Friday, October 12, 2007

'என்' பார்வையில் நவராத்திரி

எல்லாருக்கும் வணக்கம். ஒருநாளும் இல்லாத திருநாளா மரப்பாச்சியை அம்மா அலமாரியிலே இருந்து எடுத்ததுமே, எனக்கு 'ஆஹா....... என்னமோ நடக்கப்போகுது'ன்னு இருந்துச்சுங்க. இன்னும் கொஞ்சநேரம் எதையோ குடஞ்சிக்கிட்டு இருந்துட்டு,'அப்பாடா கண்டு பிடிச்சிட்டேண்டா'ன்னு கூவிக்கிட்டு வந்து தரையில் உக்கார்ந்தாங்க.


நான் கொஞ்சம் நோஸி. எங்க சுபாவமே அப்படித்தானாம். நான் மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா? அதுகிடக்கட்டும். இப்ப நான் கண்டதை அச்சுப்பிசகாம உங்ககிட்டெ சொல்லணும்.

தாயைப் போல பிள்ளைன்னு பழமொழி இருக்காமே. அம்மாவுக்கும் எதுன்னாலும் உங்ககிட்டே சொல்லலைன்னா விடியாதாம்.அதெ பழக்கம் எனக்கும் இப்ப ஹி ஹி ஹி ஹி......

பையன், பொண்ணுன்னு ரெண்டு மரப்பாச்சிங்க நம்மவீட்டுலெ இருக்கு. முதல்லெ பொண்ணுக்கு உடை மாத்தினாங்க. நல்ல சிகப்புப் பட்டுப்பாவாடை,
அதுக்கு மேட்சிங் துப்பட்டா. வெள்ளி புட்டாப் போட்ட டிஸைன். என் முன்னாலெ பொண்ணு துணி மாத்திக்கறப்ப எனக்கு வெக்கம் பிடுங்கித் தின்னுச்சு. கொஞ்சம் அந்தப் பக்கமா தலையைத் திருப்பிக்கிட்டு ஒரு மாதிரி சமாளிச்சேன்.

போனமுறை ஊருக்குப் ( என்னை இங்கெ விட்டுட்டு)போனப்ப அங்கேயிருந்து நகைகள் வாங்கியாந்தாங்களாம். நெக்லெஸ், ஒட்டியானம், கம்மல், மூக்குத்தி, வளையல், கல் பதிச்ச நெத்தித் திலகம் இதெல்லாம் பொண்ணுக்காம். பையனுக்கும் குறைவைக்கலை.

தகதகன்னு தங்கக்கலர் பஞ்சகச்ச வேஷ்டி, அதுக்கு ஏத்த மேல்துண்டு, காதுக்குக் கடுக்கண், கழுத்துக்கு கல்வச்ச ஹாரம், கல் பதிச்ச நாமம்ன்னு கலக்கலா இருக்கு.

எனக்கு இந்த நகைநட்டு,குறிப்பாக் கல்வச்சுப் பளபளன்னு மின்னுற நகைன்னாவே ஒரு 'கிறக்கம்' இருக்கு. சொன்னா நம்ப மாட்டீங்க. அம்மாவோட படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டி அலமாரியில் கீழ்த்தட்டுலெ ச்சின்னச் சின்ன சில்க் பைகளை ஒரு நாள் வைக்கறதைப் பார்த்தென். இழுப்பறையா இருக்கு. எப்படி அதைத் திறக்கறாங்கன்னு கவனிச்சுக்கிட்டெ இருந்தென். சிலநாள் விடாம கைவிட்டு அந்தக் கைப்பிடியை இழுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தெனா.....'.அட! என்னாலெயும் திறக்க முடியுது.

மறுநாள் காலையில் அம்மா திறந்திருக்கும் ட்ராவைப் பார்த்துட்டு, அப்பாவைக் கோச்சுக்கிட்டாங்க. எதாவது எடுத்தா, திருப்பி அந்த ட்ராவை உள்ளெ தள்ளுனா என்ன?ன்னு. 'நான் ஏன் அதை திறக்கப்போறேன். நீயே திறந்துட்டு, உள்ளே தள்ளாம விட்டுருப்பே'ன்றாரு அப்பா.கொஞ்ச நேரம் நீயி, நானுன்னு கத்திட்டு மத்தவேலையைப் பார்க்கப்போயிட்டாங்க.

இன்னொருநாள் இப்படித்திறந்து சில குட்டிப்பைகளை வெளியே எடுத்து வச்சேன். அன்னிக்கும் அப்பா அம்மாக்கு ச்சின்னச் சண்டை வந்துச்சு. 'இங்கே பாருங்க. நம்ம வீட்டுலெ இதைத் திறக்கரது நீங்களும், நானும் இல்லைன்னா இவனான்னு என்னைக் காமிச்சுக் கேட்டாங்க. நானும் ஒண்ணும் சொல்லாம(?) கப்ச்சுப்ன்னு நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

ஒருநாள் நடுராத்திரி. 'பூனையாட்டம்' ஒசைப்படாமப் போய் அந்த ட்ராவைத் திறந்தேன். வழக்கப்படி சில பைகளை வெளியே எடுத்து வச்சேன். அம்மா அரைத்தூக்கம்போல. சட்ன்னு விளக்கைப் போட்டாங்க. நான் அப்படியே ஃப்ரீஸ்.............. பலநாள் திருடன் ஒருநாள் ஆப்புடுவானாம்!

அப்பாவும் அம்மாவும் ஏன் இப்படி விழுந்துவிழுந்து சிரிக்கறாங்கன்னே தெரியலை.

அது இருக்கட்டும்.நானும் (!) சொல்லவந்ததை விட்டு வழிமாறிப் போய்க்கிட்டு இருக்கேன் பாருங்க.....பழக்க தோஷம்?

பளிச்ன்னு நகைகளைப் பார்த்ததும் மெல்லக் கையை நீட்டி எடுத்தேன். ரொம்பக் குட்டியா இருக்கறது கைக்குப் பிடிபடலை. அம்மா உடனே ஒரு
நெக்லெஸை எடுத்து என் தலையிலே வச்சுப் பார்த்தாங்க. ரொம்பப் பிடிச்சுப்போச்சு போல. 'அப்படியே அசங்காம உக்காருடா. கேமரா எடுத்துக்கிட்டு வரேன்'னு போனாங்க. எனெக்கென்ன பைத்தியமாப் புடிச்சுருக்கு ஆட்டம்போட?

வந்து 'க்ளிக்'குனாங்க. நான் ஒரு மயக்கத்துலெ இருந்தேன்:-)))) அப்புறம் எல்லா
அலங்காரமும் செஞ்சு முடிச்சாங்க. எனக்கில்லைங்க, அந்த மரப்பாச்சிகளுக்கு(-:
நவராத்திரி விழா வருதாம். வழக்கம்போல கொலு வைக்கணுமாம். கேஸட் பெட்டிகள் வெளியே வந்துருக்கு. மைலாப்பூர் ஃபெஸ்டிவல் போனப்ப அங்கெ இருந்து ஒரு ஜோடி மனுசர்களைக் கொண்டாந்துருக்காங்க. அவுங்களும், போனமாசம் இங்கே உள்ளூர்லெ வாங்குன வாத்துக்குடும்பமும்தான் இந்த வருஷ ஸ்பெஷல்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அந்தக் காஞ்சீபுரம்
செம்பருத்திப் புள்ளையாரை மறந்துட்டாங்களோ?

நீங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கொலுவுக்குக் கட்டாயம் வந்துருங்க. வீட்டுப்பிள்ளையா நான் ஒருத்தந்தான் இப்ப இருக்கேன். அதான் நானே உங்களை அழைக்க வேண்டியதாப்போச்சு.

எல்லாரும் கட்டாயம் வாங்க. பக்கத்து வீட்டு 'பூனி'யைத் தவிர யார் வேணுமுன்னாலும் தாராளமா வரலாம்.

இப்படிக்கு உங்கள் நண்பன்(??)

கோபால கிருஷ்ணன் கோபால்.

பி.கு: கோபால் என்றது என் 'சர் நேம்':-)

51 comments:

said...

cute!!!! :-D

நான் உங்க வீட்டு கொலுவை பார்க்க வந்திருக்கேனே!!
எனக்கு சுண்டல் எங்கே??? :-)))

said...

இதை பார்த்துக்கொண்டிருக்கும் போது, வந்த ஸ்டெனோ படங்களை பார்த்து
"wah! so nice" அப்படி என்று சொல்லிட்டு போனாங்க.

said...

வாங்க சிவிஆர்.

சுண்டல் இப்பத்தான் வெந்துக்கிட்டு இருக்கு:-)
இப்படி உக்காந்து ஒரு பாட்டுப்பாடுங்க,அது வேகும்வரை:-)

said...

வாங்க குமார்.
உங்க ஸ்டெனோ தமிழ்க்காரர் இல்லைன்னு நினைக்கிறேன். இல்லேன்னா

அட்ஜஸ்ட்மெண்ட் கொலுவை 'நைஸ்'ன்னு சொல்லி இருப்பாங்களா? :-))))

said...

ரொம்ப நல்லா இருக்கு போஸ்ட். அழைப்பு விட்டுட்டீங்க.. நான் ஒரு பஸ் ஆட்களோட வர்ரேன். அது வரை விருந்து தடபுடலா ரெடி பண்ணுங்கோ. :-)

said...

சிட்னிக்கு ஒரு பார்சல் சுண்டல் பிளீஸ் ;)

Anonymous said...

ஜிகே தினமும் என்ன சுண்டல்னு அம்மா கிட்ட கேட்டு சொல்லு. வெறும் சுண்டலோட நிறுத்திடுவாங்களா? வேற எதாச்சும் ஸ்பெஷல் உண்டா

said...

//நானும் (!) சொல்லவந்ததை விட்டு வழிமாறிப் போய்க்கிட்டு இருக்கேன் பாருங்க.....பழக்க தோஷம்?//

அதானே. ஏம்பா அப்பா மாதிரி கம்முன்னு இருக்கக் கத்துக்கலாம் இல்ல!

அப்புறம் டீச்சர் கிட்ட பாட வேண்டாமுன்னு சொல்லு. அப்புறம் பாட வரலை தொண்டையில் கேன்சர், உன்னை யாருடா பாத்துப்பான்னு ஒரு சீரியலே ஓடும். :))

அப்புறம் அந்த சுண்டல் வெளிய வரும் போது நமக்கு ஒரு பார்ஸல் எடுத்து வையி.

அது என்ன நல்ல பெரிய கொலுவா வைக்காம மைக்ரோ கொலுவா இருக்கு? சுண்டலும் மைக்ரோவா இருக்கப் போகுது. எதுக்கும் முதலிலேயே கேட்டு வை.

வர்ட்டா!

said...

வாங்க ஃப்ரெண்ட்.

கூட்டமா வாங்க. பிரச்சனை இல்லை. மலெசிய மாரியாத்தா பரிவாரங்களோட
வர்றதுதானே பொருத்தம்:-)))

said...

அடடா, ஆரம்பிச்சாச்சா. சுண்டல் ஸ்பான்சர் பண்ண பக்கத்துல யாராவது இருக்காங்களா?

said...

வாங்க பிரபா.

இதோ அனுப்பிடறேன்:-)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி

சுண்டல் தினம் இருக்குமான்றதெ சந்தேகம்தான்.:-)))))

நம்ம சாமிகள் டயட்லெ இருக்காங்க. பழம் & காஞ்ச பழம்தான் விருப்பமாம்.

நீங்க வந்தீங்கன்னா உங்களுக்காக ஸ்பெஷல் விருந்து உண்டு:-)))

இன்னிக்கு மட்டும் சாஸ்திரத்துக்காக சுண்டல். ஆரம்பமும் முடிவும் சுண்டல். இடையில்?

யாருக்குத்தெரியும்?

said...

வாங்க கொத்ஸ்
( இப்படித்தானே அம்மா கூப்புடராங்க?)

சுண்டல் உண்மைக்குமே மைக்ரோதான். மைக்ரோவேவில் வச்சுருக்காங்க.

ரொம்பக்கொஞ்சமா இருக்கு. கேட்டா ரெண்டு பேருக்கு இதுவே தாராளம்(!!)
என்னையே கணக்குலெ சேர்த்துக்கலை பாருங்க(-:

நீங்க கிளம்பி வாங்க. நாம் ரெண்டு பேருமாச் சேர்ந்து சுண்டல் செஞ்சுக்கலாம்.
நல்லவேளை பாண்ட்ரிக்குப் பூட்டு இல்லை:-)))))

said...

வாங்க இளா.

கோபால்ன்னு ஒருத்தர் ஸ்பான்ஸார் செய்யறார்:-)

அந்தாக்ஷரி மாதிரி....சுண்டலில் ஆரம்பிச்சுச் சுண்டலில் முடிப்பார்:-)

said...

கோகிகோ.
அம்மாவைப் பாடச்சொல்றே
விருந்தினரே வரவேற்கிறே
ரெண்டும் முடியுமா?

said...

ஒய்யாரமா சாஞ்சுக்கிட்டு சுண்டலை கனவுல பாக்கறாரோ ஜிகே பூனையார். பாவம் கணக்குல சேர்த்து மூணு ஸ்பூன் சுண்டல் செய்யுங்க குருவே... அதுக்கும் ஒரு ஸ்பூன் குடுங்க. பாவம் இல்லையா.

மரப்பாச்சி ரொம்ப அழகா இருக்கு நகையோட..

said...

ம்ம்ம், கொலு களை கட்டுது போலிருக்கு. இருக்கட்டும். சுண்டல் எங்கே?னு நான் கேக்க மாட்டேன். கேசரி போதும். பாட்டு தானே? பாடிட்டா போச்சு.
"ஜானகி தேவி, ராமனை தேடி...." :)))

said...

டீச்சர் வந்துட்டா போச்சு. நல்ல நடை. சுவாரஸ்யமான எழுத்து. பின்னிறீங்க.

said...

http://www.raaga.com/playerV31/index.asp?pick=57283&mode=0&rand=0.29065814181029&bhcp=1

where is my Sundal GK?

said...

வாவ்!

நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்
உங்க வீட்டு கொலுவை பார்க்க.

எனக்கு முன்னாடி ஒரு கூட்டமே வந்துட்டாங்களே

சுண்டல் எதும் மீதி இருக்கா எனக்கு??? :-)))

said...

கொலு பொம்மையை விடுங்க. அந்த பூனையைச் சொல்லுங்க..சூபரா போஸ் கொடுக்குது.
இவ்வளவு பேர் கேக்கிறாங்களே சுண்டல் கொஞ்சம் கொடுக்கக் கூடாதா
அப்பாடியே நம்ப கொலுவுக்கும் வாங்க டீச்சர்

said...

கோகிகோ
ரொம்பக்குழம்பிட்டியா?
அம்மா பாடினா விருந்தினர் வீட்டுப் பக்கம் வருவாங்களா?
கோபால் சாரே காத தூரம் ஓடிடுவாரே

said...

பூனையார் ரொம்ப பந்தாவாக அழைக்கிறார், கையில் குங்குமச்சொப்பும் கொடுத்திருக்கலாம்.
படங்கள் நல்லாருக்கு. நீங்கள் சுண்டல் பண்ணாலும் சரி..கிண்டல் பண்ணாலும் சரி கொலுவுக்கு கட்டாயம் வருவேன். அப்படியே என்னோட கொலுவுக்கும் வரணும்.
அழைத்தவரையும் அழைத்துக்கொண்டு.

said...

ஆஹா...சூப்பர்..

தினமும் நம்ம ஐட்டம் செய்துறுங்க.. லேதன்டே ஸ்ரீவாரிகாரிக்கு கோபம் ஒஸ்துந்தி..:-))

செய்துட்டு பார்சல் அனுப்பிடுங்க..

(கொசுவத்தி சுச்ச வச்சுட்டீங்களே)

said...

வாங்க சிஜி சார்.

விருந்தினரை வரவேற்கறது எனக்கு............ முடியுமா......வா....?

அது எனக்கு 'பூனி'கூட போடும் ஃபைட் மாதிரி மனசுக்குப் பிடிச்ச விஷயம்.

அம்மா............பாடறதுதான்..... ஹூம். அதையெல்லாம் கண்டுக்கக்கூடாது. காதுக்கு ஒரு மூடி இல்லையேன்னு என் கவலை:-)))))

வீட்டு ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாதாம்:-)

said...

வாங்க முத்துலெட்சுமி.
நகையை யாரு போட்டாலும் ஒரு அழகுதான். இல்லேன்னா நம்மூர்
நகைக்கடையில் இப்படிக் கூட்டம் கும்முமா?

ஜிகே ஒரு புலி. பசிச்சாலும் சுண்டல் தின்னாது:-)

said...

வாங்க அம்பி.

நீங்க என்னைப்போலவா? கேசரிதான் நமக்கும் ரொம்ப 'ஆகி'வந்த ஸ்வீட்.
இதுலே வசதி என்னன்னா ஒரு கால் கப் ரவையிலும் செஞ்சு ஜமாய்க்கலாம்:-))))

பாட்டு ரொம்ப நல்லா இருக்கு.

கல்யாணத்துக்கப்புறம் வரும் முதல் நவராத்திரி இதுவாச்சே. உங்க 'ஜானகி'
ஜமாய்ச்சிருப்பாங்களே:-))))

said...

வாங்க டெல்ஃபீன்.

ஜாக்கெட் பிட்க்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கே. அந்தக் கலருக்கு மேட்ச்சா புடவை இல்லைன்னா மனசுலெ போட்டுவச்சுக்கலாம்:-)))) இங்கே புடவைக்கடை இல்லையாக்கும்(-:

திரும்பத் திரும்ப ப்ளவுஸ் பிட்டுகள் வலம் வந்துக்கிட்டு இருக்கறதும் படா பேஜார்.

இங்கெயும் இப்படிக் கிடைச்சதுகளையெல்லாம் ஊருக்குக் கொண்டுவந்து
வீட்டில் வேலைக்கு இருக்கும் உதவியாளர்க்குத்தான் கொடுத்தென்.

பொடி நடையா? மெதுவா வந்து சேருங்க. விஜயதசமிக்குத்தான் நம்ம வீட்டில் விருந்து.

said...

வாங்க ஆடுமாடு.

நடைக்கென்னங்க? இது பூனை நடைதான்:-))))

said...

வாங்க பத்மா.
ஆளைக்காணோமே ரொம்ப நாளா? நல்லா இருக்கீங்களா?

பாட்டுப் பிரமாதம்:-)

இன்னிக்குச் சுண்டல் இல்லை(-:

ட்ரை ஃப்ருட்ஸ் & ஃப்ரெஷ் ஃப்ருட்ஸ்.

நாளைக்கு 'நட்'டாம் :-))))

( அதென்ன தனியா ஒரு நாள்? எப்பவுமெ இப்படித்தானே? :-))))

said...

வாங்க மங்களூர் சிவா.

உங்களுக்கில்லாத சுண்டலா?

முதல்லெ வந்து சேருங்க. உங்க தலையைப் பார்த்ததும் 'ஊற'வச்சுரலாம்:-))))

said...

வாங்க தி.ரா.ச.

இதோ......உங்க கொலுவுக்கு வந்துக்கிட்டே இருக்கோம்.

said...

வாங்க நானானி.

ஒருமுறை இப்படிப் பண்டிகை சமயம் இந்தியா வந்தாத் தேவலாமுன்னு இருக்கு. பார்க்கலாம் எப்ப வாய்க்குமுன்னு!

அழைத்தவருக்குப் பிரயாணம் அலர்ஜி. 16 மணி நேரம் தாங்க மாட்டார்(-:

said...

வாங்க மங்கை.

இந்தப் பக்கம் டாக்டர் மொறைச்சுப் பார்க்கராங்க. இப்ப நான் யாருக்குன்னு பயப்படுவேன்?

ஆனாலும் ஸ்ரீவாரிகாரை விட்டுறமுடியுமா? விஜயதசமிக்கு அவருக்கெ 'எல்லா ' ஸ்பெஷலும்:-)))
இன்க்ளூடிங் நம்ம ஐட்டம்!

said...

அடடா,இவ்வளவ்லேட்டா வரேனே


இங்க ரெண்ட்உ வீடு போயி சுண்டல் வாங்கி வரத்துக்குள்ள
இம்மாம் பேரு வந்தச்ச்ஆ;)))0

படங்கள் ரொம்ப நல்லா இருக்கு துளசி.


பொம்மை செலக்ஷன் சூப்பர்,.
பேத்தி வந்ததுல நெட் விட்டுப் போச்சு;))))

said...

அக்கா!
கொலு நல்லா இருக்கு!!

said...

ஜிகே, தான்க்ஸ்பா. அழைப்புக்கு.
நீயும் அம்மாவோட பறந்து வந்துடு.

உனக்குப் புதுசா நிறைய நெத்திசுட்டி,காலர் பட்டை கால் கொலுசு எல்லாம் வாங்கிப் போடலாம்..சரியா கண்ணு.

said...

வாங்க வல்லி.

நவராத்திரின்னா நாலு வீடு போய்த்தானெ ஆகணும்? பிரச்சனை இல்லை.

இன்னிக்கு நம்ம வீட்டுலெ கேரட் அல்வா.

//உனக்குப் புதுசா நிறைய நெத்திசுட்டி,காலர் பட்டை கால் கொலுசு எல்லாம் வாங்கிப் போடலாம்..சரியா கண்ணு.//

ஆஹா....எனக்கே எனக்கா?

இதோ கிளம்பிடறேன்.

said...

வாங்க யோகன்.

நன்றி. இருந்து ஒரு பாட்டுப்பாடி 'அல்வா' வாங்கிக்கிட்டுப்போங்க:-)

said...

துளசி
வாழை லைப் பிள்ளையாரைப் பாத்திருக்கேன்.
//செம்பருத்திப் புள்ளையாரை மறந்துட்டாங்களோ?//
நீங்க மறக்காததால தரிசனம் கிடைச்சிருக்கு.
நன்றி

said...

அட, வரதுக்குக் கொஞ்சம் நாளாச்சு, அதுக்குள்ளே இத்தனை பேர் வந்தாச்சா? ம்ம்ம்., அலங்காரம் நல்லா இருக்கு, கோபாலகிருஷ்ணனுக்கு, எங்க வீட்டு எலிகளை உங்களுக்கு நவராத்திரிப் பரிசாக அனுப்பி இருக்கேன் வந்ததுக்கு ஒரு கமெண்ட் போடுங்க! :P

said...

வாங்க செல்லி.

வருகைக்கு நன்றி. செம்பருத்திப் பிள்ளையார் முகத்தில் 'கருணை' தெரியலை(-:

said...

வாங்க கீதா.

நம்ம ஜிகே எலியெல்லாம் தின்னும் 'ஜாதி' இல்லைப்பா.

அதனாலெ அங்கெயே யாருக்காவது இவன் பேரில் தானம் செஞ்சுருங்க:-))))

said...

//நெக்லெஸை எடுத்து என் தலையிலே வச்சுப் பார்த்தாங்க. ரொம்பப் பிடிச்சுப்போச்சு போல//

நெக்லேஸ் அலங்காரம் டாப் டக்கர்!
அப்படியே மின்னுது! வெரி க்யூட்!
வெறும் நெக்லேஸ் தானா?
மரப்பாச்சிக்கு மட்டும் தான் பட்டுச் சொக்கா-வா?
வேர் இஸ் மை பட்டுச் சொக்கான்னு சொக்கி நிக்கிறாப் போலத் தெரியுதே GK!

said...

வாங்க KRS.

சொக்கா போட்டுக்க மாட்டான். போட முயற்சியும் செய்ய முடியாது. கைக்கு இரும்புக்கவசம் போட்டுக்கணும் நாம்:-))))

ட்ரெஸ் பண்ணிவிட 'நாய்'தான் ரொம்ப ஜோர்.
பூனை வேலைக்காகாது(-:

said...

நான் பாட வர்றேன் துளசிம்மா
ஆனா ஸ்பெஷலா பிரசாதம் கொடுக்கணும். ஆமா:-)

said...

வாங்க மது.

இதொ ஸ்பெஷல் பிரசாதம் ரெடி.

'காளான்' சேர்க்காதது:-)))))

நோ..... குடை!

said...

அடப்பாவமே!!!

இவ்வளவு அப்டேட்ட‌டா துல்லிய‌மா துள‌சிம்மா.........:-)

உங்க‌ளுடைய‌ பிர‌சாத‌ ம‌கிமையே ம‌கிமை:-)

எல்லாம் சுக‌ம்.

said...

மரப்பாச்சி பொம்மை எங்க வீட்டிலேயும் இருக்கு - கொலுன்னாலே கொண்டாட்டம் தான் - நான் சின்ன வயசிலே கொலு பாத்தது பத்தி என் பதிவிலே எழுதி இருக்கேன். பையன் அருமையா கூப்பிடுரான். வந்துடுரோம்- உங்க வீட்டு சுண்டல் ரொம்ப பேமஸா - எல்லோருமே சொல்றாங்களே

said...

வாங்க சீனா.

'பையன்' இல்லாம வாழ்க்கையே இல்லை.
அவனுக்கும் எல்லாக் கொண்டாட்டத்திலும் பங்கெடுக்கப் பிடிக்கும். கூட்டமா நம்ம மக்கள்ஸ் இருந்தாலும் கவலை இல்லை. அவன்பாட்டுக்கு வந்து எல்லாரையும் நோட்டம் விட்டுட்டுப் போவான்.
இங்கே ஒரு வெள்ளைக்காரத்தோழி சொன்னாங்க, பூனைகள் 'யாரைப் பார்த்தால் பயப்படாம பேசாம இருக்கோ' அவுங்களை நம்பலாமாம். நெகட்டிவ் எனர்ஜி இல்லாதவங்களா இருப்பாங்களாம்

said...

//நான் அப்படியே ஃப்ரீஸ்.............. பலநாள் திருடன் ஒருநாள் ஆப்புடுவானாம்!//
haa haaa :) sooo chweet ..ஆமா அந்த பக்கத்து வீட்டு பூனி யாரு ? ஜெஸிக்கு பக்கத்து வீட்டு டைகர் மாதிரியோ :)
நகையெல்லாம் போட்டா ரொம்பவே அமைதியா இருப்பாங்க இவங்க ..