Thursday, May 19, 2005

நீங்க நல்லா இருக்கோணும், நாடு முன்னேற!!!!

இன்னைக்குப் பேப்பர் முழுசும் ப்ளஸ் 2 தேர்வில் ஜயிச்சவங்களைப்பத்திதான்!!!
வழக்கம்போல மாணவிகள் அதிகமாக வெற்றி அடைஞ்சிருக்காங்க. நிஜமாவே மனசுக்கு
சந்தோஷமா இருக்கு!!!!



ஆனா, ஒரே ஒரு சந்தேகம் இந்தப் பாழாப் போன மனசுக்கு!

முதலிடத்துலே வந்தவுங்களைப் பேட்டி எடுக்கறப்ப அவுங்க எல்லோருமே 'வழக்கமா'
சொல்றது, 'டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்ய விருப்பம்'!!!!!

நல்லது!!! தப்பேயில்லை!!!

ஆனா நிஜமாவே எத்தனைபேர் இதைச் செய்யறாங்க?

ஒருவேளை, அழகிப் போட்டியிலே நம்ம இந்திய அழகிங்க சொல்றாங்களே, 'மதர் தெரேஸா'
மாதிரி சேவை செய்ய விருப்பம்னு அந்த மாதிரியோ?

சரி,எதா இருந்தாலும் வெற்றிபெற்ற நம்ம மாணவ,மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!

6 comments:

said...

அக்கா... உலக அழகிகள் சமூக சேவகிகளாகி சேவை செய்யறதுக்கும், சிலர் டாகடராகி சமூக சேவை செய்யறதுக்கும் வித்தியாசம் இருக்கு. முன்னது வெறும் பேச்சு, தலையில் கிரீடம் வாங்க. பின்னது செயல்.

காசு வாங்கிக்கிட்டே வைத்தியம் பார்த்தாலும், உடம்பை குணமாக்கினா, அது மனித சேவைதானே?

மேலும் கவனமா பார்த்தீங்கன்னா, முதல் ரேங்க் பொண்ணுங்க எல்லாருமே டாக்டர் ஆகணும்னுதான் சொல்றாங்களே தவிர மக்களுக்கு சேவை செய்யப்போறேன்னு சொல்லல:-)

ஒரு பொண்ணு டாக்டருக்குப் படிச்சுட்டு அப்புறம் ஐ.ஏ.எஸ் படிக்கணுமாம். இன்னொரு பொண்ணு டாகடருக்குப் படிச்சுட்டு அப்புறம் டாகடருக்குப் படிக்கறவங்களுக்கு பாடம் நடத்தணுமாம்.

said...

அன்புள்ள பத்ரி,

நீங்க சொல்றதிலும் ஞாயம் இருக்கு.

எப்படியோப்பா, எல்லாம் நல்லா இருந்தாச் சரி!!!

என்றும் அன்புடன்,
அக்கா

said...

அக்கா, நிறைய பேர் வீட்டுல படிக்கிற புள்ளைங்கள"நீ டாக்டராகனும் நல்ல படி, இஞ்சினியர் ஆகனும் நல்ல படி" -ன்னு சொல்லி சொல்லியே வளர்த்து விடுகிறார்கள். அதுவும் படிச்சி நல்ல மார்க்கு வாங்கின உடனே டாக்டர் ஆக போறேன்னு ஒப்பிச்சிட்டு போகுது.

நிறைய பேர் அதோட உண்மை அர்த்தம் தெரிஞ்சிட்டு முழுமனசொட சொல்றாங்களான்னு சந்தேகம் தான்.

said...

நானும் விஜய் சொல்வதை வழிமொழிகிறேன். பெரும்பாலும் பெற்றோர்/உறவினர் உந்துதலினாலேயே கணித/அறிவியல் சார்ந்த படிப்பே உயர்ந்தது என்ற எண்ணம் விதைக்கப் படுகிறது. அந்த வயதில் இப்படியான பாதிப்பில் மாணவர்கள் ஏதாவது சொன்னாலும், அவர்களின் உண்மையான திறமை/நாட்டம் வேறு துறைகளில் இருக்கலாம். புதிய தலைமுறைப் பெற்றோர்கள் இந்த மாதிரி கருத்துத் திணிப்பு செய்யாமல் இருக்கவேண்டும்.

இன்னொன்று, பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே அறிவியலா அல்லது கலையா என்ற தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்தின் பலன், பின்னால் மாற்ற முடியாததாக (பதினொன்றாம் வகுப்பில் தேர்ந்தெடுத்ததையே கட்டிக்கொண்டு அழ வேண்டும்) போய்விடுவதும் ஒரு தடையே. ஆல்பர்ட் ஸ்வீட்சர் தியாலஜி படித்து முடித்து, முப்பது வயதில் மருத்துவர் ஆகவேண்டும் என்று முடிவு செய்து, கல்லூரியில் சேர்ந்து படித்துப் பின்னர் ஆப்பிரிக்காவில் பணியாற்றினார் என்று (அவர் பதினொன்றாம் வகுப்பில் என்ன group எடுத்தார் என்ற வியப்போடு) படித்துப் பரீட்சை எழுதத்தான் முடியும் இங்கே!

said...

அன்புள்ள விஜய் & கண்ணன்,

நீங்க சொல்றதுபோல நம்ம ஊருலே
ஒரு காலத்துலே பொண்ணுன்னா டாக்டர்,
பையன்னா எஞ்சினியர்ன்றதுதான்
ஒரே மந்திரமா இருந்துச்சுல்லே!

இப்ப அது வேற! எல்லாரும் கம்ப்பூட்டர் படிச்சு அமெரிக்கா போகணும்!!!!

said...

///What is the percentage of girls who qualify in the IIT-JEE ? To be fare lets consider the ratio of girs qualifying JEE versus those took JEE with that of the performance from the boys. I am sure boys would outsmart girls.//
TCD,
இதை நான் பல முறை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன் :-). நல்ல பாயிண்ட்.