Thursday, October 18, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 36

5/1
புதுவருசத்து லீவு முடிஞ்சு எல்லாரும் வேலைக்கு வர ஆரம்பிச்சாச்சு.
சில இடங்களில்தான் ரெண்டு மூணு வாரம்னு வருசாந்திர லீவு வுடுவாங்க.
மத்தியானம் டைல்ஸ் டெலிவரி எடுக்க இவர் போனார். அது கனமா இருக்குமே! அதைத் தூக்கிட்டு இடுப்புப் புடிச்சுக்கிட்டா அதுவேற வம்பு!
அதனாலெ யாரையாவது உதவிக்குக் கொண்டுபோங்கன்னு சொன்னேன். நான் தான் இடுப்பு ஒடிஞ்சு கிடக்குறேனே! மகளோட நண்பர் வந்தாராம். நேத்தும் ஆஸ்பத்திரிக்கு வந்து ரொம்ப நேரம் இருந்துட்டுப் போனாராம்.
ட்ரைலர் கொண்டுபோய் அப்படியே பெல்லட்டுலே கொண்டுவந்ததைப் பிரிச்சு அடுக்கிட்டாங்களாம்! பாவம் அந்தப் பிள்ளை. நல்லா இருக்கட்டும்! ராத்திரிக்கு அவுங்க ரெண்டு பேருக்கும் 'தண்டூரி பேலஸ்''லே சாப்பாடு வாங்கிக் கொடுத்தோம். ச்சும்மா ஒரு நன்றிக்குத்தான்!

சாயந்திரம் மோஷீன் ( டைல்ஸ் போடறவர்) வந்து பார்த்துட்டுத் தண்ணீர் வெளியே போறதுக்கு வச்ச பைப் சரியில்லேன்னு ஒரு பாட்டம்
அழுதுட்டுப் போனாராம். ஆளாளுக்கு ஒண்ணு சொல்லிக்கிட்டெ இருக்காங்க. அந்த ஆளு முதல்லேயே பில்டர்கிட்ட எப்படி இருக்கணும்ன்னு
சொல்லியிருக்கலாம். அட்லீஸ்ட் நம்ம கிட்ட சொல்லியிருக்கலாம்தானே. இப்ப சொல்றார் பில்டருக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும்ன்னு!கிங் வந்து வாஷ்பேஸின் டிஸைன் காமிச்சார். நல்லா இருக்கு. சரின்னு சொல்லிட்டேன்! அதுக்கு பைப் வாங்கணும்!


6/1
இன்னைக்கு ரெண்டு பாத்ரூமுக்கும் அண்டர்டைல் ஹீட்டிங் போட ஆள் வந்துச்சு. இவர் 9 மணிக்குப் போய் கதவைத் திறந்து வச்சார்.
ஒரு மணி நேரத்துலே போட்டாங்களாம். அப்படியே அடுக்களையிலே ஒயர் நல்லா இருக்கா, டேமேஜ் ஆச்சான்னு செக் செஞ்சாங்களாம்.
எல்லாம் நல்லாத்தான் இருக்காம்!
மத்தியானம் 'ஒடஞ்ச' இடுப்போட மில்லர் கடைக்கு திரைச்சீலை பார்க்கப் போனேன். அங்கிருந்து 'ஜான் டைலர்' கடைக்குப் போய்
அங்கே வைனல், கார்பெட் எல்லாம் பார்த்துட்டு செலக்ட் செஞ்சுட்டு வந்தோம். இங்கே கார்பெட் 180$ ஒரு மீட்டர். நம்மாலெ கட்டுபடியாகாது! இதே டிசைன் வேற இடத்துலே பார்க்கணும்! எதானாலும் நாளைக்கு பகல் 2 மணிக்கு அந்தப் பொண்ணு கரேன் வராங்க, ஜன்னலுங்க அளவெடுக்க!


இடுப்புவலி இன்னைக்கு ரொம்ப ஜாஸ்தி. நம்பர்லே சொல்லணும்ன்னா 9 ! மகள் வாங்கிவந்த ஹாட்வாட்டர் பாட்டில் ( பாட்டில் என்ன பாட்டில்
எல்லாம் ரப்பர் பேக்தான்) ரொம்ப உபயோகமா இருக்கு! அதுலே சூடுதண்ணீ ரொப்பி வச்சிக்கிட்டு இருக்கேன். முதுகுக்கு இதமா இருக்கு!7/1
காலையிலே எட்டு மணிக்கு மோஷீன் வந்துட்டாரு. கூடவே ஒரு அசிஸ்டெண்ட். வேலையை ஆரம்பிச்சாச்சாம். இவர் வந்து சொன்னாரு.
அப்படியே கொஞ்சம் ஃபோட்டொ எடுத்துட்டு வந்தாரு.
நான் ஒரு மணிக்கு அங்கெ போனேன். பவுடர் ரூம், பாத்ரூம் போட்டுட்டாங்க.


இப்ப ஆன்ஸ்யூட் பாத்ரூம். நம்ம பில்டர் சரியாவே ஃப்ரேம்
அடிக்கலே.எல்லாம் ஒண்ணும் பாதியுமா! 'மால்கம்'(ப்ளம்பர்) வந்து பார்த்துட்டு, வேஸ்ட் வச்சது சரியில்லைன்னுட்டுப் போனார். அந்த இடத்தை விட்டுட்டு மத்த இடத்துலே இப்ப வேலையை முடிக்கணும்ன்னு முடிவாச்சு!
ஒண்ணு பார்த்துட்டோம். எல்லோரும் அடுத்தவங்களைக் குறை சொல்லிக்கிட்டே இருக்காங்க! யாரோட வேலை எதுன்றது இன்னுமே புரியலை!


அடுத்து ஒரு வீடு கட்டுனா, முதல்லே பில்டர், ப்ளம்பர், எலக்ட்ரீசியன், டைல்லர் வெளியே பூசறவங்க, பெயிண்டர் எல்லோரையும் கூப்பிட்டு
ஒரு மீட்டிங் வச்சு, எல்லோரும் எப்படி அடுத்தவங்களோட சேர்ந்து வேலை செய்யணும்ன்னு சொல்லி, யார் யாரு என்ன வேலைன்னு
க்ளியர் கட்டாப் பேசி முடிவு செய்யணும்! ( விடிஞ்சது போ, இந்த ஆசைவேற இருக்கா?)முதல்லே இந்த வீடு முடியட்டும்! இதுவரைக்கும் வேலை செஞ்சவுங்கள்லெ நல்லா நம்பகமான வேலைன்னா நம்ம கிங் மட்டும்தான்!
மத்தவுங்க எப்படியோ வேலையை முடிச்சிட்டுக் காசு வாங்கறதுலேயே இருக்காங்க!ரெண்டு மணிக்கு அந்த ஜான் டெய்லர் கடை கரேன் வந்து ஜன்னலுங்களை அளந்துகிட்டுப் போயாச்சு! நாளைக்கு 10 டு 1 கடை
இருக்காம். நாம போய்ப் பார்த்து கர்ட்டெய்ன் ராட் முடிவு செய்யணும்!8/1
ராத்திரி சரியான தூக்கம் இல்லே. முதுகு பயங்கர வலி! வலியாலெ எனக்குக் கோவம் வருது! இவர் உதவி செய்யறேன்னு சொல்லிக்கிட்டே
இருப்பார். ஆனா செஞ்சாலும் அது நமக்கு வேண்டப்பட்டதா இருக்காது. சொன்னா இவருக்கும் மூக்குக்கு மேலே கோவம்! ரெண்டுபேரும்
மாறி மாறிக் கத்திக்கிட்டே இருக்கோம்.காலையிலே 8க்குப்போய் கதவைத் திறந்தார். டைல்லர்ஸ் வந்திருக்காங்க.
10 மணிக்கு நாங்க போனோம். ரெண்டு இடம் முடிச்சாச்சு! க்ரெளட் போட்டுகிட்டு இருந்தாங்க! சுவர்லே டைல்ஸ் எப்படிவரும்ன்னு சொன்னாங்க.
தரை மட்டம் சுமாரா இருக்கறதாலெ நாம நினைச்சபடி இருக்காதாம்! எப்படியோ தொலையட்டும்ன்னு இருக்கு!


அப்புறம் ஜான் டெய்லர் கடை கரேனைப் பார்த்து என்ன மாதிரி ஃபினியல், எந்தக் கம்பின்னு சொல்லிட்டு வந்தோம். அவுங்க ஒரு க்வோட் அனுப்புவாங்க.அப்படியே 'ஹப்பர்ஸ்'லே கார்பெட் சாம்பிள் வாங்கிட்டு வந்தோம். அதுக்குப் பக்கத்துக் கடையிலே இருந்து காலமெ ஃபோன் வந்தது. நாம கேட்ட
சோஃபா வந்திருக்காம். அதையும் போய்ப் பார்த்துட்டு நாலு இன்ஸ்டால்மெண்ட்டா (வட்டி இல்லையாம்) காசு அடைக்கலாம்ன்னு அவுங்க சொன்னதாலெ ஆர்டர் கொடுத்துட்டு வந்தோம்.
அப்பவே மணி 1.30 ஆயிருச்சு. மோஷீன் வேலையை முடிச்சாச்சாம். போய் வீட்டைப் பூட்டிட்டு வந்தோம். சுவத்துலே கொஞ்சம் பதிச்சு வச்சிருக்காங்க!நாளைக்கு ஞாயிறாச்சே! நாளை மறுநாள் மறுபடி காலையிலே 8 க்கு வராங்களாம்!


9/1
ஒரு பத்துமணிக்கு போன் வந்தது. கூப்பிட்டது நம்ம கிங். 11 மணிக்கு லாண்டரி டைல்ஸ் பதிக்க வராறாம். கோபால்தான் 11 மணிக்கு
அங்கெ போனார். ச்சும்மா ஒரு 8 டைல்ஸ்தான். சீக்கிரம் முடிச்சாச்சு. மறுபடி சாயந்திரம் 6 மணிக்கு வந்து க்ரெளட்டிங் போடப் போறாராம். கிச்சன் & லாண்டரி ஏரியா கிங்கின் பொறுப்பு.
மத்தியானமா நாங்க ரெண்டுபேரும் போய் ஒரு பார்வை பார்த்துட்டு ஒரு 'பெருமாள்' படத்தை மாட்டிட்டு வந்தோம். அங்கிருந்து 'ப்ளேஸ்
மேக்கர்' போய் லாண்டரி டப்புக்கு ஒரு ஸின்க் பைப் வாங்கினோம். அப்படியே சில ஃபர்னிச்சர் கடைங்களுக்குப் போனோம். ஒரு
ஹால் டேபிள் வாங்கத்தான். ஒண்ணும் சரியா இல்லே. ஆனா ஒரு இடத்துலே சூப்பர்கிங் பெட் ஹெட் கிடைச்சது. $279. நேத்துப் பார்த்த
இடத்துலே 414$. இது அதைவிட மலிவாச்சே. உடனே ஆர்டர் கொடுத்துட்டோம்.


முந்திமாதிரி இல்லாமல் வாரம் ஏழுநாளும் கடைகள் திறந்துவைக்கறது எவ்வளோ வசதியா இருக்கு பாருங்க:-)

10/1
இன்னைக்கும் மோஷீனும் உதவியாளரும் வந்து டைல்ஸ் போட்டாங்க. நாங்க இந்த கார்ப்பெட் செலக்ஷனுக்காக அங்கெ இங்கேன்னு சுத்திக்
கிட்டு இருந்தோம். அப்ப மோஷீன் ஃபோன்லெ கூப்பிட்டுச் சொல்றார், சுவர் டைல்ஸ் பத்தாதாம்! தப்பாக் கணக்குப் போட்டுட்டாராம்!
இன்னும் ஒரு 12 டைல்ஸ் வேணுமாம்! சரின்னுட்டு அங்கே போய்ப் பார்த்துட்டு, மறுபடி டைல்ஸ் கடைக்குப் போய் ஆர்டர் கொடுத்தாச்சு!
அதுவும் ஆக்லேண்டில் இருந்து வரணுமே! அது வெள்ளிக்கிழமைதான் வருமாம்!ஜான் டெய்லர் கடை கரேன் ஃபோன் செஞ்சு 1050 டாலர் ஆகும், இந்த கர்ட்டெய்ன் ட்ராக் மட்டும் போடன்னு சொன்னாங்க. ஏதானாலும் நாளைக்கும் இன்னோரு க்வோட் கொடுக்க ஆளு வருதே. அதையும் பார்த்துக்கிட்டு முடிவு செய்யலாம்ன்னு இருக்கோம்.


தொடரும்.....................

-----------------------

12 comments:

said...

//இவர் உதவி செய்யறேன்னு சொல்லிக்கிட்டே
இருப்பார். ஆனா செஞ்சாலும் அது நமக்கு வேண்டப்பட்டதா இருக்காது//
இப்படித்தான் எல்லாம் பொம்பளைங்களும் சொல்லுவாங்க போல. இவுங்களுக்கு வேற வேலையே இல்லியா?

said...

அக்காவ்!!!!

ரொம்ப நாளைக்கப்புறம் இப்பத்தான் இங்க எட்டிப் பார்க்க முடிஞ்சது...

தேவுடா, இடுப்பு வலி சீக்கிரம் சரியா போகனுமுனே பெருமாள கும்பிட்டப்பதான் ஞாபகம் வந்தது, நாம நடந்து முடிஞ்சத படிச்சிகிட்டு இருக்கோமுன்னு.....

நல்ல படியா எல்லாம் முடியுமான்ற ஸஸ்பென்ஸை..... ஹ்ம்ம்....ஹ்ம்ம்ம் சொல்ல மாட்டேன்....

வீட்டை கட்டிப்பாருன்னு சும்மாவா சொன்னாங்க!!!!

said...

//இவர் உதவி செய்யறேன்னு சொல்லிக்கிட்டே
இருப்பார். ஆனா செஞ்சாலும் அது நமக்கு வேண்டப்பட்டதா இருக்காது. சொன்னா இவருக்கும் மூக்குக்கு மேலே கோவம்!//

அட! இதே வேலையாப் போச்சுப்பா. செஞ்சாலும் தப்பு, செய்யலைன்னா ஏன் செய்யலை. செஞ்சா - இதெல்லாம் யாரு செய்யச் சொன்னா / இப்படியா இதை எல்லாம் செய்வாங்க. அதே செய்யாமப் போனா, இது கூட செய்யணமுன்னு தெரியாதா? குடும்பத்து மேல அக்கறை இருந்தாத்தானே.....

இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை? உங்களுக்கு எல்லாம் செய்யறாரு பாருங்க. அவரைச் சொல்லணும்.

said...

கட்டுமானத்துறையில் இது சாபம்,ஆதாவது வெறும் குறை சொல்லிக்க்கொண்டு இருப்பது, அதுவும் அடுத்தவர் வேலையை.
இப்படி சொல்வதால் இவரின் அறிவை உங்களுக்கு பறை சாற்றுவார். பார்த்தால் இவர் வேலையை அடுத்தவர் குறை சொல்வார்.
கிங் மாதிரி வெகு சிலரே, இருப்பதில் எப்படி நன்றாக செய்ய முடியும் என்று யோசிப்பவர்கள்.
இதெல்லாம் தினசரி நிகழ்வுகள் எனக்கு ஆனால் உங்களுக்கு டென்ஷன் ஏறும்.
இருப்பதில் எப்படி உபயோகிப்பது/பிழைப்பது என்பது 1994 மலேசியா தொலைக்காட்சியில் வந்த "Best of Maccayver" தான் எனக்கு உந்து சக்தி.

said...

வாங்க இளா & கொத்ஸ்,

தன்னினத்துக்கு இப்படி ஒரு அவதூறான்னு கொதிச்சுப்போயிட்டீங்க போல?:-)))))

எல்லாம் வீட்டுவீட்டுக்கு வாசப்படி. எங்க மனசுலே நினைச்சதைக் கண்டுபிடிச்சு அதுக்கேத்தமாதிரி உதவுறதை எப்பத்தான் கத்துக்கப்போறீங்களோ? ஹூம்.......

said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணே.

நலமா?

அதான் 'கட்டி'ப்பார்த்துட்டொம்லே:-)))

பெருமாள்கிட்டே அப்பீல் பண்ணதுக்கும் நன்றி.

said...

வாங்க குமார்.
தினப்படி நிகழ்வுகள் நமக்குன்னு வரும்போது பல்ஸ் எகிறுது:-)))
கிங் பற்றி ஒரு பதிவெ போடலாம். அவ்வளோ விஷயம் இருக்கு.

மெக்கைவர் நாங்களும் முந்தி பார்த்திருக்கோம். அதுபோல நல்ல காட்சிகள் எல்லாம் இப்ப வர்றதில்லை. காலமும் ரொம்பத்தான் மாறிக்கிட்டு இருக்கு(-;

said...

எப்படியோ, கம்ப்ளீஷன் பக்கத்தில வந்தாச்சு. முதுகு வலி எப்பத்தான் சரியாச்சு??
துளசி இவங்க எல்லாரும் ஒரே மாதிரிதான்.
தனக்காவும் தெரியாது. சொன்னாலும் புரியாது. ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரித்தான் நடந்துப்பாங்க.

said...

36 பகுதிகள் - வீடு கட்டுவதைல் உள்ள சிரமங்கள் - வீட்டைக் கட்டிப் பார் எனத் தெரியாமலா சொன்னார்கள். கட்டிட்டீங்கள்ளே !! ஓகே ஓகே !!

ஆமாம் இந்தக் குடும்ப பெண்கள் எல்லோருமே (குறிப்பா வயசானவங்க) எப்போதான் கணவர் செஞ்சது சரின்னு ஒத்துக்கப் போறீங்க ? ( எங்க வீட்டு ஆச்சிக்கும் தான் இந்தக் கேள்வி)

said...

36 பகுதிகள் - இன்னும் ஒரு பகுதி கூட படிக்க வில்லை. நானும் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன், (இந்தியாவிலே தான்). சிரமங்கள் புரிகின்றன.

பொறுமையாக பகுதி பகுதியாகப் படித்து பின்னூட்டம் இடுகிறேன். ( லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்).

தங்கள் பதிவுக்கே நான் புதுசு

said...

வாங்க வல்லி.

//முதுகு வலி எப்பத்தான் சரியாச்சு??//

அது எங்கெ சரியாச்சு? இன்னும் மருந்து மாத்திரைகளால் தான் வண்டி ஓடுது(-:

said...

வாங்க சீனா,

//இந்தக் குடும்ப பெண்கள் எல்லோருமே (குறிப்பா வயசானவங்க) எப்போதான் கணவர் செஞ்சது சரின்னு ஒத்துக்கப் போறீங்க ? ( எங்க வீட்டு ஆச்சிக்கும் தான் இந்தக் கேள்வி)//

எப்பவுமே இது நடக்கப்போறது இல்லை.
ஆண்கள் செவ்வாய்க்கிரக வாசிகளாம், பெண்கள் சுக்கிரனில் இருந்து வந்தவங்களாம்.வெவ்வேறு வகை. இப்படித்தான் காலமுச்சூடும் இருக்கும்.

அதென்ன குறிப்பா வயசானவங்க? இளவயதுலெ கணவன் சொல்லைக் கண்ணை மூடிக்கிட்டு நம்பிருவோம். கொஞ்சம் வயது முதிர்ந்து, 'பல்வேறு' அனுபவம் கிடைச்சபிறகுதான்வெளியெ 'வாய்விட்டுச் சொல்ல' தைரியம் வரும்:-))))