Wednesday, May 11, 2005

MRI

நேத்து ராத்திரி எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செஞ்சுக்கப் போயிருந்தேன். அங்கே மெஷின்லே
ஏதோ கோளாறு ஆயிருச்சாம் காலையிலே, அதனாலே எல்லா அப்பாய்ண்ட்மெண்ட்டும் அரைமணி
லேட்டா ஆயிருச்சுன்னு சொன்னாங்க.


சரி, உக்காந்து இருக்கற நேரத்துக்கு ஏதாவது படிக்கலாமுன்னு அங்கே இருந்த பத்திரிக்கைகளைப்
பார்த்தேன். 'யு.கே. எடிஷன் நியூ ஐடியா' நிறைய இருந்துச்சு. இங்கெ எங்க லோகல்
எடிஷன் இருக்கு. அப்புறம் எதுக்கு இது?

உள்ளெ பார்த்தா, ஒரே சினிமா & டி.வி. ஆளுங்களைப் பத்திதான் நியூஸ்! அப்புறம்
எக்கச்சக்கமா மேக்கப் சாமானுங்க விளம்பரம்! நம்ம தமிழ்ப் பத்திரிக்கைகளுக்குக்
கொஞ்சமும் சளைக்கலை !!!

'நியூஸிலாண்ட் ஹோம் & கார்டன்' நிறைய!!!! இதுலே சாப்பாட்டுச் சமாச்சாரமும்
நிறைய! ஒரு பக்கம் 'டயட்'ன்னு சொல்லிக்கிட்டே நாக்குலே எச்சி ஊறர மாதிரி
சாப்பாட்டு வகைகளின் கலர் ஃபோட்டோஸ்!!!!!


அப்புறம் உள்ளெ கொண்டு போனாங்க. இதுக்கு முந்தி இந்த மாதிரி எம்.ஆர்.ஐ.ஸ்கேன்
செஞ்சிருக்கீங்களான்னு கேட்டப்பச் சொன்னேன், சில வருஷத்துக்கு முன்னாலே
தலைவலின்னு( தலையிலே ஏதாவது இருக்கான்னு பார்க்க!) ஒருக்கா எடுத்தாங்கன்னு!

காதுக்கு வச்சுக்க 'இயர்ப்ளக்' கொடுத்துக்கிட்டே, குறுகிய பாகத்தைக் காதுக்குள்ளே
வச்சுக்குங்கன்னு சொன்னப்ப, 'எனக்கு இது வச்சுக்கிட்டுப் பழக்கம்தான்,புருஷன்
குறட்டையிலிருந்து தப்பிக்க'ன்னு சொன்னேன்.

இந்த முறை சத்தம் ரொம்பவே இருந்துச்சு! 25 நிமிஷம் ஆச்சு! இதுலே என் மனசுக்குத்
தோணியது என்னன்னா,

'சவப்பெட்டியிலே' படுத்தா எப்படி இருக்குமுன்ற அனுபவம் கிடைச்சுருச்சு!

ஆனா சத்தம்தான் ஜாஸ்தி!!!!

13 comments:

said...

MRI செய்யும் அளவுக்கு தங்களுக்கு என்ன உடம்புக்கு? விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். (அது சரி, உங்க குலத்துல எரிக்கிரதில்லையோ? பொட்டி எதுக்கு?)

சுரேஷ்

said...

துளசி அக்கா,

எனக்கும் அதே கேள்விதான். என்னாச்சு உங்களுக்கு. எதுக்கு எம்.ஆர்.ஐ பண்ணிக்க போனீங்க..??

said...

சுரேஷ் & சுந்தர்,

நாலு மாசத்துக்கு முன்னே ஒரு கார் ஆக்ஸிடெண்ட் ஆச்சுல்லே, அப்ப இருந்து ஒரே
முதுகு & கால் வலி. ஃபிஸியோதெரபி எல்லாம் செஞ்சும் வலி போகலை.

இதுவரை 4 தடவை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாச்சு. இப்ப ஒரு ஸ்பெஷலிஸ்ட்
சொன்னார், முதுகுலே அடிபட்டதாலே டிஸ்க் ப்ரொலாப்ஸ் ஆகி நர்வ் பின்ச் ஆகுதுன்னு.
அவர் சொல்லித்தான் இந்த எம்.ஆர். ஐ.

இந்த ஊர்லே எரிக்கறதும் பொட்டியோடத்தான்:-)

என்றும் அன்புடன்,
துளசியக்கா

said...

துளசி! take care!.

said...

எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். நீங்கபாட்டுக்கு எழுதிக்கிட்டே இருங்க!!

said...

யக்கோவ்!! டாக்டர் என்னக்கா சொல்றது. நான் சொல்றேன். ஒரு வேளைக்கு 1 பதிவா காலை,மதியம்,இரவு என்று 3 பதிவு போடுங்க. எல்லாம் சரியாயிரும்.... :-)

said...

அன்புள்ள துளசி,

இதெல்லாம் சும்மா ஒரு கூடுதல் சோதனைக்கு அவங்க(மருத்துவர்) செய்யறது. உங்களுக்கு ஒண்ணும் இல்லை. எதாவது உடற்பயிற்சி செய்கிறீர்களா? (பிசியோதெரபி தவிர்த்து)

அரை மணி காலாற நடக்க உங்க ஊரில் சூழல் ஒத்துழைக்குமா?

பெரிசா ஒண்ணும் இல்லைதானே?

அன்புடன்,
-காசி

said...

அன்புள்ள மரம் & செல்வா

கனிவுக்கு நன்றி!!!!

அன்புள்ள விஜய்,

சரிங்க 'டாக்டர்':-)
இதென்ன 'அசுர' வைத்தியமா?

அன்புள்ள காசி,

நன்றி.அப்படி ஒண்ணும் பெருசா இருக்க வாய்ப்பில்லை. காலாற நடக்கத்தான் செய்றேன்.
ரொம்பக் குளிரா இருந்தா, இந்த ஜாக்கெட்டையெல்லாம் சுமந்துக்கிட்டுப் போறதுக்குப்
பதிலா இருக்கவே இருக்கு 'மால் வாக்கிங்'

வீட்டுலேயும் ஒரு 'ட்ரெட்மில் ப்ரோ' இருக்கு!

எதா இருந்தாலும் திங்கக்கிழமை ஸ்பெஷலிஸ்ட் அப்பாய்ண்ட்மெண்ட் இருக்குல்லெ
அப்பத்தெரிஞ்சுடும்!

எல்லா அன்புள்ளங்களுக்கும் நன்றி!!!!

said...

விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

said...

நன்றி கார்த்திக்!!!

said...

துளசி, காசி சொல்லுர மாதிரி "எதுக்கும்" செஞ்சு பாத்திடுவோமெ என்னு தான் செய்வாங்க ! டாக்க்டர்கள் S/W எஞ்சினியர்கள் மாதிரி ...Debug பண்ண proceed by elimination...

bonne sante !

said...

இந்த 'எதுக்கும் ஒரு ஸ்கேன் பாத்துடுவோம்'னு சொல்லி அவங்களுக்கு கமிஷன் கிடைக்கும் செண்டரில்தான் பாக்கணுமின்னும் எழுதிக் கொடுத்துடுவாங்க. நமக்குப் பக்கத்திலேயே ஒன்னு இருக்கும்..அதிலே?..ஹூ..ஹும்!
சேரி..மூணு வருசமாச்சு..இப்ப தேவலையா? என் மகளுக்கும் இதுபோல் முதுகில் தொல்லை..கடசியில் எக்ஸர்சைஸ் மட்டுமே போதுமுனு சொல்லி இன்னொன்றும் சொன்னார் டாக்குடர், 'யூ ஹவ் டு லிவ் வித் இட்!' இது எப்படியிருக்கு?

said...

வாங்க நானானி.

எஸ்ப்பா. வீ ஹேவ் டு லிவ் வித் தட்!

ரிஸல்ட்