Friday, July 12, 2019

நாலந்தா கெடிகை(பயணத்தொடர், பகுதி 116 )

நாலந்தா என்ற பெயரைப் பார்த்ததும் பல்கலை கழகமும்,  மகத சாம்ராஜ்யமும், மௌரிய அரசர்களும்....  அசோகரும்....  பின்னே கலிங்கத்துப் போருமா மனசு எங்கெல்லாமோ சுத்தி வந்தது உண்மை.
பஹிரவகண்டர் தரிசனம் முடிச்சுக் குன்றிலிருந்து கீழிறங்கி கண்டி நகரம், பேராதனியா எல்லாம் கடந்து  யாழ்பாணம் போற வழியில்  ஒன்னரை மணி நேரம் பயணிச்சதில் நாலந்தா கெடிகை வந்துருக்கோம்.
பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திட்டு இறங்கும்போதே தகவல் பலகை கண்ணில் பட்டது.
செம்மண் பூமியும் , கல்லடுக்கிய அமைப்பும், மரங்களுமா இருந்த இடத்தைப் பார்த்ததும்..... ஏற்கெனவே ரொம்பப் பரிச்சயமான இடம்போல ஒரு தோணல்.  முன்பிறவிகள் ஏதோ ஒன்றில்  இங்கிருந்தேனா?
நுழைவு வாசல் கடந்து நீளப்பாதையில் போறோம். பாதையின் ரெண்டுபக்கமும் கல் இருக்கைகள் !!!



கண்ணுக்கு முன்னால் தெரிஞ்ச கல்கட்டடத்தைப் பார்த்ததும் புரிஞ்சு போச்சு.... கம்போடியா !  அங்கோர்வாட் பயணத்தில்... இது... இதைப்போலத்தான்....  ஏராளம்....  வாவ்!


எட்டாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சமாச்சாரம் இது!  புத்தர் கோவிலும் ஹிந்துக் கோவிலுமா கலந்து கட்டுன வகை!
முகப்புவாசல் மேலே  கஜலக்ஷ்மி !

முன்மண்டபத்துக்குக் கூரை இல்லை.   இருந்துருக்கணுமோ?
இந்தக் கோவிலைப் பத்தி இன்னும் ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரம் இருக்கு. பக்கத்துலே ஓடும் மகாவெலி கங்கை நதியில் ஒரு நீர்த்தேக்கம்/ அணை கட்டும் போது, கோவில் தண்ணீருக்குள்  மூழ்கிப்போகும் ஆபத்து வந்துருக்கு.
உடனே  கோவிலை முழுசும் பிரிச்செடுத்து, இங்கே  (பழைய இடத்துலே இருந்து கொஞ்சம் தள்ளி) திரும்பவும் கட்டிட்டாங்க.  கல்லடுக்கிய  கட்டடம் என்பதால் அவ்வளவா பிரச்சனை வரலை போல இருக்கு!

அதனால்தான் மேற்கூரை பற்றிய சம்ஸயம் வந்தது :-)
உள்ளே கருவறையில் நின்ற நிலையில் புத்தர்.  அப்புறம் உடைஞ்ச  புத்தர் ( இடுப்பிலிருந்து காலடிகள் வரை)இன்னும் ரெண்டு  சிலைகள் ... (என்னன்னு தெரியலை....காலத்தில் கரைஞ்சு போன முகம்!)



கோவில் வெளிப்புறச் சுவர்களில் சில பாலியல் சிற்பங்கள்.  சின்னதாக் குட்டியா வச்சுருக்காங்க. எதாவது சாஸ்த்திரமோ என்னவோ? ஒருவேளை கோவில் கட்டும் வேலைக்கு வந்த மக்கள் பல ஆண்டுகள் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு இருப்பதால் இதெல்லாம் வடிகாலோ என்னவோ?
வெளியே கோவிலுக்கு அடுத்து ஒரு மேடையில்  வட்ட அமைப்பு.  தாது கோபுரம் (பகோடா)னு எழுதி வச்சுருக்காங்க.


அதுக்கும் அந்தாண்டை போதி மரம்!
தகவல் பலகையில் காமிக்கிறதைப்போலவே  இப்படித்தான் இருக்கு.
பார்க்கிங் ஏரியாவுக்குத் திரும்பி வரும்போது  மரங்களில் ஓடிப்பிடிச்சுத் தாவி விளையாடும் மர அணில்கள்.



அப்படித்தான் நினைக்கிறேன். இப்பதான் முதல்முறை பார்க்கிறேன். பெருசா இருக்கு! நியூஸியில் சாதாரண அணில்கள் கூடக் கிடையாது....
இந்தப்பக்கம் ஒரு கட்டடத்தில் ஒருபக்கம் ம்யூஸியம். கொஞ்சம் படங்கள் போட்டு வச்சுருக்காங்க.  ஒரு கல்வெட்டும் இருக்கு.




கட்டடத்தின் அடுத்த பக்கம்  கழிவறை. சுத்தமாவே இருக்கு!  இங்கே  நாலந்தா கெடிகே பார்க்க வரும் பயணிகள் வெகு  சிலர்தானாம். தொல்பொருட்கலை திணைக்களம்  (ஆர்க்கியாலஜி )பராமரிக்கும் இடம். படு சுத்தமா வச்சுருக்காங்க.
கண்டி யாழ்பாணம்  ஹைவே (A9) இல்  போகும்போது  வலதுபக்கம் பிரியும் கெடிகே சாலைக்குள் நுழைஞ்சு கொஞ்சதூரம்  ஒரு ரெண்டு கிமீ போகணும்.
நாம் போக வேண்டிய இடத்துக்கு இன்னும் 32 கிமீ பயணம் இருக்குன்னு கிளம்பிட்டோம்.

தொடரும்........ :-)


10 comments:

said...

அருமை நன்றி

said...

நாலந்தா கெடிகே ...செம்மண் பாதையில் ரொம்ப அழகா இருக்கு மா ...

said...

கேள்விப்பட்ட இடம் இன்னும் போனதில்லை உங்கள் பயணத்தில் நானும் கண்டு கொண்டேன்.

இந்த அணில்கள் மிகிந்தலை ஏறும்போதும் ,இங்குள்ள சில காடுகளிலும் கண்டிருக்கிறேன்.
அழகானவை.

said...

பதிவில் படங்கள் பார்க்கும்போது, சென்ற வருடம் சென்று வந்த பீஹார் நாளந்தா நினைவில்..... எத்தனை அழிவு அங்கே...

பராமரிப்பு நன்றாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. நம் நாட்டில் பழைய கட்டிடங்கள்/விஷயங்களை பராமரிப்பதில் அத்தனை ஈடுபாடு காட்டுவதில்லை ஒருவரும் :(

நிறைய பதிவுகள் விடுபட்டு விட்டன. பதிவுலகம் பக்கம் வந்து 10 நாளுக்கு மேலாச்சு! படிக்க வேண்டும்.

said...

கட்டிடங்கள் கம்போடியாவை ஞாபகப்படுத்துகின்றனதாம். நிறைய தகவல்கள் . இவ்விடம் போகவில்லை.இவ்வகை அணிகள்கள் புதிதாக பார்க்கிறேன். யாழிலும் இருக்கின்றன.முன்பு இல்லை. அங்கு. கொஞ்சம் அட்டகாசம் .
நானும் சிலவேலைகளால் உங்க பக்கம் வரமுடியல. இனி தொடர்கிறேன்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

செம்மண் கூட ஒரு அழகுதானேப்பா?

said...

வாங்க மாதேவி.

அமெரிக்காவில் பெரிய அணில்களைப் பார்த்தோம் என்றாலும் இவை வேறு வகை போல இருக்கே!


விரைவில் உங்களுக்கு நாளந்தா பயணம் கிடைக்கட்டும்! உள்ளூர்.... எப்ப வேணுமுன்னாலும் போகலாம்தானே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நம்மூரில் சரித்திரத்துக்கு மதிப்பில்லாமப்போனது பெரிய சோகம்....

உண்மையில் இதைவச்சே நாட்டுக்குப் பெரும் பொருள் ஈட்டலாம்.... டூரிஸம் மூலம்.

said...

வாங்க ப்ரியசகி,

நன்றிப்பா !