Monday, March 06, 2023

அன்னபூரணாவில் ஆந்த்ரா தாலி :-( கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 22

காசி வீதிகளில்  புகுந்து திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் ஜெய்ப்பூர் பளிங்குச் சிலைகளை விற்குமிடம். இங்கே செய்யறாங்களா இல்லை  ஜெய்ப்பூரில் இருந்து வந்தவையான்னு தெரியலை. 

 அடுத்தாப்லெ   துர்கா பூஜைக்கு 'செட்' போட்டுருக்காங்க.  போற போக்கில் ஒரு க்ளிக்.  
கொஞ்ச தூரத்தில்  லக்ஷ்மிநாராயணன் கோவில்னு  ( ஸ்ரீ லக்ஷ்மிபதி விஷ்ணு மந்திர் ) பெயரைப் பார்த்ததும்... ருக்கோ ருக்கோ தான் :-)   
அதி ப்ராச்சீன் மந்திர் !   ப்ராச்சீன் பிராச்சீன்னு காலக்கணக்குத் தெரியாத பழைய கோவில்களைச் சொன்னால்.... இது அதைவிட  முக்கியமானதாம்.   ஐய்ய... இதுவா வாசல்னு தயங்கி நின்னப்ப,  வாசல் அந்தப்பக்கமுன்னு யாரோ கை காமிச்சாங்க.  காசி காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சித்தபீடக் கோவிலாம். 
தங்க முகமா மஹாவிஷ்ணுவும், அவருக்கு முன்னால் மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியுமா சின்னதா  ஒரு ' அழகான பொம்மை'யும் , சுத்திவரப் பூக்கள் அலங்காரமும் !  தட்டுகளில், சாளக்ராம் மாதிரி சின்ன உருண்டைக் கற்கள், சங்கு, சோழி ன்னு வச்சுருக்காங்க. இந்தாண்டை சின்ன பாக்கெட்டுகளில் மேற்படி சமாச்சாரங்கள் ஒவ்வொன்னு வச்சுருக்காங்க.  விற்பனைக்கு இல்லைன்னா.... தக்ஷிணை போடுபவர்களுக்காக இருக்க வேணும். 
 சின்னக்கோவில்தான் என்றாலும்  மூலவரைச் சுத்திவர இடம் விட்டுருக்காங்க.
அடுத்த சந்நிதி 'பூரப்முகி ஷனி மஹராஜ்' ! இவருக்கும் ஒரு தங்க முகம் !  விஷ்ணுவைவிட அழகான திருத்தமான முகம் கூட !

Birch Tree  இலையில் (போஜ் பத்ர ) எழுதுன யந்திரமும், தாமரை விதையும் கூட இங்கே கிடைக்குமாம்.  போஸ்டர் சொல்லுது.  இந்த மரத்துக்குத் தமிழில் என்ன பெயர்னு தெரியலை. கூகுளாரைக் கேட்டால் ' பிர்ச் 'என்றார் :-) தாந்த்ரீக, மாந்த்ரீக  வேலைகளுக்கு இந்த இலைகளைப் பயன்படுத்துவார்ர்களாம் !  நமக்கானது இல்லை !  இலைன்னா இது இலை  இல்லை. மரத்தின் பட்டை.

சின்னதா கொஞ்சம் தக்ஷிணை போட்டுட்டு சாமிகும்பிட்டு வந்தோம். மணி பனிரெண்டரை ஆகுதுன்னு எங்கியாவது போய் சாப்பிடலாமுன்னு சொன்னார் நம்மவர். 'மால் எதாவது இருந்தால் போகலாம். எப்படியும் அங்கே ஃபுட் கோர்ட் இருக்கும்தானே'ன்னார்.  எதுக்கு இருக்கு செல்ஃபோன்னு கூகுளாரைக் கேட்டால்  ஒரு அஞ்சாறு நிமிட் தூரத்தில்  PDR Mall   இருக்காம்.  அங்கே போய் இறங்கிட்டு ஆட்டோகாரரை அனுப்பிட்டோம்.  நியாயமான வாடகைதான் கேட்டார். 
மால் வாசலில் நின்ன லேடி செக்யூரிட்டிக்கு 'ஹேப்பி திவாலி' சொல்லிட்டு உள்ளே போனால்.........  படு சுத்தம் !   எல்லாக் கடைகளுமே மூடி இருப்பதால் குப்பை போட ஆள் இல்லை !  மாடியில் சினிமா தியேட்டர்.  ஃபோயரில் ஒரு ஜோடி நிக்குது ! அவ்ளோதான் மாலே !
கூப்பிடு அந்த கூகுளாரை........ பக்கத்துலே  மெயின் ரோடு எங்கே ?  ரெண்டு நிமிட் நடையில் சாலைமுக்குத் திரும்புன்னார்.மெயின் ரோடுதான்.  அங்கே   போக்குவரத்தை  ஒழுங்கு பண்ணிக்கிட்டு இருந்த  போலிஸிடம்,  அடுத்து ஏதாவது ரெஸ்ட்டாரண்ட் இருக்கான்னு கேட்டதுக்கு,  இடப்பக்கம் கை காமிச்சு அதோ அந்த ரோடில் திரும்பினால் இருக்குன்னார்.
அன்னபூரணா கேண்டீன் !  ஆந்திரா சமையல் ! ஐயோ... எனக்குக் காரம் ஆகாது. நம்மவருக்கு மட்டும் ஒரு லிமிட்டட் தாலி மீல்ஸ்.  நிறைய சோறு குவிச்சு வச்சுருக்காங்கன்னு இன்னொரு தட்டு வாங்கி அதில்   பகிர்ந்து  தந்தார்.  எனக்கு வெறும் சோறு எப்பவும் ஓக்கேதான். ஆனால் அவ்வளவா பசி இல்லை. பெருமாளைப் பார்த்த திருப்தியாக இருக்கவேணும்.  கொஞ்சம் போதுமுன்னேன். தயிர் எடுத்துக்கோன்னு உபசரிப்பு !  இந்தமாதிரி  வெளியிடங்களில் தயிர் நல்லதல்ல.  எடுத்துக்க மாட்டேன். ஆச்சு பகல் சாப்பாடு.

ஒரு ஆட்டோ பிடிச்சு,  செங்கல்பாதை ஆரம்பிக்கும் இடத்தில் இறங்கிக்கிட்டோம்.  இப்ப எனக்கே எங்கே இறங்கணுமுன்னு தெரியுது !  அடையாளம் வச்சுருக்கேனே !  நந்தித் தூணுக்கு எதிரில் இருக்கும்   ஜங்கம்வாடி ரோடில், மஞ்சக்கலர் ஷாமியானா போட்டுருக்கும் இடம் :-)

 குழந்தைக்காகத் தன் வலியைப் பொறுத்துக்கொள்ளூம் தாய்... ப்ச்.... பாவம்....

'நம்ம செங்கல் பாதை'யில் போய் சீதாவை அடைந்தோம். நல்ல வெயில் நேரத்துக்கு  இதமா, கங்கையில்  அரை உடம்பைக் கிடத்தி ஓய்வில் இருந்தார் ஒருவர் ! 
நமக்கு சாயந்திரம் நாட்கோட் போகணும். ராஜேந்திரன், அன்னைக்கே சொல்லிட்டார் 'தீபாவளிக்குத் தங்க அன்னபூரணி'ன்னு !

தொடரும்........ :-)


7 comments:

said...

அருமை நன்றி

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

மகாவிஷ்ணு மகாலட்சுமி தரிசனத்துடன், அன்னபூர்ணா சாதம் .

தங்க அன்னபூரணி பார்க்க வருகிறோம்.

said...

எங்கே இறங்கணும்னு பார்த்தால் தெரியும்  எங்கிருந்தோ ஆட்டோவில் ஏறும்போது என்ன இடம்னு சொல்லிக் கேட்பீர்கள்?  தீபாவளி அன்று ஊர் / கோவில் சுற்றியது புதுமையான இனிமையான அனுபவம்தான்.

said...

வாங்க மாதேவி,

நிறைய சர்ப்ரைஸ் கிடைச்சது அங்கே !

said...

வாங்க ஸ்ரீராம்,

அது பிரச்சனையே இல்லை. நாட் கோட் னு சொன்னால் போதுமே ! நாட்கோட் ஸே தோடா ஆகே !

அந்த வருஷ தீபாவளி.... மறக்க முடியாததா ஆகிருச்சு !

said...

தங்க முகமா மஹாவிஷ்ணுவும், அவருக்கு முன்னால் மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியுமா சின்னதா ஒரு ' அழகான பொம்மை'யும் ...அழகா இருக்காங்க