'ன்னேன்.
முதலில் அங்கே இங்கேன்னு சுத்துனப்ப சில லேண்ட் மார்க் பார்த்து வச்சுருந்தேன். திறந்த மாடிகள், மேலே மூடுன நீளமான வெராந்தாக்கள் எல்லாம் எங்கெங்கியோ வருது.... பார்க்கவும் கொஞ்சம் ஒரே மாதிரி வேற....
ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் கட்டைச்சுவர் வழியா எட்டிப் பார்த்தால் நான் பார்த்து வச்ச லேண்ட் மார்க் இருக்கு! இனி என்ன பயம்? இங்கே ஒரு கம்பி போட்ட பாதை வரும் அதுலே போயிட்டால் கீழே போகும் படிகள்னு இவருக்குத் தைரியம் கொடுத்துக்கிட்டே முன்னால் போறேன்.
அதோ.... அந்தக் கம்பிப் பாதை.... இனி எல்லாம் சுகமேன்னு கீழே இறங்கி வந்துட்டோம். கோபால் பயந்து, அன்றைக்குத்தான் பார்த்தேன் :-)
ஹாங்..... சொல்ல விட்டுப்போச்சே..... பரா இமாம்பாரா காலையில் 6 மணிக்குத் திறக்கறாங்கன்னாலும், இந்த பூல்புலையா(Bhool Bhulaiya) வுக்குள் போக, காலை 9 மணிக்கு மேல்தான் அனுமதி.
அடுத்த இன்னொரு பகுதி Bபௌலி. படிக்கிணறு போல கீழே இறங்கிப் போகணும். இதுக்குத் தனியா டிக்கெட் உண்டு. கீழே போகலாமுன்னு பத்தடி இறங்குனபிறகு பார்த்தால் ... ரொம்ப தூரமோன்னு சம்ஸயம். எதிரில் வந்த நபரிடம் இன்னும் எவ்ளோ தூரமுன்னா... ரொம்பக் கீழே இறங்கணும். படிகள் நல்லா இருக்குன்னார். நம்ம கால் இருக்கற அழகுலே முடியாதுதான்.
(அப்புறம் தெரிஞ்சது நாம் போகாதது நல்லதுதான்னு. ஏழு மாடி இறங்கி ஏறி இருக்கணுமாம்.... செத்தேன்.... இந்தப் படத்தைப் பாருங்க....)
பார்த்தவரை போதுமுன்னு கிளம்பிட்டோம். கீழே படம்.... பராவில் இருந்து முகப்பு வாசல்....
வெளியே வாசலில் சிறுதீனி வண்டிகள் இருக்கு. அதுலே ஒன்னு இது..... என்னன்னு தெரியுதோ? :-)
PINகுறிப்பு: இன்னொருக்கா வந்து பார்க்கணும் என்ற ஆசை இருக்கு. ஊர் சமாச்சாரம் தெரியாம வந்துட்டோம். ஒரு நாலைஞ்சு நாள் தங்கிப் பார்க்க வேண்டிய ஊர் இந்த லக்நோ. நமக்குத்தான் இப்போதைக்கு லக் இல்லை.
பதிவு கொஞ்சம் (!) பெருசாப் போயிட்டதால் படங்களைத் தனி ஆல்பத்துலே போட்டு வச்சுருக்கேன். அங்கே போய்ப் பார்க்க நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் பார்க்கலாம்.
தொடரும்....... :-)
ரொம்ப ஒன்னும் பார்க்க நேரம் இல்லைன்னா கூட ரெண்டு இடம் கட்டாயம் போகணும். அதுலே ஒன்னு அண்ணன் சொன்ன இமாம்பரா. நம்ம ஹொட்டேலில் இருந்து ஒரு மூணரை கிமீ தூரம். ரெண்டே முக்காலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
வாசலில் பெரிய கூட்டம். எல்லாம் பயணிகள்தான். நம்மை வாசலில் இறக்கி விட்ட வினோத், பார்க்கிங் தேடிப் போயிட்டார். குதிரை வண்டிகள் வரிசை கட்டி நிக்குது. அதுலே போய் பழையகால வாழ்க்கையில் கொஞ்சம் லயிக்கலாமுன்னு ஆசை இருந்தாலும்............ நமக்கு இப்போ நேரக்குறைவு.... ஆகட்டும்.... பின்னொருக்கில்.....
இமாம்பரா உள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் இருக்கு. ரொம்ப அதிகம் இல்லை இருபத்தியஞ்சுன்னு நினைவு. கவுன்ட்டர் கிட்டேகூடப் போக முடியாமல் கூட்டம் நெரியுது.
இந்த வளாகத்துக்கு முகப்பே ரொம்பபெருசு. ஒரு ப்ரேமில் அடக்க முடியாது. எதிர்வாடைக்குப் போனால் க்ளிக்கலாம்தான். ஆனால் எங்கே இந்தக் கூட்டத்தில்..... எதிர்வாடையிலும் ரொம்பவே அழகான ஒரு கட்டிடம். ஏறக்குறைய இந்தப்பக்கம் இருப்பதைப்போலவேதான். ஆனால் சின்னது. உண்மையில் அது குலாப் வாடிகா என்னும் ரோஜாத் தோட்டத்துக்கான நுழைவு வாசல்தான். நேரக்குறைவு காரணம் உள்ளே போகலை.
பொதுவா காலையில் 6 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும் இடம்தான் இது. ஆனால் இன்றைக்கு வெள்ளிக்கிழமையாப் போயிருச்சே..... உள்ளே இருக்கும் மசூதியில் பகல் தொழுகை முடிஞ்சாட்டுதான் பயணிகளுக்கு அனுமதியாம். மூணு மணி ஆகிருமாம். போகட்டும் இன்னும் பத்து நிமிட்ஸ்தானே.... அதுவரை உங்களுக்கு இடத்தின் சரிதச்சுருக் (!) சொன்னால் ஆச்சு :-)
1785 ஆம் வருசம் கட்ட ஆரம்பிச்சது கட்டி முடிச்சது 1791 ஆம் வருசம். சாதாரண மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உயரம் வரை வேலை செஞ்சுருக்காங்க. அதுக்கு மேலே கட்டடக்கலையில் தலை சிறந்த வல்லுநர்கள் வேலையை முடிச்சு வச்சுருக்காங்க. நாட்டின் இந்தப் பகுதிக்குப் பெயர் அவாத் என்பதாம். (ஓ ... அதுதான் நாம் இப்போ தங்கியிருக்கும் ஹொட்டேலின் பெயர்க் காரணமா? Hotel Clarks Avadh. ) இந்த அவாத் கட்டடக்கலைன்னே ஒன்னு இருக்காமே!
அந்தக் காலத்துலே இஸ்லாமிய மக்கள் கூடும் மண்டபம் (இமாம்பாடா) என்ற வகையில்தான் இதைக் கட்டி இருக்காங்க. தொழுகை நடத்திக்க பக்கத்துலேயே தனியா ஒரு மசூதியும் கட்டி இருக்காங்க.
அப்புறம் 1838ஆம் வருசம் இந்தப் பகுதியை ஆண்ட மூணாவது நவாப் முஹம்மத் அலி ஷா ( Muhammad Ali Shah, the third Nawab of Awadh) அவர்கள் இன்னொரு ஹால்/ கூடம் / இமாம்பரா) கட்டி இருக்கார். இது அளவில் கொஞ்சம் சின்னது, என்ற காரணத்தால் அதுக்கு ச்சோட்டான்னு பெயர் வந்துருக்கு. (நாம் ச்சோட்டாவுக்குப் போகலை. படாவே போதும் இப்போதைக்கு!)
அந்தக் காலத்துலே ஊருக்குள்ளே வர்றதுக்கே ஒரு நுழைவு வாசல் கட்டி வச்சுருக்காங்க. ரூமி தர்வாஸான்னு பெயர். இப்பவும் சாலையில் போகும்போது நாம் இதைக் கடந்துதான் போவோம்....
மணி மூணடிக்கப் போகுது.... டிக்கட் கவுன்ட்டர் திறந்துட்டாங்க போல.... வாசல் கூட்டம் கரைய ஆரம்பிச்சதும் நாமும் உள்ளே போனோம். வாசலுக்குள்ளே நுழைஞ்சால் கண் எதிரே பிரமாண்டமான கட்டடம். அதையொட்டியே நமக்கு வலப்பக்கம் அந்த மசூதி! ரெண்டு கட்டடங்களுக்கும் பொதுவா வளாகத்துலே அழகான தோட்டம். நல்லாவே பராமரிக்கிறாங்க போல!
அப்பதான் இந்த போர்டைப் பார்த்தேன்.....
அட ராமா..... இந்த ட வராதது வடக்கர்ஸுக்கு இல்லை போல!
வெள்ளைக்காரன் நாக்கு மடியாமக் கிடந்துருக்குன்னு கொஞ்சம் புரிஞ்சது. இங்கே பாருங்க ஹிந்தி மொழியில் ட, டா சரியாத்தானே இருக்கு.
தோட்டத்தைத் தாண்டி கட்டடத்துக்குச் சமீபம் போறோம். நல்ல நீ.......ளமான படிகள். அங்கேதான் படிகள் மேலே முடியும் இடத்தில் டிக்கெட் கவுன்டர். பெண்களுக்கான ஜன்னல் தனி என்பதால் எல்லாரும் வீட்டம்மணிகளை டிக்கெட் வாங்கிக்கிட்டு வரச் சொல்றாங்க போல. அதே சம்ப்ரதாயத்தை நாமும் கடைப்பிடிச்சோம் :-)
உள்ளே போனால் பரந்து விரிஞ்சு கிடக்கும் ஹால்கள்.... ஹைய்யோ!!! உள்கூரை மேலே ரொம்ப தூரத்தில் இருக்கு! ஒவ்வொரு ஹாலாப் பார்த்துக்கிட்டே போறோம். ஒரு பெரிய ஹாலின் நடுவில் சமாதி போல ஒன்னு! என்னன்னு பார்த்தால் இந்த இமாம்பாடாவைக் கட்டுன நவாப் ஆஸஃப் உதூ தௌலியின் சமாதிதானாம். சின்ன வயசுலேயே சாமிகிட்டே போயிருக்கார்.
அப்போ அவருக்கு வயசு 48தான். இருபத்தியாறு வயசில் ஆட்சிக்கு வந்து இருபத்தியிரண்டு வருசம் ஆட்சி செஞ்சுருக்கார். பெரிய கட்டடக்கலை ப்ரேமி ! நிறையக் கட்டடங்கள் இவர் காலத்தில் கட்டிவிட்டவைகள்தானாம். இந்த அவாத் ராஜ்யத்துக்கு தலைநகரா லக்நோவை தேர்ந்தெடுத்தது கூட இவர்தான். பழைய தலைநகரம் ஃபைஸாபாத்.
இந்த சமாதி தவிர சந்நிதிகள் போல அங்கங்கே நாலைஞ்சு இருக்கு. ஒரு சந்நிதியில் ஊதுவத்தி கூட ஏத்தி வச்சுருந்தாங்க. (பேசாம ஒரு கைடு வச்சுருந்தால் இன்னும் கொஞ்சம் விவரம் கிடைச்சுருக்கும். ப்ச்....) இன்னொரு சமாதி, இந்தக் கட்டடத்தை டிஸைன் செஞ்சவராம். முக்கியமான ரெண்டு பேரும் இதைவிட்டுப் போகாம இங்கேயே தங்கிட்டாங்க பாருங்க !!!
மேலே உயரத்தில் அங்கங்கே உப்பரிகை மாடங்கள் எல்லாம் பிரமாதம். உப்பரிகையில் இருக்கும் மரச்சட்டங்களைத் தவிர்த்து, இந்த முழுக்கட்டுமானத்தில் வேறெந்த மரங்களையுமே பயன்படுத்தலைன்னு ஒரு குறிப்பு சொல்லுது! அலங்கார விளக்குகளும் எக்கச்சக்கமா இருக்கு!
காரணம்? உள்ளே போகும் ஜோடிகள் கசமுசா பண்ணிடறாங்களாம்...... ஹே.... இவ்ளோ சனம் வந்து போகும் இடத்திலா? எப்படி? ஙே..... வழியே கண்டுபிடிக்க முடியாமக் காணாமப் போகக்கூடிய வகையில் உள்ளே அமைப்பு இருப்பதால் யாருக்கும் தெரியாது... எது நடந்தாலும்........
அந்தத் தம்பதிகள் மும்பைப் பயணிகள். சொந்தக்காரர் வீட்டு விசேஷத்துக்கு வந்துருக்காங்க. மறுநாள் கிளம்பிப் போயிருவாங்கன்றதால் இன்றைக்கு இங்கே சுத்திப் பார்க்க வந்தவங்க. நாமும் மறுநாள் கிளம்பறோமே..... செக்யூரிட்டி என்ன சொன்னாலும் கேக்கலை. இதுதான் இங்கே ரூல்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு அப்படியே உக்கார்ந்துருக்கார். க்ளிக் பண்ணிக்கிட்டேன்:-)
அப்பதான் நம்மவர் மத்யஸ்தம் செய்ய வழி கண்டு பிடிச்சார. எத்தனை தமிழ் சினிமா பார்த்துருக்கார்! பஞ்சாயத்து செய்யத் தெரியாமலா இருக்கும்? என்ன ஒன்னு கையில் சொம்புதான் இல்லை :-)
'ஜோடியாத்தானே போகக்கூடாது. ரெண்டு பெண்கள் மட்டும் போனால் பிரச்சனையா'ன்னதுக்கு , 'இல்லை லேடீஸ் போகலாமு'ன்னு சொன்னதும், நாங்க ரெண்டு லேடீஸ் படிகளேறி மேலே போயிட்டோம். கொஞ்சம் தயங்கறமாதிரி பார்த்தேன். 'முதல்லே நீங்க போயிட்டு வாங்க.... நாங்க அப்புறமா வர்றோமு'ன்னு சொன்னார் நம்மவர்.
கொஞ்சம் இங்கே அங்கேன்னு பார்த்துட்டுக் கொஞ்சம் இருட்டா இருந்த கீழ் பகுதிக்கு இறங்கிப்போய் பார்க்கலாமான்னு அவுங்க கேட்டாங்க. என்னவோ அவுங்க பெயரைக் கேக்காம விட்டுட்டேன் நான். முழங்கால் இருக்கும் நிலையில் போகணுமான்னு தோணுச்சு. ஆனால் நம்மால் அவுங்களுக்கும் பார்க்கமுடியாமப் போகுமேன்னு படிகளில் சின்ன தடுமாற்றத்தோடு இறங்கிப்போனால்..... அங்கேயும் சின்ன சுத்தலுக்குப்பின் ஒரு மொட்டை மாடிக்கு வந்துருந்தோம். ஹம்மா..... எவ்ளோ நீள மாடி!
நடந்து அந்த எதிர்முனைக்குப்போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட். அங்கே இருந்த சிலர், படம் எடுத்துக்கொடுங்கன்னு செல்லை நீட்டுனதால் அவுங்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டே பதில் உதவியும் வாங்கிக்கிட்டேன். கீழே என்ன ஆச்சோ .... ன்னு மனசில் சின்னதா ஒரு கவலை.
'இன்னும் கொஞ்ச நேரத்துலே அவுங்க ரெண்டு பேரும் வந்துருவாங்க'ன்னு ஆறுதலாச் சொல்லி வச்சேன்.
என்னைவிட மும்பைப்பெண்ணுக்கு அதிகக் கவலைன்னு முகத்தைப் பார்த்தால் தெரிஞ்சது..... சின்ன வயசில்லையோ.... நாங்க அங்கே இங்கேன்னு போய்ப் பார்க்கிறோம். கொஞ்சம் கவனமாத்தான்..... எங்கியாவது திரும்பி வர முடியாத மூலையில் மாட்டிக்கிட்டால்.... இந்த கலக்கத்துலே க்ளிக்கவும் மறந்தேன்னுதான் சொல்லணும்.
எந்தப் படிக்கட்டு எங்கே போகுதுன்னு தெரியாம மேலேயும் கீழேயுமா பிரிஞ்சு பிரிஞ்சு போற படிகள் நம்மை குழப்பத்தில் கொண்டு விட்டுருது. ரொம்ப உயரமாவும் வெற்றிடமாவும் இருக்கறதாலே எங்கே பார்த்தாலும் குரல்கள் கேக்குது, எதிரொலிக்குதுன்னு ... கூட்டமா பலர் ஒரே நேரத்துலே பேசறாங்களோ?
என்னதான் தடுத்து அணை போட்டாலும் காதலை ஜெயிக்க முடியுமோ.... அங்கங்கே சில பல இளஞ் ஜோடிகளைப் பார்த்தேன்தான்.... :-)
போகலாமான்னு அவுங்க கேட்டதும் சரின்னு ஒரு படி வழியா இறங்கப் போனால் நம்மவரின் குரல் போலக் கேட்டது. 'கொஞ்சம் இருங்க. அவுங்க மேலே வர்றாங்க போல'ன்னு சொல்லி முடிக்குமுன்பே கோபாலின் தலை தெரிஞ்சது கீழே கொஞ்ச தூரத்தில். ரொம்ப நேரம் ஆனமாதிரி இருந்ததே... அது உண்மையில் 18 நிமிட்ஸ்தான். பிரிவில் காலம் நீண்டு போகுது பாருங்க :-)
கணவரிடம் மனைவியை ஒப்படைச்ச பிறகுதான் எனக்கு நிம்மதியாச்சுன்னு சொல்றது உண்மை! அப்புறம் நாங்க ரெண்டு பேரும் இங்கே அங்கேன்னு புகுந்து போறோம். ஒரு இடத்து பால்கனியில் நின்னு பார்த்தால் கீழே நவாபின் சமாதி தெரியுது! நல்ல உயரத்தில் இருக்கோம். ஒரு இருபது மீட்டர் இருக்கலாம். நம்ம பாதையில் சிலர் வர்றதும் போறதுமா இருக்காங்க. ஒரு பெரிய குழு வந்தாங்க கைடு உதவியுடன்.
'வழி தெரியாம மாட்டிக்கப்போறோம். அந்த குழு பின்னாலேயே போயிடலாமு'ன்னு சொல்றார் இவர். 'அதெல்லாம் வேணாம். உங்களை வெளியே கொண்டு போக நானாச்சு'ன்னேன்.
முதலில் அங்கே இங்கேன்னு சுத்துனப்ப சில லேண்ட் மார்க் பார்த்து வச்சுருந்தேன். திறந்த மாடிகள், மேலே மூடுன நீளமான வெராந்தாக்கள் எல்லாம் எங்கெங்கியோ வருது.... பார்க்கவும் கொஞ்சம் ஒரே மாதிரி வேற....
ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் கட்டைச்சுவர் வழியா எட்டிப் பார்த்தால் நான் பார்த்து வச்ச லேண்ட் மார்க் இருக்கு! இனி என்ன பயம்? இங்கே ஒரு கம்பி போட்ட பாதை வரும் அதுலே போயிட்டால் கீழே போகும் படிகள்னு இவருக்குத் தைரியம் கொடுத்துக்கிட்டே முன்னால் போறேன்.
அதோ.... அந்தக் கம்பிப் பாதை.... இனி எல்லாம் சுகமேன்னு கீழே இறங்கி வந்துட்டோம். கோபால் பயந்து, அன்றைக்குத்தான் பார்த்தேன் :-)
ஹாங்..... சொல்ல விட்டுப்போச்சே..... பரா இமாம்பாரா காலையில் 6 மணிக்குத் திறக்கறாங்கன்னாலும், இந்த பூல்புலையா(Bhool Bhulaiya) வுக்குள் போக, காலை 9 மணிக்கு மேல்தான் அனுமதி.
அடுத்த இன்னொரு பகுதி Bபௌலி. படிக்கிணறு போல கீழே இறங்கிப் போகணும். இதுக்குத் தனியா டிக்கெட் உண்டு. கீழே போகலாமுன்னு பத்தடி இறங்குனபிறகு பார்த்தால் ... ரொம்ப தூரமோன்னு சம்ஸயம். எதிரில் வந்த நபரிடம் இன்னும் எவ்ளோ தூரமுன்னா... ரொம்பக் கீழே இறங்கணும். படிகள் நல்லா இருக்குன்னார். நம்ம கால் இருக்கற அழகுலே முடியாதுதான்.
பார்த்தவரை போதுமுன்னு கிளம்பிட்டோம். கீழே படம்.... பராவில் இருந்து முகப்பு வாசல்....
வெளியே வாசலில் சிறுதீனி வண்டிகள் இருக்கு. அதுலே ஒன்னு இது..... என்னன்னு தெரியுதோ? :-)
PINகுறிப்பு: இன்னொருக்கா வந்து பார்க்கணும் என்ற ஆசை இருக்கு. ஊர் சமாச்சாரம் தெரியாம வந்துட்டோம். ஒரு நாலைஞ்சு நாள் தங்கிப் பார்க்க வேண்டிய ஊர் இந்த லக்நோ. நமக்குத்தான் இப்போதைக்கு லக் இல்லை.
பதிவு கொஞ்சம் (!) பெருசாப் போயிட்டதால் படங்களைத் தனி ஆல்பத்துலே போட்டு வச்சுருக்கேன். அங்கே போய்ப் பார்க்க நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் பார்க்கலாம்.
தொடரும்....... :-)
17 comments:
பிரம்மாண்டம்!
சட்டுனு மாத்தி யோசிச்ச ஸார் ஸ்மார்ட் ஸார்.
அது என்ன புளியங்காயா?
கலையம்சத்தில் மிகவும் நேர்த்தியாக உள்ளது. அருமையான பதிவு.
படங்கள் செம அழகு...நீங்களும் செம அழகு.
பாஸ் அந்த ஒரு கட்டிடத்தின் முன்னால உங்க போஸ் ... மாஸ்;
// கோபால் பயந்து, அன்றைக்குத்தான் பார்த்தேன் :-//
இது பொய். உடும்பியோட (ஹிஹிஹி ) காலம் தள்ளும் போது பயம் இல்லாம இருக்குமா, ஹிஹிஹி .
// என்னன்னு தெரியுதோ? // புளியம்பழம் ?
எங்கே போகும்.....இந்த பாதையில் நாங்களும் பயணித்து மகிழ்ந்தோம்
இடமே அட்டஹாசமா இருக்கு. எப்படியோ நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து சுத்திப்பாத்துட்டீங்க. முதல்லயே திட்டமிட்டிருந்தால் இங்கு இன்னும் நிறைய இடங்கள் பார்த்திருக்கலாம்.
இரண்டு நாள் முன்னால்தான், இது என்ன கம்ப சூத்திரமான்னு ஹிந்தி எழுத்துக்கள் படிக்க ஆரம்பித்தேன். இங்க நான்தான் தப்பா வாசிக்கறேனோன்னு நினைச்சால் அவங்க போர்டுல தப்பா எழுதியிருக்காங்க.
பதிவில் ஒவ்வொரு படமா எடமா ரசிச்சிக்கிட்டே வந்தப்போ கடைசியா ஒரு படம் அட்டகாசமான படம். புளியங்காய். கைல அள்ளித் தின்ன அவ்வளவு ஆசை. கல் உப்பு தொட்டுக்கிட்டு தின்னா இன்னும் சுகம்.
நல்லா அழகான கட்டிடங்கள். இதையெல்லாம் போய்ப் பாக்க ஆசையா இருக்கு. வடக்க ஒரு டிரிப்பு போடனும்.
வாங்க ஸ்ரீராம்.
ஸாரோட ஸ்மார்ட்னஸ்ஸுக்கு இது ஒரு சாம்பிள் :-)
புளியங்காயேதான்!
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
அருமையான கட்டடக்கலை இல்லே!!!
எனக்கும் ரொம்பவே பிடிச்சுருந்தது!
வாங்க ராஜி.
ஆஹா.... அழகை அழகுன்னுதான் சொல்லணும். சொல்லிட்டீங்க :-)
வாங்க விஸ்வநாத்.
ஆஹா.... ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு ஆகிப்போச்சே!
உ இல்லை இ. இடும்பி :-)
பழம் இல்லை. பழமா இருந்தா குழம்புக்காவது ஆகும். இது பச்சைக் காய். உப்பு மொளகாய்ப்பொடி தொட்டுக்கிட்டுத் தின்னறாங்க.........
வாங்க மாதேவி.
ரொம்பவே பயப்படுத்திட்டாங்கன்னு நினைக்கிறேன். ரெண்டொருமுறை போய் வந்தால் பாதை பழகிரும்:-)
வாங்க நெல்லைத் தமிழன்.
வெள்ளைகாரனோ, இல்லை வ வும் டாவும் சொல்ல வராத உள்ளூர் மக்களோ... என்னவோ பேச்சு வழக்கில் இருப்பதை அப்படியே எழுதி வச்சுட்டாங்க.
அந்தக் காலத்தில் மொழி பெயர்க்கன்னு இருந்த துவிபாஷி (துபாஷ்) ஆட்கள் இப்படித்தானே சில பல சொற்களை மொழி பெயர்த்து அதையே நாமும் இன்னும் தப்பாவே சொல்லிக்கிட்டு இருக்கோம்.
எ.கா: அஸ்ட்ராலியா - ஆஸ்திரேலியா. (இதுலே ஆஸ்தி எல்லாம் எப்படி வந்துச்சு! )
அம்ரித்ஸர் - அமிர்த சரஸ். அமிர்த கஞ்சான்னு சொல்லலை போங்க !
வாங்க ஜிரா.
கட்டாயம் ஒரு ட்ரிப் வடக்கே போகத்தான் வேணும். நான் கைடா வரட்டுமா?
புளியங்காய் இன்னும் பிஞ்சா இருக்கணும். அதுதான் ருசி. இது பயங்கரப் புளிப்பா இருக்கும் போல!
டீச்சர் - அவாத் இல்லை அவத்! அவத் பகுதியில் பேசப்படும் ஹிந்தி கூட அவத் என்று தான் அழைக்கிறார்கள்! இப்பகுதி மக்களை அவதி என்றும் அழைப்பதுண்டு!
என் நண்பர் ஒருவர் கூட அவதி தான்!
ர, ட - இதில் ஹிந்திக்காரர்களுக்கும், பஞ்சாபிகளுக்கும் பயங்கர குழப்பம். கூடவே பீஹாரிகளுக்கும்..... மாற்றி மாற்றி உச்சரிப்பார்கள்!
தொடர்கிறேன்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
ஆஹா.... காலை வச்சுட்டேனே.... அவதி அவதியாப் போயிருக்கு. ஹொட்டேலில் அவாத்னு காதுலே விழுந்த ஞாபகம்....
இதுக்குத்தான் உள்ளூர்காரர்களிடம் உச்சரிப்பைக் கேட்டுக்கணும் என்பது.
மிகவும் நன்றி.
அவத் அவத் அவத் ! ஹௌது ஹௌது....
// வாங்க ஜிரா.
கட்டாயம் ஒரு ட்ரிப் வடக்கே போகத்தான் வேணும். நான் கைடா வரட்டுமா? //
ஆகா... உங்க கூட வர்ரதுக்கு கொடுத்து வெச்சிருக்கனுமே.
Post a Comment