நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நம்முடைய மடிக்கணினி, கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறது . துளசிதளத்திற்கான பதிவுகளை Notepad இல் எழுதி ஸேவ் செய்துவிட்டுப் பதிவு வெளியிடுவதே பழக்கம். வீட்டு வேலைகளுக்கிடையில் கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது ஒரு பத்திருவது வரிகள் எழுதி வைப்பேன்.
திங்களன்று இப்படி எழுதிவைக்க நோட்பேட் திறந்தால்..... வேலை செய்யவில்லை. Office 365 போட்டு வைத்துதான் இருக்கோம். அது என்ன சொல்லுதுன்னா..... உன் 5 Gb is full. இனி காசைக்கட்டுனால்தான் வேலை.
ஐய்யோ.... அந்த 5 ஜிபியில் என்னென்ன, எங்கெங்கே இருக்குன்னும் தெரியலை. இந்த Cloud, One Drive எல்லாம் நான் பயன்படுத்தறதே இல்லையே..... என்னதான் ஆகி இருக்கும் ?
திரும்ப ஆஃபீஸ் 365 install செஞ்சாலும் அஞ்சு நாளைக்குள் காசு கட்டுன்னுது....
இந்தக் குழப்பம் தீரும்வரை துளசிதளத்தில் புதுப்பதிவுகள் எழுத இயலாது. மன்னிக்கவும்.
வருந்துகிறேன்.
8 comments:
5gb is very less space. Seems some virus attack ? You can approach service center. They'll help.
படுத்துகிறதோ கணினி? சென்ற பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம் மிஸ்ஸிங்.
உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் தைப்பொங்கல் ,பட்டிப்பொங்கல் காணும்பொங்கல் வாழ்த்துகள்.
பேரனின் லீவில் ஊர் சென்றுவந்தேன். இப்பொழுதுதான் உங்கள் பக்கம் வந்தேன்.
வாங்க விஸ்வநாத்,
நம்மவர்தான் தலையால் தண்ணீர் குடிச்சுக்கிட்டு இருக்கார். மைக்ரோசாஃப்ட் உதவி மையம், கூப்பிட்டால் கூட கப்சுப்னு இருக்கு.
வாங்க ஸ்ரீராம்.
ஒளிஞ்சுருந்ததைப் பிடிச்சு வந்து வெளியிட்டேன் ! கூடவே
கணினியும் ரொம்பவே விளையாடினால்.... நான் என்ன செய்ய???? மீ பாவம்!
வாங்க மாதேவி,
பொங்கல் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
பேரன் நலமா ? இங்கேயும் பேரன் வரும் நாட்களில் நேரம் ஓடிபோய் விடுகிறது !
ஓ! துளசிக்கா, ஓ கணினி, நோட்பேட் படுத்தலா....
கூகுள் 20 ஜிபி யோ என்னவோ கொடுக்குது அதுவே போறலை அப்பப்ப தேவையில்லாதத டெல் பண்ணிட்டே இருக்கணுமா இருக்கு.
அக்கா சரி பண்ணி அதுல இருக்கறத எப்படியாச்சும் வெளிய கொண்டு வந்துடுங்க. உங்க உழைப்பு வீணாகிடாம...
கீதா
வாங்க கீதா,
இந்த நோட்பேட் மட்டும்தான் வேலைசெய்யலை. மைக்ரோசாஃப்ட் அதைத் தூக்கிருச்சாம். இனி வேர்டு தான் பயன்படுத்தணும். அதுக்குத் தனியா காசு கட்டுங்கறான்.
ஏற்கெனவே வருஷாவருஷம் ஆஃபீஸ் 365க்கு பணம் கட்டியாறது. அது போதாதுன்னா எப்படி ?
கூகுள் ஸ்டோரேஜுக்கு வேற மாசாமாசம் பணம் கட்டறேன்.
இல்லைன்னா இவ்ளோ படங்கள் பதிவில் போடமுடியாது.
இப்படிக் காசு காசுன்னா என்ன செய்வது ? என்னமோ போங்க.... ப்ச்.....
Post a Comment