Tuesday, October 02, 2007

அச்சச்சோ.............

24 இளைஞர்கள்........................
அங்கங்கே கொத்துக்கொத்தா உக்கார்ந்துக்கிட்டு இருக்கும் இருபத்தினாலு இளைஞர்களைப் பாருங்க. முகம் மழிக்காம, தலை சீவாம முகத்தில் ஒரு சோகம் கப்பியிருக்க, பனியனும் கட்டம்போட்டக் கைலியுமா வெறுந்தரையில், பாறைகளில் உருண்டு கிடக்கும் இவுங்க எல்லாம் யாரு?


என்ன சோகமாம்?

வேறென்ன? இன்னும் கல்யாணம் ஆகலையாம்.

அடப்பாவிகளா?

சந்தோஷமா ஜாலியா இருக்கக் கிடைச்ச ச்சான்ஸை அனுபவிக்கத் தெரியலையே(-:

அது கிடக்கட்டும். ஏனாம் இன்னும் கல்யாணம் கட்டலை?

பொண்ணு கிடைக்கவேணமா?

இதென்னடா அதிசயம். ஏன் பொண்ணு கிடைக்காது?

இங்கெதான் வில்லங்கமே இருக்கு.

ஊர்க்கட்டுப்பாடு. அந்த ஊருலே இருக்கும் பொண்ணும் பையனும்தான் கண்ணாலம் கட்டணும். வெளியூர் சம்பந்தம் கூடவே கூடாது.
பொண்ணுக்குப் பதினெட்டு வயசு ஆனபிறகுதான் கல்யாணம். அதனாலே ஊருலே ஒரு பொண்ணு கல்யாண வயசை எட்டுனதும், இருக்கற கல்யாணங்கட்டாத பசங்க(??) எல்லாருக்கும் வீரவிளையாட்டுப்போட்டி நடத்தி, அதுலே ஜெயிக்கறவனைத்தான் அந்தப் பொண்ணுக்குக் கட்டி வைப்பாங்க.


சம்பவம் நடக்கறக் காலக்கட்டத்தில் ஊர் நாட்டாமையோட பையனும் திருமணத்தகுதிப் போட்டியில் தோத்துப்போயிக் கிடக்கார். ஒரு தகப்பனா மகனோட கவலை நாட்டாமைக்குப் புரியுது, ஆனா.................ஊர்க்கட்டுப்பாடு அவருக்கும்தானே?

அச்சச்சோ.............

இதுக்கிடையில் வெம்பித்திரியும் மனசுக்கு ஆறுதலா ஒரு 'ரோசனை' சொல்றார் நாட்டாமையின் மேல் கோவம் இருக்கற இன்னொரு மரத்தடிவாசி. ஊர்க்கூட்டத்தைக்கூட்டி நாட்டாமையே கேட்டுப்பிடலாமுன்னு ஐடியா.

கூட்டம் கூடுச்சு. வழக்கமான மரத்தடி மேடையில்.
எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வர்றாங்க. அடுத்தமாசம் கூடும் கூட்டத்துக்கு ஊருக்குள்ளே பத்து வயசுக்கு மேற்பட்ட பொண்குழந்தை இருக்கறவங்களும், 20 வயசுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத வாலிபர்களும் குடும்பத்தோட கட்டாயம் வந்துறணும்.


இதுக்குள்ளெ ஊருக்குள்ளெ கணக்கெடுப்பு நடக்குது.மொத்தம் 24 இளைஞர்கள். 20 வயசுமுதல் 36 வயசுவரை. பத்திலிருந்து பதிமூணு வயசுலே ஏழு பொண்குழந்தைகள். ஒரு குடும்பத்தில் 14 வயசுப்பொண் ஒண்ணு வேற ஊரில் அத்தை வீட்டில் வளருது.

இந்த ஊரில் பிறந்த பொண்ணுன்றபடியால் அதுவும் ஊர்க்கட்டுப்பாட்டுக்குக்
கட்டுப்பட்டதுதான்னு நாட்டாமை அடிச்சுச் சொல்லிப்புட்டார்.

நாலு வருசம் கழிச்சுப் பொண்ணுக்கு ஊரே சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கும். அந்த 24 பேரில் ஒருத்தன் ஜெயிச்சுத் தாலி கட்டுவான்.


அச்சச்சோ.............


பொண்ணு ஊருக்கு வருது, மொத்த ஊரும் ஆரத்தி வரவேற்புக் கொடுக்குது. அந்த 24ம் 'ஆ'ன்னு வாய் பொளந்து நிக்குதுங்க. நாலு வருஷம் போகணுமே.
தாங்கமுடியாத தவிப்புலே அந்த 24ம் பக்கத்து டவுன் பாருக்குப்போய் 'பார்த்துட்டு' கண்களில் கனவு விரிய குடிச்சுக் கும்மாளமடிச்சுட்டு ஊருக்குத் திரும்பிவந்துடராங்க.


நாலுவருசம் பொறுக்கமுடியாத ஒருத்தன் ஊரைவிட்டு ஓடிப்போய் இன்னொரு ஊர்ப்பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கறான். பாவி............ அங்கெயே இருந்து தொலைக்கக்கூடாது? பொண்ணைக் கூட்டிக்கிட்டு இந்த ஊருக்கு வந்தான். தாய்தகப்பனைப் பார்க்கன்னு.


நாட்டாமை வந்து அதிரடித் தீர்ப்புச் சொல்லிட்டார். ரெண்டு பேரையும் கட்டிவைச்சு, உயிரோட எரிச்சுறனும்


.அச்சச்சோ.............


ஆச்சு. பத்தியெரியுது. 23ம் வாயிலெ வயித்துலெ அடிச்சுக்கிட்டு ஒப்பாரிவச்சு அழுவுதுங்க. கிட்டத்தட்ட இனி எல்லாரும் நடைப்பிணங்கள்.


ஒருநாள் 'கொத்தா' இருக்கும்போது 20க்கு 36 என்றது சினியர் சிட்டிசன் லெவலாப் போயிருதுன்னு பேச்சு. ரெண்டு பிரிவாப் பிரிச்சுக்கராங்க. 20 முதல் 28 ஒரு க்ருப். 29 முதல் 36 வரை இன்னொண்ணு. தனித்தனி தலைவர்கள். போட்டிக்குப் பயிற்சி நடக்குது.


அப்ப வரான் ஒரு புது ஆளு ஊருக்குள்ளே. நவநாகரிமான உடுப்பு, கண்ணுக்குக் கூலிங் க்ளாஸ், அட்டகாசமான பைக். அலட்சியப்பார்வை. நேரா வண்டி போய்
நின்னது 14 வயசுப்பொண்ணு வீட்டுமுன்னால். நகைக்கடைக்காரராம். பொண்ணோட அப்பா செய்யச் சொல்லி இருந்த நகையைக் கொடுக்கவந்தவர்.


இந்த ஒரு நகையோட நிக்காம, பொண்ணொட அப்பா பெரிய அளவுலெ ஒவ்வொரு நகையும் செய்யறார். ஒட்டியாணம்கூட இருக்குன்னா பாருங்க.
வரப்போக இருக்கும் நகைக்கடைக்காரருக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஒரு 'இது'
வந்துருது.


இதுக்குள்ளே நாலுவருசம் மெதுவா நகர்ந்து போயிருது. ஊர்த்திருவிழா. காப்புக் கட்டியாச்சுன்னா யாரும் ஊருக்குள்ளெ வர முடியாது. வந்தவங்க விழா முடியும்வரை வெளியெ போவும் முடியாது. திருவிழா முடிஞ்சவுடன் திருமணத்தகுதிப் போட்டி. யாரு அந்த அதிருஷ்டக்காரன்னு தெரிஞ்சுரும்.

அப்ப மத்தவங்க?


கொடியேத்தரதுக்குள்ளே ஊருக்கு வந்துறலாமுன்னு 23ம் டவுனுக்குப் போகுதுங்க. ஃபுல் அடிச்சுட்டுத் திரும்பி வரும்போது ட்ராக்ட்டர் மரத்துலே மோதி,
எல்லாரும் மப்புலே மயங்கிக்கிடக்குறாங்க.


அச்சச்சோ.............


அன்னிக்குப் பார்த்து ஊருக்குள்ளெ வந்த நகைக்கடைக்காரர், நாயகி வீடு
பூட்டிக்கிடக்கேன்னு காத்திருந்ததுலெ நேரம் போயிருச்சு. கடைசியில் நகையைக் கொடுத்துட்டுத் திரும்ப வந்து பைக்கைப் பார்த்தா..............ரெண்டு டயரையும் யாரோ(??) பஞ்சர் பண்ணி வச்சுருக்காங்க..


அச்சச்சோ.............


கோயிலில் கொடி ஏத்தியாச்சு. 23ம் ஊருக்கு வெளியில். நாயகன் ஊருக்குள்ளில்.
ஊர்நடைமுறை, பெண் குழந்தைகள் பிறக்காத காரணம் எல்லாம் மரத்தடியில் கோவப் பார்வையுடன் பீடி புகைச்சுக்கிட்டே இருக்கும் அந்த மரத்தடிவாசி நாயகனுக்குச் சொல்றார்.


ரொம்ப வருஷங்களுக்கு முன்னே வெளியூர்ப் பொண்ணைக் கட்டிக்கிட்டு கைக்குழந்தையோடு ஊருக்குவந்த ஒருத்தரைக் கொல்ல 'நாட்டாமை' கொடுத்த தீர்ப்பு. சாகும்போது அந்தப் பொண் விட்ட சாபம்.


"இன்னும் பத்து வருசத்துலெ இங்கே பொறக்கும் ஒரு பொண் குழந்தையாலெதான் நாட்டாமைக்குச் சாவு"


நவீன கம்சனா மாறிய நாட்டாமை. பொண்குழந்தைகளையெல்லாம் உயிரோடு பானையில் வச்சுப் புதைக்கிறார்.


அப்படி தன் குழந்தையை இழந்தவர்தான் அந்த மரத்தடிவாசி.


திருவிழா முடிஞ்சவுடனே 23ம் ஊருக்குள்ளெ ஒடிவருது.
ஊர்க்கூட்டத்தில், 'போட்டியில் வெற்றிபெறும் நபர் உன்னைக் கட்டிக்குவார்'னு நாட்டாமை பொண்ணுகிட்டே சொல்றார். பொண்ணு எதிர்த்து வாக்குவாதம் செய்யுது.


நியாயத்தை உணர்ந்த 23ம் நாயகனோட பைக்லே பொண்ணை ஏத்தி அனுப்பிடறாங்க.


அச்சச்சோ.............


எழுதறப்பவே கண்ணைக் கட்டிக்கிட்டு வருது..............ஸ் ப்ப்ப்பா


ஆரம்பத்தில் போட்ட டைட்டில் கார்டுகள்புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு


உலகைக் காண ஆசையாய் பிறந்து,
பெண்களாய் பிறந்த காரணத்திற்காக
கொல்லப்பட்டு இறந்த அனைத்துப் பெண் சிசுக்களுக்கும்
இந்தத் திரைப்படத்தைச் சமர்ப்பிக்கிறோம்இந்தியாவில் இந்த 20 வருடங்களில் கொல்லப்பட்டப் பெண் சிசுக்கள் ஒரு கோடி.


நல்ல கருத்துள்ள படம். ஆனால் கொஞ்சம் 'சாபம்'ன்னு குழப்பிட்டாங்க.


நாயகன், நாயகி & அந்த 24 பேர் எல்லாரும் புதுமுகங்கள்தானாம்.


இசை: நூருல்லாகான்

இயக்கம்: பால்ரே ( V.S.Balray)


தெரிஞ்ச முகங்கள் இரண்டு.
மரத்தடிவாசி = தலைவாசல் விஜய்
நாட்டாமை = சண்முக சுந்தரம்


எத்தனைபேருக்கு நான் பெற்ற இன்பம் கிடைச்சிருக்குமுன்னு தெரியாததால் வழக்கத்திற்கு மாறா முழுக்கதையையும் சொல்லி இருக்கேன்.


படத்தின் பெயர்: அச்சச்சோ

22 comments:

said...

அச்சச்சோ. இப்படி ஒரு கொடுமையா? இப்போ நல்லாத்தானே இருக்கீங்க டீச்சர்?

said...

உங்களுக்கே கண்ணை கட்டுது என்று எழுதியிருக்கிறவரை படிக்கவில்லை..
நிஜமாகவே கண்ணை கட்டுது. :-))

said...

அச்சச்ச்ச்ச்ச்ச்சாஆச்ச்ச்ச்சாஆஅச்ச்சாஅச்ச்சாஆச்சோஓஓஓஓஓஓஓஓஓ:))0

said...

மரத்தடி,பஞ்சாயத்து, 23, 24
ஊரு, கூட்டம், தாடி,பொண்ணுங்க

குழந்தைங்க....ஏம்பா வட்டப் பாறைன்னு ஏதாவது வந்ததா:)))))

said...

ஐய்யோ பாவம் துளசி.!!!!!!

said...

அடுத்தாப்புல அம்மாடி'' னு ஒரு படம் எடுக்கறாங்களாமே??????

said...

முத முதலா உங்க பதிவுதான் படிப்பேன்.
இன்னிக்கு இப்படி(நான்) உளறுகிற லெவலுக்கு இப்படி ஒரு படம் பார்த்துட்டீங்களே:)))))

said...

அச்சச்சோ.

said...

அச்சச்சோ........

Anonymous said...

அச்சச்சோ அவரைக்காய்

said...

அச்சச்சோ.. எங்களுக்கே தெரியாம இப்படியரு படமா..? DVD-லயா பார்த்தீங்க..? நல்லாயிருங்க..

இது மாதிரி நியூஸிலாந்துல மரத்தடி பஞ்சாயத்து பண்ண முடியுமா? அப்புறம் என்ன டீச்சர் அது முன்னேறிய, நாகரிகமான நாடு..?

எங்கூர்தான் டீச்சர் மனுஷனை மனுஷனா மதிக்குற நாடு. அதான் ஊருக்கு ஊரு கோர்ட் வைச்சு ஜட்ஜையும் நாங்களே தேர்ந்தெடுத்து கேஸ் நடத்துறோம்.. பார்த்துக்குங்க..

said...

வாங்க கொத்ஸ்.
இப்ப ரொம்ப(வே) நல்லா இருக்கேன்.

said...

வாங்க குமார்.


//நிஜமாகவே கண்ணை கட்டுது//

உண்மைதான். இன்னிக்கு அப்படி ஒரு பேய்த் தூக்கம் தூங்கி இருக்கேன். பதிவைப் போட்டுட்டுப் படுத்தவ இப்பத்தான் எந்திருச்சு வந்தேன்னா பாருங்க.

said...

வாங்க வல்லி.

படம் இப்படிப் பின்னூட்ட மழையாப் பொழியுதே.
அச்சச்சோ.........நான் எதிர்பார்க்கவே இல்லைப்பா":-)))

said...

வாங்க இளா, சிஜி & ச்சின்ன அம்மிணி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி:-)

said...

வாங்க உண்மைத்தமிழன்.

படத்தின் கருத்து நல்லதுதாங்க. பெண் சிசுக்களைக் கொன்னா, பின்னாலே வருங்காலத்தில் என்னென்ன கஷ்டம் வருமுன்னு சொல்ல ஆரம்பிச்சுக் கொஞ்சம் சொதப்பலாப் போயிருச்சு.
மக்கள் தொகையில் ஆண் & பெண் ஒரு பேலன்ஸ் வேணுமுல்லெ?
இங்கே மரத்தடிப் பஞ்சாயத்தெல்லாம் இல்லீங்க. இனி நான் ஆரம்பிச்சாத்தான் உண்டு. நம்மூட்டுலே நான் தான் நாட்டாமை. கட்டப்பஞ்சாயத்துதான்:-)
என்ன நாகரீகமோ? இப்பப் பாருங்க எங்கூருக்கு சிட்டிக் கவுன்ஸில் தேர்தல் சமயம். இங்கே இது நம்ம சட்டசபைத் தேர்தலுக்குச் சமம்.
ஒரு தொண்டர்கள் படை, நடுத்தெரு மீட்டிங், மூக்குத்தி, லட்டு எதுவும் இல்லீங்க(-:

ஓட்டுச்சாவடி கூட இல்லை. போஸ்டல் ஒட்டுத்தான். மூணு வாரத்துக்கு முந்தியே வீட்டுக்கு ஓட்டுச்சீட்டு வந்துருச்சு. அக்டோபர் 13க்கு அவுங்ககிட்டெ கிடைக்கறதா நாம் பார்த்துக்கணுமாம்.

ஸ்டாம்பு கூட வேணாம். அவுங்களே கட்டிருவாங்களாம். ப்ரீபெய்டு.
இப்படி இருந்தா எப்படி? கொடியோ கோஷமோ இல்லாம என்ன தேர்தலோ? சப்ன்னு கிடக்கு:-)))

said...

எதுக்கு இந்த வேண்டாத வேலை. நானே தெரியாத்தனமா அதை பார்த்துட்டு கண்ணு, காலு,வயிறுன்னு எல்லாமமே கட்டி வீங்கி...அந்தக் கொடுமை மாறாம இருக்கேன். நீங்களுமா?
ஒரு வார்த்தை சொல்லிருக்கக் கூடாதா?
அச்சச்சோ.. அச்சச்சோ...

said...

வாங்க ஆடுமாடு.

நல்லவேளை எனக்குத் துணையா வந்தீங்க. எதோ எனக்கு மட்டுமேன்னு எடுத்து அனுப்பிட்டாங்களோன்னு பயமா இருந்துச்சு.

நல்ல 'கரு'வை இப்படிக் கலைச்சுட்டாங்க(-:

said...

நாட்டாமை சண்முகசுந்தரம்: இந்த படத்திலயும் நாந்தான் நாட்டாமைன்னு ஏ வாயால எப்படிக்கா நான் சொல்லுவேன்!

என்னைக்கு இந்த வள்ளியூரானுக்கு வேற கேரக்டர் குடுக்கணும்னு நெனைக்கிறானுங்களோ அன்னைக்கு தான் தமிழ் திரையுலகமே தப்பிக்கும்! அதுவரைக்கும் இந்த வள்ளியூரானுக்கு ஆலமரத்தடி தான் கதி!!!

said...

அச்சச்சோ..அது ஆலமரமா? சரியாக் கவனிக்காம விட்டுட்டேனே கவுதமன்(-:

ச்சும்மா:-)))))

said...

\\துளசி கோபால் said...
வாங்க ஆடுமாடு.

நல்லவேளை எனக்குத் துணையா வந்தீங்க. எதோ எனக்கு மட்டுமேன்னு எடுத்து அனுப்பிட்டாங்களோன்னு பயமா இருந்துச்சு.

நல்ல 'கரு'வை இப்படிக் கலைச்சுட்டாங்க(-://

:)) அய்யோ சிரிச்சிசிரிச்சி கண்ணு ல தண்ணி வந்ந்துடுச்ச்சு துளசி இந்த கமெண்ட் படிச்சு...

said...

வாங்க முத்துலெட்சுமி.

வாய் விட்டுச் சிரிச்சா ஆரோக்கியத்துக்கு நல்லது:-)


யார் அந்த ஆரோக்கியமுன்னு கேக்கமாட்டிங்கதானே?