Thursday, November 23, 2006

ச்சும்மா இருப்பது எப்படி?

எனக்கும் தெரியாததால் , தெரிந்தவர்கள் யாராவது சொல்லிக் கொடுத்தால் நல்லது.

47 comments:

said...

சும்மா இருக்கத் தெரியாம, எதையாவது எழுதறவங்க பதிவு எல்லாம் படிக்காம, பின்னூட்டம் போடாம இருந்தாலே சும்மா இருக்கற மாதிரிதான்.

இப்போ என்னையே எடுத்துக்குங்க, நான் வந்து யாராவது சும்மா இருக்கத் தெரியாமா எழுதின பதிவைப் படிச்சு.....


...சொதப்பிட்டேனோ!!!! :-D

Anonymous said...

மிக கடினமானது. ஒரு 30 விநாடி சும்மா இருந்துட்டீங்கன்னா அப்புறம் யோகிதான். ஆமா எந்த ச்சும்மா இருக்றத கேக்குறிங்க? ஆஹா கி ..கி..

said...

அட கடவுளே! எப்படி-ன்னு பதிவு போட ஆரம்பிச்ச புண்ணியவான் யாரு? நெலமை மோசமாயிட்டே போகுது பாருங்க..

said...

வாங்க கொத்ஸ்.

"இப்படியும் சிலர்" :-)))

--------

சுரேஷூ,

இது அது இல்லை.

கொஞ்சம் கீழ் லெவல்:-)

---------

சேதுக்கரசி வாங்க.

இப்படிப் பாயைப் பிராண்ட வச்சுட்டாங்கப்பா(-:

said...

'சும்மா இருப்பதே சுகம்'
அப்டீன்னா,

சுகமா இருப்பதே சும்மா இருப்பதா?

said...

அடக்கடவுளே

இது என்ன வியாதி.

ஒருத்தருக்கு தும்மல் வந்தா அடுத்தவருக்கு வரும். கொட்டாவியும் தொடர்ந்து கிட்டே வரும்.

இங்கே எப்படி? எப்படி? எப்படி?

ராத்திரி தான் இம்சைன்னா காலையில வந்து பார்த்தா இப்பவும் எப்படி இன்னும் தீரவில்லையே.

said...

ஆனா ஒண்ணு. இதுதான் நீங்க போட்டதுலயே சின்ன பதிவு. சரியா?

வேர்ல்ட் ரெக்கார்ட்!!!!!

Anonymous said...

சும்மா இருப்பதில்
சுகம் இருக்கிறது!
சும்மாவே இருந்துவிட்டால்
சுகம் எங்கே இருக்கிறது!
சும்மா இருக்க
சும்மா முடியாது!
சும்மா இருப்பது
சுலபம் இல்லேங்க!
சுகமாக இருப்பவர்களில் சிலர்
சும்மா இருக்காதிருந்தவர்கள்!
சும்மா இல்லாமல் இருந்தவர்கள்
சுகமே காணாதும் உள்ளார்கள்!
எனவே
சும்மா இருந்தாலும்
சும்மா இருக்கவேண்டும் சரியா!

said...

டீச்சர், இந்த "எப்படி" வண்டு (உபயம் கைப்புள்ளை) தமிழ் மணத்துல இன்னிக்கும் இருக்கும் போல இருக்கு.

:-(

said...

இலவசக்கொத்தனார் said...
//ஆனா ஒண்ணு. இதுதான் நீங்க போட்டதுலயே சின்ன பதிவு. சரியா? //

யோவ் கொத்ஸ் "சும்மா" இருக்க மாட்டீரா?


அன்புடன்...
சரவணன்.

said...

//இந்த "எப்படி" வண்டு (உபயம் கைப்புள்ளை)//

ஓ.. கைப்புள்ளயோட வேலை தானா இது? அப்பவே நெனச்சேன்!!

Anonymous said...

:)

said...

நான் யோசித்து டிராப்டில் போட்டு வைத்திருந்த பதிவை, சும்மா வெளியிட்டமைக்காக சும்மா என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

said...

சிஜி,

இல்லை. சுகமா இருந்தா அப்புறம் 'ச்சும்மா' இருக்க முடியாது:-)
----------------
சிந்தாநதி,

துன்பம் எப்போதும் தொடர்ந்துதான் வருமாமே.
அப்ப இம்சை?

----------

வாங்க கொத்ஸ்,

'அளந்ததுக்கு' நன்றிங்க.

said...

வாங்க பிரேம்.

ச்சும்மா ச்சும்மா இப்படிக் கவிதை பாடிக்கிட்டு இருந்தா எப்படிங்க?


---------

சரவணன், வாங்கப்பா.

இதுக்கே இப்படின்னா அப்புறம் நான் என்ன சொல்றது?

என்ன கொடுமை சரவணன்?

said...

நன்மனம்,

ஆஹா.... இது நம்ம கைப்ஸ் உபயமா?சேதுக்கரசி,

நான் இல்லைப்பா. நம்ம கைப்ஸ்ஸாம்:-)

said...

பொன்ஸ்,

இப்படி வந்துட்டு 'ச்சும்மா ' ஸ்மைலி போட்டுட்டுப்போனா
என்ன அர்த்தம்? :-)

முத்துக்குமரன்,

நீங்களுமா?

ச்சும்மாப் போட்டுப் பார்த்தேன்.

said...

நல்லா பொழுதேன்னிக்கும் தூங்கலாம்...

டீவியில் பழைய டிவீடீக்களை பார்த்து ரசிக்கலாம்...

சமையல் குறிப்பு புத்தகங்களை பார்த்து ஏதாவது புதுசா ட்ரை பண்ணி கோபாலை டார்ச்சர் செய்யலாம்...

ஷாப்பிங் போய்ட்டு எதுவுமே வாங்காம வரலாம்...

ஏதாவது ஒன்னையாவது ட்ரை பண்ணுங்க...

இண்டர் நெட் மட்டும் ஓப்பன் செய்யாதீங்க...

said...

ம்..ம்..ம்
இப்பொழுது நான் இருக்குற மாதிரி இருக்கணுமா?

said...

துளசியக்கா,

ஒண்ணுமில்லை சும்மா எழுதியிருக்கீங்க.

சும்மான்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்றாலும் சும்மா சும்மா உபயோகப்படுத்துறோம்... அப்படியில்லாம சும்மா இருப்பது எப்படின்னு சொல்ல வர்றீங்களேன்னுதான் ச்சும்மா எட்டிப்பார்த்தேன்

said...

கப்சிப் என்று கைகட்டி உட்கார்ந்திருக்கிறோம் டீச்சர் :(

said...

'வானம்பாடி'யில், தூக்கணாங்குருவிக்கூடு.... பாட்டில்
கவிஞர் கண்ணதாசன்:

"அம்மாண் வீட்டுப் பெண்ணானாலும்
சும்மா கிம்மா கிடைக்குமா..."

சும்மாவுக்கும் கிம்மாவுக்கும் என்னங்க
தொடர்பு?

said...

செந்தழல் ரவி,

அட தேவுடா........ நீங்க நினைக்கிற ச்சும்மா
இல்லீங்க ,இது வேற 'ச்சும்மா':-))

said...

ஞானவெட்டியண்ணா,

வாங்க. வாங்க.

ச்சும்மா இந்தப் பக்கம் பார்த்துட்டுப் போலாமுன்னு
வந்தீங்களாக்கும்?

எல்லாம் நீங்க சொன்னதேதான்:-)))

said...

வாங்க ஹரிஹரன்.

சும்மாவுலெயே எத்தனை ச்சும்மான்னு பாருங்க? ச்சும்மாத்தான்
எண்ணிப் பாருங்களேன்:-)))

said...

வாங்க மணியன்.
//கப்சிப் என்று கைகட்டி உட்கார்ந்திருக்கிறோம் டீச்சர் :(//
இப்படிச் சும்மா இருந்தா? எதையாவது படிக்கிறது......

said...

சிஜி,

அந்த கிம்மாவை விடுங்க.

இதெ பாட்டுலெ மொதல் பகுதி ரெண்டாவது வரியைப் பார்க்கலையா?

'ச்சும்மாப்போன மச்சானுக்கு என்ன நெனப்பு மனசுலெ?'

Anonymous said...

இப்படி 'எப்படிப்' பதிவுகளை நிறுத்துவது எப்படி?

இது எப்படி துளசி அக்கா? :-))))

said...

வாங்க அகத்தீ.
//இப்படி 'எப்படிப்' பதிவுகளை நிறுத்துவது எப்படி?//

அட! இது ஒரு நல்ல தலைப்பா இருக்கே!
பேசாம இதைப் பத்தி நீங்களே ஒரு பதிவு போட்டா என்ன?

நாங்கெல்லாம் வந்து 'எப்படி? எப்படி?'ன்னு சொல்லித் தருவொம்லே:-)))

said...

என்னாச்சுங்க துளசி,நேற்று போட்ட பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்கவில்லையா?
"சும்மா இருப்பது எப்படி" என்று கேட்டதால்,நேற்று படித்துவிட்டு சும்மா இருந்தேன்.:-))

said...

குமார்,

நேத்து போட்ட பின்னூட்டமா?
ஏங்க 'ச்சும்மா'னாச்சுக்கும் சொல்றீங்களா?
அப்படி ஒண்ணும் வரலையே?

ஒருவேளை அது 'ச்சும்மா' வேற இடத்துக்குப் போயிருச்சோ?

இந்த தபால்பொட்டி 'ச்சும்மா'வே இருக்கறதில்லை:-)
அதான் புரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்(-:

said...

ஹி...ஹி...
சும்மா கீறது அவ்ளோ சுளு இல்ல..

நம்மளுக்கு பொயப்பே அதுதான்..
தொயில் ரகசியம்... அவ்ளோ ஈஜியா சொல்லிருவோமா இன்னா...

said...

டீச்சர்
எவ்ரிதிங் ஓகே?
இந்த ""ச்சும்மா இருப்பது எப்படி?" - ச்சும்மா தானே?

இல்லை ஏதாச்சும் ஆன்மீகம் அப்படி இப்படின்னு பித்தானந்த சுவாமிகள் கிட்ட போய்....அவரு ஏதாச்சும் குழப்பி....
எங்க போனாருப்பா அவரு; இங்க ஆளைக் காணோமே!

said...

வாய்யா அரைபிளேடு.

இப்பெல்லாம் 'தொயில் ரகசியங்கள்' பெரிய பெரிய
'ஒர்க்ஷாப்' நடத்திச் சொல்லித் தர்றதுதான் ஃபேஷனாம்.

பேசாம 'ஒரு வாரம் கோர்ஸ்னு விளம்பரம்' பண்ணிரலாமா?

நல்லா துட்டு பண்ணிரலாம்:-))))

said...

வாங்க KRS..

எல்லாம் சரியாத்தான் இருக்கு.

நேத்துக்காலையிலே வந்து பார்த்தா....... தமிழ்மணம் சூடா இருந்துச்சு.
போதாக்குறைக்கு 'எப்படி'கள் வேற!
அதான் எல்லாரும் இப்படி இருந்தா 'எப்படி?'ன்னு அப்படி
ஒரு பதிவைப் போட்டேன்:-)

said...

/"ச்சும்மா இருப்பது எப்படி?"/

சும்மாதான்.

said...

வாங்க கடலாரே.

'மொட்டை'போட்ட கையோடு 'ச்சும்மா' இருக்கீராக்கும்? :-)))

said...

சும்மா இரு சொல்லற. இருந்தால் அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

Anonymous said...

அக்கா!
அறிந்ததும் எனக்கும் சொல்லுங்கோ!!
என்னைப் புளக்கர் பினூட்ட விட்டுவிட்டது;
யோகன் பாரிஸ்

said...

வாங்க ராகவன்.

வீட்டுவேலை செஞ்ச களைப்பில் இன்னிக்கு மெய்யாலுமே 'சொல்லற'தான்.:-)))

said...

யோகன்,

தெரிஞ்சதும் பதிவு போட்டுறமாட்டேனா? :-)))))

said...

அக்காவ், எப்படின்னு கண்டுபிடிச்சா எனக்கும் சொல்லி குடுங்க. ப்ளீஸ்

said...

//ச்சும்மா இருப்பது எப்படி?" //

நீங்க இப்போ இருக்குற மாதிரி தான்.

said...

இப்ப நீங்க இல்லையா? அதுமாதிரிதான்:)

said...

வாங்க, WA

இது தெரிஞ்சா நான் 'ச்சும்மா' இருந்துருக்க மாட்டேனா?

said...

என்னங்க லொடுக்கு,

நான் இப்ப இருக்கறதைப் பார்த்தீங்கன்னா...........

'ச்சும்மா' கண்ணு கலங்கி நின்னுருவீங்க ஆமாம்:-)

said...

என்னங்க டி.பி.ஆர்.ஜோ,

ha இப்படியும் ஒரு எண்ணம் வந்துச்சே(-: