Monday, November 27, 2006

அம்பது..........

நாமெல்லாம் 'கண்ணை மூடறதுக்குள்ளே' கட்டாயமாப் பார்க்க வேண்டிய அம்பது இடங்களைப் பத்தி, பிபிசிக்காரங்க ஒரு லிஸ்டு போட்டுருக்காங்களாம்.

சரி, அப்படி என்னதான் சொல்றாங்கன்னு போய்ப் பார்த்தேன்.

1.கிராண்ட் கேன்யன்

2.கிரேட் பேரியர் ரீஃப் ஆஸ்தராலியா

3.டிஸ்னி வொர்ல்ட் ( ப்ளோரிடா)

4.சவுத் ஐலண்ட் ( நியூஸி)

5.கேப் டவுன் சவுத் ஆஃப்ரிக்கா

6.பொற்கோயில் அம்ரித்ஸர் இந்தியா

7.லாஸ் வேகாஸ் யு.எஸ்.ஏ.

8.சிட்னி ஆஸ்தராலியா

9.நியூயார்க் யு.எஸ்.ஏ.

10.தாஜ்மஹால் இந்தியா

11.லேக் லூயீஸ் த ராக்கீஸ் கனடா

12. உலூரு அயர்ஸ் ராக் நார்தர்ன் ஆஸ்தராலியா ( உலூருன்றது அபாரிஜன் பெயர்)

13.Chichen Itz, Mexico மாயன் நாகரிகம் மெக்ஸிகோ

14.Machu Picchu, Peru மச்சு பிச்சு (இன்காஸ்) பெரு

15.நயாகரா நீர்வீழ்ச்சி

16.பெட்ரா ஜோர்தான்

17. பிரமிடுகள் எகிப்துPyramids, Egypt

18. வெனிஸ் நகரம் இத்தாலி Venice, Italy

19. மாலத்தீவுகள் Maldives

20. சீனா நெடு(பெரு)ஞ்சுவர் Great Wall, China

21.விக்டோரியா நீர் வீழ்ச்சி Victoria Falls, Zambia/Zimbabwe border

22. ஹாங்காங் Hong Kong

23.Yosemite National Park, USA

24. ஹவாயி தீவுகள் Hawaii

25.வடக்குத்தீவு நியூஸி North Island, New Zealand

26. Iguacu Falls, Argentina/Brazil border

27. பாரீஸ் மாநகர் ஃப்ரான்ஸ் Paris, France

28.அலாஸ்க்கா யு.எஸ்.ஏ. Alaska, USA

29.அங்கோர்வாட் கோயில். கம்போடியா Angkor Wat, Cambodia

30.எவரெஸ்ட் சிகரம். இமயமலை. Mount Everest, Himalayas

31. ரியோ டி ஜெனிரோ ப்ரேஸில் Rio de Janeiro, Brazil

32. வனவிலங்கு சஃபாரி, தேசீய பூங்கா. கென்யா Masai Mara, Kenya

33.கெலபேகோஸ் தீவுகள் Galapagos Islands, Ecuador

34. லக்ஸர் எகிப்து Luxor, Egypt

35. ரோமா நகர் இத்தாலி Rome, Italy

36.சான் ஃப்ரான்ஸிஸ்கோ யூ எஸ்.ஏ San Francisco, USA

37.பார்ஸிலோனா ஸ்பெயின் Barcelona, Spain

38.துபாய் Dubai, UAE

39. சிங்கப்பூர் Singapore

40. La Digue, Seychelles கறுப்புக் கிளிகள் (நிஜக்கிளிகள்) பார்க்கலாம்.

41. ஸ்ரீலங்கா

42.பாங்காக், தாய்லாந்து

43.பார்பேடோஸ் வெஸ்ட் இண்டீஸ் Barbados, West Indies

44. ஐஸ்லாந்து . Iceland

45. சுடுமண் படைவீரர்கள். ச்சீனா The Terracotta Army, China


46.Matterhorn, Switzerland

47. Angel Falls, Venezuela

48.அபு சிம்பெல் எகிப்து Abu Simbel, Egypt

49.பாலித்தீவு, இந்தோனேஷியா

50. Bora Bora, French Polynesia

இதெல்லாம் அவுங்க ச்சாய்ஸ்.

எனக்கு? இன்னும் இந்தியாவையே முழுக்கப் பார்க்கலை.(-:

போட்டும், உங்க சொந்தப் பட்டியல்களைச் சொல்லுங்க. எது எதெல்லாம் நிஜமாவே பார்க்க ஆசையா இருக்கு?


பட்டியல் தயாரானதும் ,(மேற்படிப் பட்டியலில் 4 & 25 விட்டுறணும்:-) ஆமா)
அங்கே இருக்கற நம்ம வலைஞர்கள் கிட்டே சொல்லி ஏற்பாடு செஞ்சுக்கலாம். பிரச்சனை இல்லை:-))))

32 comments:

said...

இந்த இடங்களில் ஒரு 11 ஓவர். நம்ம லிஸ்ட்டா? இது சம்பந்தமா ஒரு பதிவே போட்டாச்சே.

said...

அப்டியே எங்கங்க எந்தந்த பதிவர்கள் இருக்காங்கன்னும், நீங்க இதுல எங்கங்கெல்லாம் போயிருக்கீங்கன்னு போட்ருக்கலாம்ல

வயித்தெரிச்சலை கூட்றதுக்குனே பதிவு போடுறவுங்கள....... என்ன சொல்றது.... நல்லா இருங்க.

said...

டீச்ச்சர்

உண்மையைச் சொல்லுங்க! எங்கங்க பதிவர்களும் படிப்பவர்களும் இருக்காங்கன்னு ஒரு வகுப்பு attendance தானே எடுத்தீங்க?:-)

அது சரி..நீங்க ஏன் Christ Church என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை?:-))

//30.எவரெஸ்ட் சிகரம். இமயமலை. Mount Everest, Himalayas//
எங்க எல்லாரையும் மலை ஏத்தறுதுன்னு முடிவே பண்ணிட்டீங்களா?????

said...

வாங்க கொத்ஸ்.

உங்க பதிவை எப்படி 'மிஸ்' செஞ்சுட்டேன்னு தேதி பார்த்தா.......

அது நான் லீவுலெ இருந்தப்ப வந்துருக்குப்பா. பயணத்துலே இருக்கறப்ப
பதிவுகள் பார்க்கறது கஷ்டம். (-:ப்ரவுஸிங் செண்டர் போனாலுமெ பல இடங்களிலெ தமிழ்
படிக்க முடிஞ்சதில்லை. இப்ப நிலை மாறி இருக்குமோ?

said...

என்னங்க முனியாண்டி,

கோச்சுக்கிட்டீங்க போல இருக்கு?

அங்கங்கே இருக்கறவுங்கதாங்க, நம்மை 'வாங்க. வந்து பார்த்துட்டுப்போங்க'ன்னு
கூப்புடணும். இல்லீங்களா?

said...

KRS,
அட, இது என்னோட லிஸ்ட் இல்லேப்பா. பிபிசிக்காரங்க போட்டதாம். அதான்
நம்மூரை விட்டுட்டாங்க:-))))

said...

இடம் மட்டும் தானா...மனிதர்கள் இந்த லிஸ்ட்ல இல்லயா...இருந்தா ஜெ.லோ,பிரிட்டனி ஸ்பேர்ஸ்,ஐஸ்வர்யா ராய்,நயன் தாரா,அஸின்...இப்படி போகும் :-)

said...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போலாகுமா?
எனக்குப் பிடித்தது நம்ம பக்கத்து ஊர்கள்தான்

வேதாரண்யம் விளக்கழகு
திருவாரூர்த்தேரழகு
மன்னார்குடி மதிலழகு
மதுரைக் கோயிலழகு
கன்னியாகுமரிக் கடலழகு.........

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

said...

வாங்க ஷ்யாம்.

நீங்களே பேசாம உங்க லிஸ்ட்டைப் பதிவாப் போட்டுறலாம். நீங்க
சொன்ன 'ஆளுங்க' யாரும் நம்ம 'விஷ் லிஸ்ட்'டுலே இல்லீங்களே(-:

said...

வாங்க வாத்தியார் ஐயா.

இதுதாங்க நான் எதிர்பார்த்தது.
இந்தியாவுலெயே எவ்வளவோ இடங்கள் பார்க்க முடியாமப் போச்சு.
அப்பெல்லாம் ஊர் சுத்த நேரமும் இல்லை, வசதியும் இல்லை(-:

நம்ம பக்கம் லிஸ்டு ஒண்ணு பதிவாப் போடுங்களேன். எத்தனை தேறுதுன்னு
பார்க்கலாமே.

said...

எனக்கு? இன்னும் இந்தியாவையே முழுக்கப் பார்க்கலை.(-://

நீங்க வேற.. நாங்க இன்னும் தமிழ்நாட்டையே ஏன், இன்னும் சென்னையவே முழுசா பாக்கலை..

வயித்தெரிச்சலை கூட்றதுக்குனே பதிவு போடுறவுங்கள....... என்ன சொல்றது.... நல்லா இருங்க.//

இது யாரோ சொல்லலைங்க.. நாந்தான், புனைபெயர்ல ஒளிஞ்சிக்கிட்டு.. முனின்னுட்டு:))

said...

வாத்தியார் அய்யா சொன்னது.....

ரிப்பீட்டே........

said...

பிபிசிக் காரங்க 'அவசியம் சாப்பிட்டுப்பார்க்க வேண்டிய பலகாரங்கள்' ணூ லிஸ்ட் போட்ட்ருக்காங்களே அதையும் போட்ருங்க

Anonymous said...

இந்தியாவின் இரண்டு இடங்களைப் பற்றியாவது போட்டார்களே...

Anonymous said...

அக்கா!!
லிஸ்ட் போட்டு தந்தாங்க!!சரி ....ரிக்கட் காசு யார் தருவதாம்...

யோகன் பாரிஸ்

said...

துளசி,
என்னப்பா நல்லி, குமரன்,ராசி எல்லாம் விட்டுட்டீங்களே:-)
அந்த ஊருக்காரங்க ரொம்பப் பாக்கிற இடங்கள்ள இவைகளும் அடக்கம்.

இங்கேருந்து ஃப்ளைட் பிளான் மாத்தி நியூசி வந்துடரேன்.
நம்ம எல்லோரும் போலாம் சரியா.:-)

Anonymous said...

அக்கா,

கோயம்புத்தூர்லேயே இன்னும் நான் பாக்காத ஏரியாக்கள் கிட்டத்தட்ட 500 இருக்கும் :-)))..அப்றம் எப்படி அடுத்த ஊரெல்லாம்?

said...

பராவாயில்லை 16 இடம் பார்த்திட்டேனே லிஸ்ட்லே!

said...

வாங்க டிபிஆர்ஜோ.

நீங்க ச்சென்னையைச் சொன்னதும்தான் நல்லா யோசிச்சுப் பார்த்தேன்.
இங்கே இப்ப நான் இருக்கற ஊரில் கூட சில பகுதிகளைப் பார்க்காம
விட்டுவச்சுருக்கேன். ஊஹூம்... இது நல்லதுக்கில்லை. ச்சும்மாப்போய்
காலு குத்திட்டு வரப்போறேன், இந்த வீக் எண்ட்:-))))

ஆமாம், இந்தப் பதிவு சில பல உண்மைகளை வெளியில் கொண்டு வருதுபோல
இருக்கே.

நீங்கதான் அந்த 'முனி'ன்ற 'நிஜத்தைச் சொன்னது'க்கு நன்றி:-)))))

said...

சிஜி,

ஆசிரியர் ஐயா சொன்னதை பேராசிரியர் ஐயா வழி 'மொழி'ஞ்சுட்டீங்களா? :-))))

//பிபிசிக் காரங்க 'அவசியம் சாப்பிட்டுப்பார்க்க வேண்டிய பலகாரங்கள்' ணூ லிஸ்ட்
போட்ட்ருக்காங்களே...//

இது உங்ககிட்டேதான் கொடுத்தாங்களாமே. நல்லா விசாரிச்சுட்டேன்:-))))
அதுலே 'வடை' இருக்கான்னு முதல்லெ பாருங்க:-)))

said...

வாங்க லக்ஷ்மி.

இந்த லிஸ்ட்டுலே 'கோவா'வை எப்படி வெள்ளைக்காரங்க விட்டுட்டாங்க?

said...

வாங்க யோகன்.

டிக்கெட்டு...? அப்படீன்னா என்னங்க?:-))

said...

வாங்க வல்லி.

//இங்கேருந்து ஃப்ளைட் பிளான் மாத்தி நியூசி வந்துடரேன்.
நம்ம எல்லோரும் போலாம் சரியா.:-)//

கட்டாயம் வாங்க வல்லி. ரெண்டு இடம் இங்கேயே இருக்கு:-))))

said...

அகத்தீ,

பேசாம 'வலைப்பதிவர் சுற்றுலா'ன்னு ஒண்ணு ஏற்பாடு செஞ்சுறலாமா?

said...

உதயகுமார்,

16 ஆஆஆஆஆஆ?

எனக்கு 12தான் தேறுது(-:

நான் பார்த்த மற்ற இடங்களை இதுலே சேர்க்காத அந்த பிபிசியை
'வன்மை'யாகக் கண்டிக்கணும்:-))))

said...

இந்த லிஸ்டுல நமக்கு ஒன்னு தான் தேறுது.

அது தாஜ்மஹால். மீதி 49ஐ பாக்க முடியும்னு தோணலை. அநேகமா ஆத்மா சாந்தியடையாம நான் ஆவியா சுத்திட்டு இருப்பேன்னு நெனக்கிறேன்.
:)

said...

வாங்க கைப்புள்ளெ.

இதுலே ஒண்ணுமே பார்க்காதவங்கதான் ஆவியா
சுத்துவாங்கன்னு வச்சுக்கலாமா?

அவுங்க லிஸ்ட்டு நமக்கு எதுக்குங்க? நமக்குச் சொந்தமா லிஸ்ட்டுப்போடத்
தெரியாதாங்காட்டியும்?

நம்ம லிஸ்ட்டை அங்கே அனுப்புனோமுன்னு வச்சுக்குங்க, பிபிஸி தலையைப்
பிச்சுக்கிட்டுப் பாயைப் பிராண்டணும் ஆமா:-)))))

'நான் கண்ட தாஜ்'னு எழுத இப்ப என் கை பரபரக்குது:-)))))


கொஞ்ச நாளைக்கு முன்னாலேதான் பாவைவிளக்கு சினிமா பார்த்தேன்.
அதுலே சிவாஜியும், எம்.என். ராஜமும் தாஜ்மகால்லெதான் 'ஆவி'யாச்
சுத்திக்கிட்டு இருப்பாங்க. 'காவியமா...... நெஞ்சின் ஓவியமா' பாட்டு:-)

said...

வாங்க வாத்தியார் ஐயா.

உங்க பின்னூட்டமே இன்னிக்கு ஒரு பதிவா வந்துருக்கு.
பார்த்துட்டுச் சொல்லுங்க.

நன்றி.

said...

ஐம்பதைப் பார்த்து அசந்து நிற்பதைவிட அடுத்து செல்லும் வழியைப் பார்ப்போமே!

சீச்சீ, இந்த பழம் புளிக்கும் .. கதைதான்.

said...

துளசி அக்கா,
பதிவுக்கு நன்றி. பின்வரும் இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இன்னும் போக வேண்டிய இடங்கள் வெகுதூரம் என உங்களின் பதிவு மூலம் அறிந்து கொண்டேன்.!

1.கிராண்ட் கேன்யன்
3.டிஸ்னி வொர்ல்ட் ( ப்ளோரிடா)
7.லாஸ் வேகாஸ் யு.எஸ்.ஏ.
9.நியூயார்க் யு.எஸ்.ஏ.
15.நயாகரா நீர்வீழ்ச்சி
27. பாரீஸ் மாநகர் ஃப்ரான்ஸ் Paris, France
35. ரோமா நகர் இத்தாலி Rome, Italy

36.சான் ஃப்ரான்ஸிஸ்கோ யூ எஸ்.ஏ San Francisco, USA
41. ஸ்ரீலங்கா

ஐம்பது இடங்களில் ஒன்பது இடங்களுக்கு மட்டும்தான் சென்றிருக்கிறேன்.{:

said...

வாங்க மணியன்.

உலகம் சுருங்கி வர்ற நிலையைப் பாருங்க. இந்தப் பழம் இனிக்கும்னு
கூடிய சீக்கிரமே ஆகப்போகுது:-)))

said...

வாங்க வெற்றி.

இன்னும் 41 தான் இருக்கா?

கத்தோலிக்க மதக்காரர்களுக்கு 'வாடிகன்' போக தீராத ஆவல். எனக்கோ
கங்கையைப் பார்க்க ஆசை. நான் வாடிகன் போயிட்டு வந்துருக்கேன். இங்கே
இருக்கும் பலர் (கிறிஸ்துவர்கள்) வாரணாசி போயிட்டு வந்துருக்காங்க.

என்னன்னு சொல்ல? எல்லாம் நேரம் வரும்போது நடக்கும்.