ஊர் முழுக்க இவுங்க சொந்தம்தான் எதோ ஒரு வகையில்! போனமுறை போனபோது மாமனார் மாமியார் இருந்தாங்க...... ரெண்டுபேருமே இருபத்தி மூணுநாட்கள் இடைவெளியில் ஒருவரை ஒருவர் தொடர்ந்து சாமிகிட்டே போயிட்டாங்க. ஆச்சு ஒரு ஏழு வருஷம். அதன்பின் இப்பதான் வர்றோம்.
உறவினர் தம்பி & மனைவியுடன் பகல் சாப்பாட்டுக்குப் போனோம். ராஜ் பவனில் லஞ்சு ! உள்ளே தனியறையில் சாப்பாடு விளம்பினாங்க! பயங்கர உபசரிப்பு! ராஜ் பவன் வாசலில் ஒரு சுண்டெலி. அப்பப் புள்ளையாரும் சாப்பிட வந்துருக்கார் போல!
இந்தப் பயணத்துலே இங்கே வந்ததுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு! தரவாடு வீட்டில் பெரிய மச்சினருக்குக் கிடைச்ச பாகத்தில், அவர் புதுசாவே வீட்டைக் கட்டி இருக்கார். அதோட கிரஹப்ரவேஸம், நாம் நியூஸியில் இருந்து கிளம்பறதுக்கு ஒருவாரம் முன்னால் வச்சுருந்தாங்க. நாங்க ஏற்கெனவே மூணு மாசத்துக்கு முன்னே பயணத்திட்டமெல்லாம் போட்டுருந்தோம். மறுபடி திட்டத்தையெல்லாம் மாத்தி எடுக்கக் கொஞ்சம் சிரமம். முக்கியமா நம்ம ரஜ்ஜூவுக்கு ஹாஸ்டல் இடம் கிடைப்பது கஷ்டம். புக் பண்ண தேதியில் இருந்துதான் அவனுக்கு ரூம் கிடைக்கும். அதான் இப்ப வந்து பார்த்துட்டுப் போகலாமேன்னு......
போடிநாயகனூர் டவுன், ஒரு விதத்தில் காசி போல..... சின்னச் சின்ன சந்துகளாத்தான் இருக்கு தெருக்களே! ரெண்டு பக்கமும் அடர்த்தியா வீடுகள். பாதாளச் சாக்கடையெல்லாம் கிடையாது. சரிப்படுத்தியெடுக்க முடியவே முடியாத ஒரு கட்டமைப்பு. கார் நுழைய முடியாத தெருக்களா இருப்பதால்... கஷ்டம்தான்.
இப்பக் கொஞ்ச வருஷமா, டவுனுக்குக் கொஞ்சம் தள்ளிப் புதுப்புது நகர்கள் உருவாகிக்கிட்டு இருக்கு. அங்கெல்லாம் விஸ்தாரமான இடங்களில் தனித்தனி வீடுகள்! முக்காவாசிப்பேர் அங்கே புது வீடு கட்டிக்கிட்டாலும், பழைய வீடுகளை அப்படியேதான் வச்சுருக்காங்க.
எங்க 'வீட்டாண்டை' வந்து இறங்கிக்கிட்டோம். பழைய அடையாளம் சுத்தமா இல்லை! இன்னும் வுட்வொர்க் நடந்துக்கிட்டு இருப்பதால் ... தூசும் பொடியுமாத்தான் இருக்கு!
மூணு மாடிக் கட்டடம். இடம் சின்னதுன்றதால் மேலே போகத்தான் வேணும் :-) நல்லா நறுவிசாத்தான் கட்டி இருக்காங்க.
பிடிச்சது என்னன்னா..... சித்திரங்கள்! ஹைய்யோ..... எவ்ளோ அழகழகான சித்திர டைல்ஸ் வந்துருக்குன்னு எனக்கு உண்மையிலேயே வியப்புதான். இங்கே நியூஸியில் இதெல்லாம் கிடைக்கறதே இல்லை....
மாடிப்படி ஏறும் இடத்தில் வணங்கி வரவேற்கும் பெண், அப்புறம் முதல் தளத்தில் மானும், முயலும் அருவியுமா ஒரு சூப்பர் ஸீன், பென்ட்ஹவுஸில் ஏறக்குறைய ரவிவர்மா ! ஹைய்யோ!!!
சிவலிங்களுக்காக இன்னுமொரு மொட்டை மாடின்னு சொல்லலாம். இதுக்குப் படிகள்தான் இரும்பு ஏணி வகையில்! ஊரைச் சுத்தி மலைகள் என்பதால் அங்கிருந்து பறவைப்பார்வையில் எல்லாமே ஒரு அழகுதான்! நிறைய வீடுகளைப் புதுப்பிச்சுக் கட்டி இருக்காங்க !
வீட்டுவீட்டுக்கு சிவலிங்கங்கள்தான்! இப்பெல்லாம் கலரிலும் வருது :-)
நம்ம ரமேஷுக்கு, பஞ்சரான டயரை ரிப்பேர் செஞ்சுக்கணும். கூடவே பக்கத்து மாநிலம் வரை போய் வர எண்ணம் இருப்பதால் அதுக்கான பர்மிட் வாங்கிக்கணும். சாப்பாடானதும் எங்களை இங்கே கொண்டுவந்து விட்டுட்டுத் தம்பியே ரமேஷுடன் போய் வேலையை முடித்துக் கொடுத்துட்டார்.
அடுத்த தெருவில்தான் தம்பி வீடு என்பதால் நாங்க தம்பி மனைவியுடன் நடந்து போறோம். அக்கம் பக்க வீடுகளில் இருந்து நலம் விசாரிப்புகள். உறவினர்கள் வீட்டுக்குள்ளே புகுந்து நாங்களும் நலம் விசாரிச்சுக்கிட்டே போறோம். ஒரு தலைமுறை காலம் முடிஞ்சுபோனதால் அவுங்கெல்லாம் படத்தில் இருந்து நம்மை விசாரிக்கறாங்க.
அவுங்க பிள்ளைகளுக்கு முதலில் சட்னு நாம் யாருன்னு தெரியாத சின்னக்குழப்பம். கடைசியா எல்லோரையும் பார்த்தே பதிமூணு வருஷமாச்சே. நாத்தனார் மகன் கல்யாணத்துக்கு அப்போ வந்துருந்தோம். விநாடி நேரத்துக்குப்பின் முகம் நிறைய மலர்ச்சி!
அங்கங்கே சிலபல க்ளிக்ஸ்.
தம்பியும், தம்பி மனைவியும் ஆசிரியர்கள். போற வழியில் எல்லாம் டீச்சருக்கு வணக்கம் சொல்லிக்கிட்டே இருக்காங்க பிள்ளைகள். இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் 'நம்மவரும்' அந்தக் காலத்தில் படிச்சிருக்கார்.
இந்த ஊரின் முக்கிய தொழில் ஏலக்காய்தான்! இங்கே இருந்து பலநாடுகளுக்கும் ஏற்றுமதி. ஏலக்காய் அறுவடை முடிஞ்ச பிறகு, அநேகமா இது பெண்கள் கைக்கு வந்துருது! சுத்தம் செஞ்சு தரம் பிரிப்பது , சரியான பதத்துக்கு உலரவைப்பதுன்னு நிறையப் பெண்கள் இந்த வேலையில் இருக்காங்க. குடிசைத்தொழில்னு சொல்லலாம் :-)
ஏலக்காய் !
பத்து வீட்டுக்கொரு வீட்டில் ஏலக்காய்தான்! ஒரு வீட்டுக்குள் நுழைஞ்சு பார்த்தோம். உரிமையாளர் கலையரசி, அன்பா வரவேற்று நல்லபடியா விளக்கம் கொடுத்தாங்க. எல்லாம் இவுங்க கஷ்டப்பட்டதும், அதை வாங்கும் கம்பெனிகள் அவுங்க பெயர் போட்டு பேக் பண்ணிடறாங்க! எந்தப்பொருளுமே உற்பத்தியாளரை விட, வாங்கி விற்பவர்களுக்குத்தான் பணம் சம்பாரிச்சுக் கொடுக்குது இல்லே?
தம்பி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். தம்பியின் பேத்தி இங்கேதான் இருக்காள். அழகான அறிவான குழந்தை! அத்தையும் இங்கே தான்.
பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் ட்யூஷனுக்குக் கிளம்புதுங்க புள்ளைங்க.
என்னிடம் ஒட்டிக்கிட்டக் குழந்தையும் ட்யூஷனுக்குக் கிளம்பினாள். அவளை வழியனுப்ப.... மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துருந்தேன். அப்போ தெருவில் போன ஒரு பாட்டியம்மா, தலையை உயர்த்தி கண்களுக்கு மேல் நெத்தியில் கை வச்சு, மாடி பால்கனியில் நின்னுக்கிட்டு இருந்த 'நம்மவரை'ப் பார்த்து 'நீ ****தானே? ன்னு பெயரைச் சொல்லி விசாரிச்சாங்க. இவரும் ஆமாம்னு சொல்லி அங்கிருந்து பேசிக்கிட்டு இருந்தார்.
தெரிஞ்ச பாட்டியாக்குமுன்னு அப்புறமா இவரிடம் விசாரிச்சால்......
இவருடைய வகுப்புத் தோழியாம்! பெயர் மறந்து போச்சுன்றார்!
தொடரும்......... :-)

10 comments:
//தெருவில் போன ஒரு பாட்டியம்மா, // - வாய்ப்புக் கிடைத்தால் கோபால் சாரை வாரிவிடுகிறீர்களே... இது அநியாயமில்லையோ
//இவருடைய வகுப்புத் தோழியாம்! பெயர் மறந்து போச்சுன்றார்!//
நம்பாதீங்க டீச்சர். 96 - ராம் - ஜானு - தெரியுமா ?
இருந்தாலும் நீங்க சாரோட க்ளாஸ் மேட்ட பாட்டீன்னு சொல்லிருக்கவேணாம்.
எங்க போனாலும் திரும்ப நம்ம ஊரை பார்க்கும் போது சந்தோசம் பொங்குதே ...
மகிழ்ச்சியான படங்கள் ...
வாவ் டைல்ஸ் ..சூப்பரா இருக்கு ..
கடைசி வரி நகைச்சுவையை ரசித்தேன். சொந்தங்களை நீண்ட நாட்களுக்குப்பின் பார்த்ததில் மனம் நிறைந்து போயிருக்கும்!
நல்ல அனுபவம். ஏறக்குறைய ரவிவர்மா என்று உங்களால் கூறப்பட்ட ஓவியத்தை அதிகம் ரசித்தேன்.
வாங்க நெல்லைத் தமிழன்.
நான் எங்கே வாரி விட்டேன்...... பெண்களுக்கு ஏகப்பட்டக் கவலை..... அதனால் வயசான தோற்றம் சீக்கிரமே வந்துருது....
சாருக்குக் கவலை இல்லாத வாழ்க்கை. அப்படிக் கவலை கொடுக்காத ஒரு மனைவி அமைஞ்சது பாக்கியம் இல்லையோ!!!!
வாங்க விஸ்வநாத்.
முதலிலேயே தெரிஞ்சுருந்தா க்ளிக்கி இருக்கமாட்டேனா..... பாட்டி லுக்தான். சந்தேகமே இல்லை.... இவரே குழம்பிட்டாருன்னா பாருங்க...
வாங்க அனுராதா ப்ரேம்.
டைல்ஸ் நல்ல அழகுப்பா ! கனம் இல்லைன்னா இங்கே கொண்டு வந்துருப்பேன் !
வாங்க ஸ்ரீராம்.
நகைச்சுவை இல்லாத வாழ்க்கை போரடிச்சுராதா? :-)
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ரசித்ததற்கு நன்றி !
Post a Comment