Wednesday, October 10, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 32

இந்த ஊஞ்சல் பலகை நம்ம பெட் ரூம்லே வச்சிருக்கு. நேத்திலிருந்து அதைப் பார்க்கப்பார்க்க மனசுலெ ஒரு பயம் வந்துருச்சு. 'கிண்' ன்னு இருக்கு. பயங்கர கனம்! அந்த கனத்தை கூரை தாங்குமா? சிங்கப்பூர்லே இருந்து கொண்டுவந்த சங்கிலி தாங்குமான்னு ஒரே பயம். வயத்தைக் கலக்குது!
நான் கிங் கிட்டே கேட்டேன், அதே அளவிலெ பாதி கனத்துலே பலகை செய்ய முடியுமான்னு? சரி. செஞ்சுரலாம். அதுக்கு 150 -200
டாலர்தான்(!) ஆகும்ன்னு சொன்னார். கீழே சப்போர்ட் கட்டை அடிச்சு செஞ்சுருங்கன்னு சொல்லிட்டேன். ஏற்கனவே செஞ்சதை ஒரு காஃபி
டேபிளாக் கூட ஆக்கிரலாம்.நாளைக்கு 7.30க்குப் போகணும்!

22/12
காலையிலே 7.25க்குப் போயிட்டேன். கதவைத் திறந்தாச்சு. கேரியும் வந்துட்டாரு & வேலையையும் ஆரம்பிச்சுட்டாரு!
பில்டரும் வந்தாச்சு! என்ன வேலைன்னு பேசியாச்சு! பவுடர் ரூமுக்கும், ஆன் ஸ்யூட்க்கும் காங்க்ரீட் நிரப்பனும். முன் வாசக் கதவுக்கு
இன்னோரு போல்ட் போடணும். அப்புறம் க்ளோத் லைனுக்கு அடிப் பீடம் காங்க்ரீட் போடணும். இன்னும் என்னன்னு தெரியலை!

நான் திரும்பி வரப்போ அப்படியே 'கவுண்ட் டவுன்' சூப்பர் மார்கெட் போய் சில அட்டைப் பெட்டிகளைக் கொண்டுவந்தேன். சாமான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பேக் செய்ய ஆரம்பிக்கணுமே!
அப்படியே சிட்டிக்குப் போய் லைட்டையெல்லாம் எடுக்கணும். போற வழியிலே கொஞ்சம் காய்கறி ஃபங்கி பம்ப்கின்''லே வாங்கினேன்.
லைட்டுக்கு 292 $ சொச்சம் ஆச்சு! முன்னாலெயே இவர் கொடுத்துட்டாருன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இல்லையாம். அவுங்க முன்னாலே காசு எடுக்கறதில்லையாம்!திரும்பி வரப்போ பில்டரோட ஃபோன் வருது. க்ளோத் லைனுக்கு அடிப் பீடம் எவ்வளவு உயரம் வைக்கணும்ன்னு? நேரா அங்கெ போனேன். லேண்ட்ஸ்கேப் எந்த மாதிரின்னு தெரியலையே. அவர் சொன்னது ரொம்ப தரையை ஏத்தறது. நம்மளாலெ இப்ப அது முடியுமான்னு தெரியாது. கொஞ்சம் மட்டமா வைக்கச் சொன்னேன். புல்தரை போடணுமுன்னா சரியா இருக்கும்.
கொண்டு போன விளக்கை வச்சிட்டு கேரிக்கிட்டே சொல்லிட்டு வந்தேன். கிரேக் நடுப்பகலுக்குள்ளே அவர் வேலையை முடிச்சுடுவாராம். நான் 11.30 க்கு வரேன்னேன்..

அடுக்களை நல்லா செட் ஆயிருச்சு. கிங் ஒருவேளை மத்தியானம் லஞ்சு டைம்லே வருவாராம். மணி 11.30 ஆச்சே, இந்த க்ரேக் வேலையை அப்படியே விட்டுட்டுப் போயிடப் போறாருன்னு அங்கே போனேன். சில வேலைங்க வார்டுரோப் ஷெல்ஃப் திருப்பி அசெம்பிள் ( பெயிண்ட் அடிக்கரப்ப வெளியே எடுத்தது!) செய்யச் சொன்னேன். ஒரு வேலையைப் பத்துவாட்டி சொல்லணும். வசதியா மறந்துருவாங்க! ஓட்டுமேலே இருக்கற ப்ளாஸ்டிக்கை எடுக்கச் சொல்லியிருக்கேன். ஏணி வேணும். அதுக்கு கேரியோடதுதான் எடுக்கணும்ன்னு காத்திருந்தார் பில்டர். அங்கங்கே கொத்து கொத்தா இருக்கற தரையை கொஞ்சம் சிமெண்ட் பூசச் சொன்னேன். அவரோடது கல் கலந்ததாம். அதுனாலே கிங்கு கலக்கறதுலே கொஞ்சம் போட்டா நல்லா வரும்ன்னு சொன்னார்.

அப்பவே கிங்கும் போவும் வந்துட்டாங்க! கிச்சன் க்ரெளட் போட. அவுங்க வேலையை அவுங்க பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பில்டர் போயாச்சு.
நான் வீட்டுக்கு வந்துட்டு அப்படியே அர்பன் டைல்ஸ்க்குப் போய் லாண்டரிக்கு போடற டைல்ஸ் வாங்கிவந்தேன். ட்,ரிம் நாம வாங்கினா
35 டாலராம். அதுவே டைல்லர் வங்கினா 40% ஆஃப். 21க்கு கிடைக்குமாம். கிங்குகிட்டே சொல்லணும்.


வாங்கிவந்த டைல்ஸைக் கொண்டுபோனேன் ஒரு நாலு மணிக்கு. கேரி எங்கேயோ அவசரமாப் போணுமாம். வந்து வேலையைத் தொடருவாராம். போறப்ப ஃபோர்ஸ் போட்டு அலாரம் ஆன் பண்ணச் சொன்னேன். ஆனாலும் போய்ப் பார்க்கணும்.
இப்ப மணி 7.20. ஃபோன் அடிச்சேன். வேலை முடிஞ்சிடுச்சாம். நான் போய் அலாரம் போட்டுட்டு வரேன். சரியா?


23/12
இன்னைக்கும் காலேல எட்டுமணிக்கு முந்தியே போய் அலாரத்தை எடுத்தேன். எட்டுக்கு கேரி வந்ததும் சொல்லிட்டு, நான் வந்துட்டேன்.
அப்புறம் கொஞ்ச வேலைங்களை இங்கே செஞ்சுட்டு, போஸ்ட் ஆஃபீஸ் போணும், டெலீனா வீட்டுலே நம்ம பாத்திரம் இருக்கே அதையும்
எடுக்கணும்ன்னு போனேன்.
அப்ப கேரியோட ஃபோன் வருது! வேனிட்டி லைட்டு உடைஞ்சிருக்காம்!
என்னன்னு போய்ப் பார்த்தா நாம வாங்கி வந்தது மூணு.அதுலே ஒண்ணு மாட்டிட்டு, ரெண்டாவது எடுத்துப் பார்த்தப்ப உள்ளே உடைஞ்சு இருந்ததாம். அப்ப மூணாவதையும் பாருங்கன்னு சொன்னேன். பார்த்தா அது சரியா இருக்கு. உடைஞ்சதை எடுத்துட்டுப் போய் லைட்டிங் டைரக்ட் கடைக்குப் போனேன். அவுங்க வேற மாத்தித் தரேன்னாங்க. ஆனா அது 'இன்வெர் கார்கில்'( அட! இங்கேயும் கார்கில்?)
என்ற ஊர்லே இருந்து வரணுமாம். அநேகமா அடுத்த புதனுக்குத்தான் வருமாம். வர்றபோது வரட்டும். நாம் என்ன செய்ய?

வீட்டுக்கு வந்து விட்டுப்போன வேலையையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சேன். மகளுக்கு அந்த எதிர்க்கடையிலிருந்து 'ஐ லிட்' லைட்டுலே
விட்டுப்போன பாகம் கிடைச்சுதாம். கொண்டு வந்து கொடுத்தாள். மத்தியானம் ஒரு நாலுமணிப்போல அங்கே செடி வெட்டற கட்டர் கொண்டு போனேன். பக்கத்து வீட்டு மரம் நம்ம வீட்டுமேல சாயுது! புது கட்டரிங் பாழாயிடாதா? எத்தனை தடவை க்ரேக் கிட்டே சொன்னேன். காதுலே வாங்குதுங்களா?

அந்தச் சின்ன கட்டர்லே வெட்டறது கொஞ்சம் கஷ்டம்தான். ரெண்டு மூணு கிளை வெட்டுனேன். அப்புறம் அந்தப் பெரியக் கிளையையே
வெட்டிடலாம்ன்னு நினைச்சு, பக்கத்து வீட்டு மரம் ஆச்சே. அந்த ஆளுங்க கிட்டே அனுமதி வாங்கலாம்ன்னு போனேன். அந்த ஓனர்
பையன் 'கார்ல்' இருந்தாரு. வந்து பார்த்துட்டு, கட்டாயம் வெட்டணும்தான். எங்கிட்டே அறுக்க ரம்பம் இல்லையேன்னார். நான் வீட்டுலே போய்
கொண்டுவரேன்னு சொன்னேன். கிளம்பரப்ப கூப்பிட்டார். 'என்கிட்டே விக்கியோட அப்பாவின் 'செயின் சா' இருக்கு. அது இருக்கறதை மறந்துட்டேன். எப்பவும் என் கேர்ள் ஃப்ரெண்டு அப்பாதான் எல்லா உதவியும் செய்யறார். அதனாலே எந்தக் கருவிகளும் என்கிட்டே இல்லெ'ன்னார்.
வீட்டுக்கு வீடு வாசப்படி! நம்ம பொண்ணுக்கும் நாமதானே செய்யறோம்ன்னு நினைச்சுகிட்டேன். அந்த 'எலெக்ட்ரிக் செயின் சா' கொண்டு
வந்து ஒரே நிமிஷம். சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............மரத்தை (கிளையை) வெட்டியாச்சு!


எப்ப குடி வரேங்கன்னார். ஜனவரி கடைசி ஆகிடும்ன்னு சொன்னேன். அவுங்க கூட ஒரு போர்டர் இருக்கார். அவருக்கு நம்ம வீட்டைச் சுத்தி அரைமீட்டர் அகலக் காங்க்ரீட் ஏன் இருக்குன்னு ஆச்சரியமா இருக்காம்!'நான் ரொம்ப சோம்பேறி. என்னாலே களை புடுங்க முடியாது. அதனாலே சுத்திச் சிமெண்ட் போட்டுட்டோம்'ன்னு சொன்னேன். அவுங்களுக்கு ஒரே வியப்பு!

இப்ப கேரியோட ஃபோன். அலாரம் போட்டா அது ஆர்ம் ஆகலையாம்.அப்படியே விட்டுட்டு வந்துருக்கேன்னார். நான் போய் இருந்தேன். போட்டுட்டு வந்துட்டேன்னு சொன்னேன். நாளைக்கு 8 மணிக்கு வராராம். ஒவ்வொருநாளும் வெவ்வேறு நேரத்துலெ வர்றாங்க. அதுக்கேத்தமாதிரி நான் 'ஆடணும்'


24/12
காலையிலே வழக்கம்போல 8க்கு முன்னாலெ போய்க் கதவைத் திறக்கணும்ன்னு 7.56க்குப் போய்ச் சேர்ந்தேன். கேரி ரெடியா இருந்தாரு. 'குட்!!!' மகள் கொண்டுவந்த ரீப்ளேஸ்மெண்ட் பாகம் கொடுத்தேன். இன்னைக்கு அரைநாள் வேலை செய்வாராம். போகும்போது 'ஃபோர்ஸ்'
போட்டு அலாரம் ஆன் பண்ணச் சொன்னேன். ஆர்ம் ஆகலைன்னா ஒரு ரெண்டுமூணு விநாடி அமுக்கச் சொன்னென். இதுதான் ரியல் ஃபோர்ஸ் கொடுக்கறது:-))))இதுக்கு அப்புறம் அநேகமா புதனுக்குதான் வேலை ஆரம்பிக்கலாம்! மறுபடியும் கேரியிடமிருந்து ஃபோன்! பல்க் ஹெட் லைட்டுக்கள் ஒன்று குறைகிறதாம். ஒன்பது வாங்கியிருக்கிறோம். அதுக்குண்டான இடத்தில் ஒயர் இணைக்காமல் இருப்பதால் மற்ற விளக்குகள் எப்படி வேலை செய்கிறதென்று பார்க்கமுடியவில்லையாம்! நான் உடனே, இன்னுமொரு விளக்கு வாங்கிக்கலாம் என்று சொன்னேன்.
அப்புறம் மகளுக்கு ஃபோன் செய்து, விளக்கு மாடல் நம்பரைக் கொடுத்து இன்னொன்று வேணுமுன்னு ஆர்டர் கொடுக்கச் சொன்னேன். மகளோட வேலையிடம் லைட் கடைக்கு எதிரே இருக்கறது வசதியாப்போச்சு.
அப்புறம் அவளும் ஃபோன் செய்து ஆர்டர் கொடுத்தாச்சு. ஆனால் ஜனவரி 15க்கு மேலேதான் வருமாம் என்றாள். அது பரவாயில்லை!

தொடரும்....................

==========================

9 comments:

said...

//அடுக்களை நல்லா செட் ஆயிருச்சு. //

ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண்வையடாத் தாண்டவக்கோனே!! :))

said...

உங்க ஊரில் வீடுக்கட்டுவது இம்சையான வேலையென்றாலும் , அதிலும் ஒரு வசதி இருக்கு , எது உடைந்து இருந்தாலும் மீண்டும் கடையில் கொடுத்தால் மாற்றி தருகிறேன் என்கிறார்கள். இங்கே எல்லாம் போய் சாதாரணமாகவே மாற்ற முடியாது, அதுவும் உடைந்து போய் மாற்ற சொன்னால் கழுத்து மேல கைய வச்சு தள்ளுவாங்க!

ஆமாம் கடையில் 8 லைட் வாங்கினால் ஒன்பதாவது இருக்காதா, எதை கேட்டாலும் ஆர்டர் அங்கே இருந்து வரணும் என்றே பதில் சொல்றாங்க. ரொம்ப குறைவாக தான் ஸ்டாக் வைப்பார்களா?

said...

வாங்க கொத்ஸ்.

இல்லையா பின்னே? அது நல்லா இருந்தாத்தானே ஆக்கிப்போட ஒரு மூடு வரும்?

எண்சாண் உடம்புக்கு வயிறு(ம்) பிரதானமில்லையா?

அடுத்தவரியை விட்டிட்டீங்களா?:-)
------- ----- ---- காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே:-))))

said...

வாங்க வவ்வால்.

இங்கெ பொதுவா வாடிக்கையாளர்களை நம்பணும் என்பதுதான் கொள்கை.

காய்கறிக்கடையில் தேங்காய் வாங்கிட்டு அது அழுகி இருக்குன்னு திருப்பிக் கொடுத்து புதுசுகூட(அங்கேயே உடைச்சுப் பார்த்து)வாங்கி வந்துருக்கேன்.

ஒரு சூப்பர் மார்கெட்லெ, பில் போடும்போது தப்பா ஸ்கேன் ஆயிருச்சுன்னா,
அதுக்கு நம்மக்கிட்டே வாங்குன விலையை முழுசுமாத் திருப்பிக் கொடுத்துட்டு, வாங்குன பொருளையும் இனாமாவே தந்துருவாங்க.

இப்ப ச்சீனர்கள் வந்து வியாபார நிறுவனங்களை வாங்கிக் கடைகளை நடத்த ஆரம்பிச்ச பிறகு இதெல்லாம் மாற ஆரம்பிச்சிருக்கு. கெட்டுப்போன காய்களின்
கெட்ட பாகத்தை நீக்கிட்டுத் துண்டு போட்டு 'ரெடி ஃபார் பாட்'ன்னு விக்க ஆரம்பிச்சுருக்காங்க(-:

சீனர்கள் கடைன்னா உள்ளெ போகவே கொஞ்சம் யோசனையாத்தான் இருக்கு.

கடையில் ஸ்டாக் குறைவாத்தான் வைக்கறாங்க. வேர்ஹவுஸில் போட்டு வைப்பாங்க போல இருக்கு. அநேகமா எல்லாக் கடைகளும் செயின் ஸ்டோர்ஸ்தானே? மொத்தமா ஒரு இடத்தில் வச்சு, விநியோகம் செய்வாங்க போல.

said...

மேல மாடி இருக்கா? இல்ல ஒரு ஃபுளோர் தானா?
:-))

said...

//மேல மாடி இருக்கா?//

குமார், வீட்டைப் பத்திதானே கேட்கறீங்க!! :))

said...

வாங்க குமார்.

நான் சொல்ல நினைச்சதை நம்ம கொத்ஸ் சொல்லிட்டார்:-))))

இப்போ என் பதில்:

இல்லைங்க. இருந்தா இப்படி ஆழம் தெரியாமக் காலை விடுவோமா?

said...

கொத்ஸ்,

நவராத்திரி வேலையா உள்ளே இருந்தேன். சரியாப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி:-)))))

said...

நூசியிலே வீடு கட்டி
படு பாடு பட்ட
மங்கையர்திலகமே

உங்களுக்கு பல்ப் மாலை போடவா
:)))))நவராத்திரிக்குப் பிரயோசனமா இருக்கும்

முட்டாப்பயல்லையெல்லாம் தாண்டவக்கோனே
காசு முதலாளி ஆக்குதடா
தாண்டவக்கோனே.
------------------
பணப்பெட்டிமேலே கைவையடா:))))
சரியா.