Saturday, May 28, 2005

சூப்பர் 12!!!!

என்னடா, ஏதோ திமுக மகாநாட்டுக்கு வந்துட்டமான்னு 'சன்'தேகம் வர்ற அளவுக்கு இன்னைக்கு
ஊரு முழுக்க ஒரே கறுப்பும் சிகப்பும் கொடிங்களாவும், பலூன்களாவும் பறந்துக்கிட்டு இருக்கு!
கடைகண்ணி, மாலுங்க, ரோடுங்கன்னு ஒண்ணு விடலை!!!!சின்னப்புள்ளைங்க கூட முகமெல்லாம் கறுப்பும், சிகப்புமா வரைஞ்சுகிட்டுத் திரியுதுங்க!!! ஊர்லே இருக்கற
எல்லா மோட்டலுங்களும் ஃபுல்!!!! 'இடம் காலி இல்லை'ன்ற போர்டை மாட்டிக்கிட்டு இருக்கு!!!

சுத்துப்பட்டு இருக்கற பதினெட்டுப் பட்டி ஆளுங்களும் வந்து இப்படிக் குவிஞ்சா எப்படி இடம் இருக்கும்?

எல்லாம் இந்த 'ரக்பி'பண்ற அட்டூழியம்தான்!!!!

ஒரு பத்து வருசமா( இதுதான் பத்தாவது வருசம்!) இந்த சூப்பர் 12 நடக்குது! இங்கே பேட்டைக்குப் பேட்டை
இருக்கற 'ரக்பி க்ளப்'ங்க மத்த ஆஸ்தராலியா, தென் ஆப்பிரிக்காவுலே இருக்கற பேட்டைக் 'க்ளப்'ங்களோட
போட்டிக்கு ஆடறது இது!

இதுலே பாருங்க இதுவரை தென் ஆப்பிரிக்கா ஒருதபா கூட ஜெயிக்கலே! நம்ம பக்கத்து நாடான ஆஸ்தராலியா
ரெண்டு தபா ஜெயிச்சிருக்கு! அது 'ப்ரம்பீஸ்'ன்ற பேருலே அங்கே ஒரு பேட்டையில் இருக்கற
க்ளப்( ஐய்யோ, இதுக்குத் தமிழிலே என்னான்னு சொல்றது? யாராவது தார் வாளியைக் கொண்டாந்துறப்
போறாங்க!)

இங்கே நம்ம நியூஸிலாந்துலே, ஆக்லாந்து 'ப்ளூஸ்' மூணு தபா ஜெயிச்சுருச்சு! அத்தை விடுங்க அது வேற
பேட்டை. இன்னைக்கு நடக்குறதைக் கொஞ்சம் விலாவரியாச் சொல்றேன்!

நம்ம ரீஜன் பேரு கேன்டர்பரி. இதுலேதான் நாங்க இருக்கற ஊர் 'கிறைஸ்ட்சர்ச்' இருக்கு! இந்தப் பேட்டையிலே
இருக்கற ரக்பி க்ளப்க்கு பேரு 'க்ரூசேடர்ஸ்'! நம்ம கேன்டர்பரி கலருதான் இந்தக் கறுப்பும் சிகப்பும். ஆச்சா?

இன்னைக்கு ஃபைனல்ஸ்! யாரு கூட? எல்லாம் நம்ம பக்கத்து நாடான ஆஸ்தராலியா கூடத்தான்! அங்கெயிருக்கற
'வாரட்டா க்ளப்' தான் இறுதிப் போட்டியிலே நம்ம கூட(!) மோதுது!!!!

அவுங்கவுங்க இதுவரை எடுத்திருக்கற பாயிண்டைப் பொறுத்துதான் எந்த ஊர்லே இறுதிப் போட்டி நடக்குமுன்னு தீர்மானிக்கறது!
நம்ம 'க்ரூசேடர்ஸ்'தான் இந்தப் பத்துவருசத்திலே நாலு தபா ஜெயிச்சவுங்க!!! இவுங்கதான் இந்த வருசம் நிறைய
பாயிண்ட்ம் எடுத்தவங்க, அதாலே எங்க ஊர்லேதான் இது நடக்குது! இங்கே இருக்கற 'ஜேடு ஸ்டேடியம்' நீங்கெல்லாம்
கிரிக்கெட்டுப் போட்டி நடக்கறப்ப பார்த்திருப்பீங்கதானே!

இன்னைக்குச் சனிக்கிழமையாச்சே! வழக்கமாப் போறமாதிரி சாயந்திரம் கோயிலுக்குப் போனோம். வழியெல்லாம்
வண்டி நடமாட்டம் ஒண்ணுமேயில்லே. என்னவோ ஊரே 'ஜிலோ'ன்னு கிடக்கு! கூட்டமெல்லாம் ஏழரைக்கு
ஆரம்பிக்கப் போற 'கேம்' பாக்கப் போயிருக்கு போல!

ரெண்டு வாரத்துக்கு முன்னேயே டிக்கெட்டு எல்லாம் வித்துப் போச்சு! 'ஸ்கை சானல்' வச்சிருக்கறவங்க நேரடியா
ஒளிபரப்பைப் பாக்கலாம்! எங்களை மாதிரி இருக்க ஏழை பாழைங்களுக்காக தேசிய ஒலிபரப்புலேயும் காட்டுவாங்க.
ஆனா அங்கே 'கேம்' முடிஞ்சாவுட்டுத்தான்! அதுக்கு ராத்திரி ஒம்போது மணி ஆயிரும்! சாப்ட்டுக்கீப்ட்டு நிதானமா
உக்காந்து பாக்கறதுக்கு தோதான நேரம்தான்!

மொதல்லே போற ஜனங்களுக்கு 'ஃபோம் கத்தி'ஒண்ணு தந்துருவாங்கல்லெ. இவுங்கதான் 'க்ரூசேடர்ஸ்'ஆச்சே!
அதை வச்சுக்கிட்டு பசங்க கூட்டத்துலெ கத்திக்கிட்டு, கும்மாளம் போட்டுக்கிட்டு ஆட்டம் காமிக்கும் பாருங்க!
நல்லவேளை , 90 நிமிசத்துலே ஆட்டம் குளோஸ்!!!!

இந்தவாட்டியும் நாங்க ஜெயிச்சுடுவொம்லெ! ஜெயிச்சா அஞ்சு தபா ஆச்சு!!!!

சொல்லி வாய்மூடலே, 'கேம்'பாக்கப்போன மக வாயெல்லாம் வரா!! தெரிஞ்சுபோச்சு, நாங்க ஜெயிச்சுட்டோம்லெ!!!!

ஒருதபா நீங்களும் வந்து பாத்துட்டுச் சொல்லுங்க, இந்த 'ரக்பி' என்ன பாடு படுத்துதுன்னு!!!!

8 comments:

said...

//"என்னடா, ஏதோ திமுக மகாநாட்டுக்கு வந்துட்டமான்னு 'சன்'தேகம் வர்ற அளவுக்கு இன்னைக்கு
ஊரு முழுக்க ஒரே கறுப்பும் சிகப்பும் கொடிங்களாவும், பலூன்களாவும் பறந்துக்கிட்டு இருக்கு!"//

துளசி அக்கா, நான் நினைச்சேன் நீங்க நிஜமாவே திமுக மாநாடு பாக்க கோயமுத்தூர் போயிட்டீங்கன்னு... நிஜமாவே இப்ப அங்கே மாநாடு நடக்குதுன்னு செய்தி.

said...

//இந்தவாட்டியும் நாங்க ஜெயிச்சுடுவொம்லெ! ஜெயிச்சா அஞ்சு தபா ஆச்சு!!!! //


அடுத்த தபா விட்டுற மாட்டம்ல. ஒரு கை பாத்துருவோம்.

said...

தூளசி அக்கா,

திருவிழா கொண்டாடிட்டிங்க. ம்... 'கிளப்'ன்னா விடுதி, 'டிஸ்கோ கிளபு'ன்னா ஆட்டவிடுதி. அடங்கமாட்டாங்கய்யான்னு... யார் யாரோ கத்துர சத்தம் காத்துல வருது?. நல்ல பதிவு. நன்றி.

said...

இங்க க்ளப் ங்கிறது கழகம் அப்டீங்கிற அர்த்தத்தில வரும். sports club-விளையாட்டுக் கழகம்.

நம்மூரில மங்கையர் கழகம் அப்டீன்னு முடியிற ஒரு பள்ளி இருக்கு. அதை நாங்க மங்கையர் club என்று சொல்லுவோம்.

said...

பரணித்தம்பி,

நலமா? இப்ப என்ன திடீர்னு மகாநாடு? ஜனங்க 'மூளை'யை மழுங்கடிக்கவா?

வசந்தன்,

ஜெயிட்டம்ல:-))))))

மரம் & சயந்தன்,

இதென்ன பெரிய க(ல)ழகமாப் போச்சு!

என்றும் அன்புடன்,
துளசி.

said...

ரக்பி பத்தி ரகளையா எழுதியிருக்கீங்க அக்கா... நல்லா இருக்கு. விளையாட்டு அன்பை வளர்ப்பதற்குன்னு இருந்தாலும் அங்க தலையால மோதிக்கிறத பாத்தா கொஞ்சம் பயமாத்தாங்கா இருக்கு.

said...

இப்ப என்ன திடீர்னு மகாநாடு? ஜனங்க 'மூளை'யை மழுங்கடிக்கவா????///
right question but asked at the wrong time..
Hello Thulasi..how are you?

said...

வாங்க டெல்ஃபீன்.
நல்லா இருக்கீங்களா?

இதென்ன ஆச்சரியம்........ சரியா ரெண்டு வருசத்துக்கு முந்தின பதிவுக்கு
அதே மே 28) இன்னிக்கு பின்னூட்டம்!!!

ரக்பி ஆட்டிதான் வைக்குது. ப்ரிஸ்பேன்லேகூட போனவாரம் நடுவில் ஒரு
நாள் ரக்பி கேம் இருக்குன்னு எங்களுக்குத் தங்க இடம் கிடைக்கலை. 100 கிலோ
மீட்டர் போய் இன்னொரு ஊர்லே தங்கிட்டு மறுநாள் வந்தோம்:-)