Monday, May 30, 2005

மாயவலையில் மாட்டிக்கொண்ட மனிதர்களே!!!!

சினிமா என்னும் மாயவலையில் அகப்பட்டுக்கிட்டு மீள முடியாமல்
தவிக்கும் ஜென்மங்களை( அதாவது என்னைப்போல இருக்கறவங்களை) அபயகரம்
நீட்டி ரட்சிக்கறதுக்காக அப்பப்ப சில படங்கள் வந்துரும்!


ரட்சிக்கறதுக்கு எதுக்குப் படம்? ஏன்? முள்ளை முள்ளாலேதான் எடுக்கணுமுன்னு
உங்களுக்குச் சொல்லித்தரணுமாக்கும்?

இவன் யாரோ? செந்தாழம்பூவே! திரு திரு, குருதேவா இப்படின்னு சில படங்கள்!!!!

இதுலே நடிச்சவங்க, இதுங்களோட கதை, பாட்டுன்னு சொல்லி உங்களை இம்சைப்
படுத்தமாட்டேன்!

ஆமாம், எனக்கொரு சந்தேகம். இந்தப் படங்களை எந்த குண்டு தைரியத்துலே
எடுக்கறாங்க?

தியேட்டர்களிலே மெய்யாலுமா ரிலீஸ் ஆகுது?

ஒருவேளை எனக்குன்னே எடுக்கறாங்களோ?

இருக்கலாமோ?

ஹாங்.....

ச்சீச்சீ.... இருக்காதுதானே?

போகட்டும், அட்லீஸ்ட் நான் சொன்னாத்தானெ
இந்தப் பேருகளிலே படங்க வந்த விவரமே உங்களுக்குத்தெரியப்போகுது!!!!!!


17 comments:

said...

யக்கா, அந்த படங்கள் நியூசி நூலகத்திற்காகவும்,நீங்கள் பார்த்து அவஸ்தை படுவதற்காக மட்டுமே என்பதை பக்கத்திலிருக்கும் நண்பனின் தலையில் அடித்துச் சொல்லுவேன்.

said...

சத்தியமா சொல்றேன், உங்க சிங்கப்பூர் ஏஜண்டு கோலிவுட்டுல சொல்லி "நீ எத வேணா எடு, பாக்குறதுக்குதான் துளசியக்காவும் அவுங்க லைப்பரி மூலமா இன்னும் பத்து பேர் இருக்காங்கன்னு" நா போன தடைவ சென்னை போனப்போ கோடம்பாக்கம் ஸ்டேஷன்ல வெச்சு மொபைல்ல யார்ட்டயோ போசிக்குனு இருந்தப்ப அந்த துளசி இந்த துளசிதான்னு புர்ஞ்சுக்காம போய்டேன்.

said...

இந்த விகிதத்திலே வருடத்திற்கு ஒண்ணு ரெண்டு படம்தான் தேறும் போல இருக்கு!

said...

விஜய், சுரேஷ், ஜீவா நன்றி!!!!

விஜய் பக்கத்திலே நிக்கற நண்பர்கள் எடுங்க ஓட்டம்!!!!

சுரேஷ், இப்பவாச்சும் தெரிஞ்சதா அந்தத் துளசி நாந்தானுன்னு!
( உங்க 'மெளனத்துலே பின்ன்னூட்டப்பெட்டி வேலை செய்யலை! அதைக்
கொஞ்சம் பாருங்க!)

ஜீவா, அதென்ன ஒண்ணு ரெண்டு? ஒண்ணு தேறினாலே யதேஷ்டம்!!!

said...

// செந்தாழம்பூவே! திரு திரு, குருதேவா // பேர பாக்க சொல்லோ தமிள் படம் மாதிர்த்தான் கீது... மெய்யாலுமே தமிள்ப்படமா? செரி, படம் என்னமோ ஒரு இன்ட்ரஷ்டுல எவனோ ஒரு பணக்கார போக்கத்தவன் எட்த்தான்னு வச்சிகினா கூட இத்தயெல்லாம் விசிடில வேற உட்டு காச கரியாக்குரானுவலா? எல்லாம் கெடக்கட்டும்... அப்பால நீங்க ஒரு ஒன்மய சொல்லுங்க:: இத்தயும் நீங்க குந்திக்கினு பாத்தீங்களா இல்லையா??

said...

ஐய்யோ முகமூடி,
அத்தையேன் கேக்கறீங்கோ? நம்ம வீடியோ லைப்ரரிக்கு வர்றதுங்க, இதெல்லாம்.
நாந்தானே இங்கே இதுக்கெல்லாம் 'சென்ஸார் போர்டு'!!!!!
அத்தாலே, இதையெல்லாம் பார்த்துத் தொலைக்கணும்!
சப்ளையர் என்னா பண்ணுவார்? அவருக்கு வர்றதை அப்படியே அனுப்பி வச்சுடுவார்!
சண்டை, பாட்டு, அச்சுபிச்சுக் காமெடி எல்லாத்தையும் ஓட்டுனோமுன்னா ஒரு 45 நிமிஷத்துலே
படத்தை( பார்த்தேன்னு!) முடிச்சுடவேண்டியதுதான்!!!!

என்னா நாஞ்சொல்றது?

said...

ஏதோ 'அவருக்காக' எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு உட்கார்ந்து பார்த்தாக்கூட 'சந்திரமுகி'யை சமாளிக்கமுடியலே... எப்படித்தான் எல்லா சினிமாவையும் பார்க்குறீங்களோ....

45 நிமிஷத்துல ஓட்டுனாலும் தியாகம், தியாகம்தானுங்கோ...தமிழ் சினிமாவை இப்படியும் வாழவைக்கிறீங்கோ!

said...

அடப்பாவமே.... சென்சார் அதிகாரிங்களாவது 'ரொம்ப கடியா, வெட்றா அத்த'ன்னு ரவுசு பண்ணி மஜாவா இர்ந்துக்லாம்... அத்து கூட முடியலன்னா என்னா பொயப்போ போங்க ஒங்களுது.... சரி போவட்டும், 'வேணாம் பாக்கவே பாக்காதீங்கோ'ன்னு ஒரு ஷர்டிபிகேட் கொடுத்து எங்கள மாதிரி அப்பாவிங்கள காப்பாத்துறீங்களான்னா அத்தயும் செய்ய் மாட்றீங்கோ... அந்த கெரகத்த நாங்க வேற பாக்குற மாதிரி ரிலீஸ் பண்றீங்கோ... அட்த்த தபா எதுனா ப்ண்ணு தாயி..

ராம்கி // .. கூட 'சந்திரமுகி'யை சமாளிக்கமுடியலே // இன்னா இப்படியெல்லாம் சொல்லி ஏகப்பட்ட சனங்களுக்கு ஆர்ட் அட்டாக் கொடுக்கறீங்கோ...

said...

ஒரு சில படங்களில் சண்டைக் காட்சி,பாடல் காட்சி போன்றவற்றை எடுத்துவிட்டால் 30 நிமிடமே அதிகம்.என்ன இருந்தாலும் உங்களுக்கு இருக்கும் பொறுமை யாருக்கு வரும்.

said...

யக்கோவ்... பாவமுக்கா நீங்க ... வேற என்னத்த சொல்ல :(

said...

ராம்கி, விசிதா, பாண்டி

நன்றி!!!!!

'விதியாகப்பட்டது வலியது! அதை யாரும் வெல்ல முடியாது'!!!!!!

ராம்கி,

நீங்களா இப்படிச் சொல்றிங்க!!!! ஆனாலும் உண்மையைத்தான் சொல்லியிருக்கீங்க!!!

பின்னூட்டம் இட்ட, இடப்போகும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!!

said...

நானேதான். ரஜினியைத்தான் எனக்கு பிடிக்குமே தவிர அவரோட படத்தை அல்ல!

said...
This comment has been removed by a blog administrator.
said...

ராம்கி இந்த அதிர்ச்சிலேர்ந்து இப்பத்தான் மீண்டேன்... யார்கிட்டயாவது இத்த சொல்லலேன்னா தல வெடிச்சிடும் போலருக்குதே !! நம்ம பதிவுல இந்த சமாச்சாரத்த ஒரு ஒட்டெடுப்பா போட்டுபுட்டேன்... துள்சி உங்க பதிவு லிங்கயும் யூஸ் பண்ணியிருக்கேன்... ரெண்டு பேரும் வந்து பாருங்க... அனுமதி இல்லாமல் உங்க பேர யூஸ் பண்ணிகிட்டதுக்கு ராயல்டி கேட்டுபுடாதீங்கோ... உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இருந்தா சொல்லுங்க, நடவடிக்கை எடுத்துபுடுறேன்.

said...

//திரு திரு, குருதேவா//
திரு திரு பாண்டியராஜன் படம் பார்த்துட்டேன். என்னத்த சொல்ல.
குருதேவா பாதிப்படம்தான் பார்த்தேன். இந்த மாதிரி ஒரு பக்கம் கதை போகுது, இன்னொரு பக்கம் சத்தமில்ல்லாம தமிழ் படத்தை தமிழிலேயே ரீமேக் பண்ணுறாங்க, சச்சின் படம் மாதிரி. என்னத்த சொல்ல :-(.

said...

தளபதி கூட கர்ணனின் ரீமேக் என்று சொன்னாங்க :-))

said...

ys Thulasi akka neenga sollithan enakku intha peyaril ellam padam iruku endu therium.Neenga unga libraryku Kana kanden order panalame.

Snegethy