Friday, July 19, 2019

உல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 )

ஹொட்டேலில் செக்கின் செஞ்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்'  தரையில் பதிச்சுருந்த மீன் குளத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் 'அங்கே பாரு'ன்னு  சொன்னார். ஹைய்யோ......
 

வச்ச கண்ணை வாங்க முடியலை....
நமக்குக் கொடுக்கும் அறையும் இதே பக்கம் பார்க்கும்படிதான் இருக்காம். பாய்ஞ்சு போய் பால்கனிக் கதவைத் திறந்தால்  இந்த அறை இருக்கும் அதே சைஸில் பிரமாண்டமான பால்கனி.  பேசாம இங்கேயே படுத்துக்கலாம்.  காத்தும் வரும் காட்சியும் கிடைக்கும்!
ரொம்பவே வசதியான ரிஸார்ட் இது!   எதிரில் இருக்கும் பெரிய ஏரியின் ஒருபக்கம் தாமரைக் கூட்டம். ஏரிக்கரையில் யானை நடந்து போய் வருது!

இந்தாண்டை  கை எட்டும் தூரத்தில்  கல்குன்று !  இவ்ளோ பெரிய கல் இருக்கே.... யாரும் புத்தர் சிலையை செதுக்கலையா?  அடடா.....  :-)
ரிஸ்ஸார்ட் வாசல் வழியாத்தான் யானைகள் போறதும் வாரதும்..... எதிரில் கொஞ்ச தூரத்துலேதான் யானைக்கொட்டடி. அங்கிருந்துதான் பயணிகளை ஏத்திக்கிட்டுப் போகுதுகள் !

 கூடி வந்தால் அரைமணிக்கூறு ஒரு சவாரி, போறதுக்கும் திரும்பி வர்றதுக்கும்.   அதனால்   போய் வந்து, போய்வந்துன்னே....  செல்லம்.    ஒரு FitBit கட்டி விட்டுருந்தால் ஒருநாளைக்கு  ஒரு லட்சம் ஸ்டெப்ஸ் ஈஸி !
கொஞ்சம் மரங்களுக்கிடையில் ஒரு சின்னக்குளம் போல இருப்பதில் சிலர் குளிச்சுக் கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்காங்க.  ப்ரைவேட் குளம் :-)

சின்ன ஓய்வுக்கு (யானை க்ளிக்ஸ்தான்) பிறகு  டீ கொண்டுவரச் சொல்லிக் குடிச்சுட்டுக் கிளம்பினோம். ஹபரண ஊருக்குள் போகுமுன் எதிரிலே யானை நடக்கும் ஏரிக்கரை பார்த்தே ஆகணுமுன்னு முதலில் அங்கே!




சரியான  யானைப் பாதைதான்னு அடையாளம் இருக்கு :-)

அக்கம்பக்கத்துக்குக் குடும்பம் ஒன்னு குழந்தைகுட்டிகளோடு  குளிச்சுத் துவைச்சுக்கிட்டு இருக்காங்க.   பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்!
சும்மாச் சொல்லக்கூடாது....   அட்டகாசமான வியூ! ஹொட்டேலும் ரொம்பப் பெருசு கிடையாது. மொத்தமே இருபத்திமூணு அறைகள் தான்.  நிம்மதியா ஓய்வெடுக்கலாம்.
அவுங்களே எடுத்த வீடியோ ஒன்னு போட்டுருக்கேன் . நேரம் இருந்தால் பாருங்க !  எம்மாம் பெரிய ஏரி !  ட்ரோன் எடுத்துருக்கு !
நாமும் கொஞ்சம் க்ளிக்கிட்டு ஊருக்குள் போறோம். மெயின் வீதியில் ( இருப்பதே ஒரே ஒரு வீதிதான்) எங்கே பார்த்தாலும் டூரிஸ்டுகளை ஸஃபாரிக்குக் கொண்டு போகும் புக்கிங் ஏஜெண்டுகள்.  

ஒரு புள்ளையார் கோவில் கண்ணில் பட்டது. கும்பிட்டுட்டுப் போகலாமுன்னு உள்ளே போனால்.... எதோ பழுது பார்க்கறாங்களா, இல்லை எப்பவுமே இப்படித்தானான்னு தெரியலை..   கல்லும் மண்ணும், எண்ணெய் டின்களுமா  தரையெல்லாம் அடைசல்.
புள்ளையார் இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு அந்தாண்டை உக்கார்ந்துருந்தார். பூசாரி ஐயா சிடுசிடுன்னு இருந்தார். கோவில் நிலை பார்த்தா அல்லது  எப்பவும் இருக்கும் முகம்தானான்னு  தெரியலை. அவர்பாட்டுக்கு இதை அதைன்னு எடுக்கறதா இருந்தாரா, நாங்களும் நமக்குப் புள்ளையார் மட்டும் மதின்னு கும்பிட்டுட்டு வெளியே வந்துட்டோம். 

ஒன்னு ரெண்டு சஃபாரி ஏஜன்ட் ஆஃபீஸுக்குள் போய்ப் பார்த்தால்  பயங்கரமா டிக்கெட் விலை சொல்றாங்க. இதுலே  ஒரு வண்டியில் பத்துப் பனிரெண்டு பேர்  வருவாங்களாம்.
மஞ்சுதான், இன்னொரு இடம் இருக்குன்னு கூட்டிப்போனார். இங்கே முன்னதைப்போல பெரிய பெரிய போஸ்டர்கள், இருக்கைகள்,  கம்ப்யூட்டர் இப்படி ஆடம்பரம் ஏதும் இல்லை.   ஒரு குடில். அதுக்குப்போக ஒரு மரப்பலகைப் பாலம்.

படு சிம்பிளா ஒருத்தர் கால்குலேட்டரும்,  கைப்பேசியும், ஒரு ரெஜிஸ்டருமா இருந்தார்.  அவரிடம் விசாரிச்சதில்  பனிரெண்டாயிரத்தெண்ணூறுன்னு முடிவாச்சு. தனி வண்டியும் ட்ரைவரும். காலை ஆறு மணிக்கு வந்து நம்மை பிக்கப் பண்ணிக்குவாங்க.  ஒரு மூணு மூணரை மணி நேரத்தில்  கொண்டு வந்து விட்டுருவாங்களாம்.
சரின்னு பணத்தைக் கட்டிட்டோம். இங்கெல்லாம் என்ன ஒரு நல்லதுன்னா....  நம்ம ட்ரைவருக்குத் தனி டிக்கெட் எங்கேயும் வாங்க வேணாம்.  நமக்கு மட்டும்தான்.  

காலை  நேரத்தில்தான் யானைகளைப் பார்க்க முடியுமாம். வெயில் ஏறினால் அவை காட்டுக்குள்ளே போயிருமாம்.  மாலை அஞ்சு மணிக்கு மேல் போனால் சிலசமயம் பார்க்கக் கிடைக்காதாம். நம் அதிர்ஷ்டம் பொறுத்துன்னார்.  அதானே....  நம்ம  லக் எப்படி இருக்குமோ?
எதிர்வாடையில் டீக்கடை (போல) ஒன்னு. அங்கே போய் ஒரு டீ குடிக்கலாமேன்னு போனோம். எக்ஸ்  சர்வீஸ் மேன் நடத்தும் கடை.  முன்னால் ரெண்டு சின்ன மேஜையும் நாற்காலிகளும் போட்டு வச்சுருக்கார்.  பொட்டிக்கடை பலசரக்குக் கடைதான்.  கேக்கறவங்களுக்கு டீ, ப்ரெட் சான்ட்விச், ஆம்லெட்ன்னு செஞ்சு கொடுப்பாராம். டீ போட்டார். பால்பவுடர்னு நினைக்கிறேன்.

இருட்டுமுன் ஹொட்டேலுக்குப் போயிடலாமுன்னு  வந்துட்டோம். ஹபரண வில்லேஜில் பார்க்கறதுக்குன்னு ஒன்னுமில்லை.

நிறைய  ஹொட்டேல்ஸ் இருக்கு.... எல்லாமே எதோ ஒரு வகையில் ஏரிக்குப் பக்கமா இருப்பதுபோல் கட்டி இருக்காங்களாம்.   இந்த ஊருக்கு .....  யானை ஸஃபாரிக்குன்னே வர்றவங்கதான் பெரும்பாலும்...
இங்கே ரிஸ்ஸார்ட்லேயே ராச்சாப்பாடு ஆச்சு. பஃபேதான்.  
பால்கனியில் உக்கார்ந்து கொஞ்சநேரம்  இருட்டில் தெரியும் ஏரியை ரசிச்சுட்டுத் தூங்கப்போனேன். 

காலையில் சீக்கிரம் எழுந்து ரெடியாகணும். ஓக்கே?

  குட்நைட்!

தொடரும்........ :-)



11 comments:

said...

அருமை நன்றி

said...

ஆகா!சபாரி மின்னேரியா காடா?




said...

ரம்மியமான பயணமாக உள்ளது. அருமை.

said...

இனியமையான இடமாகத் தெரிகிறது.

ஆஹா யானை பார்க்க வண்டியில் சஃபாரி.... காலையில புறப்படணும் இல்லையா. நானும் தயாரா இருக்கேன்! :)

அசாம் காசிரங்காவில் யானையில் சஃபாரி மற்றும் ஜீப் சஃபாரி இரண்டும் போனோம். கிர், பாந்தவ்கர், ஷிவ்புரி என இன்னும் சில வனங்களிலும் இப்படி சஃபாரி சென்றதுண்டு. சிறப்பான பயணங்கள் அவை.

தொடர்கிறேன்.

said...

ரம்யமான ஹோட்டல். யானைச் சவாரி படமும் நல்லாருக்கு.

நாளை யானைக் காட்டுக்குள்ளா? தொடர்கிறேன்.

கிட்டத்தட்ட 5,000 இந்தியன் ரூபாய்கள் இருவருக்கு.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

மின்னேரின்னு சொல்லலையே...... இன்னொரு இலங்கை நண்பரும் ஹபரண தெரியும். ஆனால் கவுடுல்லாக் காடு என்ற பெயர் புதுசா இருக்குன்னு சொன்னார்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

காடு என்பதே இனிமைதான், அதிலும் யானைன்னு சொல்லிட்டா இன்பம் பத்துமடங்கு ஆகிருதே !!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வடக்கே நீங்க போகாத சஃபாரியா? உங்க பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம் பெருமூச்சு விடுவேன்.... நமக்கு எப்போன்னு...... ஆண்களா இருப்பதில் உள்ள சுகங்களில் அதுவும் ஒன்னு.... நினைச்சால் கிளம்பிடலாம்....

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

எக்ஸ்சேஞ்ச் ரேட் பொறுத்துக் கூடக்குறைய ஆகலாம். தனி வண்டி என்பதால் ஓக்கேன்னுதான் தோணுது.

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாவ் ,,..சூப்பரா இருக்கு இடமும் சவாரியும் ...

எங்க பொள்ளாச்சி பயணம் நியாபகம் வந்து ...