Monday, July 08, 2019

தாளமும் ஆட்டமும் ! (பயணத்தொடர், பகுதி 114 )

கண்டி ஏரியைச் சுத்திக்கிட்டு OZO ஹொட்டேலுக்குப் போய்ச்சேர்ந்தோம். கொஞ்சம் உயரமான குன்றிலே கட்டி இருக்காங்க. செக்கின் ஆனதும் அறைக்குப்போனால்  ரெண்டு இன்ப அதிர்ச்சிகள் !
படுக்கையின் தலைமாட்டுச் சுவரில் மூணு யானைகள்!  கால்மாட்டுப்பக்கம் பால்கனி. கதவைத்திறந்தால்  கண்டி ஏரி ! அந்தாண்டை மலை!  வாவ்!

நல்ல வசதியான அறைதான்.  ஃப்ரெஷப் பண்ணி,  காஃபி ஒன்னு குடிச்சுட்டு இதோ ரெடி ஆகிட்டோம்.  அஞ்சு மணிக்கு ஷோ ஆரம்பமாம்.

கண்டி வந்துட்டு கண்டியன் டான்ஸ் பார்க்காமல் போனால் எப்படி? ஃபோன் பண்ணி டிக்கெட் இருக்கான்னு கேட்டாச்.   லேக் க்ளப் என்ற இடத்துக்குப் போறோம்.   ஹொட்டேலில் இருந்து ஒரு மூணு கிமீ தூரம்தான்.  ஆளுக்கு ஆயிரம் ரூபாய்.  அச்சடிச்ச நிகழ்ச்சி நிரல் என்ன மொழியில் வேணுமுன்னு கேட்டு அதையும் கையோடு கொடுத்துட்டாங்க. தமிழ் இல்லை.    எல்லா ஐட்டத்திலும் Natuma ன்னு போட்டுருக்கு.  அப்ப அதுக்கு நடனம்னு தெரிஞ்சது.  சிங்கள நடும !
நம்மை உள்ளே கூட்டிப்போய் தியேட்டரில் உக்காரவைக்க ஒரு வரவேற்பு குழு இருக்கு :-)
மூணாவது வரிசையில் உக்காரவச்சார் ஒருவர்.  'முதல்வரிசையில் உக்காரலாமா'ன்னு கேட்டதுக்கு  ஒரு விநாடி யோசிச்சவர் 'உக்காருங்க'ன்னுட்டார்.  எனக்குப் படம் எடுக்க எப்பவும் முதல்வரிசைதான் வசதி. யார் தலையும் மறைக்காது பாருங்க.

நம்மவர் அதுக்குள்ளே  அது ரிஸர்வ்ட் ஸீட்டா இருக்கும், இங்கேயே உக்காரலாமுன்னு என்னாண்டை கிசுகிசுக்கிறார்.  வாயிலே இருக்கு வழின்னு எப்பதான் புரிஞ்சுக்கப்போறாரோ?
இருக்கைக்கு முன்னால் நீளமா பெஞ்சு போல ஒரு மேஜை.  அது  எதுக்கு?  ஹாஹா... இங்கே இந்த தியேட்டரில்  ஃபுல் பார் ஒன்னு இருக்கு. தேவையான பானங்களை வாங்கிக்'குடிச்சுக்கிட்டே' நடனத்தை ரசிக்கலாமாம். ஓ......  விடமுடியுமா?  ஆர்டர் கொடுத்தோம்.
நமக்கான பானம் வந்தது :-)

1982 இல் ஆரம்பிச்ச இந்த நாட்டியக்குழு  ரொம்ப அருமையா நிகழ்ச்சிகளைத் தொகுத்துருக்காங்க.  ஒரு ஒன்னேகால் மணி நிகழ்ச்சிதான். தொய்வெ கிடையாது. சட் சட்னு அடுத்தடுத்து விதவிதமான உடுப்புகளில் நடனங்கள்.  பொதுவா இளம் மக்களைத்தவிர  வயசானவர்களும் கூட  அப்படி ஒரு ஆட்டம் ஆடறாங்க!  அனுபவம்............... !!!
ஆரம்பமே சங்குதான் ..... ஐமீன் சங்கநாதம் !

பாட்டு கிடையாது. எல்லாம் தாளம் மட்டுமே.....விதவிதமான மேளங்கள்! மொத்தம் பதிமூணு ஐட்டங்கள். அதுலே பனிரெண்டு உள்ளே அரங்கத்தில். பதிமூணாவதான  'ஃபயர்  வாக்கிங்' வெளியே அரங்கையொட்டிய உள் முற்றத்தில். இங்கே ஆம்ஃபி தியேட்டர்போல் அரைவட்ட வடிவில் இருக்கைகள்.
நடன நிகழ்ச்சியைப் பற்றி விரிவா எழுதறதுக்கு  முடியாது. கண்ணால் பார்க்க வேண்டிய சமாச்சாரம். ஒவ்வொரு நடனத்தையும் கொஞ்சம் கொஞ்சம் சின்னச் சின்ன வீடியோ க்ளிப்ஸ் எடுத்தேன், உங்களுக்காக!
(ஃபேஸ் புக்கில் வலை ஏத்திட்டு  இங்கே லிங்கறேன். ஓக்கே?)

மயில் நடனமும், கிராமப்புற அறுவடை கால நடனமும், பேய் நடனமும் நல்லாவே இருந்துச்சு.

ஃபயர்வாக்கிங் சமாச்சாரம் பொதுவா எல்லா தீவுகளிலும் ஆதிகாலத்துலே இருந்தே இருக்கு போல. ஃபிஜித் தீவுகளிலும் இந்தத் தீமிதி உண்டு. அங்கே பூமிபுத்திரர் தீமிதிக்கறது போல, நம்ம தென்னிந்திய மக்களும் (மந்த்ராஜி! )தீ மிதிப்பாங்க. ஆனால் கல்ச்சுரல் ஷோவுக்காக இல்லை.  மாரியம்மன் திருவிழாவுக்கு !

கச்சிதமா ஒன்னேகால் மணி நேரத்துலே முடிச்சுட்டாங்க. நிறைய டூரிஸ்ட் கூட்டம்தான்.  நூறுபேருக்குமேல் இருக்கலாம்.
(இந்தப்பதிவு எழுதும் சமயம் அவுங்க பக்கம் போய் எட்டிப் பார்த்ததில் நேரமாற்றம் & டிக்கெட் விலையேற்றம் இருக்கு.)
நிகழ்ச்சி முடிஞ்சதும் ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.   மணி ஆறரைதான். ராச்சாப்பாட்டுக்கு  வெளியே போகலாமா இல்லை இங்கேயே சாப்பிடலாமான்னு  யோசிச்சதில்,  வெளியேன்னு முடிவு செஞ்சு ஏழரைக்குக் கிளம்பினோம்.

கடைவீதி போல  இருக்குமிடத்தில்  பாலாஜி தோசைக்கடை   ரொம்ப ஃபேமஸ் னு சொன்னாங்க. கண்டி ஏரிக்குப் பக்கம்தான்.  நம்ம ஹொட்டேலில் இருந்து ரெண்டே கிமீ. நடந்துகூட போகலாம். ஆனால் திரும்பிவரும்போது குன்றின் மேல் ஏறணுமே....
இலங்கையில் பொதுவா வெஜிடேரியன் ரெஸ்ட்டாரண்டுக்குத் தோசைக்கடைன்னு பெயராம் !  மாடியும் கீழ்தளமுமா  இருக்கு. வாசல் ஷோ கேஸில் ஆப்பம்!
தோசைக்கடை என்பது சைவக்கடை என்பதை சிங்களவர் பேச்சுவழக்கில் பாவிக்கும் சொல் என்று இலங்கை நண்பர் சொன்னார்.

தோசைக்கடையில் 'பூரி' தின்னுட்டு வெளியே வந்தால் தூரத்தில் ஒரு மலைமேலே  புத்தர்.  அவரை நாளைக்குப்போய் தரிசிக்கணும்.

அறையில் இருந்து பார்க்கும்போது நிலா வெளிச்சத்தில் ஏரி ரொம்பவே அழகு!  நிலாவும்தான்!

தொடரும்....... :-)


6 comments:

said...

கண்டிய நடனம் மிகவும் ரசனையாக இருக்கும்.

said...

Keep going Akka. Looking forward to read the next post too.

said...

வாங்க மாதேவி.

தொய்வில்லாம அடுத்தடுத்து ஆடிக்கிட்டே போனது பிடிச்சுருந்ததுப்பா !

said...

வாங்க இமா !

இல்லையா பின்னே :-) :-) :-)

said...

எனக்கும் கண்டிய நடனம் மிகவும் பிடிக்கும். அவங்க டிராமா கூட இன்ரஸ்டிங் ஆ இருக்கும். வீடியோ பார்த்தாச்சு. அருமை.

said...

அட்டகாசமா இருக்கு ...