Wednesday, May 18, 2005

கத்திக்குத் தப்பிச்சேன்!!!!!

போனவாரம் ஒரு எம்.ஆர்.ஐ. போய்வந்ததை எழுதுனவுடனே நிறைய நண்பர்கள் பின்னூட்டத்திலும், தனிமடலிலும்
எழுதுனது மனசுக்குத் திருப்தியா இருந்துச்சு, 'அட, நமக்குக்கூட கரிசனம் காட்ட ஆள் இருக்கே'ன்னு!!!!!
உள்ளூர் நண்பர்கள் இதைப் படிச்சிட்டு நேரிலும் வந்து விசாரித்தார்கள்!!! இது நல்லா இருந்துச்சு!!!!



ரெண்டு நாளுக்கு முன்னே அது சம்பந்தமான விசேஷ மருத்துவரைப் போய்ப் பார்த்தோம். ரிஸல்ட் வந்துருச்சாம்.
'டி12 லே கொஞ்சம் எலும்பு சதஞ்சு'போய் இருக்கு! மத்தபடி டிஸ்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கு
ஆபரெஷன் தேவைப்படாது'ன்னு சொல்லிட்டார். 'ஆனா வலி இருக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாத்தான் போகும்.
அதுவரை வலிநிவாரணி எடுத்துக்கணுமு'ன்னும் சொன்னார்.

கொஞ்ச நாளைக்கு என் பதிவுத் தொல்லைகள் இல்லாம இருக்கலாமுன்னு யாராவது நினைச்சுக்கிட்டு இருந்திருந்தால்
அதுக்கு ச்சான்ஸேயில்லை!!!!! விடாது கருப்பு!!!!

எங்க இவருக்குத்தான் ரொம்ப பயமா இருந்திருக்கும் போலிருக்கு. 'வீல்சேர்'லே என்னை வச்சுத் தள்ளிக்கிட்டுப்
போறமாதிரி கனவெல்லாம் வந்துச்சாம்!!!!( கேக்க மறந்துட்டேன், சும்மாத் தள்ளிட்டுப் போனாரா இல்லை
'சுமைதாங்கி சாய்ந்தால்......'ன்னு பாட்டெல்லாம் பாடிக்கிட்டே போனாரான்னு!!)

அன்போடு விசாரித்த நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி!!!!!!

அடுத்த பதிவு போட இதோ வந்துக்கிட்டே இருக்கேன்!!!

என்றும் அன்புடன்,
துளசி.



3 comments:

said...

(இந்த) விசயம் கேள்விப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

எங்க இவருக்குத்தான் ரொம்ப பயமா இருந்திருக்கும் போலிருக்கு. 'வீல்சேர்'லே என்னை வச்சுத் தள்ளிக்கிட்டுப்
போறமாதிரி கனவெல்லாம் வந்துச்சாம்!!!!( கேக்க மறந்துட்டேன், சும்மாத் தள்ளிட்டுப் போனாரா இல்லை
'சுமைதாங்கி சாய்ந்தால்......'ன்னு பாட்டெல்லாம் பாடிக்கிட்டே போனாரான்னு!!)


இந்த லொள்ளுதான் (அதாவது பிரச்னைகளையும் நகைச்சுவையுடன் எடுத்துக்கொள்ளும், எழுதித்தள்ளும் சுஜாதா-தனம்னு சொல்லவந்தேன்:) கலக்கல்...

said...

ஐய்யோ அன்பு,
//சுஜாதா-தனம்னு சொல்லவந்தேன்//

அவர் எங்கே இந்தக் கத்துக்குட்டி எங்கெ?

அக்காமேலே இருக்கற 'அன்புலே சொல்லிட்டீங்களா?

Anonymous said...

Thulasi,
Operation thevai illaingradha kettu magizhchi. Take care