எல்லாம் விதின்னு சொல்றதைத்தவிர வேற என்ன சொல்றது?
ரெண்டு மூணு நாளுக்கு முன்னாலே இங்கே ஒரு 'ரோடு ஆக்ஸிடெண்ட்' நடந்துடுச்சுன்னும்,
அதுலே சில இந்தியர்கள் இறந்துட்டாங்கன்னும் டி.வி.யிலே சொன்னாங்க. அப்பவே மனசுக்கு
வருத்தமா இருந்துச்சு.
இன்னைக்குப் பேப்பரிலேதான் முழுவிவரமும் கிடைச்சது.
பெங்களூரிலிருந்து சுற்றுலா வந்த ஒரு குடும்பம்தான் இந்த விபத்திலே இறந்தவுங்க.
குடும்பத்தலைவர் பெயர் திருமூர்த்தி வயது 50
அவருடைய மனைவி சுசித்ரா வயது 42
மகள் ஊர்மிளா வயது 20
ரெண்டாவது மகள் அஹல்யா வயது 18
இவுங்களிலே அஹல்யா மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுலே அனுமதிக்கப் பட்டிருக்காங்கன்னும்
மிகவும் கவலைகிடமான நிலை என்றும் உள்ளது. மற்றவர்கள் விபத்து நடந்தவுடனேயே மரணம்
அடைந்தனராம். மொத்தம் 7 பேர் மரணம்.
ஆக்லாந்திலிருந்து ரோதரூவா என்னும் இடத்திற்கு 'வெந்நீர் ஊற்று சுற்றுலா' போகும்போது
இந்த விபத்து நடந்ததாம்! 'இது ஜஸ்ட் ஒரு டே ட்ரிப்'
பாவம். விதி எவ்வளவு கொடுமையா இருக்கு பாருங்க!!!
இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கும், அஹல்யா பூரண குணம் பெறவும் பிரார்த்திக்கின்றோம்.
Friday, May 20, 2005
விதி!!!
Posted by துளசி கோபால் at 5/20/2005 10:24:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
மற்றவர்கள் விவரம்:
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதிகள்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர்
தாய்லாந்து நாட்டுப் பெண் ஒருவர்
மற்றும் நியூஸி நாட்டைச் சேர்ந்த ஒருவர்( ட்ரைவர்)
இந்த மாதிரி செய்திகள் படிக்கும்போதுதான் கடவுளின் மீது சந்தேகம் வழுக்கிறது. அகல்யா நலம் பெற வேண்டும்.
ரொம்பவே வேதனையா இருக்குப் படிக்கவே? உயிர் பிழைத்து வந்ததும் அந்தப் பெண்ணின் அதிர்ச்சியை இப்போ நினைச்சுப் பார்க்கவே பயமாவும் இருக்கு. அந்தப் பெண்ணாவது உயிர் பிழைத்து வரட்டும். :((((((((((((
வாங்க கீதா.
என்ன, அமெரிக்காவுலே 'தூள்' கிளப்பிக்கிட்டு இருக்குறீங்க போல!
அந்தப் பொண்ணு அவ்வளவு அதிர்ஷடம் செய்யலைங்க(-:
ஒருவேளை அதிர்ஷடம் செஞ்சதாலேதான் குடும்பத்தைப் பிரிஞ்சு
வாழ்நாள் பூரா மனவேதனைப் படாம பொண்ணும் போயிருச்சோ(-:
ரொம்ப துக்கம்தாங்க.
இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னாலே கோவத்துலே ஒரு பையன்,
கூட்டமா நடந்துக்கிட்டு இருந்த பார்ட்டிக்குள்ளே வண்டியை விட்டு,
16 வயசுபொண்ணுங்க ரெண்டுபேரைக் கொன்னுட்டு, இன்னும் 7 பேரை
ஆஸ்பத்திரியில் இருக்க வச்சுருக்கான்(-:
என்னன்னு சொல்றது(-:
Post a Comment