Wednesday, November 15, 2006

புதிரின் விடை

மக்களே, இந்தப் புதிருக்கு விடை கண்டு பிடிக்கறதுலே உங்க ஆர்வம் தெரிஞ்சு போச்சு. நேத்து,குழந்தைகள் தினமாச்சா? எல்லாரும் எப்படி இருக்கீங்கன்னு பார்த்தேன். இன்னும் நம்ம மனசுலெ ஒரு மூலையில் கொஞ்சம் குழந்தைத்தனம் ஒட்டிக்கிட்டு இருக்குன்னு தெரிஞ்சு போச்சு. இது உண்மைக்குமே சந்தோஷமான ஒரு விஷயம். குழந்தைப் பருவம்ன்னு சொல்றமே அது கோடி கொடுத்தாலும் நமக்குத் திரும்ப வருமா?


நன்மனம் ஆரம்பிச்சு வச்சதை சந்தனமுல்லை முடிச்சு வச்சுருக்காங்க( இந்த நிமிஷம் வரை)


உஷா சொன்னாங்க பாருங்க,' இலையைக் கிள்ளுனா பால் வருமு'ன்னு அப்ப, 'அட! இது ஒருநல்ல ஐடியாவா இருக்கே. வசதியாப்போச்சு'ன்னு நினைச்சேன்.


கண்ணபிரான் 'க்ளூ' கொடுக்கலை, ஆப்ஷன்ஸ் வேணுமுன்னு சொன்னாருல்லே? பதிவுலேயே ஒரு சின்ன 'க்ளூ' கொடுத்துருந்தேன். யாரும் கவனிக்கலை(-:


நந்தியார்வெட்டை, நார்த்தங்காய்,எலுமிச்சை, ஆரஞ்சு, பப்ளிமாஸ், மாங்காய், வாதுமைக் கன்று, குரோட்டன்ஸ் வகை, ஆலங்கன்னு, தேயிலை, முல்லை, முடக்கத்தான் கீரை, மாதுளை, நித்யகல்யாணி,கனகாம்பரம், ஆப்பிள், வால்நட், ஆலிவ். இன்சுலின் ப்ளாண்ட், அவகாடோ, பலா, ஆலமரம், தேக்கு,பாக்கு, சீதாபழம், சப்போட்டா,காபி, செண்பகம், மிளகு, இருவாட்சி/கருவாட்சி, மல்லிகைன்னு பதில் சொல்லி இருக்கீங்க.


நல்லவேளை தென்னைன்னு சொன்னவுங்க யாரும் வாழைன்னு சொல்லலை:-))))


நம்ம ஹரிஹரன் கொஞ்சம் போல பக்கத்துலே வந்த மாதிரி இருந்துச்சு. அவர் கட்டாயம் கண்டு புடிச்சுருவாருன்னு நம்புனேன். ஊஹூம்.....


சந்தனமுல்லை, அவுங்க பாட்டுக்கு சகட்டுமேனிக்கு அதையும் இதையும் சொல்லப்போய்,அதுலெ ஒரு சரியான விடை வந்து பொருந்திக்கிச்சு!


நம்ம யோகனும், 'ஒரு வேளை சந்தனமுல்லை சொன்னதுபோல .....அதா இருக்கலாமோ'ன்னு வேற கேட்டுட்டார்.இந்த 'சந்தனமுல்லை சொன்னதுபோல'ன்ற வார்த்தைகளைச் சேர்க்காம இருந்துருந்தா, அவருக்கும் பரிசுலே பங்கு கிடைச்சிருக்கும்.( பாவம் பொழைக்கத் தெரியாத மனுஷர்):-))))


'கெஸ் ஒர்க்'தான்னு சொன்னாலும் சரியான விடையைச் சொன்ன சந்தனமுல்லைக்கு ஒரு சபாஷ்!


அவுங்கதான் எத்தனையோ விடை சொன்னாங்களே, அதுலே எது கரெக்ட்ன்னு உங்களையே கேக்கவா?


ச்சும்மா............. அடிக்கவந்துராதீங்கப்பா:-)))

சரியான விடை: காப்பிச் செடி.


நம்ம டிபிஆர் ஜோவுக்கு வேற மாதிரி சந்தேகம். சரியான விடையைச் சொன்னாலும் நான் , இங்கே இருந்து அனுப்புவேனான்னு? இப்படி எல்லாம் இருந்தா எப்படிங்க ஜோ? நான் ஊருக்கு வராமயாப் போயிருவேன்? :-)))


ஆங்.............. பரிசு என்னன்னு சொல்லலை இல்லை?


அந்தக் காப்பிச் செடியில் முளைச்சு வரப்போற முதல் (அறுவடை!!!!) செட் காப்பிக்கொட்டையில் தயாரிச்ச முதல் காப்பியையே பரிசுன்னு கொடுக்கலாமுன்னுதான். அதுக்கு ரொம்ப வருஷம் காத்துருக்கணும்(-:


அப்ப பரிசு? அருமையான காஃபி ஷாப்புக்கு வின்னரைக் கூட்டிட்டுப் போகணும். இதுலே செலக்ஷன், அவுங்க இஷ்டம்.


நம்ம சந்தனமுல்லை, சென்னைவாசி என்றதாலெ இன்னும் வசதியாப் போச்சு.


ஆர்வமாக் கலந்துக்கிட்ட நண்பர்கள் அனைவருக்கும்( 34 பேர். அதெல்லாம் எண்ணிட்டமுல்லெ) நன்றி.


மத்தியானம் எல்லாரும் இன்னிக்கு ஒரு சினிமாவுக்குப் போறோம். ரெடியா இருங்க. உலக சினிமாக்களில் ஒண்ணு.


தமிழ், ஆங்கிலம் இல்லை. வேற எதுன்னு கேக்கவா?............வுடு ஜூட்................

38 comments:

said...

மேடம்,

நான் சொல்லலான்னு வந்தேன்.. நீங்களே பதில் சொல்லிட்டீங்க..

அதனால பரிசை எனக்கே கொடுக்கவேணுமுன்னு கேட்டுக்குறேன்..

said...

நம்ம பிரேமலதா(வும்) சரியான விடையைச் சொல்லி இருக்காங்க. ஆனா இப்படி
இந்த மெயில் பாக்ஸ் சதி பண்ணுமா?
இப்பத்தான் காமெண்ட்ஸ் காமிக்குது(-:

said...

வாங்க சிவபாலன்.

பரிசுதானே? கொடுத்துட்டாப்போச்சு. பிரமாதமா என்ன?

said...

டீச்சர்! நான் லேட்டு, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து
காப்பிச்செடின்னு சொல்லறதுக்கு முந்தி உங்க பதில் பதிவு
வந்திருச்சு.

கோத்தகிரி ரோட்டிலே எத்தனைச்செடி மரம் பாத்திருக்கேன்.

நீங்க குடுக்காட்டி என்னங்க டீச்சர், நானே எடுத்துக்கறேன் . ஆறுதல் பரிசை.

பரிசு எலந்த வடைதானே????

said...

வாங்க பெருசு.

இலந்தவடை கூடவே கொஞ்சம் 'நல்ல' காஃபியும்
போட்டு வையுங்க. இதோ வந்துக்கிட்டே இருக்கேன்:-))))

said...

அப்படி என்ன க்ளூ குடுத்தீங்க? பழைய பதிவை மீண்டும் படிக்க வைக்க இப்படி ஒரு டெக்னிக்கா? நல்லாத்தான் இருக்கு.

எனக்கு காப்பி வேண்டாம் போ. (நல்ல கையை காலை உதைச்சுக்கிட்டு நான் சொல்லற மாதிரி கற்பனை பண்ணிக்குங்க.)

said...

ஆஹா, மீண்டும் படிச்சிட்டேன். உங்க க்ளூ புரியுது. ஆனா நான் வேற ரூட்டில் இல்ல போயிட்டேன். குதிரை விரும்பிச் சாப்பிடும் செடி எது என்ற லெவலில்!

கீ.வி.மீ.ம.ஒ.

said...

கொத்ஸ்,

மீசையைத் தட்டிவிட்டுட்டுப் போய்க்கிட்டே
இருக்கலாம், பிரச்சனை இல்லை:-))))

க்ளு இருக்குதானே? :-))))

குதிரைன்னதும் ஞாபகம் வருது. இங்கெல்லாம் 'கொள்ளு' கிடைக்கறதில்லை.
எந்தப் பேருலெ யு.எஸ்.லே கிடைக்குமுன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்.

said...

/அந்தக் காப்பிச் செடியில் முளைச்சு வரப்போற முதல் (அறுவடை!!!!) செட் காப்பிக்கொட்டையில் தயாரிச்ச முதல் காப்பியையே பரிசுன்னு கொடுக்கலாமுன்னுதான். அதுக்கு ரொம்ப வருஷம் காத்துருக்கணும்(-://

துளசி..நல்லவேளை..பதில் தெரிஞ்சும் நான் சொல்லல..ஹிஹிஹி.. பின்ன யாரு அத்தனை வருஷம் காத்திருக்கிறது ஒரு கப் காப்பிக்காக

said...

விக்கிபசங்க குழுமத்தில் இருக்கறவங்க கேள்விக்கு பதில் சொல்லலாமே தவிர கேள்வி கேட்கலாமோ?

இவ்வளவு கஷ்டமான டெஸ்ட் வைக்கும் டீச்சர் டவுண் டவுண் அப்படின்னு கோஷம் போடுவோமுன்னு எதிர்பார்த்தா அதான் இல்லை. தெரிஞ்ச கேள்விக்கு பதில் சொல்லிடுவோம் இல்ல.

சரி கொள்ளுக்கு ஆங்கிலப் பெயர் Horse Gram. மேல் விபரத்துக்கு இதோ சுட்டி .

அடுத்தது இந்த் செடி படத்த போட்டு கேள்வி கேட்டா டென்ஷன் ஆகிடுவேன். ஆளவிடுங்கப்பா. சரியான விடையைச் சொன்னா அப்புறம் கொள்ளு ரசம் தரேன் குடின்னு கிளம்புவீங்க. ஐயாம் தி எஸ்கேப்பூ. :)

said...

கொத்ஸ்,

இங்கே 'ஹார்ஸ்க்ராம்' னு ஒண்ணு கிடையவே கிடையாதுன்னு
மக்கள்ஸ் சாதிக்கிறாங்கப்பா. நம்ம ஃப்ரெண்ட் 'ஷோ ஹார்ஸ்' வச்சுருக்காங்க.
அவுங்களுக்கு இதைப் பத்தி தெரியவே இல்லை(-:

இங்கே குதிரைங்க 'காரட்' தின்னுதுங்க:-))))

said...

துளசி வேண்டி விரும்பி கேட்டுகிட்டதாலே
நான் போட்டியிலே கலந்துக்கலே...
அதான் குழப்படி

said...

நீங்க சென்னைக்கு வாங்க,என் வீட்டில் காபி போட்டு தரேன்.
;-0)

said...

சிஜி,

:-))))


த்தோடா............ இப்படியும் சிலர்:-)))))

said...

குமார்,

அது என்ன சென்னை? சிங்கையிலே காஃபி போடறதில்லையா? :-)))

said...

எங்கூர்ல காப்பிச்செடி வேற மாதிரி இருக்கும். இது நியூசிக்காப்பீன்னு நெனைக்கிறேன். குடிச்சா லேசாக் கிக்கு வருவாம். இந்தியக் காப்பியில கிக்கு இருக்காது. :-)))))

said...

அட தேவுடா,
//பரிசு என்னமோ ஏதோன்னு கன்னாபின்னான்னு குளம்ப வேணாம்//

நியூசிக்கு நான் வந்து, உங்க வீட்டுக்கு வருகை புரிந்தால், இப்படி போட்டி வைச்சு கரெக்டாப் பதில் சொன்னாத் தான் காப்பித்தண்ணி தருவீங்களா டீச்சர்? :-)

அப்பறம், ஐ.ஆர்.8 ஐக் காட்டி, அதுக்கும் பதில் சொன்னாத் தான் சாப்பாடே கிடைக்கும் போல இருக்கே! :-)

நியூசிக்கு வருவதற்கு முன் விசா வாங்கறமோ இல்லையோ, ஒரு நல்ல பாட்டனி புக் (படம் போட்ட) வாங்கணும்பா!!!

said...

வாங்க ராகவன்.

இங்கே நியூஸியிலே ஏதுங்க காஃபி எல்லாம் விளையுது. இறக்குமதிதான்
எல்லாமே.
இப்ப சில வருசங்களாத்தான் வெளிநாட்டுலே இருந்து பரிசோதனையா சில
ட்ராப்பிக்கல் ' செடி & விதைகளைக் கொண்டு வந்துருக்காங்க. நம்மூட்டு
வாழை, கருவேப்பிலை எல்லாம் இப்படி அதிசயப்பட்டு வாங்குனதுதான்.
குளுர் அடிச்சுறாம அதுகளைக் காப்பாத்துறதுலெயெ நம்ம கிக்கு
எல்லாம் ஓடிரும்:-)))

said...

KRS,

கண்டு பிடிச்சீங்க:-))))


நியூஸிக்கு பயப்படாம தைரியமா வாங்க. ஐஆர் எட்டுன்னா, இந்த பொன்னி அரிசியா?
25 வருசமா தாய்லாந்து ஜாஸ்மின்தான் . மல்லிப்பூ சாதம்:-))))

said...

ஆஹா..!
ஆத்தா நான் பாஸாயிட்டேன்..:-)..!

said...

நன்றி..துளசி டீச்சர்!!

said...

நான் காபி குடிக்கறதில்லையே அதனாலே தான்.

said...

வாங்க சந்தனமுல்லை.

வாழ்த்து(க்)கள். சந்திப்போம் கூடிய சீக்கிரம்:-)

said...

குமார்,


நானும் காபி& டீயைத் தவிர 'மற்றதை' குடிக்கறதில்லையாக்கும்:-))))

said...

பாத்தீங்களா?

பரிசுன்னு இப்படி ஏதாச்சும் சிம்பிளா குடுத்து சமாளிச்சிருவீங்கன்னு தெரிஞ்சுதான் பதில் தெரிஞ்சும் சொல்லலை:)))))

said...

போட்டியில் திசைத்திருப்புதலும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. - நோ ஸ்மைலி
1-நான் பார்த்த காபி செடி இபப்டி இருக்கவே இருக்காது. (ஜிரா, துணைக்கு வாப்பா)
2- பிரேமலதா விடாதீங்க, பரிசுக்கு நீங்களும் தகுதியானவரே, அரை கப் காபிக்கு இப்பொழுதே உரிமை கொண்டாடுங்கள்

said...

என்னங்க டிபிஆர்ஜோ.

இதுவா உங்களுக்கு சிம்பிளாத் தெரியுது?

ஒரு கப் காபிக்கு நான் எவ்வளவு தூரம் பயணப்படணும் பாருங்க.

said...

உஷா,

வாங்க வாங்க. ஏன்? எதுக்கு? இப்படி நோ ஸ்மைலி? தீர்ந்து போச்சா?
பேசாம ஜிரா & பிரேமலதாவைக் கூட்டிட்டு இங்க வந்துருங்க. அரைக் கப் ஏன்?
ஆளுக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு 'குடி'க்கலாம் :-)))))))

என்கிட்டே ஸ்மைலி நிறைய ஸ்டாக் இருக்கு. வேணுமா? :-))))

said...

ஹலோமேடம், இது என்ன கலைமாமணி விருதா? இஷ்டத்துக்கு அள்ளித்தர! போட்டியில் வென்றவருக்கு நீங்கள் தரும் அங்கீகாரம். அதை மறுப்பது என்பது உங்கள் அராஜக மனோபாவத்தைக் காட்டுகிறது. முதல் அறுவடையின் பொழுது பிரேமலதா நியூசி வருவார், உரிமையுடன் உங்களிடம் அரை கப் காபி கேட்பார். அப்பொழுது தர மறுத்தால் கடுமையான
விளைவுகளை சந்திப்பீர்கள் என்று எச்சரிக்கிறேன்.

said...

துளசியக்கா,

போடிக்காரன் காப்பின்னு கண்டுபிடிக்கமாட்டானா? எங்க ஊர்ப்பெருமையை நானே சொல்லிக்கிறதைவிட எங்க ஊர் மருமகளாகிய நீங்களே சொன்னா அது தானே போடிக்குப் பெருமை!

(மண்ணைக் கவ்வினாலும் மண்பாசம்ன்றது இதுதான்)

said...

உஷா,

சரண்டர்.

முதல் அறுவடைக்கு ரெடியானதும் பதிவு போட்டுருவேன். பிரேமலதா
( இந்த சாக்குலேயாவது) வந்ததும் காபிதான். ஆனா அரைக் கப் இல்லை. முழுக் கப் தான்.
இதுக்கு சம்மதம் என்றால் உடனெ ஒப்பந்ததுலெ கையெழுத்துப்போட நான் தயார்.

ஆமாம், கலைமாமணி விருது ( எனக்கும்) ஒண்ணு கிடைக்குமா? :-)))

said...

ஆஆஆஆஆ ஹரிஹரன்.

இந்த மண்பாசம் இப்படி(யும்) பாடாய்ப் படுத்துமா?

said...

வெற்றி வெற்றி எங்கள் உரிமை போராட்டம் வெற்றி. பிரேமலதா எதற்க்கும் ஒரு எட்டு நியூசி போய் துளசி செடிய ஒழுங்கா வளர்க்கிறாங்களான்னு பார்த்துட்டு வந்துடுங்க. அப்ப அப்ப போனாலும் சரியே

said...

ஆமாம் உஷா. வரும்போது பிரேமலதாவோட காபிச் செடியையும்
கொண்டு வரட்டும். ரெண்டு செடிகளும் மீட் செஞ்சு பேசுனா இன்னும் சீக்கிரமா
வளருமாம்.:-)))

Anonymous said...

Coffeenna adhu Narasu's coffee thaan...enakku Thulasi akka cofeellam venaam...plus andha coffee pulikkum...singamulla...meesaila mann ottalailla...(meesai illanguradhu vera vishayam)

said...

ஃபயர் விதின்( அகத்தீ???)

'பேஷ் பேஷ்' - இதை விட்டுட்டீங்களே? :-))))

said...

காப்பிச்செடியைக் காட்டிக் கொடுத்ததற்கு நன்றி.

said...

வாங்க ஓகை.
//காப்பிச்செடியைக் காட்டிக் கொடுத்ததற்கு ...//

இது என்ன... என்னை 'எட்டப்பி' ரேஞ்சுக்கு ஆக்கிபுட்டீஹ?