Saturday, December 24, 2005

அடுத்தவீட்டுக்காரரை நேசி.


படத்தில் இருப்பது கேத்தரீனும், எய்மியும், பின்னே......


பிள்ளைகள் வளர்கின்றார்கள்.
பிள்ளைங்கன்னா வளராம இருக்குமா? வளராமலே இருந்தா அது புள்ளைதானா?இங்கே சொல்ல வந்தது புள்ளைங்க எப்படி வளர்கிறாங்கன்னு?

தாமாய்!


பக்கத்தூட்டுக்காரரு பெரிய குடும்பி. மொத்தம் பத்து வாய்/வயிறு.
பெரியவன் 'ஜோனத்தன்'. எட்டுவயசு.அடுத்து 'கேதரீன், எய்மி, ஆலா' ன்னு 7 முதல் ஒண்ணரைவரை.


அப்புறம் சாம் இருக்காரு. இவர் பெரியவரு.இப்பப் புதுசா வந்திருக்கறவரு மஃப்பின். வயசுஆறு மாசம் தான். ஆனா ரொம்பத்துரு துரு! பெரிய பெரிய கண்ணு.


அப்புறம் ரெண்டு பூனைங்க வேற இருக்கு. கறுப்புக்கு பேர் மில், ஜிஞ்சருக்குப் பேர் பூன்( Mill & Boon)


நம்ம தோஸ்து இதுலே ஜோனத்தந்தான். பேச்சுலே ஒரு மெச்சூரிட்டி தெரியும். மூணு தங்கைகளுக்குஅண்ணன்றதாலெ கூடுதல் பொறுப்பு தானே வந்த மாதிரி இருக்கும்.


காலையிலே பள்ளிகூடம் போய் பகல் மூணு மணிக்குத் திரும்பி வந்துட்டார்ன்னா மத்தவங்களை மேய்க்கறதேவேலை. நம்ம வேலியோரம் இருக்கற மரக்கிளை பயங்கரமா ஆடுச்சுன்னா, பசங்க 'ட்ராம்போலின்'லே குதிக்குதுங்கன்னுஅர்த்தம். எட்டுப்பேரா இருக்கறதாலே பொழுது அப்படியே விளையாட்டுலேயே போயிருது.


மஃப்பினுக்கு அவுங்க வீட்டுலே இருக்கறதைவிட நம்ம வீட்டுலே இருக்கத்தான் விருப்பம் கூடுதல். நம்ம வீட்டுக் கதவு மூடியிருந்தாலும் வாசலிலே வந்து குரல் கொடுக்கத் தெரிஞ்சிருக்கு. மில் & பூன்னுக்கும் கூட நம்ம வீட்டுலே வந்து தண்ணீ குடிச்சாத்தான் திருப்தி.


கதவைத்திறந்ததும் வீட்டுக்குள்ளே ஒரே பாய்ச்சல்தான். முதல் காரியம் என்னன்னா நம்ம கோபாலகிருஷ்ணனோடசாப்பாடு எங்கே இருக்குன்னு தேடிக் கண்டுபிடிக்கறது. அடுத்த வேலை? அது எல்லாத்தையும் வழிச்சு முழுங்கறது.



திறந்திருக்குற எல்லாக் கதவுகளையும் கடந்து உள்ளெ போய்ப் பார்த்தால்தான் மனசுக்கு நிம்மதி. புது ஆளுங்களைப்பார்த்தால் ஒரு சின்ன சத்தம். ஒரு மிரட்டல் வேற. கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு மவோரி வெல்கம் கூடத்தருவார்.அதுதான் மூக்கோடு மூக்கை தொடறது. ஆனால் நம்ம கோபால கிருஷ்ணன் ரொம்ப தலைக்கனம் பிடிச்சது. இவரைச்சட்டைகூடச் செய்யாது:-)


தினமும் ஒருதடவையாவது மஃப்பின் தரிசனம் தரத் தவறாது. 'லாஸோ அஃப்ஸோ' வகையாம். இப்பெல்லாம்அவரோட பாஷை எனக்குப் புரியுது. இன்னிக்கு என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தார். கவனமாக் கேட்டப்பத்தான் புரிஞ்சதுஅவர் என்ன சொல்றார்ன்னு.


'அண்ணன் ஸாம் வாழ்க!'


இன்னும் ஒரு 'ஸ்லீப்'தான் இருக்கு. பொழுது விடிஞ்சா கிறிஸ்மஸ். வழக்கம்போலவே உங்க எல்லாரையும் விட மொத ஆளாப் பண்டிகைகொண்டாடப்போறது நாந்தான். 'டேட் லைன்'லே குந்தியிருக்கேனே:-)


பண்டிகை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும், பண்டிகை கொண்டாடாமல் விடுமுறையை அனுபவிக்கும்நண்பர்களுக்கும், 'எது எப்படிபோனால் என்ன' என்று தமிழ்மணமே கதியாக இருக்கும் நண்பர்களுக்கும், பதிவுகளைமாய்ந்து மாய்ந்து எழுதித்தள்ளும் நண்பர்களுக்கும், பின்னூட்டம் மட்டுமே எழுதும் நண்பர்களுக்கும் எங்கள் அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பணிவன்போடுதெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு மஃப்பின் & துளசி.

இதைத்தான் சொல்றாங்களோ 'Love Thy Neighbour'ன்னு.

17 comments:

said...

துளசிக்கா உங்களுக்கும் உங்க எல்லா பூனைகுட்டி ஆனை குட்டி அல்லாருக்கும் கிரிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

said...

Happy Christmas துளசி. கோபால் சாருக்கும், பொண்ணுக்கும் சேர்த்து சொல்லிடுங்க. எல்லாத்திலேயும் நீங்க தான் முதல்வின்னு பார்ட்தால், பண்டிகை கொண்டாடுறதுலே கூடவா? ஜமாய்ங்க்க!

said...

விடுமுறைக்கால வாழ்த்துக்கள். ஜனரஞ்சகமாக எழுத உங்களிடம் ட்யூஸன் தான் எடுக்க வேண்டும் :)

சுகா

said...

சிங்.செயகுமார், தாணு, சாரா

உங்களுக்கும் ஹேப்பி கிறிஸ்மஸ்.

நாளைக்கு ஒரு அசலான கிறிஸ்மஸ் பரிபாடி இருக்கு.

மெனு கேட்டா அவ்ளோதான் உங்களுக்கு மயக்கமே வந்துரும்.

எல்லாத்தையும் நாளைக்கு விலாவரியாச் சொல்றேன். சரியா?

said...

Wish you all a merry christmas!

said...

சுகா,

வாங்க. டீச்சருக்கு ட்யூஸன் வேணாங்குதா?:-)))

எவ்வளவு ஃபீஸ்ன்னு அப்புறம் சொல்றேன்:-))

said...

ராகவன்,

என்ன திடீர்னு இங்கிலிபீசுலே?

ஓஓஓ வெள்ளைக்காரப் பண்டிகையா?:-)))

ஓக்கே. விஷ் யூ த சேம்.

said...

:))

விடுமுறைக்கால வாழ்த்துக்கள்.

said...

Thanks Thangamani,
Wish you the same.

said...

// ராகவன்,

என்ன திடீர்னு இங்கிலிபீசுலே?

ஓஓஓ வெள்ளைக்காரப் பண்டிகையா?:-))) //

neenga vera teacher. moonu naal officeuku leave potachu. pending Casual leaves will lapse on 31st dec. To utilize them I took 3 days off. So browing in a centre. athaan englishuuuuuuu.

said...

//பண்டிகை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும், பண்டிகை கொண்டாடாமல் விடுமுறையை அனுபவிக்கும்நண்பர்களுக்கும், 'எது எப்படிபோனால் என்ன' என்று தமிழ்மணமே கதியாக இருக்கும் நண்பர்களுக்கும், பதிவுகளைமாய்ந்து மாய்ந்து எழுதித்தள்ளும் நண்பர்களுக்கும், பின்னூட்டம் மட்டுமே எழுதும் நண்பர்களுக்கும் எங்கள் அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பணிவன்போடுதெரிவித்துக் கொள்கின்றோம்.
//

சூப்பர் அக்கா. அப்படியே என்னோட வாழ்த்துகளையும் சொல்லிக்கறேன். :-)

said...

நன்றி குமரன்.
இப்படிக் கூட்டத்துலே கோவிந்தாப் போட்டாத்தான் உண்டு:-))))

said...

"சாம் இருக்காரு. இவர் பெரியவரு.இப்பப் புதுசா வந்திருக்கறவரு மஃப்பின். வயசுஆறு மாசம் தான். ஆனா ரொம்பத்துரு துரு! பெரிய பெரிய கண்ணு."//
- அது என்னவோங்க? இந்த சாம்-னு பேரு வச்சாலே அப்படித்தாங்க..ஹி..ஹி..

said...

அச்சச்சோ, நீங்க சொன்னது மஃப்பினையா?:-(

said...

தருமி,

:-))))))))))))))))))

said...

அக்கா,
உங்களுக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ். லேட்டானாலும் லேட்டஸ்டா வரது நானாச்சே!

மிக அழகான புகைப்படம். இயற்கையாய் புகைப்படங்களில் சிரிப்பது குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கும் திறமை! கணினியில் சேகரித்து வைத்துக்கொண்டேன். அவ்வளவு அழகு!

புது காமிராவில் எடுத்ததா?? :)

said...

ராம்ஸ்,

இது பழைய கேமெராதான்.

ஹாப்பி நியூ இயர்!