Wednesday, January 25, 2023

உப்புமா சர்வீஸ் :-) (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 5

உள்நாட்டு விமான நிலையம் போய்ச் சேர்ந்து  இண்டிகோ ஃப்ளைட்டில் செக்கின் ஆச்சு.  இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கேன்னு கொஞ்சம் நிதானமாச் சுத்திவந்தோம். மஹாபலிபுரம் அப்படியே  இருக்கு ! பக்கத்துலேதான் புதுசா ஒரு உழவர், காளைகளோடு நிக்கறார் !  ச்சும்மாச் சொல்லக்கூடாது.... உண்மையில் மஹாபலிபுரம் அர்ஜூன் தபசு எல்லாம் சூப்பராச் செஞ்சுருக்காங்க !  


விமானநிலையமும் ஓரளவு நீட்டாத்தான் இருக்குன்னு சொல்லிக்கிட்டேக் கீழ்தளத்துக்குப் போனோம்.  லோக்கல் பஸ் ஸ்டாண்ட் கெட்டது போங்க......   போர்டிங் கேட்ஸ் எல்லாம் இங்கேதான் . மொத்தக்கூட்டமும்  கிடைச்ச இடத்தில் உக்கார்ந்துக்கிட்டு  வாய்க்கும் கைக்குமா  பிஸியா ....  கலகலன்னு இருக்காங்க !  
 

இதுக்கிடையில்  பஸ்கள்  வந்து வந்து  மக்களை ஏத்திக்கிட்டு போகுது.  நேரங்கடத்தக் கொஞ்சம் நடந்தேன். யார் கண்ணுக்கும் சட்னு படாத வகையில் உலோக சிற்பங்கள் கொஞ்சம் உசரத்துலே  கப்போர்டுக்கு மேலே வச்சுருக்காங்க. ஒருவகையில் நல்லதுதான்.  பிள்ளைகள் கைவரிசையைக் காமிக்க முடியாது !

நாலே முக்காலுக்கு போர்டிங் ஆரம்பிச்சது.  அஞ்சேகாலுக்குக் கிளம்பவேண்டிய  வண்டி  இருபது நிமிட் லேட்டாக் கிளம்பிச்சு ! பகல் நேரத்துலே சென்னையைப் பார்ப்பது  நமக்கு அபூர்வம். நிறைய மரங்களோடு நல்லாத்தான் இருக்கு !

145  நிமிட் ஃப்ளைட்.  பாதிநேரம் கடந்ததும் 'அஞ்சு நிமிட் கழிச்சுத் துன்னு' னு  ஸ்நாக்ஸ் கொண்டுவந்து தந்தாங்க. டிக்கெட் புக் பண்ணும்போதே மெனுவைக் காமிச்சு நம்மவர் எது வேணுமுன்னு கேட்டார்தான்...... பார்த்தால்  எல்லாம் எனக்குச் சரிப்படாதவைகளாகவே தெரிஞ்சது.  நம்மூர்களில் கொஞ்சம் உறைப்பு கூடுதல் என்பதால் எனக்கு ஆகாது.  இதுதான் தெரிஞ்ச பெயரா இருக்கு. பறந்துக்கிட்டே உப்புமா தின்ன அனுபவம் வேணுமா இல்லையா ? 
மேஜிக் உப்மாவாம்!  பாடி பில்ட் பண்ணிரும்!  நம்ம திருவேற்காடுலே தயாரிச்சதுதானாம் !  (அட! )அதுலே குறிச்சுருக்கும் அளவின்படி  கொதிக்கக்கொதிக்கத் தண்ணீர் ஊத்தி வச்சுட்டு, அஞ்சு நிமிட் கழிச்சுச் சாப்பிடலாமாம். நல்ல ஐடியாதான். கூடவே கொஞ்சம் மாதுளை ஜூஸ். 
நாங்க இங்கே உள்ளூர் பயணம் நம்ம காரிலேயே போறதாக இருந்தால் உப்புமாவுக்கான தாளிதம் எல்லாம் செஞ்சு அதுலே ரவையையும் சேர்த்துக் கிளறி லேசா வறுத்தெடுத்துட்டு  அதை ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கிட்டுப் போவேன். எப்ப தேவைப்படுதோ அப்போ  வெந்நீர்  மட்டும் சேர்த்தால் போதும்.  பத்தே நிமிட்டில் உப்புமா ரெடி !   போற இடங்களில் இருக்கும் கடைகளில் சின்ன பேக்கட் மிக்ஸ்டு வெஜிஸ் கிடைச்சால்  அதையும் சேர்த்துக்கிட்டால்  கிச்சடி ! எல்லாம் ரைஸ் குக்கரில்தான் ! கார்தானே சுமக்கப்போகுது !

ஃப்ளைட்  கொஞ்சம் போர் அடிச்சது உண்மை. ஏழேமுக்காலுக்குத் தரை  தொட்ட விமானத்தில், செக்கின் செஞ்ச பெட்டிக்காகக் கொஞ்சம் காத்திருக்கவேண்டியதாப் போச்சு.  ஹொட்டேல் சீதா அனுப்பிய  கார் நமக்காகக் காத்திருந்தது. சுமார் 25 கிமீ போகணும். ஒன்னேகால் மணி நேரமாச்சுன்னு சொன்னால் நம்பணும்.  

ட்ரைவர் ஒரு ரோடில் வண்டியை நிறுத்திட்டு, செல்ஃபோனில் யாரையோ கூப்புடறார். நம்மிடம் திரும்பி, இதோ ஆள் வருதுன்னார். எதுக்கு ?  நம்மை ஹொட்டேலுக்குக் கூட்டிப்போக ! ஆ............  சந்துகளில் நடந்து போகணும் !  ஒரு இளைஞர் வந்தார். சட்னு ரெண்டு  பெட்டிகளைத் தூக்கிக்கிட்டு, இன்னொண்ணை இழுத்துக்கிட்டுப் பரபரன்னு முன்னால் போறார்.  நம்மவர் வேக நடையிலும் நான் சிறு ஓட்டத்திலும்..... அரை இருட்டு.  கணக்கில்லாத திருப்பங்கள்.... எத்தனைன்னு எண்ணக்கூட முடியலை......  செங்கற்கள் பாவிய வெறும் நாலடிச் சந்து. எதிரே வரும் ட்ராஃபிக் கூடுதல். ஏகப்பட்ட டூவீலர்ஸ் வேற ....  கொஞ்சதூரத்துக்குமுன்னால் இழுபட்டுப்போகும்  பொட்டியைப் பார்த்தால் பாவமா இருக்கு.... போச்சு அந்த வீல்ஸ்... 


ஒரு இடத்தில் நமக்காகக் காத்து நின்ன இளைஞர், இதோ வந்தாச்சுன்னு  கீழே படிகளில் இறங்கறார்.அதென்ன ஒவ்வொரு படியும் இம்மாம் உயரம்.  ஒரு முழம் ( நம்மூர் பூக்காரர் போடும் முழம் இல்லை ) இருக்கணும். இன்னும் கொஞ்சம் கூடுதலாகவும் இருக்கலாம்.  ஒரு முப்பது படிகள் போல இறங்குனதும்  வலப்பக்கம் இருக்கும் சமதளத்தில் திரும்பினால்....  நாம் தங்கப்போகும் ஹொட்டேல் சீதா !

செக்கின் ஆச்சு.  கங்கா வியூ இருக்கும் அறை உங்களுக்குன்னார் வரவேற்பாளர். பொட்டிகளைத் தூக்கிக்கிட்டு, நமக்கு வழிகாட்டுன இளைஞர் பெயர் கோலு (GOlu )இவர்தான் இங்கே ஆல் இன் ஆல்னு அப்புறம்  தெரிஞ்சது! 
 நாலாவது மாடி. நல்லவேளை லிஃப்ட் இருக்கு ! சமீபத்தில்தான் புதுப்பிச்ச அறைன்னு சொன்னாங்க. அறைக்குப் போனதும்  முதல் வேலையா  பால்கனி கதவைத் திறந்தேன். அதோ  இருட்டில் என் கங்கை ! பார்வையைக் கொஞ்சம் கீழே  அனுப்பினால் படித்துறையும் படகுகளும் !  

மணி பத்தேகால் !  பொழுதுவிடியட்டும் பார்க்கலாம்!

ராச்சாப்பாடு ?   ப்ரெட் & பால் போதும் !

தொடரும்......... :-)

8 comments:

said...

கங்கா மாதாவின் வெகு அருகில் அறை ...ஆஹா

said...

//லோக்கல் பஸ் ஸ்டாண்ட் கெட்டது போங்க// ஹாஹாஹா.

அருமை நன்றி

said...

உப்புமால்லாம் ரெடிமேடாவா?  கொடுமை!  ஹோட்டல் ரூமிலிருந்து வியூ பிரமாதம்.

said...

கங்கை அன்னைக்கு மிக அருகே... பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

said...

வாங்க அனுப்ரேம்,

விடாகண்டியா... கோபாலைப் பிடுங்கி எடுத்து கங்கைக்கரையாண்டை அறை !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

அதான் கொதிநீர் ஊற்றிச் சமைச்சுத்தர்றாங்களே :-)

said...

வாங்க மாதேவி,

அப்படித்தான் ஆரம்பத்தில் நினைப்போம். ஆனால் ஒரு சில மணி நேரத்தில் கண்களுக்குக் காட்சி பழகிருது......... மனம் வேறெங்கோ சுத்த ஆரம்பிக்குது இல்லையோ !