Monday, September 03, 2018

அல்லிக்கேணி கண்டேனே..... (பயணத்தொடர், பகுதி 4 )

அஞ்சு பெருமாளை ஒரே இடத்தில் நாலு கோலத்திலும் ஸேவிக்கணுமுன்னால்  ரொம்ப மெனெக்கெடவே வேணாம். திவ்யதேசமாம்  திரு அல்லிக்கேணி பார்த்தஸாரதி கோவிலுக்குப் போனால் போதும்!  போனோம்.   
வழக்கத்துக்கு மாறா அல்லிக்குளம் பளிச்ன்னு இருக்கு! 
சமீபத்துலே எதோ விசேஷம் வந்தது போல !  முக்காடு போட்டு நிக்கும் தேரின் சக்கரம் எல்லாம் பெயின்ட் அடிச்சு, அழகா இருக்கே!



வெளிமண்டபத்தில் இருக்கும் அசோகவன சீதையும், ஆஞ்சியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு முறை போகும்போதும் இருக்காங்களான்னு  ஓடிப்போய்ப் பார்க்கும் வழக்கம் இருக்கு!  இருக்காங்க :-) இன்னொரு தூணில் நம்ம   லக்ஷ்மிநரசிம்ஹர். கோவிலுக்கு மதில் சுவர் கட்டி, உள்ளே மண்டபங்களை எல்லாம்  ஜெயிலில் போடாமல்  வச்சுருக்கக்கூடாதான்னு   என் ஆதங்கம்.


தூண்களில் இருக்கும் சிற்பங்களைக் கிட்டப்போய்ப் பார்க்க முடியாதபடி, மக்கள் தூண்களைச் சுத்தி இடம் போட்டு உக்கார்ந்துருக்காங்க. இங்கேயே தங்கிடறாங்க போல!  வயசானவங்களா வேற இருக்காங்க. சட்னு கை நீட்டும்போது மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு  :-(
கோவிலில் கூட்டம் வழக்கம்போல்!  இன்றைக்குத் தாயார் புறப்பாடு இருக்காம். அரைமணி காத்திருந்தால் ஆச்சு. அதுக்குள்ளே போய் மீசைக்காரனை தரிசனம் பண்ணிக்கலாம்.  இலவச தரிசன வரிசையில் போறதுதான் நல்லது. அப்பதான் ராமனையும், ரெங்கனையும்  பார்க்க முடியும்.
நெடுநெடுன்னு  நின்ற கோலத்தில்  முட்டைக் கண்களும், முரட்டுமீசையுமா  ஒன்பதடி உசரம்! நல்லா பளிச்ன்னு விளக்குகள் போட்டு வச்சுருக்காங்க. வெளியே உள்ப்ரகாரத்தில் சந்நிதிக்கு  எதிரே இருக்கும் கம்பிக்கதவு பக்கம் நின்னால்கூடப் போதும். ரொம்ப நல்லாத் தெரிவார்.  முப்பது நாப்பதடி இடைவெளி இருந்தும்கூட !  (இப்படி ஏன் திருமலையில் விளக்கு போட்டு வைக்கக் கூடாது? நல்ல இருட்டுலே அவனை நிக்க வச்சு, வரிசையில் விடறோமென்ற பெயரில்  கூட்டமா அனுப்பி ரொம்ப தூரத்தில், இருட்டுக்குக் கண்பழகும் முன்னே இழுத்துக் கடாசுன அனுபவத்தை என்னால் மறக்க முடியலையே.....)

ரொம்ப நல்லா தரிசனம் ஆச்சு. குடும்பம் முழுசும் இன்றைக்கு பார்க்கக் கிடைச்சது!   சின்னதா ஒரு உத்தி சொல்லவா? ஒரு அர்ச்சனைச் சீட்டு மட்டும் வாங்கிக்கணும். பட்டர் ஸ்வாமிகளும் பொறுமை உள்ளவராக் கிடைச்சால் நமக்கு அதிர்ஷ்டம்!
ஐவரையும் தரிசனம் செஞ்சு, ஆண்டாளம்மாவுக்குத் 'தூமணி மாடத்து' பாடி (மனசுக்குள்ளேதான்... அனுராதா சுரேஷ் க்ருஷ்ணமூர்த்து  வெர்ஷன்) பிரஸாத ஸ்டாலுக்கு வந்து எனக்கொரு சக்கரைப்பொங்கலும். 'நம்மவருக்கு' ஒரு புளியோதரையுமா முடிச்சுட்டுத் தாயாரின் புறப்பாடும்  பார்த்துட்டு மன நிறைவுடன் கிளம்பினோம். 



ஆறேமுக்காலுக்குப் பாண்டிபஸார் வந்தாச்சு. கீதா கஃபேயில் ஈவ்னிங் டிஃபன். பஜ்ஜி & காஃபி. ரொம்பப் பழைய ரெஸ்ட்டாரண்டு இது.  பரிமாறும் வேலை செய்யறவங்க எல்லோருமே ஓரளவு கொஞ்சம் வயசானவங்கதான்.  இவுங்களில் ஒரே ஒரு இளைஞரா ராம்கிஷன் (வட இந்தியர்)இருக்கார். இவரையும் நமக்கு மூணு வருசமாத் தெரியும்!   நாங்களும் பலவருசங்களா வாடிக்கையாளர்கள்தான் என்பதால்  இந்த மக்களுக்குப் பரிச்சயமானவர்களா இருக்கோம். கல்லாவில் இருக்கும் பெரியவரை நானும் நாப்பத்தியேழு வருசமாப் பார்த்துக்கிட்டு இருக்கேன்! வயித்துக்கு ஆபத்து இல்லாத சாப்பாடு இங்கே!

'நம்மவரின்'  வாட்ச் உயிரை விட்டுருந்தது. கடிகாரம் ரிப்பேர் பண்ணும் கடை, இங்கே பக்கத்தில் இருக்கான்னு ராஜேந்திரனிடம் (பரிமாறினவரிடம்) விசாரிச்சால்...  எதுத்த வாடையையொட்டி வலப்பக்கம் வரும் தெரு முனையில் ரிப்பேர் பண்ணித் தருவாங்கன்னார்.  சிவஞானம் தெரு.  அங்கே கடையைத் தேடிக்கிட்டுப்போனால்  அப்படிக் கடையொன்னும் இல்லை.  ஆனால்... ரிப்பேர் பண்ணறவர் இருக்கார், மரத்தடியில் சின்ன  ஸ்டேண்டில் சிலபல கருவிகளை (!) வச்சுக்கிட்டு.
நாம் நினைச்சதுபோல பேட்டரிதான் போயிருந்துச்சு. சாதாரணம், பிராண்டட்னு ரெண்டு வகை வச்சுருக்காராம்.  ப்ராண்டடே இருக்கட்டும். நூத்தம்பது ரூபாயில் வேலை முடிஞ்சது அஞ்சே நிமிசத்தில்!  கடைக்காரர் ஹுஸைன், இந்தத் தொழிலில் நாப்பதம்பது  வருசமா இருக்காராம்!  சாலையோர எளிய மனிதர்களில் ஒருவர்!

 நாம் சென்னை வந்த நேரம் அண்ணன் ஊரில் இல்லை. இன்றைக்குச் சாயங்காலம்தான்  பெண்களூரில் இருந்து கிளம்பறாங்களாம். வீடு வந்து சேர ராத்ரியாகிரும். நாளைக்கு எப்படியும் அங்கே போக வேண்டிய விசேஷம் இருக்கு. நம்ம வீட்டுக் கல்யாணம் ஒன்னு ! ஞாயிறு முஹூர்த்தம் வச்சுருக்காங்க. இதை எதிர்பாராமல் ஏற்கெனவே வெள்ளிக்கிழமை பயணம் ஒன்னு ஏற்பாடு செஞ்சுட்டோம்.  பெண்வீட்டு நலங்கு நிகழ்ச்சியிலாவது கலந்துக்க முடியும் என்ற மகிழ்ச்சிதான். நாம் பொண்ணு ஸைடுதான், கேட்டோ!  நம்ம தாம்பரம் அத்தையின் பேத்தி !




பத்துமணிக்குப் போய்ச் சேர்ந்தோம். விசேஷ நிகழ்ச்சி என்றதால்  நம்ம  சொந்தபந்த மக்கள் எல்லாரையுமே ஒரே இடத்தில் பார்க்க முடிஞ்சது!  பொண்ணுக்கு அண்ணன்காரர், பிக்பாஸ் போல பையைத் தோளில் மாடிக்கிட்டுப் பம்பரமாச் சுத்திக்கிட்டு இருந்தார்.  எல்லாம் நாம்,  பொறந்தது முதல் பார்த்த பசங்கதான். இவ்ளோ பெரிய ஆளா வளர்ந்து நிக்கறாங்கன்றதை ஒரு நிமிஷம் நம்ப முடியலை :-)
கல்யாணத்துக்கு இருக்க முடியலைன்றது கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது! அண்ணனோடும், அண்ணியோடும் கொஞ்சநேரம் செலவளிச்சுட்டுக் கிளம்பிட்டோம்.  அவுங்களும் இப்போ கொஞ்சம் பிஸிதான். இன்னும் மூணுநாளில் அமெரிக்கா கிளம்பறாங்க.

இதுக்கிடையில்  அங்கே கொஞ்சதூரத்தில் இருக்கும் ஃபேஸ்புக் நண்பரையும் கையோடு பார்த்துப்பேசிட்டு வரணும் என்ற திட்டத்தோடு அவுங்க விலாசம் எல்லாம் கேட்டு வச்சுருந்தேன். அவுங்களுக்கும் மகிழ்ச்சி!  எந்தெந்த தெருவில் திரும்பணும், என்ன லேண்ட் மார்க் என்ற விவரம் எல்லாம் பக்கவா அனுப்பி இருந்தாங்க. ஒரு  குழந்தை கூட, கரெக்டா போயிரும். ஆனா... நாம்தான் குழந்தைப் பருவத்தைத் தாண்டி கடைசிப் பருவத்துக்கு வந்துட்டோமா இல்லையா?   முக்கால் பகுதிவரை சரியாகப்போய், சின்னதாக் கடைசியில் கொஞ்சம் சுத்திட்டு, பத்மாமணி அவர்கள் வீட்டுக்குப் போயிட்டோம்.

தொடரும்...........  :-)


22 comments:

said...

பிக் பாஸ் போல....!

ஹா... ஹா... ஹா...

said...

/எந்தெந்த தெருவில் திரும்பணும், என்ன லேண்ட் மார்க் என்ற விவரம் எல்லாம் பக்கவா அனுப்பி இருந்தாங்க. ஒரு குழந்தை கூட, கரெக்டா போயிரும். ஆனா... நாம்தான் குழந்தைப் பருவத்தைத் தாண்டி கடைசிப் பருவத்துக்கு வந்துட்டோமா இல்லையா? முக்கால் பகுதிவரை சரியாகப்போய், சின்னதாக் கடைசியில் கொஞ்சம் சுத்திட்டு,/ என் வீட்டுக்கு வந்தது நினைவுக்கு வந்தது

said...

எனக்கு கோவில் உள்ளெ செல்லும் போது இருக்கும் விவேகாநந்தர் பதாகைதான் நினைவுக்கு வருகிறது

said...

திரு அல்லிக்கேணி தரிசனம் - உங்கள் புண்ணியத்தில்.

தொடரட்டும் பயணம்.

said...

திரு அல்லிக்கேணி பார்த்தஸாரதி ..இவரை சேவிக்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை..

இன்று உங்கள் வழி தரிசனம் ஆச்சு..

said...

மூன்றுபேர் அமர்ந்திருக்கும் படத்தில் (கோபால் சார் மற்ற இருவர்), கோபால் சார் பக்கத்தில் தனியாக நாற்காலியில் இருப்பவரை முன்னமே பார்த்திருக்கிறேனே இந்தத் தளத்தில். அவங்கதான் திவ்யதேசங்களைப் பற்றி விரல் நுனியில் தகவல்கள் வைத்திருப்பார் என்று எழுதியிருந்தீர்களோ?

said...

அல்லிக்கேணி சென்றுவிட்டு ரத்னா கஃபேயை மறந்துவிட்டீர்களா? இல்லை பார்த்தசாரதியின் பிரசாதமே போதும் என்று தோன்றிவிட்டதா?

said...

My favorite temple in Chennai is "Parthasarathy" who was my neighbor when I lived in Triplicane for 2 years! I visit whenever I go to chennai. Thanks for posting the pics!

said...

சக்கரைப்பொங்கல் அருமை. நன்றி.

said...

பல முறை திருவல்லிக்கேணி சென்றுள்ளேன். இன்று உங்கள் மூலமாக. நன்றி.

said...

அல்லிக்கேணியில் அள்ளிக்கொண்டான் பார்த்தசாரதின்னு உங்க பதிவிலிருந்தே தெரியுது. டீச்சருக்கு ரொம்பப் பிடிச்ச கோயிலாச்சே.

அடுத்து பாண்டிபசார் கீதா கபே. அதுவும் டீச்சருக்குப் பிடிச்ச எடம்.

கண் முன்ன பொறந்த கொழந்தைகள் வளர்ரதைப் பாக்குறதும் மகிழ்ச்சிதான். வாழ்க்கைச்சக்கரம் கடகடன்னு ஓடிக்கிட்டேயிருக்கு.

வாட்ச்சுகள்ள பெரும்பாலும் பேட்டரி இல்லைன்னா ஸ்டிராப் மாத்துறதுதான் பிரச்சனைகளா இருக்கும். லெதர் ஸ்டிராப்னா அடிக்கடி மாத்த வேண்டியிருக்கும். மொபைல் வந்த பிறகு வாட்ச் கட்டுறதே நின்னு போச்சு.

said...

வாங்க ஸ்ரீராம்,

யாரு இப்படிப் பையை மாட்டிக்கிட்டு இருந்தாலும் பிக்பாஸ் நினைவு வந்துருது. இத்தனைக்கும் நான் பிக்பாஸ் தொடர்ந்து பார்க்கறதில்லை. முதல்நாள் ஷோ, கோபால் பார்த்தப்ப இடைக்கிடைத் தலை உயர்த்திப் பார்த்ததுதான் :-)

said...

வாங்க ஜி எம்பி ஐயா.

உங்க வீட்டுக்குச் சுத்துனதுக்குக் காரணம் நீங்க அய்யப்பன் கோவில் அருகில் என்றதால் கோவில்பக்கமே சுத்திக்கிட்டு இருந்தோம். அது அய்யப்பன் மெடிக்கல் சென்டர் அருகில்னு சொல்லி இருந்தால் நேரா வந்துருப்போம். ரெண்டு மூணு முறை உங்க தெருவில் போய் வந்தப்ப அந்த மெடிக்கல் சென்டர் கண்ணில் பட்டதே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சென்னை வரும்போது ஒரு எட்டு போயிட்டு வாங்க. ரொம்பப்பழைய கோவில். உங்களுக்குப் பிடிக்கும்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நீங்க சென்னைவாசி இல்லையா? எப்படி இதுவரை போகலை?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரொம்பச் சரி. இவுங்கதான் எங்க தாம்பரம் அத்தை. எங்காத்து வேளுக்குடின்னு நான் சொல்வேன் :-) இவுங்களைப்பற்றி நம்ம பயணக்கட்டுரைகளில் அடிக்கடி குறிப்பிட்டுள்ளேன்!

அதென்னவோ ரத்னா கஃபே போகணுமுன்னு தோணறதே இல்லை. ஒரே ஒருமுறை அதுவும் 2002 இல் வெங்கடநாராயணா ரோடில் இருக்கும் ரத்னா கஃபேயில் காலை நேரம் ஒரு காஃபி குடிச்சுருக்கேன். அவ்ளோதான். அதுவும் அதிகாலை திருப்பதி தேவஸ்தானக் கோவிலுக்குப் போகுமுன்!

said...

வாங்க தெய்வா,

எனக்கும் பிடிச்ச கோவில்தான். அல்லிக்கேணியில் ரெண்டு வருஷமா? ஆஹா.... பேஷ் பேஷ் !

said...

வாங்க விஸ்வநாத்.

எனெக்கென்னமோ சக்கரைப் பொங்கல் சுமாராத்தான் இருந்தது. பழைய சுவையோ, நிறைய முந்திரிப்பருப்போ ஒன்னும் இல்லையாக்கும்....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பெருமாள் தரிசனம் அருமை!

said...

வாங்க ஜிரா.

எல்லா பாய்ன்ட்டும் ரொம்பச் சரி! வெறுங்கையா இருக்காம வாட்ச் கட்டுறது ஒரு பழக்கமாப் போயிருக்கே!

said...

நான் பெங்களூர் வாசி மா ..

இரு வருடத்திற்கு ஒரு முறை சென்னை சென்றாலும் சொந்தங்களுடனே நேரம் போய்விடும் மா...

இந்த முறை கண்டிப்பாக இங்கு போகணும் ன்னு சொல்லிட்டேன்...பார்ப்போம் அவன் என்ன பண்றான்னு

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

அடுத்த சென்னைப்பயணத்தில் அல்லிக்கேணி உங்களுக்கு ஸாங்ஷன் ஆகி இருக்கு!