Sunday, December 11, 2005

ஏர் இந்தியாவின் சேவை.......

நம்ம ஊருதாச்சேன்னு ஒருக்கா போகலாமுன்னு நினைச்சா இப்படி ஆயிருச்சேங்க.ஷாங்காயிலிருந்து பேங்க்காக் வழியா டில்லிப் பயணம். அவுங்களோட கால அட்டவணைப்படி(!)நேத்து ராத்திரி 10 மணிக்கு ஷாங்காயிலிருந்து புறப்படணும். எட்டு எட்டரைக்கெல்லாம் ஏர்போர்ட்போய் சேர்ந்தாச்சு.


டிலே ஆகுமுன்னு சொல்லலை. ஒம்பதரைக்கு மேலே தான் சொன்னாங்களாம். இன்னும் கொஞ்சம் நேரம் செல்லுமுன்னு. உக்காந்து உக்காந்து எல்லோரும் களைச்சுப்போனபிறகு,இனிமே நாளைக்குக் காலையிலே 7 மணிக்குத்தான் பயணம். நீங்க எல்லாம் ஓட்டலுக்குப் போய்த்தூங்கலாமுன்னு சொல்லி ஒரு பாடாவதி ஓட்டலிலே (அதுக்கே 40 நிமிஷப் பஸ் பயணமாம். விடிஞ்சது போ!)கொண்டுபோய்த் தள்ளுனப்பவே மணி பன்னெண்டரைக்கு மேலேயாம்.


அங்கே இந்த அர்த்த ராத்திரிக்கு கிச்சன் எல்லாம் கழுவித் துடைச்சாச்சாம். திங்கவும் ஒண்ணுமில்லை, குடிக்கவும் ஒண்ணுமில்லை. ரொம்பச் சுத்தம்!


இதோ காலையிலே 5 மணிக்கே எழுப்பி விட்டாச்சு. அஞ்சரைக்கு அடிச்சுப்பிடிச்சு பஸ்ஸிலே போறப்ப,வூட்டுக்குப் போன் போடறார். கதை கந்தல்,பசியும் தாகமுமா இருக்குன்னு. இனி ஏர்ப்போர்ட் போனாவுட்டு அங்கெ எதாவது திங்கக் கிடைக்குதான்னு பார்க்கணுமுன்னு.


ஒரு ஒண்ணரை மணி நேரம் கழிச்சு ஃபோன் வருது. என்னோட மொதக் கேள்வி,'ஏதாவது சாப்பிட்டீங்களா?'

'அங்கேயும் ஒண்ணும் கிடைக்கலை. எல்லாரையும் ப்ளேன்லே சரசரன்னு ஏத்தி உக்காரவச்சுட்டான். சாப்பாட்டுக்கடையைத் தேடவும் நேரமில்லை. ஆனா ஒரு தண்ணி பாட்டில் வாங்கினேன். அதைக் குடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கேன்.'

எப்பக் கிளம்பி எப்ப சாப்பாட்டைக் கண்ணுலே காட்டுவாங்களோ? ( அடப்பாவி மனுஷா! இங்கே நான் வக்கணையாசாப்ட்டேனே(-: ஹூம்...)


இப்ப ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாலெ மறுபடி ஃபோன்.

"எங்கே இருந்து பேசறீங்க?"

" பாங்காக் வந்தாச்சு. ஒருமணிநேரம் கழிச்சுக் கிளம்பும்."

" சாப்பாடு கிடைச்சதா?"

" கிடைச்சது. தூக்கமில்லாம ஒருமாதிரி இருக்கு. ஞாயிறு சாயந்திரம் 4 மணிக்குத்தான் டெல்லி போய் சேரும்"

" வேற வழி? தலையை உரலுக்குள்ளெ கொடுத்தாச்சு. இனி அய்யோன்னா முடியுமா? நீங்க உங்க ட்ரிப்பை முடிச்சுக்கிட்டுப்பத்திரமாத் திரும்பி வாங்க. அதுக்குள்ளே உங்க பழைய செருப்பு எதாவது இருக்கான்னு தேடிப்பார்த்து எடுத்து வைக்கிறேன்"


( தூக்கக் கலக்கத்துடன்)" எதுக்கு?"

"ம்ம்ம்ம்ம் ... இனிமே ஏர் இந்தியாவுலே போவியா போவியான்னு அடிச்சுக்கறதுக்கு"


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

24 comments:

said...

ஹலோ ஹலோ...அதுக்குள்ளே அவரசரப்பட்டா எப்படி? பேங்காக்கிலே இருந்து ஏர்-இந்தியா கோட்-ஷேர் தாய் ஏர்வேஸ் சரியான நேரத்துக்கு எடுத்தாங்களாமா?

said...

ஹிஹி நல்ல வேடிக்கையாயிருக்கு. ஏன் இந்த ரிஸ்க் எல்லாம் எடுக்குறாரு கோபால்.

said...

மாயவரத்தாரே,

அதே ப்ளேந்தான் போகுதுன்னு சொன்னாங்க. நீங்க தாய் தகப்பன்னு வேற சொல்றீங்க?

எதுவானாலும் இனி டெல்லி போனவுட்டுத்தான் போன் வரும்.

நான்வேற அங்கே டெல்லியிலே என் சார்பா, ஒரு வலைப்பதிவாளரைச் சந்திக்க ஏற்பாடு செஞ்சிருந்தேன்.
அநேகமா அதுக்கு நேரம் இருக்காதோ என்னவோ? ம்ம்ம்ம்....... பார்க்கலாம்.

said...

மோகன்தாஸ்,

நாக்குலே சனி உக்காந்து ஆடுச்சேங்க. பொடவை கட்டுன ஏர் ஹோஸ்டஸ்ஸைப் பார்க்க ச்சான்ஸ்:-)))
அதை ஏன் மிஸ் பண்ணனுமுன்னு..... (ச்சும்மா..)

said...

//அதே ப்ளேந்தான் போகுதுன்னு சொன்னாங்க. நீங்க தாய் தகப்பன்னு வேற சொல்றீங்க?//

:)
நான் சென்னைக்கு போற பிளைட்டுன்னு நெனச்சிட்டேன்.

said...

halo. konja naal unga valipathivukita varla. eppo yaanai poi poonai aachu?
delhila irundhu phone varalaya?
-- Nandhan

said...

வாங்க நந்தன்,

யானை போய் பூனை வந்தே ரெண்டு மாசத்துக்கும் மேலே ஆச்சே!

டெல்லியிலே இருந்து ஃபோன் வந்துச்சு. நேத்து 3.45க்குப் போய்ச் சேர்ந்தாச்சு. அப்ப இங்கே ராத்திரி
11.15. அப்புறம் தான் மனசு நிம்மதி ஆச்சு. இனி எல்லாம் சுகமே:-)))

said...

\\பழைய செருப்பு எதாவது இருக்கான்னு தேடிப்பார்த்து எடுத்து வைக்கிறேன்\\
hmm periyappa nilama ippidi aache..neenga nalla ukanthu vakanaiya thunikidurukinga enna ...

said...

துளசி: நீங்க போகலியா?

said...

சிநேகிதி,
இப்ப என்ன பண்ணறது? உயிர் வாழ,
(அட்லீஸ்ட் அந்தப் பழைய செருப்பைத் தேடறதுக்காவது பலம் வேணாமா?) சாப்புட்டுத்தானே ஆகணும்? சாப்புடறது சாப்புடறோம் அதுலே ஏன் குறைச்சலுன்னுதான் கொஞ்சம் வக்கணையா......

said...

பத்மா,

நான் பேட்டைக்குப் பேட்டை வலைப்பதிவர் 'மகாநாடு' நடத்தணுமா இல்லையா?

பிப்ரவரிதான் போறேன். இப்ப கோபால் ஆஃபீஸ் வேலையா அலைஞ்சுக்கிட்டு இருக்கார்.

said...

எங்க "வட்டாரத்துலே" சொல்றது:

-சிங்கப்பூர் பார்க்கணுமா? சிங்கப்பூர் வழியா ஏர் இன்டியால போறமாதிரி புக்கிங் செய்தீங்கன்னா சரி.
-ஏர் இன்டியால புக் பண்றதுக்கும் சிங்கப்பூர் பாக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?
-எப்பவுமே நேரத்துக்கு விமானம் வராது. அதனாலே ஒரு ஹோட்டெல்லே தங்க வைப்பான். சுத்திப்பார்க்க கொஞ்ச நேரம் கிடைக்குமில்லையா?அதைச் சொன்னேன்! :O)

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

மயிலு அனுப்பினேனே..பாக்கல்லயா?

said...

சிங்கப்பூர் பாக்கற ஆசைக்கு ஏன் ஷ்ரேயா பின்னூட்டத்தை மூணுமுறை அனுப்புனீங்க:-))))

said...

எனக்கும் ஏர்-இந்தியான்ன ஒரு பயந்தான். இந்தியன் ஏர்லைன்ஸ்ல போகவும் கொஞ்சம் பயந்தான். என்னவோ இதுவரைக்கும் உள்நாட்டுப் பயணங்கள் எல்லாம் ஜெட்டுலயோ சஹாராலயோ நடந்திருக்கு. வெளிநாட்டுப் பயணங்கள் எல்லாமே வெளிநாட்டு விமானங்கள்ளதான் நடந்திருக்கும். அஞ்சு மாசத்துக்கு முன்னாடி ஏர்-இந்தியாவுல டைரக்டா பெங்களூருல இருந்து அமெரிக்கா போக வேண்டியிருந்தது. நல்லவேளையா அது நடக்கல. நீங்க சொல்றதப் பாத்தா.."அப்பா தப்பிச்சேன்"னு நெனைக்கத் தோணுது.

said...

ராகவன்,

நீங்க கும்புடற முருகன் உங்களைக் கைவிடலை.

said...
This comment has been removed by a blog administrator.
said...

>> உங்க பழைய செருப்பு எதாவது இருக்கான்னு >> தேடிப்பார்த்து எடுத்து வைக்கிறேன்"


துளசி அக்கா நீங்க எப்ப அந்த கட்சியில சேந்தீங்க :)).

சந்தோஷத்துடன்
சந்தோஷ்

said...

எந்தக் கட்சி?.....
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஓஓஓஓஓஓ அந்தக் கட்சியா?

இது அடிக்கறதுக்கு இல்லீங்க, அடிச்சுக்கறதுக்கு.

சந்தோஷ், ஆனாலும் இவ்வளவு சந்தோஷம் ஆகாதுங்க:-))))

said...

// ராகவன்,

நீங்க கும்புடற முருகன் உங்களைக் கைவிடலை. //

பின்னே அவனுக்கு வேறென்ன வேலை!

said...

என்னமோ போங்க, ஏர் இந்தியான்னாலே ஒரு பயம்தான்.
நான் முத முதல்ல விமானத்தில போனப்ப (இந்தியன் ஏர்லைன்ஸ் - தலையெழுத்து) உள்ள நுழைஞ்சவுடனே ஒரு ஆண்ட்டி "வாட் டூ யூ வாண்ட்" அப்படின்னு அரைக் கண்ணாடியோட கேட்டாங்க... என்னடா இது ஆண்ட்டி கிளைமாக்ஸ்னு அதுக்கப்புறம் வாயே தொறக்கலையே.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு இந்தியன் ஏர்லைன்ஸ் (சிங்கப்பூருக்குன்னு நெனைக்கிறேன்) வானத்திலேயே ரோலர் கோஸ்டர் அடிச்சித் திரும்ப சென்னைக்கே கொண்டு வந்து இறக்கினாங்களே, நினைவிருக்கா...
முருகா!

said...

பிரதீப்.

//உள்ள நுழைஞ்சவுடனே ஒரு ஆண்ட்டி "வாட் டூ யூ வாண்ட்" அப்படின்னு அரைக் கண்ணாடியோட கேட்டாங்க... என்னடா இது ஆண்ட்டி கிளைமாக்ஸ்னு அதுக்கப்புறம் வாயே தொறக்கலையே.//

:-)))))))))))