Monday, October 15, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 34


27/12
மனம் சோர்வா இருக்கு. நெட் முழுசும் 'சுநாமி' பத்திப் படிச்சிட்டுக் கலங்கிப் போயிட்டேன். இன்னைக்குப் போணுமா வேண்டாமான்னு நினைச்சப்ப, நம்ம எலிநோர் ஃபோன்லே கூப்பிட்டு இந்தியாவுலே நேர்ந்த பேரழிவைப் பத்திச்
சொல்லி வருத்தப்பட்டாங்க. பேச்சு அப்படியே வீட்டைப் பத்தி வந்தப்ப என்ன நடக்குதுன்னு கேட்டாங்க. நான் விவரம் சொன்னேன். அப்ப
அவுங்க ஒருநாளைக்கு என்னை அங்கே கூட்டிட்டுப் போறயான்னு கேட்டங்களா, நான் சொன்னேன், ஒரு நாள் என்ன ஒரு நாள்? இன்னைக்கே
கூடப் போலாம்ன்னு. அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எப்பன்னு கேட்டாங்க. இப்பன்னு சொல்லி, அவுங்க வீட்டுக்குப் போனேன். வெளியே தயாரா நின்னுகிட்டு இருந்தாங்க. எனக்கும் பேச்சுத்துணை வேண்டிய நேரம் அது.

அவுங்களுக்கு நம்ம வீட்டைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாயிருச்சு! நாங்க அங்கே பேசிக்கிட்டே ரொம்ப நேரம் இருந்தோம். அப்ப யாரோ
கதவைத் தட்டுற சத்தம்! யாருன்னு பார்த்தா நம்ம பெயிண்டர் டோனி! அவர் இந்த வெள்ளிக்கிழமை காலையிலே வந்து முன்கதவுகளை
பாலீஷ் பண்ணுவாராம். நேரம் 9 மணின்னு முடிவாச்சு! அப்படியே உள்ளே இருக்கற கதவுங்களுக்கு இன்னும் கொஞ்சம் பெயிண்ட் வேலை
செய்யணும்ன்னு காமிச்சேன். எல்லாம் பார்த்துக்கிட்டுப் போனாரு. நாங்க அப்புறம் இன்னும் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு ஒரு அஞ்சேகாலுக்கு எலிநோரை அவுங்க வீட்டுலே விட்டுட்டு வந்துட்டேன். 6 மணிக்கு செந்திலும், ரேவதியும் வராங்களாம். ச்சும்மா ஒரு விஸிட்தான்!

சாயந்திரம் இவர் ஃபோன் செஞ்சார். மத்தியானம் கூப்பிட்டாராம். நான் செல்ஃபோன் கொண்டு போகலை. இன்னைக்கு யாருமே வேலைக்கு
வரமாட்டாங்க. அப்ப என்னாத்துக்கு செல்ன்னு வச்சுட்டுப் போயிட்டேன். இவுங்க அப்பாவுக்குக் கண் ஆப்பரேஷன் செய்யணுமாம். அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டாராம். டிவியில் சுநாமிச் செய்திகள் காமிச்சுக்கிட்டே இருக்காங்களாம்.

ப்ச்......பாவம் மக்கள்.

28/12
இப்பத்தான் சாயந்திரம் ஆறேகாலுக்குப் போய் ஒரு அஞ்சு நிமிஷம் விளக்கு போட்டுட்டு, 'சாமிங்களை' அடுக்களை பெரிய 'பேண்ட்ரி'யிலே
வச்சிட்டு வந்தேன்.

கேரியோட ஃபோன் வந்தது. நாளைக்குக் காலையிலே 8 மணிக்கு வராராம். சீக்கிரம் எந்திரிச்சு வேலையை முடிச்சுக்கிட்டுப் போகணும் கதவைத் திறக்க!

29/12
காலையிலே எட்டு மணிக்கு முன்பே அங்கே ஆஜர். போறப்ப ஒரு சிமெண்ட் பூசற கரண்டியைக் கொண்டு போனேன். அதுதான் 'ஸ்க்ராப்பர்'
அங்கங்கேத் தரையில் கட்டிகட்டியா இருக்கற சிமெண்ட்டைச் சுரண்டி எடுக்கணும். காலுலெ தட்டுப்படுது.

கேரி வந்து வேலையை ஆரம்பிச்சாச்சு! அப்புறம் பல்ப் வாங்கறேன்னு போனார். அவர் கொண்டுவந்த பல்புங்க 'லாங் லைஃப்' லைட்தான் ஆனா தப்பான டிஸைன். 'ஸ்பைரல்' மாதிரி இருக்கறது வேணும். இது நீளமா இருக்கு(-:
அப்ப வாசக்கதவை யாரோ தட்டறாங்க. யாருன்னு பார்த்தா ஃபார்மர்ஸ் ஆளுங்க ஃப்ரிட்ஜ் கொண்டுவந்து இருக்காங்க! இப்பத்தான் நினைவு
வருது நாம் டிசம்பர் 29க்கு டெலிவரி சொன்னது! நல்லவேளை. நான் அங்கே இருந்தேன். உள்ளே கொண்டுவந்து வைக்கச் சொன்னேன்.
அதுக்குண்டான இடத்துலே சரியா உக்காந்துருச்சு!


அங்கேயிருந்து திரும்பறப்ப 'மைட்டர்10'க்குப் போய் பல்புங்க பார்த்தேன். நமக்கு வேண்டியது இருக்கு. ஆனா வேற ப்ராண்ட்!
'லக்ஸ்டெக்' விலை $5. 89, 6000 மணிநேரம் எரியுமாம்.
அப்புறம் கேரியைப் பார்த்தப்பச் சொன்னேன். அவரு கொண்டுவந்த 'ஃபிலிப்ஸ்' பல்ப் 10,000 மணி நேரம்ன்னு சொன்னார். அந்த பேக்லே
பார்த்தா 3 வருஷம் தினமும் 5.5மணின்னு போட்டிருக்கு. அதுவும் 6022 மணிநேரம்தான். தானிக்கு தீனி சரி!

கராஜ் டோர் ஓப்பனருக்கு பவர் கொடுத்தாச்சு. ரிமோட் கொண்டுபோய் செக் செஞ்சேன். வேலை செய்யுது. ஆனா ஒரே சத்தம். சிஆர்சி போடணும்!
மாஸ்டர் பெட்ரூம் ஹீட் பம்ப்பும் கனெக்ட் செஞ்சாச்சாம். அதையும் செக் செஞ்சு கொஞ்சநேரம் ஓடவிட்டேன். நாளைக்கும் காலேல எட்டு
மணிக்கு வரேன்னார். அடுக்களை பேன்ட்ரீ கப்போர்டு லைட்டு இப்ப வேலை செய்யுது! இன்னும் வார்டு ரோப் லைட்டுங்க போடணுமாம்.
அதோட ஒயர்ங்க உள்ளே மறைஞ்சிடுச்சாம். எல்லாம் இந்த ஜிப் ஆளுங்க பண்ண வேலை!

அப்புறம் வேலையை முடிச்சுட்டு ஃபோர்ஸ் போடச் சொன்னேன்.
ராத்திரி 7.30க்கு மகள் வந்து சாப்பிட்டபிறகு, நாங்க ரெண்டுபேரும் போனோம். லைட்டுங்களையெல்லாம் போட்டுப் பார்த்து அவளுக்குப்
பிடிச்சிருக்குன்னு சொன்னாள்!

30/12
காலையிலே எட்டுக்குப் போயிட்டேன். போறப்ப ஒரு ப்ரூம் ஸ்டிக் கொண்டுபோனேன். கேரி இன்னைக்கு 12 வரைதான் வேலை செய்றாராம்.
நான் சொன்ன பல்ப் 'ரெட்பாத்'லெ இல்லேயாம்! ,நாளான்னைக்கு கோபால் வந்துருவார். ரெண்டு நாளுதான்! அப்புறம் பார்த்து வாங்கலாம்ன்னு!
இன்னைக்குப் போயிட்டா அடுத்தவாரம் ஒருநாள் அநேகமா வியாழன் வந்து இன்னும் சிலதை முடிப்பாராம்! போறப்ப ஃபோர்ஸ் போடச்
சொன்னேன். அப்புறம் போய்ப் பார்த்துட்டு, கொஞ்சம் சுத்தம் செஞ்சிட்டு வரணும்!

ரெண்டேமுக்காலுக்குப் போனேன். தரையெல்லாம் ஒரே புழுதி! முன்பக்க ரூமும், லவுஞ்சும், லிவிங் ரூமும் நல்லா பெருக்கிக்கிட்டு
வந்தேன். நாளைக்குக் காலையிலே 9 மணிக்கு பெயிண்ட் ஆளுங்க வராங்க.
வெளியே வந்தப்ப பக்கத்து வீட்டு பொண்ணோட அம்மா (பேரு டயானாவாம்) கொஞ்சநேரம் பேசுனாங்க. நம்ம வீட்டை உள்ளேபோய்ப்
பார்த்தாங்களாம்! கேரிகிட்டே கேட்டாங்களாம்! ரொம்பப் பிடிச்சுடுச்சாம். என்ன கலர் கார்ப்பெட்ன்னுவேற பார்க்கணுமாம்! அப்புறம் எந்த மாதிரி ஃபர்னிஷிங்ன்னு வேற பார்க்கணுமாம். ஏன்னு கேட்டதுக்கு, நம்ம வேற கல்சர் ஆளுங்களாம். நம்ம கலர்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கணுமாம். நல்ல கதை? ஊஞ்சல் போட்டதும் அதுலெ உக்கார்ந்து ஆடிப் பார்க்கணுமாம்!!!!!


31/12
இந்த வருஷத்தோட கடைசி நாளு! காலையிலே அங்கே 8.50க்குப் போயிட்டேன். போறப்பயே ஊதுவத்தியும், ஒரு டவலும் கொண்டு போனேன்.
சாமிக்கு ஒரு ஊதுபத்திக் கொளுத்திக் கும்பிட்டுட்டு, அடுக்களையெல்லாம் டவலாலெ சுத்தமாத் துடைச்சேன்.

டோனி & க்ரூப் வந்தாங்க. எங்கெங்கே பெயிண்ட் பண்ணனும்ன்னு சொன்னேன். அடுக்களையிலும் அங்கங்கே கொஞ்சம் பெயிண்ட்
தீத்திக் கிடந்துச்சுல்லே, அதையும் சுத்தம் செய்யச் சொன்னேன்.
'மரீ' ஷவர் க்யூபிகிள் வச்சதுக்கு மேலே பெயிண்ட் செஞ்சு அதை நீட்டாச் செஞ்சுட்டார். 'மரீ. இங்கிலாந்துலெ பல வருசங்கள் இருந்துருக்கார். அங்கெ அவருக்கு நிறைய இந்தியர்கள் நண்பர்களாம். அங்கெ உள்ள 'கரி ஹவுஸ்' களுக்குப் போய்ப் பழக்கமாம். நம்முடைய கலைகள் , சாப்பாடுன்னு எப்பவுமே ஆர்வமாப் பேசுவார். முன்கதவுகளுக்கு ஆயில் போட்டுப் பாலீஷ் செய்யப் போறாங்க! நான் மத்த ரெண்டு பெட் ரூம் அந்த பாத்ரூம் எல்லாம் பெருக்கிச் சுத்தம் செஞ்சேன். மணி பத்துக்கு மேலே ஆயிருச்சு. எப்ப முடிப்பாங்கன்னு கேட்டதுக்கு 12 ஆயிரும்ன்னு சொன்னாங்க. நான் அப்ப வரேன்னுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

லைட்டிங் டைரெக்ட்லே இருந்து ஃபோன் வந்துச்சு. நம்ம வேனிட்டி லைட்டுலே உடைஞ்சுபோனக் கண்ணாடிக்கு பதில் கண்ணாடி வந்துருச்சாம்!
ஒரு பல்பும் கெட்டுப் போச்சுன்னு சொன்னேன். வாங்க, மாத்திறலாம்ன்னு சொன்னாரு அந்தப் பையன் ப்ரையன். எல்லாம் நல்ல பசங்க!

12 அடிக்க 10 நிமிஷம் இருக்கப்ப 'அங்கெ' போனேன். எல்லாரும் வேலையை முடிச்சுட்டு ரெடியா இருந்தாங்க. ஃபேஷியாவிலே அங்கங்கே
பெயிண்ட் தீற்றல் இருந்ததுன்னு அவுங்க கிட்டே சொல்லியிருந்தேனில்லையா? அதையெல்லாம் சுத்தப் படுத்தி வச்சிருந்தாங்க! அது பெயிண்ட் இல்லையாம். ப்ளாஸ்டர் தெறிச்சிருக்காம்!

முன் கதவுக்கு ஆயில் ஒரு பாட்டிலிலே நமக்காக வச்சிருந்தாங்க. அது ரெண்டு வருஷத்துக்கு வருமாம்! கொஞ்சம் 'ராக், ஸ்டீல்வுல்' வச்சிருந்தாங்க.
எப்படிக் கதவுக்கு அப்ளை செய்யணும்ன்னு சொன்னாங்க. நல்ல ஆளுங்கதான்!

அவுங்க போனப்புறம் நம்ம பெட்ருமைச் சுத்தம் செஞ்சுகிட்டு இருந்தேன். கோபால் கூப்பிட்டாரு. சிங்கப்பூர் வந்து சேர்ந்துட்டாராம். இன்னிக்கு
சாயந்திரம் புறப்பட்டு நாளைக்கு இங்கே வந்துருவாராம். அப்பாடான்னு இருந்துச்சு! கணேசனை ஃபோன்லெ கூப்பிட்டு 'ஹாப்பி நியூ இயர்'
சொல்லச் சொன்னேன். என்ன புதுவருஷம் வேண்டியிருக்கு? அங்கங்கெ இந்த ட்சுநாமியாலெ ஒரு லட்சம்பேரு செத்துப் போயிருக்காங்க.
ஐய்யோன்னு இருக்கு.

அந்தப் பக்கமெல்லாம் சுத்தம் செஞ்சுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
சாயந்திரம் ஒரு டீ போட்டுக் குடிச்சுக்கிட்டு இருக்கப்ப ஃபோன் வருது. இது ஒரு வழக்கமானதுதான். அது எந்த வேளையானாலும் சரி,
நான் டீ கோப்பையைக் கையிலே எடுத்தவுடனே யாராவது வருவாங்க! ஆளு நேர்லே வரலேன்னாலும் ஃபோன் மூலமாவாவது
வருவாங்க! மணிக்கணக்கு எல்லாம் இல்லை. எனி ஒன், எனி டைம்.

யாருன்னு பார்த்தா நம்ம கிங். 5.20க்கு 29க்கு வரணுமாம். ஏதோ ஒரு வேலை இருக்காம். போனென். அடுப்புக்குப் பின்னாலே வர்ற
கண்ணாடிக்கு 'ஸ்டீல் க்ரே ஸ்பார்க்கிள் பேப்பர் ஒட்டணுமாம். அப்படியே டைல்ஸ் போட்டு முடிஞ்ச இடத்துலே சீலண்ட் ஒட்டணுமாம்.
அப்ப அங்கே கிங்கோட மனைவி கேத்தரீன் அந்த ஸ்பெஷல் பேப்பரை எடுத்துக்கிட்டு வந்தாங்க. அதுக்கு முன்னாலே அந்தக் கண்ணாடியை வெளியே எடுத்துத் தண்ணீ ஸ்ப்ரே செஞ்சு வச்சிருந்தாரு கிங். இப்ப அந்தப் பேப்பரைப் பிரிச்சு அளந்து தண்ணீரை ஸ்ப்ரே செஞ்சுகிட்டே உரிச்சுக் கண்ணாடிலே ஒட்டியாச்சு. அப்புறம் 'வொர்ம்' உண்டாகாம ஒரு ஸ்க்ரேப்பர்லே தேய்ச்சு வச்சிருக்கு. ரெண்டு நாளு அப்படியே இருக்கணுமாம். ஞாயித்துக்கிழமை மறுபடி அதை எடுத்து அடுப்புக்குப் பின்னலே பொருத்தணுமாம்.

சரின்னு சொன்னேன். அவுங்க போனப்புறம் அலாரம் போட்டுட்டுக் கதவை மூடிட்டு வந்தென். ச்சும்மா ஒரு 45 நிமிஷ வேலைதான். நம்ம 'ஜார்ரா' ஊஞ்சல் பலகைக்கு கால் அடிக்கச் சொன்னேன். உயரம் அளக்கணும்!
நாளைக்கு கோபால் வந்துருவார். கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!

தொடரும்............
நம்ம குமாருக்காகத் தேடி எடுத்தவை இந்தப் படங்கள் :-)
--------------------------------------------

16 comments:

said...

me the first?

Anonymous said...

//நாளைக்கு கோபால் வந்துருவார். கொஞ்சம் நிம்மதியா இருக்கும்//

"அப்ப கோபால் சாருக்கு நிம்மதி?" அப்படின்னு நான் இல்ல வேற யாராவது சொல்வாங்கன்னு சொல்ல வந்தேன்:):) ஸ்மைலி

said...

படம் போட்டதற்கு நன்றி.
W2K கணினிக்கு மாறி தமிழ் தெரியவைக்க இவ்வளவு நேரம் ஆனது.வேலை ஈசி தான் ஆனால் வட்டு இல்லை என்பதால் தலையை சுற்றி தொட வேண்டியதாகிவிட்டது.
ஆமாம் இந்த ரேவதி/கணேசன்/செந்தில் இவர்கள் எல்லாம் யார்? எப்பவாது வந்து போகும் துணை நடிகர்களா? :-))
சி ஆர் சி போடனும்... அப்படி என்றால் என்ன கிரீஷா?
இப்பதான் சமையல் அறை ஓரளவு முழுவதுமாக பார்க்கமுடிந்தது.
கலர் பாக்கிற வயது போனாலும் இந்த சுவர் கலர் நன்றாக பொருந்தி போகிறது.

said...

விவரமாக நீங்க எழுதும் விதரனை இக்கட்டுரைக்கு ஒரு தனிச் சிறப்பை அளிக்கிறது!

சுத்தமா இது எனக்கு அனுபவமில்லாத ஒன்று என்பதால் படித்து மட்டும், ரசித்து வருகிறேன்!

said...

அது என்ன அடுப்புக்கு பின்னாடி கண்ணாடி? கொஞ்சம் விபரம் ப்ளீஸ்.

said...

வாங்க சிஜி.

தூங்கறதே இல்லையான்னு கோபால் கேக்கறார்:-)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி

அதுக்கென்னங்க நீங்களே கேக்கலாம். அதுதான் ரெண்டுவாரம் நிம்மதியா இருந்தாரே....அது இன்னும் ரெண்டு மாசத்துக்குத் தாங்கும்:-)

said...

வாங்க குமார்.


துணை நடிகர்கள் எல்லாம் இங்கெ இருக்கும் நம்ம தமிழ் ஆட்கள்தான். ஃப்ரெண்ட்லி விஸிட் செய்யணுமா இல்லையா? அதுவும் இப்பக் கோடைகாலம்.

இனிமேலும் குளிர்ன்னு சாக்கு சொல்ல முடியாதுல்லையா? நாங்கள் எல்லாம் குளிர் காலத்துலே anti-social ஆகிருவோமுன்னு சொல்லி இருக்கேனே;-)))

சிஆர்சி ஒரு வகை ரஸ்ட் ப்ரிவென்ஷன் & லுப்ரிகேடர். இது ஸ்ப்ரேயாகக் கிடைக்குது.

இதுக்கு 100 உபயோகம் இருக்கு:-)))) ஆன்னா ஊன்னா எடு அந்த சிஆர்சியை:-)


Penetrates - CRC 5.56 breaks away rust and corrosion, freeing components bonded by dirt and scale, making things work again.
Lubricates - CRC 5.56 lubricates where it penetrates, restoring smooth action and silencing annoying squeaks and squeals. Parts move freely again.
Displaces moisture - CRC 5.56 drives moisture out of all auto electrical and ignition systems making it possible to start wet engines fast.
Prevents corrosion - CRC 5.56 deposits a molecular film on metals to protect against corrosion induced by humidity and other corrosive atmospheres.

வயசு இருக்கட்டும்,பரவாயில்லை. கலர் பார்க்க ஏன் பயப்படணும்?:-))))

said...

வாங்க VSK.
அனுபவம் இல்லைன்னா என்னங்க. படிச்சுப் பார்க்கறதும் ஒருவகை அனுபவம்தானே? 'ஏட்டுக் கல்வி':-)))))

said...

வாங்க கொத்ஸ்.

குழம்பு கொதிச்சுச் சுவத்துலெ தெறிச்சா...... அசிங்கமா மஞ்சள் பிடிச்சுக்குமில்லையா? அதுக்குத்தான் இந்தக் கண்ணாடி.
குழம்பு கார்டு:-))))

சில வீடுகளில் டைல்ஸ் பதிக்கிறாங்க. கண்ணாடின்னா ஒரே பீஸ். சுத்தம் செய்யறது சுலபம். நமக்கு வேணுங்கற கலர் போட்டுக்கலாம்.

said...

துளசி, நேற்று பொட்டியே திறக்கலைப்பா.
இந்தக் கண்ணாடித் தடுப்பு ஒரு டஜன் இங்க அனுப்புங்க. அருமையா இருக்கு.

said...

டீச்சர்...
லீடர் தூங்குகிறார்!! :_)))
அவர் கேட்டதைப்பற்றி ஏற்கனவே சொன்ன மாதிரி ஞாபகம்.

said...

வாங்க வல்லி.
கண்ணாடி மட்டும் போதுமா இல்லை, நம்ம 'கிங்'கையும் அனுப்பவா?:-)

said...

வாங்க குமார்.

சிலப்ப இப்படி வகுப்புலே கண்ணயர்ந்துடறது சகஜமப்பா. அதுலெயும் லீடர் பல இடங்களுக்கும் ஓடியாடிப் பாயவேண்டி இருக்குல்லையா?

தூங்கற பிள்ளையை எழுப்புனா பாவமாம்:-))))

said...

தங்களுடைய 36 பகுதிகளையும் அதன் பின்னூட்டங்களையும் உடனே படிக்க வேண்டும் என ஆவல் உண்டாகிறது.

said...

வாங்க சீனா.
புது வாசகர் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நேரம் கிடைக்கும்போது படிச்சு ரெண்டொரு வரி எழுதுங்க