Friday, January 04, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 4

சுறுசுறுப்புக்குப் பொருள் கஸ்தூரி என்று அகராதியில் சேர்க்கவேண்டியதுதான் பாக்கி. பட்டாம்பூச்சியைப்போல் ஒரு இடத்தில் உட்காராமல் ஓடித் திரிந்துகொண்டிருந்தாள். புன்னகை ஒன்று முகத்தில் நிரந்தரமாக வந்து உட்கார்ந்து கொண்டது. அக்காவின் புகுந்தவீட்டின் மூலைமுடுக்குகள் எல்லாம் அத்துப்படி ஆகி இருந்தது. எதோ சொப்பனத்தில் நடந்ததோ என்னும் திருமணம்.ராத்திரியில் கல்யாணம் என்றதுமே ஒருபரபரப்பு அவளைத் தொற்றிக்கொண்டது. சீக்கியர்கள் திருமணங்கள் பகலிலும் இந்துக்களின் திருமணங்கள் இரவிலுமாம்.
மருதாணி இட்டுக்கொள்வதில் இருந்து கல்யாணப் புடவைவரை எல்லாமே இதுவரை காணாத விதத்தில்.


கல்யாணப்புடவை என்ன புடவை? அதுவும் தொளதொளவென்றிருந்த பஞ்சாபி சல்வார் சூட்தான். அதில் வைத்துத் தைத்திருந்த பாசிமணிகள், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஜொலித்த ஜொலிப்பு இன்னும் மனதிலேயே நின்றது. விருந்திலும் இனிப்பிலும் ஒரு குறைவும் இல்லை. எல்லாம் பாலும் சர்க்கரையுமாகத் திகட்டத் திகட்ட இருந்த இனிப்புவகைகள்.


லலிதா எதிர்பார்த்ததைவிட எக்கச்சக்கமான அன்பும் ஆதரவுமாக இருந்தனர் புகுந்த வீட்டினர். அந்த வீட்டின் மகாராணியேதான். மாமியாரும், கணவரும், மைத்துனர்களும் அப்படித் தாங்கினார்கள். அவர்கள் நடந்துகொள்ளும் விதம் பார்த்தால், இத்தனைநாள் எப்படித்தான் வீட்டு நிர்வாகம் தானில்லாமல் நடந்ததோ என்னும் மலைப்புத்தான். பெண்குழந்தைகள் இல்லாத மாமியார், தன் முழு அன்பையும் மருமகள் மேல் செலுத்தினார். 'பாவம். மூத்தவளுக்குத்தான் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது' என்று இவளே நினைத்துப் பரிதாபப் படும்படி ஆனது.மாமியார் தன் தோழியைப் பார்க்கும் சாக்கில் புது மருமகளையும் இங்கே அவ்வப்போது அழைத்துவந்தார். பிஜ்யாவுக்குத்தான் இப்போது வேலை கூடுதல் என்னும் எண்ணம் லலிதாவுக்கு. இங்கே வந்தவுடன் பரபரவென்று அவள் கைவேலைகளையெல்லாம் பிடுங்கிச் செய்து கொடுப்பாள். இரண்டொருமுறை இதைக் கவனித்த கஸ்தூரி, முன்னிலும் அதிகமாய் வீட்டுவேலைகளில் பங்கெடுத்தாள்.' எங்கள் மூவரில் நாந்தானே ரொம்ப அழகு. அது எப்படி என்னை விட்டுவிட்டு, அக்காவைப் பெண் கேட்கலாம் ? இருக்கட்டும். எனக்கு வரப்போகும் கணவன், அத்தானைவிட கம்பீரமாக இருக்கவேண்டும். நல்ல வசதியான பணக்கார வீட்டிற்குத்தான் நான் போகப்போகிறேன்.'

கொஞ்ச நாட்களாக பிஜ்யாவின் மனதில் எதேதோ எண்ணங்கள். அதுவும் இரவில் தூக்கம் வராமல் இருக்கும் நாட்களில் அவளே பயப்படும் அளவுக்கு
வேண்டாத எண்ணங்கள் எல்லாம் ஆட்டம் போட்டன. அதுவும் லலிதா வந்து போகும் நாட்களில் மனதின் கூச்சல் அதிகமானது. அக்காவைப் பார்க்கும்போதெல்லாம் லேசான பொறாமை எழுந்தது.


சுரத்தில்லாமல் எப்போதும் எதோ கனவுலகில் இருந்த பிஜ்யாவைக் கவனித்த மா ஜி, கஸ்தூரியைக் கொஞ்சம் கண்டித்து வைத்தார். 'வயல்வெளிகளுக்கும், தோழி வீட்டிற்கும், லலிதாவின் வீட்டிற்குமாகப் போகும்போது பிஜ்யாவையும் அழைத்துக் கொண்டு போனால் என்ன? பாவம். தனிமையில் பொழுது போகாமல் இருக்கிறாளே' என்றார்.கஸ்தூரி பலமுறை முயன்று பார்த்தும், பலன் இல்லை. வெளியே போவதில் பிஜ்யாவுக்கு விருப்பமே இல்லை. இதற்காகவெல்லாம் கவலைப்பட கஸ்தூரிக்கு நேரமே ஏது?பிஜ்யாவின் போக்கு மிகவும் மனக் கவலையைக் கொடுத்தது மா ஜிக்கு. எதிலும் ஈடுபாடில்லாமல் வயசுப்பெண் வீட்டில் இருப்பதும், எதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்றும் அடிவயிற்றில் ஒரு பயம்.
ஹரியிடம் மா ஜி என்ன சொன்னாரோ.....ஒரு நாள் வீட்டிற்கு புதிய ரேடியோப் பெட்டி வந்தது.சென்னைக்கு ஒரு கடிதம் நின்று நிதானமா வந்தது. அனைவரின் நலத்தையும் விசாரித்ததோடு, லலிதாவின் திருமணம் முடிந்த விவரமும் எழுதி இருந்தது. பாட்டி, அந்தக் கடிதத்தைப் பத்திரமாக எடுத்து வைத்தார். தேவா வந்தால் காண்பிக்க வேண்டும். 'ஹூம்..அவனெங்கே இருக்கிறானோ? பெண்கள் இங்கிருந்தாலாவது வந்து போவான். இப்போது? பார்த்தே ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.கடமைகள் என்று ஒன்றுமே கருத்தில் இல்லாத தேவா, மனம்போன போக்கில் கல்கத்தாவில் ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். காசிக்குப் போகிறேனென்று கிளம்பி இப்போது கல்கத்தாவில். அங்கங்கே கிடைக்கும் நண்பர்களோடு பொழுது போய்க் கொண்டிருந்தது.


பிஜ்யாவுக்கு சரியான சம்பந்தம் கிடைப்பதுக் குதிரைக்கொம்பாகி விட்டது. ஹரி, உள்ளூரில் யாரைப் பற்றிச் சொன்னாலும் அவளுக்குச் சரிப்படவில்லை. தன் அழகுக்குக்கு ஏற்றவராக இல்லை என்று ஒரு சமயம் முகத்திலடித்தாற்போல் சொல்லவும் செய்தாள்.காலம் யாருக்காகவாவது காத்திருந்ததாகச் சரித்திரம் உண்டா? இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. லலிதா இப்போது இரண்டாவது குழந்தையைச் சுமக்கின்றாள். மூத்தவன் தீபக்கின் பிறந்தநாள் போனமாதம் வந்து போனது. அவனைக் கருவில் சுமந்த சமயம் யாராவது பிரேந்தரைப் பார்த்திருக்கவேண்டுமே..... எப்போதும் கிலி படிந்த முகத்துடன் வயல்வெளியிலேயே நேரம் போக்கிக் கொண்டிருந்தான்.நல்லவேளையாக லலிதாவுக்குச் சுகப்பிரசவம். தீபக், தன் பெயருக்கேற்றார்போல் தகப்பன் முகத்துக்கு ஒளியாக இருந்தான்.
கஸ்தூரியின்கூட ஒட்டுதல் அதிகம். அதுவும் இப்போது 'சவலை' பாய்ந்திருப்பதால் சிணுங்கல் கூடி இருந்தது. கஸ்தூரியின் இடுப்பில்தான்
எப்போதும் சவாரி.


ஹரியின் கூடவே அவனுக்கு உதவியாக வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆகாஷ் இப்படிச் செய்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.யார் இந்த ஆகாஷ்? ஹரியின் நிலத்துக்கும், அஷோக்கின் நிலத்துக்கும் இடையில் இருந்த சிறிய நிலத்துக்குச் சொந்தக்காரன். அண்ணந்தம்பி நால்வரும், ஒரு அக்காவும் இருக்கும் குடும்பம். இந்தக் கையகல நிலத்தில் வரும் வருமானம் இத்தனைபேருக்கும் போதாதே..... பக்கத்துக் கிராமத்தில் அக்காவைக் கல்யாணம் முடித்து அனுப்பியாகிவிட்டது. அண்ணன்மார்கள் மூவரும் திருமணம் முடித்துக் குடும்பஸ்த்தர்கள் ஆகிவிட்டிருந்தனர். ஆகாஷ்தான் கடைக்குட்டி. குடும்பத்து ஆண்கள் அனைவருமே மற்றவர்களின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்படி ஹரியின் நிலத்தில் வேலைக்கு வந்தவன்தான் இவன். கூடவே தங்களுடைய பகுதியில் அவ்வப்போது எதாவது பயிரிட்டு வந்தான். வீட்டுப் பெண்கள் அனைவரும்
அங்கே எதாவது செய்துகொண்டே இருப்பார்கள். பருவத்துக்கேற்றபடி காய்கறிகள்.


ஆகாஷ் எப்போதும் இனிமையாகப் பேசுவான். கிராமத்துக்கே அவன் ஒரு செல்லப்பிள்ளை.


அந்த வருட லோ(ஹ்)ரி விழாவுக்கு, தீபக்கையும் தூக்கிவந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி. இன்று யார்யாருடைய காதல் அம்பலமாகப் போகிறதோ என்று ஒரு ஆர்வம்.


படபடவென்று வெடிக்கும் சோளத்தின் இரைச்சலையும் மீறி, 'கஸ்தூரி' என்ற தன் பெயரைக் கேட்டதும் விக்கித்து நின்றாள்.

பயணம் தொடரும்.................

26 comments:

Anonymous said...

ஹரியோட கதையில இருந்து கிளைக்கதைக்கு வந்தாலும் விறுவிறுப்பாத்தான் இருக்கு. (ஒவ்வொரு பத்திக்கும் நடுவில நிறையா கேப் இருக்கே டீச்சர்)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

ஹரியோட கதையில் அவன் தங்கைகளுக்கு பெரிய பங்கு இருக்கே. அதைவிடமுடியாதேப்பா....


கேப் சரி செஞ்சிருக்கேன். அது என்னமோ அப்படி இடைவெளி வந்துருச்சு.

said...

ட்விஸ்ட் தேவைதான். ஆனா இந்த ட்விஸ்ட் கேட்கவே நாராசமா இருக்கே. ஒருவேளை பிஜ்யா என்பதை தவற்ப்போய் கஸ்தூரி னு டைப்பிட்டீங்களோ?

said...

விறுவிறுப்பாக போயிக்கிட்டு இருக்கு...

ஆகாஷ் பிஜ்யாவின் பேரை சொல்லுவான்னு நினைச்சேன் !

said...

ஏற்கனவே பொறாமைல இருக்காப்ல..இதுல ஆகாஷ் கஸ்தூரிய தட்டிகிட்டுப் போனா பிஜ்யாவுக்குப் பொறுக்குமா?

said...

ஓ கதை இப்பிடிப் போகுதா? சரி...நல்லாருந்தாச் சரிதான். வாழ்க வளமுடன்.

said...

வாங்க சிஜி.

நலமா? ரொம்ப நாளைக்குப்பிறகு வந்துருக்கீங்க!

நாராசமா இருக்கா? என்ன செய்யறது? மனித மனத்தின் விசித்திரங்களை என்னன்னு சொல்றது?

ச்சும்மா இருக்கும் மனசு சாத்தான் வசமாமே(-:

said...

வாங்க கோபி.

நாம் நினைக்கறதெல்லாம் அப்படியேவா நடக்குது?

said...

வாங்க தங்ஸ்.

பொறாமை எவ்வளவு கீழ்த்தரத்துக்கு மனுசனைக் கொண்டு போயிருதுன்னு பாருங்க!

said...

வாங்க ராகவன்.

கதையா இருந்தா எவ்வளோ நல்லது!

//நல்லாருந்தாச் சரிதான்.//


நல்லாத்தான் இருப்பாங்கன்னு நானும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.

said...

நானும் பார்க்கிறேன். அந்தக் குழந்தை தீபக் எத்தனை நேரம் உட்கார்ந்து விளையாடிக்கொண்டே இருக்கும்?
எல்லாரும் கதையை படிச்சுட்டு சும்மாவே போறாங்க..!
குழந்தைக்கு பசிக்காதா என்ன ? நேக்கு பாவமா இருக்கு.
யாராச்சும் ஆவின் பால் அரை லிட்டர் வாங்கிண்டு வந்து
துளசி அக்கா கிட்டே கொடுத்தா
அவங்க குழந்தையை பால் கொடுத்து தூங்க
பண்ணுவாங்க இல்ல...
சீக்கிரம்..சீக்கிரம்...

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

said...

துளசி டீச்சர் நான்‍=வெஜ் என்று கிருஸ்துமஸ் சமயத்திலே தெரிஞ்சப்போவே
என்னவோ போல இருந்தது.
ஏன்னா ??
இப்ப, கதையும் நான் வெஜ் ஆகிவிடும் போல இருக்கே !!

மேனகா சுப்பு ரத்தினம்
chennai.

said...

"துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடைத்துணை யாவரன்றே
ஒப்பிலேனா யினும் உனை அடைந்தேன் யானைக்கு நீ அருள் செய்தமையால்
எய்பபென்னை வந்து நலியும்போதெங்கேதும் சொல்லமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைடத்தேன் அரங்கத்தரவனை
பள்ளியானே."
என்று அன்று அவர் பாடினார்.
இன்றோ நான்,

"எய்ப்பு என்னை வந்து நலியும் போது வேறெங்கும் செல்லமாட்டேன், அந்த‌
ராகவனின் தாலாட்டு கேட்க, இந்த‌
ராகவனின் பதிவு வந்து திரு
அரங்கனின் அருள் பெறுவேன். "
எனப் பாடி மகிழ்வேன்.

வேதவல்லி இசையிலே மெய் சிலிர்த்தேன்.
நாத மழையிலே நான் எனை மறந்தேன்.
இது என்ன பாடலா ! பாசுரமா ! பள்ளிகொண்டே
பரந்தாமன் வீற்றிருக்கும் பாற்கடலா ?

சுப்பு ரத்தினம்
தஞ்சை.

said...

ம்ம்ம்ம்ம் = பாவம் பிஜ்யா -பாப்போம் என்ன நடக்குதுன்னு

ஆமா உங்களே நான் TAG பண்ணிட்டேனெ - சென்று பாருங்கள்

http://pathivu.madurainagar.com

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

பஞ்சாப்காரனுக்கு ஆவின் எதுக்கு? அங்கேயே பக்கெட்( பாக்கெட் இல்லை)பக்கெட்டாப் பால் இருக்காம். கஸ்தூரி சொல்லியனுப்பினாள்:-))))

said...

வாங்க மேனகா.

கிறிஸ்மஸ்க்கு 'நான் வெஜ்' இல்லேன்னா அது கிறிஸ்மஸ்ஸே இல்லை.

ஓணம் வரட்டும். சத்யா முழுவன் வெஜ் தன்னே:-))))

கதையிலே 'நானை வெட்டிறலாம். எல்லாம் நம்ம இஷ்டம்தான்:-))))

said...

வாங்க சீனா.

பிஜ்யா உண்மையிலும் 'பாவம்'தான்,இல்லே?

டேக் பண்ணியதுக்கு மொக்கை போடணுமா? இதுவரை போட்டுக்கிட்டு இருப்பதெல்லாம் 'மொக்கை' கணக்கிலே வரலையா? ;-)))))

said...

twist vavhuteenga?

kathalla ithellam sagachamthaan. adutha payanatha arampinga.
aadumaadu.
(enakku font problem )

said...

பெண்குழந்தைகள் இல்லாத மாமியார், தன் முழு அன்பையும் மருமகள் மேல் செலுத்தினா
நிஜமாகவே?
நம்புகிற மாதிரியில்லையே!! :-))

said...

துளசி மேடம்,

இப்போதுதான் 4 பகுதிகளையும் படித்தேன்..ரயில் பயணமும் வயல்வெளிகளும் ..கடுகு எண்ணெய்..கடுகுப்பூக்கள்...இன்னும் பல சின்னச் சின்ன‌
வர்ணனைகள்...கதாபாத்திரங்களின் செயல் விளக்கம்..ரசிக்க வைக்கிறது..பாராட்டுகள்

said...

கேக்க மறந்துட்டேன். போட்டோவுல இருக்கறது குட்டி டீச்சரா? குட்டி கோபால் சாரா?

said...

வாங்க ஆடுமாடு.

காதல் என்ன கேட்டுக்குக்கிட்டா வருது?

இதெல்லாம் சகஜம்னு நீங்க சொல்றது மெத்தச் சரி.

அந்தப் படமா?

நம்ம கூகுளம்மாவோடச் சின்னவயசுப்படமாம்:-)))))

said...

வாங்க குமார்.

'இக்கதையில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்கக் கற்பனையே'ன்னு
அறிவிப்பு செஞ்சுருக்கணுமா? :-))))

போகட்டும், கதையிலாவது இப்படி நல்ல மாற்றங்கள் வந்ததா நினைச்சு மகிழக்கூடாதா?

said...

வாங்க பாசமலர்.

அதான் ஊர்ப்பயணத்தில் இருந்தீங்களே.....

ஊரில் அனைவரும் சுகமா?

ரசித்ததுக்கு நன்றி.

said...

என்னங்க சுப்புரத்தினம்,

தபாலில் தவறான மேல்விலாசம் எழுதிட்டீங்களா? :-)))

said...

மொக்கை போடத் தெரியாத உங்களை ரசிகனின் தொந்தரவு தாங்க முடியாமல் மொக்கைக்கு அழைத்துள்ளேன். போடலைனா, அப்புறம் கிடைக்கப் போகும் "ஆப்பு"க்குப் பொறுப்பு நீங்களே தான்! :P

ஹிஹிஹி, ஏற்கெனவே ஒரு "மொக்கை" வெயிட்டீஸ் போலிருக்கு, இதையும் சேர்த்துக்குங்க, ஏன்னா உங்களுக்கு வலை உலகம் சார்பா நான் அளிக்கும் தண்டனை இது! :P