Friday, May 13, 2005

மலையாளக் கரையோரம் தமிழ் படிக்கும் குருவி!!!!

படிப்பும் பழக்கமும்!!! பகுதி 3


தோட்ட கூராக்கும், தொண்டகாயும், கோங்கூராவும் சாப்புட்டது போதுமுன்னு திரும்ப
மெட்ராஸுக்கே வந்துட்டோம். அப்புறம் கொஞ்ச காலம் பெங்களுருன்னு போச்சு.
நம்ம வாசிப்புக்கு பங்கம் ஏதும் வரலை. அதுபாட்டுக்கு அதுன்னு போய்க்கிட்டே இருந்துச்சு.மறுபடி ஒரு இடம் மாறவேண்டியதாப் போச்சு. மலையாளக் கரையோரம் ஒதுங்கினோம்!

அங்கே நமக்குப் பேப்பர், அதாங்க 'த ஹிண்டு' போடறவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்.
அவர் மூலமா குமுதம், விகடனுக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம்.

'த ஹிண்டு'வை மட்டும் எங்கெ போனாலும் விடறதில்லை! இப்ப வேலை செஞ்சுக்கிட்டு
இருந்தாலுமே வேலை தேடும் படலத்தை விடாம இருந்தோம்!

நானு அப்படி இப்படின்னு மலையாளம் படிக்கக் கத்துக்கிட்டேன்! தினமும் காலையிலே
'மாத்ருபூமி' பத்திரிக்கை படிக்கற லெவலுக்கு வந்துட்டேன். கீழே வீட்டு ஓனர் வாங்குவாங்க!

சில தமிழ் எழுத்துக்களுக்கும் மலையாள எழுத்துக்களுக்கும் ஒற்றுமை இருக்குதுல்லே! அதனாலே
கொஞ்சம் மெனக்கெட்டாக் கத்துக்கலாம்! ஆனா இந்தப் பத்திரிக்கையிலே முக்காலே மூணுவீசம்
அரசியல்தான்! சரி எதோ ஒண்ணு! நமக்கு அதா முக்கியம்? வாசிப்புதானே நம்ம கோல்!

வேற வீடு மாத்தி, பக்கத்து ஊருக்குப் போனோம். அங்கே பேப்பர் போடற பையன் நமக்கு 'நண்பன்'
ஆயிட்டான்.ரொம்பச் சின்னபையன்! ஒரு பன்னெண்டுவயசிருந்தா அதிகம்!!
குழந்தைகள் பத்திரிக்கைஒண்ணு 'பால ரெமா'ன்னு வரும். அதை அவன்கிட்டே 'ஓசி'
அடிக்க ஆரம்பிச்சேன். படிச்சுட்டு அலுங்காமக் குலுங்காம மறுநாள் கொடுத்துருவேன்! 'தமிழ்க்காரி'
மலையாளம் வாசிக்கறதைப் பார்த்து அவனுக்கு 'வளரே இஷ்டம் தோணிப்போயி'

அப்புறம் அந்தப் பையனே லைப்ரரியிலே இருந்து எடுத்தேன்னு சொல்லி கொஞ்சம் சின்ன சைஸுலே
இருக்கற நாவல்களைக் கொண்டுவந்து தந்தான்! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பெரிய பெரிய
புத்தகங்களாச்சு! ஆனா பாருங்க, அந்த 'லைப்ரரி' எங்கே இருக்குன்னுகூட நான் கேட்டுத் தெரிஞ்சுக்கலை!
ஏனோ, கேக்கணுமுன்னு தோணலை! அப்பம் தின்னாப் போதும். குழி எத்தனைன்னு எண்ணற வேலை
என்னாத்துக்கு? புத்தகம் கிடைச்சாச் சரின்னு இருந்துருக்கேன், பாருங்க!!!

பொழுது போக்குக்கு புத்தகமும் ரேடியொவும்தான் அப்ப! விஞ்ஞான முன்னேற்றமுல்லாம் ரொம்ப இல்லை!
அப்படி ஏதாவது வந்தாலும் நமக்கும் அதுக்கும் தொலைதூஊஊஊஊஊஊஊஊஊஊரம்!!!!

காலச்சக்கரம் நம்மைச் சுழட்டி அடிச்சுச்சு வேற இடத்துக்கு! பூனாவுக்கு வந்து சேர்ந்தோம். நல்லவேளை,
அங்கே தமிழ் ஆட்கள் நிறைய இருந்தாங்க. 'ராஸ்தாப்பெட்'ன்ற இடத்துலே தமிழ் வாரப்பத்திரிக்கை கிடச்சுக்கிட்டு
இருந்துச்சு! ஆனாலும் அந்த ஊருக்குப் போனப்ப வாங்குன மொதப் புத்தகமே '30 நாளிலே ஹிந்தி கற்றுக்கொள்வது
எப்படி?"'ன்றதுதான். ஆனா ஹிந்தி-இங்கிலிஷ்! சரி அதுவும் வேணுமுல்லெ. பாஷை தெரிஞ்சுக்கறது முக்கியமாச்சே!

ஆனாப் பாருங்க பேசமட்டும் தெரிஞ்சுக்கிட்டேனே தவிர ஹிந்தியைப் படிக்கத்தெரிஞ்சுக்கறது அவ்வளவு முக்கியமாத்
தோணலை! அதுக்குன்னு நான் ' ஹிந்தியிலே கைநாட்டு'ன்னு நினைச்சுக்காதீங்க! நான் பள்ளிகூடத்துலேயெ ஹிந்தி
பாடம் படிச்ச ஆளு!! அந்த ஹிந்தியெல்லாம் ஒரு காசுக்கும் ஒதவாதுன்னு இங்கெ வந்தப்பத்தான் தெரிஞ்சது.
ஏதோ எழுத்துக்கூட்டித் தப்பும் தவறுமாப் படிச்சுருவேன்.

இப்படித்தான், ஹைஸ்கூல் கடைசிவருசப் பரிட்சையிலே 'துமாரே அத்யந்த் கே பாரே மே பிதாஜி கோ ச்சிட்டி லிகோ'ன்னு
ஒரு கேள்வி வந்துச்சு! இதென்ன பிரமாதம்? எழுதுனாப் போச்சு!

மொதல்லே ஃப்ரம் அட்ரஸ் எழுதியாச்சு. அப்பாவோட அட்ரஸ் 'டு' வும் எழுதியாச்சு! எல்லா அட்ரஸும் எதாவது
நம்பர் போட்டுட்டு, 'மெயின் ரோடு'ன்னு எழுதறதுதான் வழக்கம். எல்லா ஊர்லேயும் ஒரு மெயின் ரோடு இருக்கும்லெ!
இப்பத்தான் வருது ஒரு கண்டம்! அதான் அந்த வார்த்தை 'அத்யந்த்' ! அப்படின்னா என்னன்னே தெரியலை! க்ளாஸ்லே
அவ்வளவு அழகாக் கவனிச்சுப் படிச்சிருக்கேன்! ஹிந்திதானேன்னு ஒரு துச்சம்! அதுவும் ஆப்ஷனல் சப்ஜெக்ட் ஆச்சே!
யாரையாவது கேக்கலாமுன்னா உக்காந்திருக்கர இடம் எங்கே? பரிட்சைஹால்! மூச்சு விட முடியுமா?

கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு( பாட்டி சொல்ற மாதிரி கிருஷ்ணார்ப்பணம்!) சரசரன்னு எழுத ஆரம்பிச்சேன்,
' பிதாஜி, அத்யந்த் கே பாரே மே முஜே குச் நஹி மாலும்'!!!! எப்படியோ நாப்பது மார்க் வாங்கிப் ஃபெயிலாகாமத்
தப்பிச்சேன். சரி, அதை விடுங்க.

ஆமாம், உங்களுக்கு அந்த 'அத்யந்த்'க்கு அர்த்தம் தெரியுமா? நானே ஹாலைவிட்டு வெளியெ வந்தாவுட்டு, அங்கே
எங்களுக்காகக் காத்துக்கிட்டிருந்த ஹிந்தி டீச்சர் கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

'அத்யந்த்' ன்னா படிப்பு, கல்வியாம்! இப்ப நினைச்சுப் பாருங்க 'அப்பாவுக்கு என்னன்னு எழுதியிருக்கேன்?'


7 comments:

said...

முத்து & ரவியா

மிகவும் நன்றி!!!! ( இது போன பதிவு பின்னூட்டத்துக்கு!!)

said...

//'அத்யந்த்' ன்னா படிப்பு, கல்வியாம்! இப்ப நினைச்சுப் பாருங்க 'அப்பாவுக்கு என்னன்னு எழுதியிருக்கேன்?'//
என்னன்னு எழுதிருக்கு?யாராவது விரைவில் சொல்லவும்!

said...

ஷ்ரேயா, ஷ்ரேயா,

" அன்புள்ள அப்பாவுக்கு,
படிப்பு என்பதைப் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது'ன்னு எழுதியிருக்கேன்!!!!!

இதுஎப்படி இருக்கு!!!! ஆஹா....

said...

:oD ROFL!!!

said...

// ' பிதாஜி, அத்யந்த் கே பாரே மே முஜே குச் நஹி மாலும்'!!!! எப்படியோ நாப்பது மார்க் வாங்கிப் ஃபெயிலாகாமத்
தப்பிச்சேன். //
:)))))))) :D
நான் ராஷ்டபாஷா ,விஷாரத் எக்ஸாம் எழுதினப்ப எழுதின பதில எல்லாம் மேற்கூறின ரகம் தான் . பரவால்ல நாம மட்டும் இப்டி இல்லன்னு நெனச்சு சந்தோசம் :)

said...

வாங்க சசி கலா.

இப்படியெல்லாம் பூந்து வெளையாடித்தான் மொழிகள் கத்துக்கணும்.

இந்த வருச ஈஸ்ட்டர் அண்ட் விஷூ விழாவுக்கு (ரெண்டும் சேர்த்தே கொண்டாடுவது வழக்கம்) நாந்தான் விஷூ மெஸேஜ் கொடுக்கணுமுன்னு கேட்டுக்கிட்டாங்க.

ஞானும் சம்மதிச்சு. ஸ்டேஜில் கயறி மெஸேஜும் கொடுத்து,கேட்டோ:-)))

said...

ஈஸ்ட்டர் மெசேஜ் வாசகர்களுக்கு உண்டா ..மலையாளம் கொறச்சு அறியும் , ஆவலுடன் waiting மெசேஜ் படிக்க !!!!!