Wednesday, February 06, 2019

பிறந்த இடம் தேடி........... (பயணத்தொடர், பகுதி 64 )

காலையில் 'நின்றானை' பார்த்துட்டுக் கிளம்பிடலாமாம். நம்மவருக்குப் பொறந்தகம் போகும் அவசரம் !   அதிகாலை ஏழு மணிக்கெல்லாம் எல்லாம் முடிச்சுக் கீழே வந்தோம். (முக்கியமா அந்த மூணு முழம் !)அப்பதான் ஹயக்ரீவாவில் வாசத்தெளிச்சுக் கோலம் போட்டுக்கிட்டு இருக்காங்க கனகவல்லி.

ரெண்டு கட்டடம் தள்ளி ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள்  இருக்கார்! தள்ளுமுள்ளு இல்லாம நிம்மதியா தரிசிக்கலாம்.  நாம் போன நேரம் கோ பூஜை ஜஸ்ட் முடிஞ்சுருக்கு!  அடடா.... ஒரு பத்து நிமிட் முன்னாலே வந்துருக்கலாம்.....  வடை போச்சே.....



சில சுவையான சமாச்சாரங்கள்  இந்தக் கோவிலைப்பற்றி இருக்கு.  விருப்பம் இருந்தால் இங்கே க்ளிக்கலாம் :-)

பெருமாளை தரிசனம் பண்ணினதும், பாலாஜி பவனில் ப்ரேக்ஃபாஸ்ட்.  இட்லியைத் தியாகம் செஞ்சேன். வெண்பொங்கல் ஓக்கே! காஃபி இங்கே வேணாம். முரளிக்கே போயிடலாம். இந்தப் பயணத்தின் கடைசிக் காஃபியாக இருக்கட்டும்.



அங்கே பக்கத்துலே ஒருத்தர்  சின்ன வண்டியிலே குழாய்ப்புட்டு  செஞ்சுக்கிட்டு இருந்தார். பார்க்கவே நல்லா இருக்கு. மூணு குடம்!  பரபரன்னு ஒரு ஒழுங்கோடு வேலை நடக்குது!
நம்மவர் போய் காஃபி வாங்கி வந்தார். ஆச்சு!  இனி அறைக்குப் போயிட்டுக் கிளம்பிடலாம்.  ராஜகோபுரம், அதுபாட்டுக்குக் கம்பீரமா நிக்குது!  ரங்கா.... போயிட்டு வரேன்.....
ஹயக்ரீவா வரவேற்பில் இருந்த மோஹன்  அஞ்சே நிமிட்டில் பில்   ரெடியாக்குனதும் செட்டில் செஞ்சுக் கிளம்பியாச்சு.
 


 நம்மை அன்போடு கவனிச்சுக்கிட்ட  நீலமேகமும், செல்வராஜும்.
அம்மா மண்டபம் பார்த்ததும்தான் உள்ளே போகவே இல்லைன்றதே நினைவுக்கு வந்தது. ஆகட்டும்..... அடுத்த முறை ! (இது எங்க கிவி ஆட்டிட்யூட்!  நெவர் மைண்ட்.... நெக்ஸ்ட் டைம் !)

இதேபோலத்தான் மலைக்கோட்டையைப் பார்த்ததும், திருச்சியில் நண்பர்கள் வீட்டைத் தவிர வேறெங்கும் போகலையேன்னு........
ஒரு மேம்பாலத்துக்குக் கீழே  நிறையபேர் கூட்டமா நின்னுக்கிட்டு இருந்தாங்க.  தினக்கூலிக்கு வேலை கிடைக்குமான்னு நிக்கறாங்களாம். இந்த மாதிரி கூட்டம் ஒன்னு சண்டிகரில் இருக்கும்போது பார்த்துருக்கேன். அங்கே போய்  நமக்கு வேண்டிய ஜோலிக்குத் தகுந்த ஆள்  கிடைச்சாக் கூலி பேசி கூட்டிட்டு வந்துடலாம்.  கேஷுவல் லேபர் வேலை!  இவ்ளோ பேருக்கும் வேலை கிடைக்குமா என்றது சந்தேகம்தான்.....ப்ச்....

திண்டுக்கல் போகும் ஹைவேக்குள் நுழைஞ்சதும் வண்டி பறக்குது.

நம்ம 'ஆர்விஎஸ் ' பள்ளிக்கூடம் நடத்துறாரா என்ன?  நண்பர்கள் பெயரை ஞாபகப்படுத்துதே!

ஆசை பேக்ஸ்  தாண்டுன கொஞ்ச தூரத்தில் (ஒரு 10 நிமிட் ட்ரைவ்)  வடமதுரைக்குக் கொஞ்சம் முன்னால்....  திடீர்னு  பெரிய பெரிய சிலைகளோடு ஒரு கோவில்.  இன்னும் முழுசாக் கட்டி முடிக்கலையா இல்லே பழுது பார்க்கிறாங்களான்னு தெரியலை.....  ஒரு சிலையின் கையில் வேல் மாதிரி ஒன்னு.... முருகனோ? அவருக்கு வாகனமா........    சின்னத் தலையோடு ஒரு பெரிய குதிரை (???)  என்ன கோவிலா இருக்கும்? ஙே.....

திண்டுக்கல் மாநகராட்சி நம்மை அன்புடன் வரவேற்றாலும் நாம் ஊருக்குள் போகாமல் பைபாஸ் சாலையைப் பிடிக்கிறோம். ஒரு பாலத்தாண்டை  சாலையை மறிக்கும் விதம் சின்ன கும்பல். ரமேஷ் மெதுவாகக் கடந்தபோது பார்த்தா....   டூவீலரில்  வந்த ஒருத்தர் அடிபட்டுக்கிடக்கார். சிலர் அவரைத் தூக்கி உக்காரவச்சுக்கிட்டு  இருந்தாங்க. 
'நம்மவர்' சட்ன்னு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்ததும் உதவி செஞ்சுக்கிட்டு இருந்தவர்  அதைத் திறந்து அவருக்குத் தண்ணீர் புகட்டினார்.  தலையில் காயம்...   லேசா ரத்தம் வழியுது.... அதுக்குள்ளே அந்தப்பக்கம் வந்த ஆட்டோவை நிறுத்தி அவரை   உள்ளே ஏற்றும் முயற்சியில்.... ஒரு ஏழெட்டுப்பேர்  அங்கே இருந்தாங்க. ஆஸ்பத்ரிக்குக் கொண்டு போறாங்களாம்.  பெருமாளே காப்பாத்திக் கொடுத்துருன்னு வேண்டிக்கிட்டேன்.

தூரத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டையும் கோவிலும்...

வ.குண்டுன்னு எழுதுன  ட்ரக் பார்த்ததும்  லேசாக் கொசுவத்தி புகைய ஆரம்பிச்சது.... அதைப்பற்றிச் சொல்ல வாயைத் திறக்கறதுக்குள்ளே...   நம்ம வண்டி லேசா ஒரு  பக்கம் இழுக்குதோன்னு.....    சட்னு சாலையின்  எதிர்வாடையில் இருந்த பெட்ரோல் பங்க்காண்டை வண்டியைக் கொண்டுபோய் நிறுத்திட்டார் ரமேஷ்.
டயர் பஞ்சர். பத்து நிமிட்டில் புது டயர் மாத்தினதும்  பயணம் தொடர்ந்தது.

தூரத்தில் சின்னக்குன்றின் மேல் கோவில்!  சென்றாயப் பெருமாள் கோவிலா இருக்குமோ?  நாலு வருஷம்  வத்தலகுண்டு வாசம். ஒருநாளும் நான்  மலையேறி வரலை.  அண்ணன் மட்டும் நண்பர்களுடன் போய் வருவார். சின்னப்பிள்ளை அவ்ளோ தூரம் ஏறாதுன்னு ஒரு தப்புக் கணக்குதான்....  இப்படிப் பாதையெல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது.....
புதுசுபுதுசாக்  கோவில்கள் வந்துக்கிட்டு இருக்கு! அய்யா வைகுண்டர் கோவில் ஒன்னும் பார்த்தேன். புதுசுன்னு நினைச்சது புதுசில்லையாம். கட்டியே முப்பது வருசமாச்சுன்னு தகவல். அய்யா வைகுண்டர் திருநிழல் தாங்கல், தேனி! நாம் பூஜை நேரம் என்பதை, இவுங்க பணிவிடை நேரமுன்னு சொல்றாங்க. அதுவும் சரிதான். சேவா டைம் !  ஒருநாள் போக வேணும். கன்யாகுமரிப் பயணத்துலேயே போக நினைச்ச கோவில்! அய்யாவழி கோவில்னு அப்போ பெயர் கேட்ட நினைவு. இப்போ  அவுங்க தனியா வெப்சைட் எல்லாம் வச்சுருக்காங்க. அய்யாபதின்னு கோவில்களைச் சொல்றாங்க!  திருவிழாக்கள் எல்லாம் கொண்டாடறாங்க. அய்யாவின் காலம், இருநூத்துப் பத்து வருடங்கள் சரித்திரம்!

தேனி கடந்து போடிக்குப் போறோம்.   போற போக்கில்  ஒரு இடத்தில் ஒரு 'டீக்கடை'யைக் காமிச்சார்  ரமேஷ். க்ளிக்குமுன் அதைக் கடந்துருந்தோம்.

சரியா பனிரெண்டரைக்கு ஊருக்குள் நுழைஞ்சு 'க்ரீன் ராயல்' ரிஸார்ட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
'நம்மவர்' முகத்தில் ஒரு பரபரப்பு!  அப்படியெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிக்கிட்டாலும்  பொதுவா செல்ஃபோன் கெமெராவிலும் சட்னு படம் எடுக்கத் துணியாத கை அப்போ அன்று  மட்டும் நூத்தியம்பத்தியஞ்சு படங்களை க்ளிக்கியிருக்குன்னா பாருங்க !   பிறந்த மண் :-)

  முதலில் செக்கின் செஞ்சுக்கிட்டு அப்புறம்  ஊருக்குள் போகணும். அதுக்குள்ளே ஏகப்பட்ட  அழைப்பு செல்லில்!

தொடரும்....... :-)


11 comments:

said...

தொடர்கிறேன்.

said...

அப்படியே உங்க கூடவே வந்தமாதரி இருக்கு மா படிக்கும் போது..


அந்த புட்டு சூப்பர் ..நாங்க ஸ்ரீரெங்கம் தாண்டி இருக்குற மேலூருக்கு போவோம் அங்க தான் எங்க அய்யனார் கோவில் இருக்கு ....அப்போ இந்த மாதரி புட்டு வாங்கிட்டு போய் காவேரி ஆத்து நடுவில் உட்கார்ந்து ..குளிச்சுட்டே சாப்பிடுவோம்...

said...

//அப்படியெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிக்கிட்டாலும் //

தான் ஆடாட்டியும் தன் சதை ஆடும்ல. பக்கத்துல நீங்க வேற, சலங்கை கட்டி விட்டுட மாட்டீங்களா ?

said...

//அப்படியெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிக்கிட்டாலும் //

தான் ஆடாட்டியும் தன் சதை ஆடும்ல. பக்கத்துல நீங்க வேற, சலங்கை கட்டி விட்டுட மாட்டீங்களா ?

said...

என்ன இப்படி சிம்பிளாச் சொல்லிட்டீங்க.

நம்ம ஊருக்கு, விளையாடிய இடங்களுக்குச் செல்லும்போது வரும் பரவசமே தனி... நீங்களும் அதை அனுபவிச்சிருப்பீங்களே (ஒரு காலத்தில் உங்களோட இருந்த ஹாஸ்டல் ரூம் தோழியைப் பார்க்க அவங்க ஊருக்கு, வீட்டுக்குப் போனபோது)

said...

அம்மா மண்டபம் - பெயர்க் காரணம் என்ன டீச்சர்?

வெண்பொங்கல் ஒரு ராஜ உணவு. அதுல சுவை சொகுசுன்னு பலதரப்பட்ட உசத்தியானதுகள் இருக்கு.

குழாப்புட்டு பாக்கவே ஜம்முன்னு இருக்கு. கூட தேங்காப்பூவும் சர்க்கரையும் குடுப்பாங்களோ?

அடிபட்டு விழுந்தவருக்கு சரியாயிருக்கும்னு நம்புவோம். ஆண்டவனை வேண்டிக்குவோம்.

இவ்வளவு பேருக்கும் வேலை கிடைக்குமா? நல்ல கேள்வி. சென்னையில் நான் பாத்த வரைக்கும் கட்டட வேலை ரோட்டு வேலை போர்வெல் போடுறதுங்குற மாதிரியான உடலுழைப்பு வேலைகள்ள வடக்கத்தியர்கள் பெரும்பாலும் இருக்காங்க. அதுலயெல்லாம் நம்மாட்கள் கண்ல படுறதில்ல. திருச்சியில் அப்படியில்லையோ?

said...

வாங்க ஸ்ரீராம்,

தொடர் வருகைக்கு நன்றி !

said...

வாங்க அனுராதா பிரேம்,

பழைய நினைவுகளை அசை போடுவதும் இனிமைதானேப்பா!

said...

வாங்க விஸ்வநாத்.

ஒரு இடத்துலே நின்னால்தானே சலங்கை கட்டமுடியும்? :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மைதான். ஆனால் அடுத்தவங்க பரவசத்தைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையா இருக்காது? :-)

said...

வாங்க ஜிரா.

அம்மாமண்டபத்துப் பெயர்க் காரணம்.... ஒருமுறை நம்ம சுஜாதா இப்படிச் சொல்லி இருந்தார்!

'அது நாயக்கர் காலத்து ராணியின் செல்லப் பெயர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.'

புட்டு வாங்கலை. அதனால் கூட என்னன்னு தெரியலை....

அடிபட்டவரைக் கடவுள் காப்பாத்திருவார்.

இலவசமா எல்லாம் கிடைக்கும்போது எதுக்கு வேலைக்குப் போகணுமுன்னு ஒரு கூட்டத்தை உருவாக்கிட்டாங்க தமிழ்நாட்டு அரசியல் வ்யாதிகள்.... :-(