Friday, March 17, 2023

கங்கைக்கரையில் கடைசி இரவு கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 27

ஒரு நல்ல தூக்கம் தூங்கி எழுந்ததும்தான்   மனசும் உடம்பும் கொஞ்சம் லேசா இருந்தது.  கங்கையைக் க்ளிக்க பால்கனி போனால் படித்துறையில் நல்லா சோப்புப்போட்டுத் துணி துவைச்சுக்கிட்டு இருந்தார் ஒருவர்.

https://www.facebook.com/1309695969/videos/168142902736477/

மொட்டைமாடிக்குப்போய்ப் பார்க்கலாமுன்னு  போனோம்.  காசி மாநகரின் ஏரியல் வியூ.  மசமசன்னு  ஊரே  கொஞ்சம் புகையா இருக்கே....   ஹரிஷ்சந்த்ரா காட் ரொம்பவே பிஸியா இருக்கோ !  கங்கையும் இப்படித்தான் இருக்காள்.  சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கி வருது.....

ஒரு நாலுமணி போல, வெயில் பளிச்ன்னு இருக்கும் நேரம் கங்கையில் படகில் போய் வரணும்னு நினைச்சது நடக்கலை. ஆனால் சனம் போய்க்கிட்டுத்தான் இருக்கு.  ஒரு நாலு மினிட் வீடியோ க்ளிப் ஆச்சு. 

https://www.facebook.com/1309695969/videos/536364921900992/

நாமும் போனமுறை இந்த நேரத்தில்தான் போய்வந்தோம். அப்படியே  மாலை ஆரத்தியும் பார்த்தோமே....  இப்பவும் போகணுமுன்னால் போலாம்தான்.... வெயில் தாழ்ந்த நேரம் இதமாகத்தான் இருக்கும். ஆனால் எடுக்கும் படங்கள் பளிச்ன்னு இருக்காது. ப்ச்....  போகட்டும்....  பார்க்கலாம் அடுத்த முறை !
மேலே மொட்டைமாடியிலிருந்து இறங்கி சீதாவின்   ரெஸ்ட்டாரண்ட் இருக்கும் மொட்டைமாடிக்கு வந்து  உள்ளே போய்  ஒரு சாய் குடிச்சுட்டுப் போகலாமுன்னா ....  ஆளரவமே இல்லை.  கீழே அறைக்குப்போய்  கைவசம் இருந்த த்ரீ இன் ஒன் காஃபியை தயாரிச்சுக் குடிச்சுட்டுக் கிளம்பினோம். தஸ் அஸ்வமேத Gகாட் ரோடு வரை போய் வரணும்.
அதே பெங்கால் டோலா சந்து ரோடுதான்.   மெயின் ரோடில் நட்ட நடுவில் தாயும் புள்ளையுமா இருவர். போற வர்ற சனம் , கோமாதா நெத்தியைத் தொட்டுக் கும்பிட்டுப் போகுது.  !  கோபால்சன்ஸ்லே நுழைஞ்சு  ஸல்வார் செட் வகைகளில் தேடியதும் க்ரே ஆப்ட்டது.  தேடும்போது கண்ணில் பட்ட வேற ரெண்டு செட்களை எனக்காக  எடுத்தேன். ஆச்சு ஷாப்பிங். 

 சாலையில் நல்ல கூட்டம்.  மறுநாள்  இதெல்லாம் நமக்குக்  காணக்கிடைக்காது.... மனசில் சின்ன சங்கடம்.... ப்ச்....

எத்தனை விதமான மக்கள்..... எந்தெந்த மாநிலம் !   புனித யாத்ரையாக வந்தவர்கள் தானே அத்தனை பேரும்.....  மனசில்  கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்குப் பரவி இருக்குன்னு இவுங்களைப் பார்த்தாலே தெரிஞ்சுறதா ?  என்னமோ   ஹிந்து மதத்தை  அழிக்கணுமுன்னு ஒரு கூட்டம்  துள்ளிக்கிட்டு இருக்கே....   

 அது நடக்கவே நடக்காதுன்னு  அதுகளுக்கே தெரியாதா என்ன ?   மதமே கூடாதுன்னாக்கூட  ஒத்துக்கலாம். ஆனால் ஏன் ஹிந்து மதம் மட்டும் கூடாதாம் ?   என்னவோ போங்க.... தலைக்குச் சுகமில்லை.
சீதாவுக்குத் திரும்பும்போது மணி ஏழுக்கும் மேல்....  கங்கையில் மக்கள் குளிச்சுக்கிட்டுதான்  இருக்காங்க. அங்கெயே பண்டிட் ஒரு பண்டிட் உக்கார்ந்து  தேவைப்படும் மக்களுக்கு சேவை செஞ்சுக்கிட்டு இருக்கார்.  இந்த நாலைஞ்சு நாட்களாப் பார்த்ததுலே ஒரு ரசனையான  விஷயம்... அங்கங்கே இருக்கும் சில கலைஞர்கள்   ஒரு சின்ன தக்ஷிணை கொடுத்தால்  நம் நெத்தியில்  சந்தனத்தால் ஆன பட்டையும் நடுவிலே த்ரிசூலமுமாய்  வரைஞ்சுவிடறாங்க. அழகாத்தான் இருக்கு ! இதுக்குன்னு ஒரு அச்சு கூட வச்சுருக்காங்க ! ஒன்னு வாங்கியிருக்கலாம் இல்லே ?  விட்டுப்போச்.

மேலே ரெஸ்ட்டாரண்டு மொட்டை மாடிக்குப்போய்  கங்கையை வேடிக்கை பார்த்துட்டு,  டின்னரை முடிச்சுக்கலாமுன்னு ரெஸ்ட்டாரண்டுக்குள் போனால்..........   ஈ காக்கை இல்லை.  எல்லாம் ஒன்பதுக்குமேல்தான்   வருவாங்களாம். மெனு ? அதேதான்  பராந்தா, ஆலுகோபி, மட்டர்பனீர் வகையறா....

நமக்குச் சரிப்படாதுன்னுட்டு, பாலும் ப்ரெட் டோஸ்ட்டும் அறைக்கு அனுப்பச் சொல்லிட்டு  வந்துட்டோம்.  காலையில் கிளம்பணும் என்பதால் பேக்கிங் வேலைகளை முடிச்சுக்கணும்.

எல்லாமும் ஆச்சு. கொஞ்சம் சீக்கிரம் தூங்கினால் தேவலை. காலை எட்டுக்கு வண்டி வந்துரும்.

பகல் தூக்கமோ, இல்லை  பிரிவுத்துயரோ...   ராத்ரி சரியான உறக்கம் இல்லை.   காலையில் சீக்கிரமாகவே எழுந்து பால்கனியில் போய் உக்கார்ந்துட்டேன். சூரிய உதயமும், படகுப் போக்குவரத்துமா   சிலபல கிளிக்ஸ்.  
அப்புறம் குளிச்சு முடிச்சதும், கைவசமிருந்த கடைசி காபியும்  பிஸ்கெட்டுமா ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு.  ஃபைனல் பேக்கிங் முடிச்சுட்டு கடைசியா  ஒரு  க்ளிக். மஹிந்தர் ட்ரிப் முடிச்சு படகு பார்க்கிங் செய்யறார்.  


ரிஸப்ஷனுக்கு ஃபோன்  செஞ்சதும் Golu வந்து பெட்டிகளைக் கீழே கொண்டுபோனார். 
போயிட்டு வரேண்டிம்மா தாயேன்னு கங்கையைக் கும்பிட்டுக்கிட்டேன். கீழே போனோம்.  பில் செட்டில் செஞ்சுட்டு,   மேனேஜர் பாண்டே,  நம்ம  Golu, அங்கே வந்த மஹிந்தர்ன்னு சின்னதா ஒரு ஃபோட்டோ ஷூட் :-)பாண்டே சொன்னார், கார் ரெடி தானாம். செங்கல் சந்து முனை மெயின் ரோடுக்கு  வரமுடியாமல் தடை வச்சுருக்காங்களாம். ஏதோ ஒரு இடம் சொல்லி அங்கே வண்டி நிக்குதுன்னார். ' Golu   உங்களை சந்து முனையில் ஒரு ஆட்டோ பிடிச்சு ஏத்தி விட்டுருவான், போயிட்டு வாங்க.  ட்ரிப் அட்வைஸரில் ரிவ்யூ கொடுக்க மறந்துறாதீங்க 'ன்னார். கடைசி முறையா முழம்படிக்கட்டில் ஏறினேன்.


செல்லம் ஒன்னு அப்பதான் கொட்டாவி   விடுது .  பை பை டா செல்லம்.

சந்து முனையில் ஒரு அஞ்சு நிமிட் காத்திருப்பில் ஒரு ஆட்டோ கிடைச்சது. Golu விடமிருந்து கார் ட்ரைவர் செல் நம்பரைக் குறிச்சு வச்சுக்கிட்ட ஆட்டோ ட்ரைவர் க்ருஷ்ணா,  எந்தெந்த வழியாவோ கூட்டிப்போறார்.  அங்கெல்லாம்  போலிஸ் தடை வச்சுட்டு நிக்குது. அந்தப் பக்கம் போ.... இந்தப்பக்கம் போன்னு  எந்த ரோடில் போனாலும்  அங்கங்கே போலிஸ்  திருப்பி  விட்டதில், திரும்பத்திரும்பத் தடைகள் போட்டுருக்கும் தெருக்களிலேயே  போய்ச் சேருகிறோம்.  சுத்தி சுத்தி தடைகள் போட்டு வச்சால் எப்படி ?   ட்ராஃபிக் மேனேஜ்மென்ட் ஒன்னும் சரியில்லை.    

நமக்கோ ஏர்ப்போர்ட்டுக்கு  எட்டே முக்காலுக்குப் போய்ச் சேரணும்.  டென்ஷன் ஏறிக்கிட்டுப் போகுது நமக்கு.  ஒரு தெருவில்  கொஞ்ச தூரத்தில் தடைகள் கண்ணில் பட்டதும்  அடுத்திருந்த ஒன்வேயில் சட்னு  ஆட்டோ ட்ரைவர்  நுழைஞ்சுட்டார். எனக்கோ பதற்றமாப் போச்சு. நல்லவேளை எதிரில் வேற வண்டி வரலை. மறுபடியும் லெஃப்ட் ரைட்ன்னு போய் ஒரு வழியா கார் நின்ன இடத்துக்குக் கொண்டுபோய் விட்டார்.  ஹப்பாடா...  க்ருஷ்ணா... நீ நல்லா இரு !  

இங்கேயே எட்டரை ஆயிருச்சு. இனி ஏர்ப்போர்ட் எப்போ ?   இருபத்தியஞ்சு கிமீ போகணுமே !  கார் ட்ரைவர் ஜஹாங்கிரும்.... சளைத்தவரில்லை..... காரை விரட்டுன விரட்டில்  ஒன்பதே காலுக்கு லால்பஹதூர் ஷாஸ்த்ரி இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்க்குப் போய்ச் சேர்ந்துட்டோம். 
தொடரும்.......... :-)6 comments:

said...

செம த்ரில்லிங் சேஸிங் போலிருக்கு.
அருமை நன்றி

said...

சூரிய உதயமும் கங்கையில் படகுகளும் அழகிய காட்சி .

நாங்களும் கங்கையை வணங்கிக் கொண்டோம்.

பயணம் தொடர்கிறோம்.

said...

கங்கையைச் சுற்றிச்சுற்றி க்ளிக்ஸ்! விமான நிலையம் நோக்கிய பயணம் த்ரில்.

said...

வாங்க விஸ்வநாத்,

ஹாஹா.... மிகவும் நன்றி !

said...

வாங்க மாதேவி,

வற்றாத ஜீவநதியை, எத்தனைமுறை பார்த்தாலும் மனசு இன்னும் இன்னும் னு ஏங்கத்தான் செய்யுது !

said...

வாங்க ஸ்ரீராம்,

அலுக்காத காட்சிகள் கங்கையில் எப்போதுமே !

கமலஹாஸன் படத்துலே கடைசியில் ஒரு கார் ச்சேஸ் இருக்குமே... அதேதான் இங்கேயும். என்ன ஒன்னு வில்லன் இல்லாத படம் :-)