Tuesday, November 14, 2006

ஆலாபனை

அண்டவெளியிலே இருக்கும் நட்சத்திரங்களைப் பத்திச் சொல்லலாமுன்னு,விஷய சேகரிப்புக்குப்போனா.......... 'படா' பெரிய செய்திகளா இருக்கு. உள்ளே மூழ்கிப்போனா வெளியே வரமுடியாம மாட்டிக்குவேன். அப்புறம் இந்த வாரம்அமோகமா இருந்துச்சுன்னு உங்ககிட்டெ இருந்து பாராட்டு மழையாப் பெய்யும்.:-))) இதெல்லாம் தேவைதானா....? (அங்கெ போனா உண்மைக்குமே ஒண்ணும் புரியலைன்றதைத்தான் இப்படிக் கெத்தாச் சொல்லிக்கறது!)'ஈரப் பெயிண்ட்'ன்னா நம்பாமத் தொட்டுப் பார்க்கிற மக்கள்ஸ் மட்டும், வானவெளியிலே 98765432112345678903 ட்ரில்லியன் ஸ்டார்ஸ் இருக்குன்னா, மறுப்பே இல்லாம ஒத்துக்குவாங்க.சந்தேகம் இருந்தா நீங்களும் எண்ணிப் பார்த்துக்கலாம். இந்த வாரம் மட்டும் இந்தக் கணக்குலே ஒண்ணு எக்ஸ்ட்ரா.


போனவருசம் டிசம்பர் 19 லெ இப்படித்தான் வந்து உங்களையெல்லாம் போட்டுத் தள்ளிட்டுப் போனேன்.வருசம் முடியலை. அதுக்குள்ளே இன்னொருக்கா உங்களைப் பதம் பார்க்க என்னை அனுப்பி இருக்கு 'ங்'தமிழ்மணம். யாரும் தப்பிப் பிழைக்கலாமுன்னு கனவு மட்டும் காணாதீங்க. ஆமாம்:-))))


இதுவரை கிடைச்ச ஆதாயங்களைப் பார்க்கணுமுன்னா....


நட்புதான். உலகம் பூராவும் எந்த மூலையக் கணக்கெடுத்தாலும் யாராவது வலைஞர்கள் இருக்காங்க.போரடிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்த வாழ்க்கை, இப்ப நேரமே இல்லாம பிச்சுக்கிட்டு ஓடுது.ஆற அமர நின்னு ஒரு வார்த்தை பேச( பின்னூட்டம் போட) முடியலைன்னா பாருங்களேன் நம்ம 'ஸ்பீடை'.


இந்த வாரம் என்னென்ன எழுதலாமுன்னு பட்டியல் எல்லாம் போட்டு வச்சுக்கலை. ஒலி, ஒளி காட்டுறதுக்கெல்லாம் கணினி அறிவு போதாது. தெரிஞ்சவரைக்கும் முடிஞ்சவரைக்கும் தினம்ஒரு பதிவு போட முயற்சிப்பேன்.


நிறை குறைகளோட என்னை 'நட்சத்திரமா ஏத்துக்கிட்டே ஆக வேண்டிய கட்டாயம் 'உங்களுக்கு.(விதியாகப்பட்டது வலியது. அதை யாரும் வெல்ல முடியாது)


அன்பும் ஆதரவும் எப்பவும்போல இருக்கும் என்ற நம்பிக்கையிலே இதோ எழுத ஆரம்பிச்சுட்டேன்.

நன்றி & வணக்கம்.


( உற்சாகமான வரவேற்பைப் பார்த்ததும் உண்மையிலேயே 'கலங்கி' நின்னுட்டேன்ம்ப்பா...டச்சிங் டச்சிங் ....சீக்கிரம், ஒரு சோடா ப்ளீஸ்)

58 comments:

said...

சரி அதான் ஏற்கனவே ஒரு அரை முகம் போட்டாச்சே. அங்க அரைச்சதமும் அடிச்சாச்சே, இது என்ன?

சரி, இருந்தாலும் சொல்லிடுவோம். வழக்கம் போல கிளாஸுக்கு வரேன். வெளியூர் போனாக் கூட!

said...

வாங்க கொத்ஸ்,

'ஃப்ராங்பர்ட் வென்ற வீரரே'ன்னு சொல்லிக்கவா?

உண்மையான 'தொலைதூரக்கல்வி' மாணவர்ன்னு நிரூபிச்சுட்டீங்க. பாராட்டு(க்)கள் .

இதுதான் முதல்லே வந்துருக்கணும். நேத்து அங்கே 'கட்(டிங்) ஆனதாலே இது இன்னிக்கு
இங்கே ஒட்டிங். 'ஆக்கிவச்சதை கடாச முடியுதா? ஊசிப் போயிட்டா?'
'பாழாப்போறது பசு வாயிலே'ன்னு ஒரு பழமொழி இருக்கு.

said...

//சரி அதான் ஏற்கனவே ஒரு அரை முகம் போட்டாச்சே. அங்க அரைச்சதமும் அடிச்சாச்சே, இது என்ன? //

அதானே, இது வேற என்ன :-)).

என்ன தப்பிக் பிழைக்க வேற விட மாட்டீங்களா... ;-))

Anonymous said...

அக்கா" என் வழி தனினினி வழி" என்பது போல; உங்க பாணியில போட்டுக் கலக்குங்க!!!
யோகன் பாரிஸ்

said...

//என்ன தப்பிக் பிழைக்க வேற விட மாட்டீங்களா... ;-))//

நோ ச்சான்ஸ்:-)))

said...

வாங்க யோகன்.

//"என் வழி தனினினி வழி"//
அதான் பி.க. கூடாதுன்னு நாலைஞ்சு பேருக்குச் சேர்த்தே பதில் போட்டு
'தனிவழி'யை போன பதிவுலெ( மட்டும்) கொஞ்சம் மாத்திட்டேன்:-)))

said...

அக்கா ! பளபளன்னு மின்னனுங்க.

இப்பத்தான் பாத்தேன்.வாழ்த்துக்கள்.

said...

//அன்பும் ஆதரவும் எப்பவும்போல இருக்கும் என்ற நம்பிக்கையிலே இதோ எழுத ஆரம்பிச்சுட்டேன்.//

என்ன இப்டி கேட்டுடிங்க?

எப்பவுமே எங்க அன்பும் ஆதரவும் உண்டுங்க உங்களுக்கு!!

நீங்க எழுதுங்க!

said...

பி.க. என்றால் என்ன பி.நா.? :-))

said...

பெருசு,

வாங்க. இப்பவாவது பார்த்தீங்களே! நன்றி.

said...

தம்பி,

நீங்கெல்லாம் இருக்கற தைரியம்தான். நன்றி.

said...

குமரன்,

க= கயமை:-))))

said...

//நட்புதான். உலகம் பூராவும் எந்த மூலையக் கணக்கெடுத்தாலும் யாராவது வலைஞர்கள் இருக்காங்க.போரடிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்த வாழ்க்கை, இப்ப நேரமே இல்லாம பிச்சுக்கிட்டு ஓடுது.ஆற அமர நின்னு ஒரு வார்த்தை பேச( பின்னூட்டம் போட) முடியலைன்னா பாருங்களேன் நம்ம 'ஸ்பீடை'//

உண்மையா வார்த்தைகள் துளசி..

வாழ்த்துக்கள் நட்சத்திரம் ஆனதுக்கு..
ஒரு பக்கம் சிறந்த பதிவாளர்னு இட்லிவடைல.. இன்னொரு பக்கம் நட்சத்திரமா..
கலக்குங்க போங்க துளசி..

said...

//யாரும் தப்பிப் பிழைக்கலாமுன்னு கனவு மட்டும் காணாதீங்க. ஆமாம்:-))))//
அக்காவ், முகாந்திரம் பயமுறுத்துக்காவ்!!!!

//அன்பும் ஆதரவும் எப்பவும்போல இருக்கும் என்ற நம்பிக்கையிலே இதோ எழுத ஆரம்பிச்சுட்டேன்.//

தும்பிக்கையான பக்கம் பூராப் போட்டுவிட்டுட்டா?

said...

என்ன துளசி இப்படி அறிமுகம் ஆலாபனை சொல்லியே வாரத்தை ஓட்ட திட்டமா?

திரும்பவும் வாழ்த்துக்கள்.

said...

வாங்க கார்த்திக்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

இட்லிவடை இப்படிச் சொல்றாருன்னா இன்னிக்கு ப்ரியமுடன் கேபி வேறமாதிரியில்லெ
சொல்றார். பார்த்தீங்களா?

said...

வாங்க க.பெண்ணே.
என்ன பயமுறுத்தல்? ச்சும்மானாச்சுக்கும் 'டாய்'னு விடுற உதார்தான்:-)))

தும்பிக்கையாந்தான் சுத்தி இருக்காரே:-))))

said...

வாங்க பத்மா.

//இப்படி அறிமுகம் ஆலாபனை சொல்லியே வாரத்தை ஓட்ட திட்டமா?//
அட! இது ஒரு நல்ல ஐடியாவா இருக்கே!

'என்ன என்ன என்ன என்ன என என என என என'ன்னு
ஒரு முழுப்பாட்டையே அந்தக் காலத்துலெ 'ஓட்டிவிட்டுருக்கும்போது,
நான் மட்டும்....?

Anonymous said...

மறுபடியுமா? ங்-க பார்றா..
இந்த வாட்டி ஆலாபனையெல்லாம் போட்டு கனஜோரா ஆரம்பிச்சுட்டீங்க. நாங்க ரெடி,..நீங்க?

தல நகர பதிவாளர் வட்ட சார்பாக (முடிஞ்சா) நேர்லயே வந்து வாழ்த்து-பா பாடி விழா எடுக்ரதா இருக்கோம்.

said...

துளசி, மலைநாடன பார்த்தீங்களா. மூணு வேற நிறத்தில முப்பரிமாணம் (இதுல உள் குத்து இல்லதான:)) போட்டு பாட்டு வேற போட்டு வாழ்த்துரைதான்.இது என்னோட இரண்டாவது பின்னூட்டம். உங்க கிட்ட மயங்கினதா யாராவது சொல்ல போறாங்க

said...

சுரேஷூ,

எல்லாம் இந்த 'ங்' பண்ணுற வேலைப்பா:-))))
பாராட்டுவிழா நேர்லேயா? எப்பன்னு சொல்லிட்டா 'எஸ்கேப்' ஆக
வசதியா இருக்கும்:-))))

said...

பத்மா.

வாங்க. 'மயங்குகிறாள் ஒரு மாது' பாட்டுப் போட்டுறலாமுன்னா
அவ்வளவு தொ.நு. தெரியலையே(-:
மலைநாடன் முப்பரிமாணமுன்னு சொல்லி அஞ்சு கலர் போட்டுருக்கார்:-)

முந்தி ஒரு ஜோக் கேட்டது, இப்ப ஞாபகமில்லை.
பஞ்சபாண்டவர் எத்தனை பேருன்னு கேட்டா அதுக்கு 'கட்டில் காலைப்போல'ன்னு
ஆரம்பிச்சு கடைசியிலே 'ஒத்தை விரலாலே காட்டுவான்'னு முடியும்:-))))

said...

பத்மா,

பஞ்சபாண்டவர் என்றால் தெரியாதா, கட்டில் காலைப்போல் மூணு பேர் என்று சொல்லி,
ரெண்டுவிரல் காட்டி, ஒரு கோடு எழுதினானாம்!

( பழமொழி புத்தகத்துலே பார்த்தேன்)

said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் துளசி.

மீள்பதிவெல்லாம் போடாம அக்மார்க் துளசி பிராண்ட் பதிவுகளாக போடுங்க ))

said...

அட மார்கழி ஆலாபனை, கார்த்திகையிலேயே வந்துடுச்சே!
டீச்சர் ஸ்பீடே ஸ்பீடு!!!

டீச்சர் எப்போ கீர்த்தனாரம்பம்? (கீர்த்தனா என்பவள் ரம்பம்ன்னு சொல்லிடாதீங்க :-) நான் கேட்டது கீர்த்ததனை ஆரம்பம்!!!

நட்சத்திரப் பூனைக்குட்டி சூப்பரோ சூப்பர்! அதைப் பற்றிய பதிவு ஒன்று உண்டு தானே? :-))))

said...

//வானவெளியிலே 98765432112345678903 ட்ரில்லியன் ஸ்டார்ஸ் இருக்குன்னா, மறுப்பே இல்லாம ஒத்துக்குவாங்க.சந்தேகம் இருந்தா நீங்களும் எண்ணிப் பார்த்துக்கலாம்//

இது இது இது தான் எங்க டீச்சர்-ங்கிறது!
வகுப்பைச் சமாளிக்கறதுன்னு சும்மாவா?
பொல்லாத பசங்க கேள்விக்கு எல்லாம் இப்படிப் பதில் சொல்லி எத்தனை பேரை நம்ம டீச்சர் க்ளீன் போல்ட் பண்ணியிருக்காங்க :-))

மிஸ், எனக்கு ஒரு சந்தேகம் :-)
98765432112345678903 இல், உங்க (நம்ம) தமிழ்மண ஸ்டாரைச் சேத்துக்கிட்டீங்களா, டீச்சர்? :-))

said...

ஜெயஸ்ரீ,

வாங்க, வாங்க.

வாழ்த்துகளுக்கு நன்றி.

அக்மார்க்ன்னா எப்படிப்பா? கொஞ்சமாக் கலப்படம் பண்ணிக்கவா? :-)))

said...

KRS.

நம்ம கோயிலிலே ஐப்பசி மாசமே கார்த்திகைப் பவுர்ணமின்னு துளசி கல்யாணம் முடிச்சதாலே,
இப்ப கார்த்திகை வராமலேயே மார்கழி வந்துருச்சுன்னு வச்சுக்க வேண்டியதுதான்:-)))

பூனைக்குட்டிக்குன்னே ஒரு தொடரா (19 பதிவுகள்) போட்டாச்சுப்பா.
என் செல்ல(செல்வ)ங்கள்னு வந்தது.
இப்ப 'அவள்' பூமியிலே இல்லை(-:

said...

KRS.

//மிஸ், எனக்கு ஒரு சந்தேகம் :-)
98765432112345678903 இல், உங்க (நம்ம) தமிழ்மண ஸ்டாரைச்
சேத்துக்கிட்டீங்களா, டீச்சர்? :-)) //

இந்த அவசரம்தான் கூடாது. அடுத்த வரியைப் படிக்கலையா?

//இந்த வாரம் மட்டும் இந்தக் கணக்குலே ஒண்ணு எக்ஸ்ட்ரா.//ன்னு இருக்குல்லே?

said...

//இப்ப 'அவள்' பூமியிலே இல்லை(-://
சாரி டீச்சர்; மன்னிக்கனும்!!

//இந்த அவசரம்தான் கூடாது. அடுத்த வரியைப் படிக்கலையா?//
//இந்த வாரம் மட்டும் இந்தக் கணக்குலே ஒண்ணு எக்ஸ்ட்ரா.//ன்னு இருக்குல்லே?

டீச்சர் டீச்சர் தான்!
ஸ்டூண்டு ஸ்டூண்டு தான்!!
எனக்கு நல்லாப் புரிஞ்சு போச்சுது டீச்சர்! :-)

said...

KRS.

//டீச்சர் டீச்சர் தான்!
ஸ்டூண்டு ஸ்டூண்டு தான்!!
எனக்கு நல்லாப் புரிஞ்சு போச்சுது டீச்சர்! :-)//

அதெல்லாம் ஒண்ணும் இல்லையாக்கும்.
நீங்கெல்லாம் 'டீச்சர் சாமிக'ளாச்சேப்பா:-))))

said...

அன்பு நற் சேத்திறத்திற்கு,
வாழ்த்துகள்.
வாழ்க! வளர்க!!

said...

ஆற அமர நின்னு ஒரு வார்த்தை பேச( பின்னூட்டம் போட) முடியலைன்னா பாருங்களேன் நம்ம 'ஸ்பீடை'.//

இத படிக்கறதுக்கு முன்னாலயே நீங்க என்னுடைய பதிவுல போட்ட பின்னூட்டத்துக்கு இந்த மாதிரி ஒரு பதில போட்டேன்..

எப்படி என் ஞானதிருஷ்டி..

நீங்க ஒரு பயங்கரமான டைம் மேனேஜர்..

நிச்சயம் ஸ்டார் வாரத்த ஜொலிக்க வைப்பீங்க.. அங்க இங்க ஓடாம நிதானமா ஒக்காந்து எழுதி தள்ளுங்க..

said...

டீச்சர், ஒரு டவுட்.

//இந்த வாரம் மட்டும் இந்தக் கணக்குலே ஒண்ணு எக்ஸ்ட்ரா.
//

வாராவாரம் ஒன்னுபோனா ஒன்னு வந்துகிட்டுதானேக்கா இருக்கு! அப்புறம் கணக்குல ஒன்னு எப்படி எக்ஸ்ட்ரா?!

said...

//ஈரப் பெயிண்ட்'ன்னா நம்பாமத் தொட்டுப் பார்க்கிற மக்கள்ஸ் மட்டும், வானவெளியிலே 98765432112345678903 ட்ரில்லியன் ஸ்டார்ஸ் இருக்குன்னா, மறுப்பே இல்லாம ஒத்துக்குவாங்க.சந்தேகம் இருந்தா நீங்களும் எண்ணிப் பார்த்துக்கலாம். இந்த வாரம் மட்டும் இந்தக் கணக்குலே ஒண்ணு எக்ஸ்ட்ரா.//

துளசிம்மா!

இது ரொம்பத் தப்பு. எப்பவும் எண்ணிக்கை ஒன்னுதான். இந்தவாரம் மட்டும் அந்த ஒற்றை நட்சத்திரம் நம்ம , கிட்ட வந்து பிரகாசிக்குது. அவ்வளவுதான்....:)))

said...

உங்களை வாழ்த்த வயது இல்லாத காரணத்தால் வணங்கி மகிழ்கின்றேன்

said...

துளசி, பத்மா சொன்னதை நானும் வழிமொழிகிறேன். சீக்கிரம் செகண்ட் இன்னீங்ஸ் அடிச்சி ஆட ஆரம்பிங்க, உங்க சிஷ்ய பிள்ளைகள் காத்துக்கிட்டு இருக்குதுங்க ;-)

எம் பங்குக்கு இந்த பாட்டை உங்களுக்கு டெடிகேட் செய்கிறேன்

"யக்கான்னா யக்காதான்
யக்கா சொன்ன பக்காதான்"

said...

ஆலாபனையிலேயெ
இந்த வாரம்........

said...

//....சீக்கிரம், ஒரு சோடா ப்ளீஸ்//
சூப்பரா எழுதுற அக்காவுக்கு ஒரு சோடா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

said...

வாங்க ஞானவெட்டியண்ணா.
எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

said...

என்னங்க டிபிஆர்ஜோ,

//எப்படி என் ஞானதிருஷ்டி..//

என்னைச் சொல்லிட்டு இப்படிக் கலக்குறிங்க:-)))

said...

அருள்குமார் & மலைநாடான்.

தினமும் எத்தனை நட்சத்திரம் விழுந்து மடியுதுன்னு பார்க்கறதில்லையா?
எரி நட்சத்திரம் விழும். நல்லாப் பாருங்கப்பா.

நான் எண்ணுன நாள் இருந்தக் கணக்கைத்தானே சொல்ல முடியும்? :-))))

சந்தேகம் இருந்தா நீங்களே எண்ணிச் சொல்லுங்க. பதிவுலே திருத்திக்கலாம்:-)

said...

நாகை சிவா,

வாங்க. என்ன இப்படி புலி வணக்கமா இருக்கு?

வருகைக்கு நன்றிங்க.

said...

உஷா,

வாங்கப்பா. பாட்டு சூப்பர். ஆனா என்ன ராகம், தாளம்னு சொல்லக்கூடாதா?
அட்லீஸ்ட் என்ன ட்யூன்னாவது சொல்லுங்க. பின்னே எப்படிப் பாடிப் பார்க்கறதாம்? :-))))))))

said...

சிஜி,

கொஞ்சம் பொறுக்கணும். இதோ ....நம்ம இளா அனுப்புன சோடா
வந்ததும் குடிச்சுட்டு ஆரம்பிச்சுருவேன்:-)))

என்னங்க இளா, பார்சல் அனுப்பிட்டீங்கதானே?

said...

அட்டெண்டண்ஸ் போட வந்தேன்..அப்படியே ரெண்டு பேருக்கு ப்ராக்ஸி கொடுத்திட்டு போறேன்..!!!!

said...

வாங்க ரவி.

ப்ரெசெண்ட்

ப்ரெசெண்ட்

ப்ரெசெண்ட்

போட்டாச்சு:-)

said...

///இதுவரை கிடைச்ச ஆதாயங்களைப் பார்க்கணுமுன்னா....
நட்புதான்.///

ஆலாபனை நல்லா இருக்கு
எப்ப நிரவல்...........

காத்துவெளில காத்தாடுதுங்க துளசி.
இந்தப் பக்கம் காத்து தொடரட்டும்மா

டிசம்பர் 10 க்காக காத்திருப்புடன்
உங்கள்
மது

said...

"நட்பு தான்" - புரிந்தது,நேற்று.
தமிழ்மணத்தின் உதவியுடன்,திரு SK அவர்களும் கோவி.கண்ணனையும் சிங்கையில் பார்த்து அளவளாவிய போது.

said...

மது,

நிரவல்தானே? இதோ . ஒரு படம் போட்டு நிரப்பியாச்சு:-)))

என்ன காத்தாடுதுன்னு சொல்றீங்க? 200 பதிவு ( அத்தனையும் முத்து)
அள்ளி விட்டுருக்கீங்க. இப்ப எடுக்கவோ கோக்கவோன்னு நாங்கெல்லாம்
அலை பாய்ஞ்சுக்கிட்டு இருக்கோம்.

பாபா அழகா, அருமையாத் தொகுத்தும் கொடுத்துட்டார். எங்க வேலை சிம்பிள்:-)))

said...

குமார்.
எல்லாம் நம்ம தருமி சொன்ன கெமிஸ்ட்டரிதான்.
நல்லா ஒர்க்கவுட் ஆகுதுல்லெ?

சந்திப்பைப் பதிவு எழுதுங்க.

said...

திடீரென்று எழுதச் சொன்னால் எப்படி எழுதுவது ?
அறிமுகம்.. ஆலாபனை.. புதிர்....

உங்கள் பாடம் அருமை டீச்சர் !

said...

வாங்க மணியன்.

வகுப்புக்கு வராம கட் அடிச்சுக்கிட்டு, ப்ராக்ஸி கொடுக்கற மக்கள்ஸ் இருக்காங்க,
பார்த்தீங்கதானே? :-))))

அதான் ஒரு விளையாட்டு, கதைன்னு சொல்லி வகுப்புக்கு வரவழைக்கிறேன்.

இங்கே நம்மூர்லேயும் இப்படித்தான். வெறும் லஞ்ச் பாக்ஸ்
எடுத்துக்கிட்டுப் பசங்க பள்ளிக்கூடம் போகுதுங்க.

said...

டீச்சர்...பந்தியில மொதப் பரிமாறல் வாங்குனப்புறம் எந்திரிச்சா போயிர்ரோம். ரெண்டாவது மூனாவதுன்னு வாங்குறதில்லையா. சில பேரு ரெண்டாவது மூனாவது பந்தீன்னு சிறப்பாச் செய்வாங்க. அப்படியிருக்குறப்போ நீங்க வெளுத்துக் கட்டுங்க.

said...

வாங்க ராகவன்.

அப்படீங்கறீங்க? செஞ்சுறலாம். செஞ்சுட்டாப் போது ;-)))

said...

//எப்பவும் எண்ணிக்கை ஒன்னுதான். இந்தவாரம் மட்டும் அந்த ஒற்றை நட்சத்திரம் நம்ம , கிட்ட வந்து பிரகாசிக்குது. அவ்வளவுதான்....:)))//

"பசங்க மடக்கிட்டாங்களே; டீச்சர் என்ன பண்ணப் போறாங்கன்னு பார்த்தேன். ம்ம்..ம்.. டீச்சரா கொக்கான்னானாம். :)

said...

கொக்கென்றா நினைத்தீர் கொங்கணவீர்? :-))))

வாங்க தருமி.

சமாளிச்சுட்டேந்தானே?

'ஜெயிச்சுட்டேன் கண்ணா 'ன்னு பாடவா? :-)))

said...

டிசம்பர் 10 லீவா? வெளியூர்ப் பயணமா?
(பார்க்க: மதுமிதா பின்னூட்டம்)