Thursday, April 09, 2015

சின்னக்கண்ணன் சிரிக்கிறான்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 38)

அம்பலப்புழா ஸ்ரீ க்ருஷ்ணன் :   தொடர்ச்சி............

ஆமாம்... அது என்ன பால்பாயஸம் இங்கே  ஃபேமஸ் ?  திருப்பதி லட்டு மாதிரியா?  கதை  இருக்கணுமே? இருக்கோ?  இருக்கே:-) அதுவும் ரெண்டு வகை!

ஒரு சமயம் பஞ்சம் வந்து தவிக்கும்போது,   செம்பகசஸேரி  ராஜா,   வேற ஒருவரிடமிருந்து  ஏகப்பட்ட  நெல்லைக் கடனா வாங்கிக்கிட்டார்.  அப்புறம் ரொம்ப நாளுக்கு அதைத் திருப்பித்தர  முடியலை.  பொறுத்துப் பார்த்த கடன்கொடுத்தவர்  ஒருநாள் கோவில் முற்றத்தில் நின்னுக்கிட்டு,  ஸ்வாமி தரிசனத்துக்கு  வந்த ராஜாவிடம் 'என் கடனை உடனே திருப்பித்தரணும். இல்லாட்டி கோவிலுக்குள் போய்  சாமி கும்பிட விடமாட்டேன்'றார். ராஜாவுக்கோ அப்போ நிலமை சரி இல்லை. வாங்குன கடனைத் திருப்பிக்கொடுக்க ராஜாவுக்கே கஷ்டமுன்னா பாருங்க!


மந்திரி 'பாறையில் மேனோன்' ஆலோசனைப்படி தன் குடிமக்களில் எல்லோரும்  தங்களிடம் இருக்கும் நெல் சேமிப்பைக்  கொடுக்கணும்  என்று உத்தரவாச்சு.   கொஞ்ச நேரத்துலே நெல்மூட்டைகள் வந்து கோவில் முற்றத்தில் இறங்குது. மூட்டைகளைப் பிரிச்சு கொட்டறாங்க.


யானைக்கொட்டில்  வரைக்கும்  நெல்லோ நெல்லு! மொத்தம்  முப்பத்தி ஆறாயிரம்  மரக்கால் நெல்லு. இங்கே பற என்று ஒரு அளவை. (நிறபறயும் நிலவிளக்கும் மங்கலச் சின்னங்கள். மரியாவில்  கூட முற்றத்தின் ஓரத்தில் ஒன்னு இருக்கே!)

இவ்ளோ நெல்லையும்  பகல் உச்சிப்பூஜை நேரத்துக்குள் கொண்டு போயிடணும், இல்லைன்னா பெரிய தண்டனை  கிடைக்கும் என்று கடன் கொடுத்தவரிடம் சொன்னாங்க. அவருக்கு உதவி செய்யவும் யாரும் முன்வரலை. நேரமோ போய்க்கிட்டே இருக்கு.  என்ன செய்யறதுன்னு திகைச்சவர்,  எல்லா நெல்லையும் கோவிலுக்கே தானம் செஞ்சுட்டார்!  அவ்ளோ நெல்லைக் கோவிலும்தான் என்ன செய்யும்? அதான் தினமும் பால்பாயஸமா  நிவேத்தியம்  செய்ய ஆரம்பிச்சாங்க(ளாம்)


அந்த ராஜா ஒரு அப்பாவி போல! இப்பக் காலமுன்னா...  ஜனநாயக ராஜாக்கள், அடியாட்களை அனுப்பிக் கடன் கொடுத்தவரை மேலே அனுப்பி இருப்பாங்க.

அடுத்த வெர்ஷன் கதை இது:

செம்பகஸேரி ராஜாவுடன்,  ஒரு முனிவர்  சதுரங்கம் விளையாடப் பந்தயம் கட்டறார். பந்தயப்பொருளை நீங்களே சொல்லுங்கன்னு ராஜா கேட்க, நானே ஒரு சாமியார். எனக்கெதுக்கு  விலை உசந்த பொருள்? நெல்மணிகளே போதும். சதுரங்கப் பலகையில் முதல்கட்டத்துக்கு  ஒரு நெல், ரெண்டாம் கட்டத்துக்கு  முந்திய கட்டத்தில் இருப்பதைப்போல் ரெண்டு மடங்கு . இப்படியே ஒவ்வொரு கட்டத்துக்கும் ரெட்டிப்புன்னு சொன்னதும் ராஜா சம்மதிச்சு ஆட்டம் தொடங்குது. ராஜா தோற்றுப்போறார்.

நெல்மணிகளைக் கொண்டுவந்து அடுக்கறாங்க. ஒவ்வொரு கட்டத்துக்கும் ரெட்டிப்புன்னு போகுது. கடைசியில் கட்டங்கள் பாக்கி இருக்க  அரசாங்கத்தில் இருக்கும் நெல் இருப்பு தீர்ந்து போயிருது. அப்பதான் ராஜாவுக்கு  இந்த சாமியார் மனுஷனில்லைன்னு தோணுது. அதுக்கேத்தபடி  வந்தவர் ஸ்ரீ க்ருஷ்ணனாக இருக்கார்!!!

தோற்றுப்போன ராஜாவிடம், 'உடனே நெல்மணிகளைத் தரணுமுன்னு நிர்பந்தமில்லை.  பால்பாயஸம் தினமும் எனக்கு நிவேத்யம் செஞ்சு அதை  கோவிலுக்கு  வரும் யாத்ரீகர்களுக்கு இலவசமாக் கொடுத்துரு. இப்படியே கடன் தீரும்வரை செய்'யுன்னு சொல்லி மறைஞ்சாராம்.

எப்படி வசூலிக்கணுமுன்னு அவனுக்குச் சொல்லியா கொடுக்கணும்:-)  நான் நினைக்கிறேன்...... அந்த இலவசமே  கூட  இப்பக் கட்டுப்படி ஆகலைன்னு.  போகட்டும்.....

பாயஸம் கிடைச்சதே அதிர்ஷ்டம்.  அதைப் பாராட்டாம இப்படிச் சொல்ல வந்துட்டான்னு  க்ருஷ்ணன் நினைச்சுக்கப் போறான்!

கருவறைக்கு முன் நின்னு  பார்த்தஸாரதியை நல்லா தரிசனம் செஞ்சுக்கிட்டோம். குடும்ப நலன், பதிவர் நலன்,  மகளின் செல்லம்  இப்படி  எல்லோருக்காகவும்  ப்ரார்த்திச்சேன். என்னுடைய  உபிச இரா முவை அந்த விநாடி  நான் நினைச்சுக்கிட்டேன் என்பதே உண்மை.  எண்டே க்ருஷ்ணா....  ரக்ஷிக்கணே! அவருடைய  விஸ்வரூபம் ( நாவல்  ) இந்தக் கிருஷ்ணன் சந்நிதியில் இருந்துதான் தொடங்கும்! அரசூர் வம்சத்தின்  ரெண்டாம் பாகம் என்றாலும் தனி நாவலாகவும் வாசிக்கலாம்!   என்ன ஒரு எழுத்துன்னு  அதிசயப்பட்டு நிற்கத்தான் முடியுது என்னால்!

தினமும் அதிகாலை மூணு மணிக்குக் கோவிலைத் திறந்துடறாங்க. பகல் பனிரெண்டே கால் முதல் பனிரெண்டரைவரை  உச்சிகால பூஜை.பால்பாயஸ நிவேத்யம். பனிரெண்டே முக்காலுக்கு நடை சாத்தல்.  திரும்பவும் மாலை அஞ்சுக்குத் திறந்து  இரவு எட்டு அம்பத்தியஞ்சுக்கு நடை சாத்தல்.  அது என்ன....ஒன்பதுன்னு வைக்கக்கூடாதா? என்னமோ போங்க.

செம்பகஸேரி ராஜா வம்சம் 450 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துருக்காங்க. அப்புறம் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் மார்த்தாண்டவர்மா  படையெடுத்து வந்து  நாட்டை திருவாங்கூரோடு சேர்த்துட்டார்.

திப்பு சுல்தான்  காலத்துலே  கோவில்களுக்கு ஆபத்துன்னு  நம்ம குருவாயூரப்பனே இங்கே அம்பலப்புழா கோவிலில் வந்து  அடைக்கலமாகத் தங்கி இருந்தானாம். அதனால் இந்தக் கோவிலுக்கு தென் குருவாயூரென்ற சிறப்பும் இருக்குது.

வருசத்தில்  துலா மாசம் (ஐப்பசி) தவிர மற்றெல்லா மாசங்களிலும்  எதாவது ஒரு  உற்சவம் நடந்துக்கிட்டே இருக்கு. துலா வர்ஷம் (ஐப்படி அடைமழைக் காலம்) தான் காரணமுன்னு நினைக்கிறேன்.

கோவிலின் வெளிப்ரகாரத்தில் இருக்கும் ஓலைக்கூரை மண்டபத்தின் நடுவில் ஒரு  பெரிய கடம் போன்ற மிழவு வச்சுருக்காங்க.இது குஞ்சன்றே மிழவுன்னு எழுதிப்போட்டுருக்கு. பெரிய பானை வடிவில் இருக்கும் இதன் சின்ன வாயிலே  மேளம் போல் தோல் கொண்டு செஞ்ச இழுத்துக் கட்டிய  மூடி!


கிபி 1705 ஆண்டு முதல் 1770 வரை வாழ்ந்திருந்த குஞ்சன் நம்பியார், கோவிலில் நடக்கும் சாக்கியார் கூத்து என்ற  புராணக்கதைகளைச் சொல்லும் கூத்தில் முதல்முதலாக 'துள்ளல்' என்ற வகையை அறிமுகப்படுத்தினவர்.  நகைச்சுவையோடு இருக்கும் இந்தவகை, மக்களால் அதிகமாக விரும்பிப் பார்க்கப்பட்டது  உண்மை!  இப்ப நடக்கும் 'ஓட்டம்துள்ளல்(வாசுதேவன் நாயர்)'  பார்த்திருந்தாலும் இந்த துள்ளல் பார்க்கலையேன்னு இருக்கு எனக்கு:(தேனியைச் சேர்ந்த  பெரியவர் குமாரன் அடிக்கடி இங்கே வர்றாராம்.   வந்தால் ஒரு  ரெண்டு மாசம் தங்கல். சொந்தம் ஊர் இதுதானாம். சின்ன வயசில்  ஏலத்தோட்ட வேலைக்குப் போனவர். அவரிடம் கொஞ்சநேரம் கதை பேசிக்கிட்டு சில விவரங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.  அசப்பில் எங்கப்பா ஜாடை இருக்குன்னு ஒரு தோணல்,கேட்டோ!
  கோவில் கருவறை வெளிப்புறச்சுவர்களில் வச்சுப் பிடிப்பிச்சு இருக்கும் பித்தளை அகல்களில்  சாயரக்ஷைப் பூஜைக்குமுன் எண்ணெய் ஊற்றும் வேலை ஆரம்பிச்சு இருந்தது. எல்லா விளக்குகளும் எரியும்போது ஜகஜ்யோதியா இருக்கும். கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்திருக்கலாம்.  ஆனால்  மணி இப்போ அஞ்சரை.  ரொம்ப இருட்டுமுன் மரியா போய்ச் சேரலாமுன்னு எண்ணம். இன்றைக்கு ரொம்பவே சுத்தியாச்சு.   புது இடம்வேற!  சீனிவாசனுக்கு ஓய்வு கொடுக்க வேணாமா?


கோவில் கடைகளுக்கு வந்தோம்.  எதை வாங்கன்னு மனசுக்குள் ஓயாத போராட்டம். நமக்கு எடையும் குறைவா இருக்கணும், விலையும் குறைவா இருக்கணுமே:-)  கொஞ்சம் பெரிய சிலைகள் என்றால் மூக்கும் முழியும் அழகா இருக்கும்.  சின்னதில் அந்த அழகு வருமா?  தேடித்தேடி ஒரு க்ருஷ்ணனைக் கண்டுபிடிச்சேன்.  ஒரு அடி உசரம். களிமண் பொம்மை இல்லை. ஃபைபராம்.  காத்துப்போல் லேசு!பச்சை முகம் =  சாத்வீகம். எனிக்கு இது  இஷ்டப்பெட்டூ:-)

இப்ப இது  காத்தாகிப்போனதால்  கொஞ்சம் வெயிட் இருக்கட்டுமேன்னு ஒரு ஆடும் கதகளி.  நல்லா பொதிஞ்சு கொடுத்தாங்க. படங்கள் எல்லாம் ரொம்பவே அழகு.

  இடப்பிரச்சனை இருக்கே நமக்கு:( ஃப்ரெம் போடாமல் கிடைக்கும்தான்.  இங்கே நியூஸியில்   ஃப்ரேம் போட்டுக்க வீட்டை வித்தால்தான்   முடியும்.
அரைமணியில் ஆலப்புழா வந்து சேர்ந்தோம். ஏடிஎம் தேடி ஒரு பத்து நிமிச அலைச்சல். அதென்னவோ பத்தாயிரம்தான் லிமிட்டாமே:(   கொஞ்சம் கூடக்கொடுத்தால் என்ன?  மரியா வந்து சேர்ந்தபோது  இன்னொரு அரை மணி ஆகி இருந்துச்சு. ஆறே முக்கால்.

'பால்பாயஸம் கிட்டியோ, கிட்டியோ'ன்னு ரெமாவுக்கு   ஆச்சரியம்!  லேசாச் சுடவச்சு எல்லோரும் எடுத்துக்கலாமுன்னு சொன்னேன்.  'வீட்டுக்குக் கொண்டு போகலையா'ன்னாங்க? இன்றைக்கு இதுதானே நமக்கு வீடு இல்லையோ!

பாயஸம் சாப்பிடும்போது நண்பர்கள் உறவினர்கள் பதிவுலக மக்கள்  இப்படி எல்லோரையும் நினைச்சுக்கிட்டேன். கூடவே நம்ம இராமுவையும்தான்.
கொஞ்ச நேரம் ரெமாவை ஃபொட்டாக்ராஃபர் ஆக்கினேன்:-)  கொஞ்சநேரம் அவுங்களோடு பேசிக்கிட்டு இருந்தோம்.


அத்தாழத்தினு சப்பாத்தி,கூடவே  கொஞ்சம் சோறும் பருப்பும். உருளைக்கிழங்கும் பீன்ஸும் போட்டு ஒரு ஸ்ட்யூ. (தேங்காப்பால்  சேர்த்த வகை)  தயிர்பச்சடி (அத்தாழம்= டின்னர்)


நாளைக் காலைக்கு என்ன ப்ரேக்ஃபாஸ்ட்ன்னு கேட்டாங்க.  தோசை உண்டாக்கட்டே?  வேண்டாம். புட்டு மதி. புட்டும் கடலையும்  சரியா?

" வேணவே வேணாம். புட்டும் பழமும் ஓக்கே!  யார் இந்த புட்டும் கடலையும், அடையும் அவியலும் எல்லாம்  காம்பிநேஷன்  போட்டு வச்சது?  ரொம்ப  ஹெவியா  இருக்காதா என்ன? "

'எட்டரைக்கு  ரெடியாகிருமுன்னு சொன்னாங்க. சமையல் ஆள் வீட்டுக்குப் போயிட்டு காலையில் வருவாங்களாம்.  ரெமா இங்கேயே தங்குறாங்க.  ரெண்டு வாரத்துக்கு ஒருநாள்  வீட்டுக்குப்போய் வருவாங்களாம். ஒரே மகள்.  கல்லூரியில் கடைசி வருசப் படிப்பு.
வலை மேய்ஞ்சு , மெயில் பார்த்துட்டு, மகளுக்கு  மெயில்கள் அனுப்பின்னு  நேரம் போயிருச்சு.


காலையில் சீக்கிரமா எழுந்தால்  நல்லது. நம்ம 108 லிஸ்ட்டுலே இருக்கும்  கோவிலுக்குப் போகலாம். அம்பலப்புழா ஸ்ரீ  க்ருஷ்ணனும், அவன் பாயஸமும்  இவ்வளோ புகழ்பெற்றவை  என்றாலுமே   இந்தக் கோவில் திவ்யதேசக் கோவில்கள் பட்டியலில்  கிடையாதாக்கும், கேட்டோ!

தொடரும்.......:-)

PINகுறிப்பு:  கோவில்  படங்களை  அங்கங்கே போட்டு வச்சுருக்கேன். பார்த்துக்குங்க.

20 comments:

said...

படங்கள் அனைத்தும் அற்புதம்...

என்னவொரு தெய்வீக சிரிப்பு அம்மா...!

said...

அத்தாழம்னா டின்னரா.

பாயாசம் பாக்கப் பரவசம். இனிப்பு சாப்பிடுறதில்ல. ஆனா பாத்தாலே நல்லா இருந்திருக்கும்னு தெரியுது.

புட்டும் கடலைக்கறியும் மலையாளக் கூட்டணிதானே.

புட்டும் பழமும் நல்லாத்தான் இருக்கும். திருஷ்யம் படத்துல மீனா புட்டை எல்லாருக்கும் பரிமாறும் காட்சி நினைவுக்கு வருது. அனேகமா பாபநாசத்துல அது இட்லியா மாறும்னு நெனைக்கிறேன்.

said...

மிக அருமை படங்களும் பதிவும்.. கிருஷ்ணனிடம் எங்களுக்கும் சேர்த்து பிரார்த்தனைக்கு மிக்க நன்றி துளசி மேடம்..

said...

பாயசத்துக்கும்
படங்களுக்கும்
பரந்தாமனுக்கும்
பரம நன்றி;

said...

அட அட பாயாசம் சாப்டறத இப்படிப் ஃபோட்டோ போட்டு எங்களை எல்லாம் நினைச்சு சாப்பிடறாதாக வேற...ம்ம்ம்ம் என்ன சொல்ல..

புட்டும் பழம் ஆஹா செம கோம்போ....

படங்கள் சூப்பர்....

நிங்கள் போகுன்ன ஸ்தலத்தெல்லம் பூச்ச..ஆஹா அருமை...

said...

இருவரும் நீடூழி வாழ்க.

said...


எனக்கும் புட்டுக்கு கடலை அத்தரை இஷ்டமில்லா. புட்டும் பழமும் நெய்யும் சர்க்கரையும் எல்லாம் கலந்து கட்டி உண்பது பிடிக்கும்

said...

ஆஹா... அற்புதமான படங்கள்.. நான் சபரிமலைக்குப் போய் திரும்பும் போது இந்தக் கோவிலுக்கு போவதுண்டு. மிக பிரயாசைப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். நன்றி மேடம்!

said...

Every picture is worth a million words Thulasi. Rema eduththa padangal mika arumai. Paal paayasam Padu jor.Krushnarai vaangineengala.. Appo goluvil paarkkalaam.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கண்ணன் தெய்வம். அப்படித்தான் தெய்வீகமாச் சிரிப்பான் கேட்டோ:-))

said...

வாங்க ஜிரா.

ப்ராதல் = ப்ரேக்ஃபாஸ்ட்

ப்ரசாதம் என்பதால் ஒரே ஒரு ஸ்பூன் எடுத்துக்கலாம்.

என்னமோ எனக்கு அந்தக் கூட்டணி பிடிக்கறதில்லை. மென்னியைப் பிடிச்சாப்ல இருக்கும் காலங்கார்த்தாலே:(

said...

வாங்க ரமா ரவி.

பதிவர் குடும்பத்த எப்படிப்பா விடமுடியும்?

said...

வாங்க விஸ்வநாத்.

ஆஹா.... ப வரிசை!!!!!

பீம்சிங் ஞாபகம் வந்துச்சு.

said...

வாங்க துளசிதரன்.

படம்.... ஒரு சாட்சிதான்:-)))

புட்டும் புழுங்கிய நேந்திரம் பழமும் கிட்டியால்.... விருந்து!

பூச்சப்ரேமிக்கு தரிசனம் தொடர்ந்து தர்றதே பூச்சசாமி:-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆஹா ஆஹா.... நான் உங்க கட்சி!
எனிக்கும் இதே இஷ்டம்.

சீனி சேர்த்தால் கடிக்கும். அதனால் சர்க்கரை சேர்ப்பேன். இல்லைன்னா கொஞ்சம் ஐஸிங் ஷுகர்.

said...

வாங்க மோகன் ஜி.

எந்து ப்ரயாசம்? இஷ்டங்கொண்டு எழுதியதாணு:-)

ப்ரயாசம்= கஷ்டம்.

போட்டே.... பாயஸம் கிடைச்சதோ?

said...

வாங்க வல்லி.

விருந்தினரைப் படம் எடுத்துதே ரெமா பயங்கர ஃபொட்டாக்ராஃபர் ஆகிட்டாங்க. எங்கே எப்படி உக்காரணும் என்பதுவரை டைரக்‌ஷன் ப்ரமாதம்:-)

க்ருஷ்ணன், சாமிமேடையில் இடம் பிடிச்சுட்டான்!

said...

அருமையான புகைப்படங்கள்..... கோவில் காட்சிகள் பிரமாதம்.

said...

அருமை !!!படங்கள் அத்தனையும் அருமை . பால் பாயசம்
கண்ணார கண்டு ருசித்தோம் . நன்றிகள் பல.