Monday, July 22, 2019

பசங்களுடன் ஒரு சந்திப்பு :-) (பயணத்தொடர், பகுதி 120 )

எங்கே லேட்டா எழுந்துருவோமோன்ற பயத்தில் சரியாவே தூக்கம் வரலை.  கடைசியில் நம்மவர்தான் அஞ்சே காலுக்கு எழுப்பினார். அடராமா.....   பாய்ஞ்சு போய் குளிச்சுட்டு வந்தேன். நம்மவர் அதுக்குள்ளே  அறையில் இருந்த வஸ்துகளை வச்சு காஃபி போட்டுருந்தார். பிஸ்கெட் ரெண்டோடு  காஃபி ஆச்சு.
பொழுது இன்னும் விடியாத அரை இருட்டில் வானத்து நிலாவும் தூங்கும்   ஏரியும்  ஒரு மனமயக்கத்தைக் கொடுத்தது உண்மை :-)

கீழே ப்ரேக்ஃபாஸ்ட் ஏழரைக்குத்தான். பத்துவரை உண்டு. நாம் எப்போ திரும்பிவருவோமுன்னு தெரியாததால்..... நேத்து டின்னர் சமயத்துலேயே, '  மறுநாள் லேட்டாத்தான் வருவோம். நமக்கு ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்து வைப்பீங்களா'ன்னு  கேட்டதுக்கு பிரச்சனையே இல்லைன்னுட்டார் மேனேஜர்.
அஞ்சே முக்காலுக்குக் கீழே வந்தாச்சு.  மஞ்சுவும் ரெடியா இருந்தார்.  நம்மை பிக்கப் செய்யும் வண்டியும்  வந்து சேர்ந்துருச்சு.

முதலில்  காட்டுக்கான 'கேட்' கிட்டே போறதுக்கே  ஒரு பதினைஞ்சரை கிமீ தூரம் நேத்து நாம் இங்கே வந்த கண்டி ஹைவேயில் திரும்பிப்போயிட்டு, அங்கெ இருந்து வலதுபக்கம் பிரியும் சாலையில் ஒரு எட்டேகால் கிமீ போகணும்.


அந்த நேரத்தில்  ரோடே காலியா இருக்குன்னு  நம்ம வண்டியை ஓட்டும் இளைஞர் பறக்குறார்! இருபத்தியஞ்சு கிமீ இருபத்தியஞ்சு நிமிட்லே!  ( இங்கே நியூஸியில் இது சகஜம் என்றாலும் கூட...   )

தீக்ஷன் (நம்ம டிரைவர்) இறங்கிப்போய்  ஒரு சின்னக் கட்டடத்துக்குள்ளே இருக்கும் ஆஃபீஸில்  கையெழுத்துப் போட்டுட்டு, நம்ம தகவல்கள் எல்லாம் அடங்கிய தாளை ஒப்படைச்சுட்டு வந்தாராம். நாளைபின்னே எதாவதுன்னு சேதி சொல்ல வேணாமா?



எல்லாம் சரியாச்சுன்னு வந்தவர், வண்டியின் மேலேயும் பக்கவாட்டுலேயும் இருக்கும்  மறைப்பை இழுத்து விட்டார். வாவ்.... எல்லாப் பக்கமும் பளிச் !
இங்கே என்னென்ன செய்யக்கூடாதுன்னு தெளிவாப் போட்டு வச்சுருக்காங்க.

நம்மவருக்கான ஸ்பெஷலா முதல்லே ஒரு  படம் :-)

மெள்ளத்தான் இனி உள்ளே ஓட்டணும். ஒரு நீர்த்தேக்கத்தைக் கடந்து போனோம். மரத்தில் உக்கார்ந்துருந்த  பருந்தைக் காண்பிச்சார் தீக்ஷன். ஆஹா.... கருடன்!  பெருமாள்  இருக்கார்!  தரிசனம் ஆச்சு :-)
மரக்கூட்டத்தைக் கடந்து ஒரு பெரிய பொட்டல்வெளி.....  முருகனின் வாஹனங்கள்..... அங்கே!

அடுத்த நிமிட்டில் நான் எதிர்பார்த்து வந்த ஒரு குடும்பம்!

லேடீஸ் எல்லாம் ஒரு பக்கமும்,  பையன் மட்டும் இவுங்களுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்ற தோரணையில் தனியா இன்னொரு பக்கமும்.  விடலைப்பசங்க, வெளியில் போகும்போது  அக்கா தங்கச்சிங்களோடு ஒன்னாச் சேர்ந்து நடந்து வரமாட்டாங்க :-)
நம்மைப்போல மற்ற பயணிகள்   இன்னொரு வண்டியில் அட்டகாசமான கெமெராக்களோடு !

ஆறே முக்கால்தான் ஆச்சு. அதுக்குள்ளே சள்னு சூரியன்....  வெயில் ஏறுமுன் பார்த்தால்தான் உண்டாம்.  அப்புறம் இன்னும் அடர்ந்த காட்டுக்குள்ளே போயிருவாங்களாம். அங்கெல்லாம் வண்டி போகும் பாதை கிடையாதுன்னார் தீக்ஷன்.
அதானே  இந்தப் பகுதியில்கூட வரணுமுன்னு என்ன முடை? பாவம்...சனம்....  ஆசை ஆசையா ஓடிவருதேன்னு இரக்கம்  வச்சு நம்ம கண் முன் நடமாடுதுங்க  இந்தச் செல்லங்கள்.!
அங்கங்கே மெள்ளக் கிளம்பிப்போறது.....   பசங்களைப் பார்த்தால்  எஞ்சினை நிறுத்தாமலேயே  வண்டியை நிறுத்தி வைக்கறதுன்னு போய்க்கிட்டே இருக்கோம்.  ரொம்ப தூரத்துலே இருந்துதான் பார்க்கணும். ஒரு அம்பது மீட்டர் வரை இருக்கலாம்.  நம்மை நோக்கி வரமாட்டாங்க. ஒருவேளை வந்துட்டால் சட்னு  வண்டியைக் கிளப்பிடணும்.

சின்னச்சின்னக்குடும்பங்களாத்தான் இருக்கு. நாம் பார்த்ததில் பெரிய குடும்பமுன்னா.... ஒன்பது பேர் இருந்ததுதான்.  இல்லை இதுகூட ரெண்டு தோழிகள் அவரவர் குடும்பத்தோடு ஒன்னா பிக்னிக் வந்துருக்காங்களோ என்னவோ?
உலகமெங்கும் புள்ளை வளர்ப்புன்னா அது  பெண்களோட வேலைதான் போல.....  தாய்க்கு மட்டுமே பொறுப்பு....  ப்ச்....  பாவம் இல்லையோ....
ஆம்பிளைங்க ஜாலியாத்தான் இருக்காங்க.... அங்கங்கே தனியா நின்னுக்கிட்டு.... சொல்லிவச்சாப்லெ எல்லோரும் ஒரே ஜாடை வேற!!  கிளைகளைப் பறிச்சுக் கொறிச்சுக்கிட்டே சைட் அடிக்கிறானுங்க......   :-)
மயில்  கூட்டங்கள் அங்கங்கே.... பொண்ணுங்கதான்.  மயிலனைக் காணோம்....
கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நாங்களும் ஒரு ஏரியாண்டை வந்துருந்தோம்.
அதோ தனியா ஒரு குட்டின்னு பார்த்தால் காட்டெருமை !

கண்முன்னால் கொஞ்சதூரத்துலே இன்னொரு ஜீப் நின்னா.... நாமும் நின்னுருவோம். அங்கே ' நம்மாட்கள்' இருப்பாங்க:-)

தண்ணி குடிக்க வந்துட்டுப் போறாங்க போல......
பெரிய ஏரியும்....  அங்கங்கே சின்னச் சின்னக்குட்டைகளுமா இருக்கு!

ஏரியில் யாரோ மீன்பிடிச்சுக்கிட்டு இருந்தாங்க.... சின்னதா ஒரு வலை வச்சுருக்கார்
இது ஸ்டாப்பிங் போல இருக்கு:-) ரெண்டு வண்டிகளுக்கும் கொஞ்சம் ஓய்வு :-)

எல்லோரும் கீழே இறங்கிப்போய் பேசிக்கிட்டு இருந்தாங்க. நான் இறங்கலை. இந்த வண்டி நல்ல உயரம். ஏறி இறங்குவது எனக்குக் கஷ்டம்தான்.

நம்மவர் செல்ஃபோனில்  மஞ்சுவுக்கும் தீக்ஷனுக்கும் என்னவோ காமிச்சுக்கிட்டு இருந்தார்..... நான் நினைச்சது ரொம்பச் சரி. பண்டிப்பூரில் பார்த்த  கரும்புலி மஹாத்மியம் :-)



குட்டைகளில்  டேக் ஆஃபும் லேண்டிங்குமா பெரிய சைஸ் நாரைகள் !

மணி எட்டாகப்போகுது. வெயிலும் நல்லாவே ஏறிப்போச்சு. இனி அவ்ளோதான் திரும்பலாமான்னார் தீக்ஷன்.
காலையில்  வெளியே வந்து   வழி நெடுகப் 'போறதெல்லாம் போயிட்டு'த் தண்ணீர் குடிச்சப்பிறகு காட்டுக்குள்ளேத் திரும்பிப்  போகுமுன்  மரங்கள் ஆரம்பிக்குமிடத்தில் கொஞ்ச நேரம் நின்னு நிதானமா   எதையாவது பறிச்சு வாயில் போட்டுக்கிட்டுக் காட்டுக்குள்ளே வர்ற மனுஷப்பயல்களையும் கொஞ்சம் வேடிக்கை பார்த்துட்டு, வெயில் ஏறவும்  மெள்ள நகர்ந்து அடர்த்தியான காட்டுக்குள்  நிழல் தேடிப்போறதுதான்  வாடிக்கை !
ச்சும்மாச் சொல்லக்கூடாது.... தரையில் இருக்கும் காய்ஞ்சு போன புற்களைப் பறிச்செடுத்து, மண் போகத் தரையிலே நாலைஞ்சுதடவைத் தட்டிட்டு, அப்புறமா வாய்க்குள்ளே திணிச்சுக்கறது  அருமை!  என்னா புத்தி பாருங்க !!!

மனசில்லா மனசோடு சரின்னு சொன்னேன்.....   பாவம்.... துல்ஸி... இவ்ளோ தூரம் வந்துருக்காளேன்னு பரிதாபப்பட்டு  ஒருத்தி காத்திருந்தாள் !   வாவ்.... செல்லம்.....
வண்டியை அங்கேயே நிறுத்தியாச்சு. ஒரு இருவது நிமிட்....   நான் பார்க்க, அவள் பார்க்கன்னு ......  அப்புறம்தான்  அவள் நகரும் திசையில்  பார்த்தால் இன்னொருத்தி !  இளமங்கையர் !

அவுங்க போறவரை இருந்து வழியனுப்பிட்டே போகலாமுன்னு சொன்னேன்  :-)

.....   அவ்ளோதான் ஆட்டம் க்ளோஸ் !

இந்த வெளிச்சத்துலே கெமெரா ஸ்க்ரீன்லே ஒன்னுமே தெரியலை. ஆனாலும் க்ருஷ்ணார்ப்பணமுன்னுதான் க்ளிக்கிக்கிட்டு இருந்தேன் :-)

  நிறைய  மயிலன்ஸ்  இருந்தாங்க.
திரும்பி  வரும்போது ஒரு இடத்தில் மான்கள்.   ஆரம்பத்துலே பார்த்த நீர்த்தேக்கத்தையொட்டிய புல்வெளியில்.....
அவ்ளோதான்....   கண்டி  மெயின் ரோடு  வந்து ஹபரண நோக்கிப் போகுது வண்டி.

'நல்லாப் பார்த்தியா? திருப்திதானே'ன்னார்....'நம்மவர்'

'ம்ம்ம்ம்ம்ம்  சுமாராப் பார்த்தேன்'னேன் :-)

 ஒரு நூறு இருக்குமா?
ஒன்பது மணிக்கு  ஹொட்டேலுக்கு வந்தாச்சு. தீக்ஷனுக்கு கொஞ்சம் அன்பளிப்பும் ஆச்சு.

தொடரும்........... :-)


9 comments:

said...

அருமை நன்றி

said...

நிரம்ப மகிழ்சியாக இருந்திருக்குமே. நாங்கள் இரண்டுதடவை சென்றிருக்கிறோம். காட்டுக்கோழி,நரி,காட்டுப்பன்றி,எல்லாம் வந்தன.

said...

நான் பார்க்காத இடம் உங்க பதிவின்மூலம் பார்த்தாச்சு. அடுத்தமுறை சென்றால் உங்க பதிவினை நோட் ப்ண்ணிவிட்டு போகனும் டீச்சர். எனக்கும் கணேஷரை (2)ரெம்ப பிடிக்கும்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

வாவ்........ ரெண்டுதடவையா !!

said...

வனப் பயணங்கள் மகிழ்ச்சி தருபவை டீச்சர்... அதிகாலையிலேயே புறப்பட்டுச் சென்றால் தான் இந்தச் செல்லங்களைப் பார்க்க முடியும். எனது வனப் பயணங்கள் நினைவுக்கு வருகின்றன. ரொம்ப நாள் ஆச்சு - காட்டுக்குள் போய்! எங்கேயாவது போக வேண்டும் எனத் தோன்றுகிறது... ஹாஹா...

தொடரட்டும் பயணம். நானும் தொடர்கிறேன்.

said...

வாங்க ப்ரியசகி,

உள்ளூர், நீங்க ஒரு வார இறுதியில் கூடப் போயிட்டு வரலாம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வடக்கே நீங்க போகாத சஃபாரியா??? அத்தனை இடங்களையும் பார்க்கணும் என்ற ஆசை இருக்கு! ஆனால்.... எங்கே?


என்ன ஒன்னு..... அலுப்புத் தட்டுவதே இல்லை.... ஆசையும் அடங்குவதில்லை இல்லையா?

said...

படங்களும் ..அதற்கு உங்க கமெண்ட்ஸ் ம்ம்ம் அட்டகாசம் ..

அனைத்தும் அழகு ..