Tuesday, May 03, 2005

எண்ணி எண்ணிப் பார்க்க மனம்....

இப்படி ஆரம்பிக்கற சினிமாப் பாட்டு ஒண்ணு இருக்கு! யாருக்காவது தெரியுமா? ரொம்பப் பழைய படம்!

'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே'

இப்படிப் போகும் அந்தப் பாட்டு...


ச்சின்ன வயசுலே இருந்தே இப்படி ஒரு பழக்கம். எங்கே போனாலும் ஜன்னல் கம்பி முதல், அங்கே எண்ணக்கூடிய
வஸ்து எதா இருந்தாலும் ஒண்ணு ரெண்டு மூணுன்னு ஆரம்பிச்சுடுவேன். எல்லாம் மனசுக்குள்ளேதான்!

அதுவும், ட்ரெயின் அதுலேயும் கூட்ஸ் ட்ரெயின்னா சந்தோஷம் கூடுதல், நிறையநேரம் எண்ணலாமேன்னு!

ஆனா இந்த எண்ணிக்கைகள் எப்பவுமே நினைவு இருக்காது. ச்சும்மா அப்பப்ப எண்ணறதுதான்!

இப்படிப்பட்ட நான் இதுவரைக்கும் இங்கெ போட்ட பதிவுகளை இன்னைக்கு எண்ணினேன்.

எதுக்கு எண்ணனும் ? அதான் 'டாஷ் போர்டு'லே சொல்லுதேன்னு பார்த்தா அது என்னவோ 22 ன்னு
காமிக்குது! நிதானமா எண்ணிக்கிட்டே வந்தப்பதான் தெரியுது இது 100வது பதிவுன்னு!( இதுலே 'சாமி'யைச் சேர்த்துக்கலே!)

ஆஹா..... சினிமா ஆளுங்க கணக்கா நாமும் 100வது....... கொண்டாடிடலாமுன்னு இந்தப் பதிவைப்
போட்டிருக்கேன்.

என்னுடைய 'அறுவை'யை ( சரியா?) இதுவரை சகிச்சுக்கிட்டிருந்த அனைவருக்கும் நன்றியைத்
தெரிவிச்சுக்கறேன்.

என்னையும் ஒரு படைப்பாளியா ஏத்துக்கிட்டு அங்கீகரிச்ச நம்ம 'மரத்தடி'க்கும், என்னை எழுதத் தூண்டிய
இ.சங்கமம் ஆசிரியர் விஜய்க்கும் என் மனமார்ந்த நன்றி!

இனிமேதான் இருக்கு உங்களுக்கு:-)

என்றும் அன்புடன்,
துளசி.
15 comments:

said...

நூறு வாழ்த்துக்கள் துளசி:-)

said...

வாழ்க்கை;
வையந்திமாலாவின் முதற்படம்; டி. ஆர். ராமசந்திரன் கதாநாயகன்.
1948? (டோண்டு சரியான பதில் தருவார் ;-))

உங்கள் கேள்விக்குப் பதில் தந்துவிட்டேன். இப்பொழுது என் கேள்விக்குப் பதில் தாருங்கள்;
"சுஷ்மம் என்றால் ஏன் விளக்கம்? பைனாகுலர் என்றால் ஏன் கிண்டல்?" என்று சொல்லுங்களேன்; இரண்டு கிழமைகளாகத் தலைக்குள்ளே குறாண்டிக்கொண்டேயிருக்கிறது. ;-)

said...

//இப்பொழுது என் கேள்விக்குப் பதில் தாருங்கள்;
"சுஷ்மம் என்றால் ஏன் விளக்கம்? பைனாகுலர் என்றால் ஏன் கிண்டல்?" //

பெயரிலி,
உங்கள் கேள்வியைப் பார்த்தபின்னர் எனக்கு ஒரே குழப்பம், மேலேயுள்ள பதிவைப் பலமுறை தேடிப்பார்த்தும் ஏன் கேள்வி கேட்டீர்கள் என்றே புரியவில்லை.

said...

அட ராமா!
அட நாராயணா!
தப்பான இடத்திலே பின்னூட்டியிருக்கிறேன். :-(

said...

துளசியக்கா,
அப்படியே அடுத்த பதிவில் நூறையும் ஒரு புத்தகமாய்ப் போட்டுவிடுங்கள்.
http://muthukmuthu.blogspot.com/2005/01/blog-post_10.html
http://muthukmuthu.blogspot.com/2005/01/blog-post_110538376220943021.html

said...

துளசி தளத்தை அவரது அம்மா அப்பா (துளசியும் blogger.comஉம்)அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார் தங்கைமார் எல்லாரும் பல்லாண்டு காலம் சிறப்பாக (இதுக்கு மிஞ்சி என்ன சிறப்பு?அதுதான் ஏற்கெனவே சிறப்பா இருக்கே!) வாழ, வளர வாழ்த்துகிறார்கள்.

(எல்லாரும் இலங்கை வானொலி ஸ்டைலில் பாடுங்க: பிறந்தநாள்..இன்று பிறந்தநாள்... ;o)

said...

துளசி,

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள். உங்க பதிவுகள் ரொம்ப ஜாலியா இருக்கு படிக்க. தொடர்ந்து ரசிக்கிறோம்.

அன்புடன்,
தாரா.

said...

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அலைகடலென திரண்டிருக்கும் வலைப்பதிவாளர்களே, மெரினாவின் அலைகளை விட எங்களின் அன்பும் ஆதரவும் உயரமாய் இருந்து கொண்டே இருக்கும் என பின்னூட்டத்தில் தாங்கும் பேரன்பு கொண்ட இதயங்களே, இந்த நாள் உலக வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய பொன்னாள். அருமை சகோதரி துளசி கோபால் (ஒரு நிமிஷம், மைக்கை ஆப் பண்ணுய்யா, நமது 37 வட்ட தங்க தலைவன் தெண்டுல்கர் மன்றத்தின் சார்ப்பாக, இந்த மாலையை, பொன்மாலையாக கருதுமாறு, திருமதி. துளசி கோபால் அவர்களுக்கு அணிவிக்கிறோம் .... டேய்..டேய்.. போட்டோ புடிரா... ஏய்...சூசை, மணி, கோபாலு, சரவணன், அமீது அந்த பக்கம் நில்லுங்கப்பா, இப்ப புடிணா போட்டோ.... தாங்க்ஸூ மேடம்)

அருமை சகோதரி துளசி கோபால், 100 பதிவு எழுதியிருக்கிறார் என்று எண்ணும் போது ( சார் ஒரு நிமிஷம்.. .. ஆடையாம்பட்டி, அனைத்து மகளிர் சுதந்திரக் குழு சார்ப்பாக இந்த தஞ்சாவூர் தட்டினை சகோதரிக்கு தருகிறோம். இப்போது குழுவின் சார்ப்பாக, திருமதி. மலர்மேகம் ஒரிரு வார்த்தைகள் பேசுவார்கள். நாராயணா கொஞ்சம் ஒதுங்கிக்கோ, இரண்டு நிமிஷம் இந்தம்மாவை அனுப்பிச்சிருவோம்)

அடப் போங்கய்யா, நான் என்னிக்கு வாழ்த்தி, பேசி முடிகிறது.

வாழ்த்துக்கள் துளசி கோபால் (சேச்சே, எப்பயாச்சும் தான் மேடை கிடைக்குது. அதுக்குள்ள இறக்கிட்டாங்களே!) :)

said...

வாழ்க்கை சமீபத்தில் 1950-ல் வந்தது. 16 வயது வைஜயந்திமாலா புயலாக வந்தார், பார்வையாளர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.

இப்பாட்டு இந்தியில் வெளியான "படீ பெஹன்" (அக்கா) என்றப் படத்தில் வந்தப் பாடல் ஒன்றின் டியூனைக் காப்பியடித்தது. அப்பாடல்:

"சுப் சுப் சுப் தோ கடீ கோயி பாத் ஹை,
பஹலி முலாகாத் ஹை ஏ பஹலி முலாகாத் ஹை"
(சும்மா சும்மா ஏன் ஓரமா நிக்கறே,
இது முதல் சந்திப்பு, இது முதல் சந்திப்பு").

இன்னொரு விஷயம். இந்திப் பாட்டின் முதல் அடியைப் பயன்படுத்தி கேர்ஃப்ரீ விளம்பரமும் வந்தது. டெலிகேட்டான விஷயத்தை அருமையாகக் கையாண்டிருப்பார்கள். ஒரு சிறுமி விளையாட்டில் கலந்து கொள்ளாமல் தனியாக நிற்க, இன்னொரு சிறுமி இக்கேள்வியை அதே டியூனில் கேட்டுக் கொண்டு வருவாள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வாழ்த்துக்கள் துளசியக்கா!
ஆனா இப்பிடி 'மைல் கல்லைத்' தாண்ட வேணும் எண்டதுக்காக கன பதிவுகள் முளைச்சா அந்தப்பாவங்கள் உங்களத்தான் சேரும்.

said...

நூற்றுக்கு நூறு (100/100).

said...

ஆஹா! நூறு முடிச்சிட்டீங்க...
அடுத்த நூறு விரைவில் முடிய, உளமார்ந்த வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கிறிஸ்

said...

துளசியக்கா... வாழ்த்துக்கள்.

அதெல்லாம் இருக்கட்டும். இப்பதான் 100 அடிச்சாச்சில்ல... இனி வழக்கம்போல அடிச்சு ஆடுங்க...

said...

அட!! நூறு பதிவா!!அடேயெப்பா!

அறுவையா...?என்ன அருமையா..அட்டகாசமா..இருந்துச்சு ஒண்ணொண்ணும்!!!

வாழ்த்துகள் துளசி!தொடருங்கள் படிக்க ஆவலோடிருக்கும்..

அன்பு
மீனா.

said...

அடுத்த நூறுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
நந்தலாலா