Tuesday, December 06, 2005

நியூஸிலாந்து பகுதி 32

'கொடி பறக்குது, கொடி பறக்குது . இப்படி அவுங்க கொடியைப் பறக்கவிட்டு, நம்மளைக் காத்துலே வுடப்போறானுங்கோடோய்!' கனகம்பீரமா வைட்டாங்கி( அதான் ஒப்பந்தம் ஆன ஊர்)யிலே பறந்துக்கிட்டு இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்கொடியை, அப்படியே கொடிமரத்தோடு வெட்டிச் சாய்ச்சார் இன்னொரு குழுத்தலைவரான ஹொங்கி ஹிகாவோட மருமகன். இவரோட பேர் ஹொனெ ஹெகெ. 'வெள்ளைக்காரன் நம்மளைச் சரியா ஏமாத்திட்டான்' னு கொதிச்சுக்கிட்டு இருந்தார். அவுங்க திருப்பி நட்ட கொடிமரத்தையும் வெட்டிப் போட்டார். இப்படியே மூணுதபா ஆச்சு. நாலாவது முறை கொடிமரத்துக்குக் காவல் போட்டாங்க. மறுபடி சண்டை. 12 மவொரிங்களும், 15 வெள்ளைக்காரச் சிப்பாய்ங்களும் சொர்க்கம்/நரகம் போய்ச் சேர்ந்தாங்க.


சம்பவம் நடந்த ஊர் கோரோரரெகா தீவச்சுக் கொளுத்தப்பட்டுச்சு. சாம்பலேமிச்சம். கவர்னருக்குப் பயம் வந்துருச்சு. இதெல்லாம் எதுலே போய் முடியுமோன்னு? அடுத்த நாடான ஆஸ்தராலியா( அப்ப அது வெறும் பிரிட்டிஷ் காலனிதான். ஆஸ்தராலியான்ற பேரெல்லாம் இல்லை.மொத்தம் 6 காலனிகள் அதுக்குள்ளே.) சிட்னிக்கு உதவி வேணுமுன்னு கேட்டு ஆள் அனுப்புனார். 400 படைவீரர்கள் வந்தாங்களாம்.


ஹொனெ ஹெகெ கிட்டே 300, அவரோட நண்பர்கிட்டே 150ன்னு மொத்தம் 450 பேர் மவொரிப் படையிலே.ஜெயிச்சதென்னமோ மவொரிங்கதான். காவு கொடுத்தது ரெண்டு பக்கத்துலேயும் மொத்தம் 28 பேர். ஆளுக்குப்பாதின்னு பதினாலு பதினாலுபேர்.


கவர்னருக்கு ரொம்ப அவமானமாப் போச்சு. இன்னும் படைவீரர்களை சிட்னியிலே இருந்து வரவழைச்சார். அப்போஇவுங்க கைமட்டும் பூப் பறிச்சுக்கிட்டு ( இல்லே பாய் மொடைஞ்சுக்கிட்டு) ச்சும்மா இருக்குமா?
நல்ல மரத்தடுப்பு எல்லாம் போட்டு ஒரு பெரிய இடம் ஏற்பாடு செஞ்சாங்க. மூணுபக்கம் மறைப்பு. ஒரு பக்கம் திறந்த வழி. உள்ளேபதுங்கு குழியெல்லாம் வெட்டி வச்சுக்கிட்டாங்க. எல்லாம் வெள்ளைக்காரங்ககிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான்.முன் ஆலோசனை இல்லாம பிரிட்டிஷ்காரங்க அங்கே பாய்ஞ்சாங்க ( அவுங்க நினைச்சிருப்பாங்களாக்கும் இன்னொரு'ஜாலியன்வாலா பாக்'ன்னு!) கதை கந்தலாச்சு. நூத்துக்கும் மேலே கொல்லப்பட்டாங்க பிரிட்டிஷார். மவொரிங்க சைடுலே வெறும் 10!


தோல்விக்குமேலே தோல்வி. 'கவர்னர் சரியில்லை'ன்னு இங்கிலாந்து அவரைத் திருப்பிக் கூப்புட்டுக்கிச்சு. 'செட்டிலர்ஸ்'க்கு ஒரே கொண்டாட்டம், 'நாலு காசைப் பார்க்கவிடாம குறுக்கே வந்தவன் தொலைஞ்சான்'னு!
வெறும் 33 வயசே ஆன கேப்டன் ஜார்ஜ் க்ரே பெரிய படைபலத்தோட புது கவர்னரா 1845லே வந்து சேர்ந்தார். மனுஷன்மகா கெட்டி! 'பகையாளிக் குடியை உறவாடிக் கெடு' ன்ற வித்தை தெரிஞ்சவர். மொதல் வேலையா டமடி வாகா நெனெ( Tamati Waka Nene, Chief of Ngapuhi)வை சிநேகிதம் செஞ்சுக்கிட்டார். ரெண்டு பேருக்கும்சேர்த்து 1500 வீரர்கள் இருந்தாங்க. போதுமே! சமாதானப் பேச்சு தொடங்கி,அடக்கிட்டாங்க ஹொனெ ஹெகெவை !'ஹொனெஹெகே' வோட இடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.


இந்த ஒரு குழுதான் சமாதானம் ஆச்சே தவிர அங்கங்கே ச்சின்னச் சின்னதாக் கலவரம் வெடிச்சுக்கிட்டேதான் இருந்துச்சு.ரெண்டுவருசமா சளைக்காமச் சண்டைபோட்ட Te Rauparaha நிறையபேரைச் சேர்த்து பெரும்படையை வச்சிருந்தார்.அவுங்க எல்லாம் பார்க்கறமாதிரி, அந்த ஊரைவிட்டு தன்னுடைய படையோடு கப்பலில் கிளம்பிப் போனார் க்ரே.கொஞ்ச தூரம் போயிட்டு, ராவோடராவா ஓசைப்படாம திரும்பிவந்து பொழுது விடியறதுக்கு முன்னே மவொரிங்கபடைமேலே பாய்ஞ்சு சின்னாபின்னமாக்கி, Te Rauparaha புடிச்சுட்டார். புடிச்சு ஜெயில்லே போட்டாச்சு. தலைவன்இல்லாமப்போனவுடனே எல்லாம் அடங்கிருச்சு. என்னா தந்திரம் பார்த்தீங்களா?


'க்ரே' மவொரி மொழி பேசக் கத்துக்கிட்டு எல்லாக் குழுத்தலைவர்களையும் சிநேகம் பண்ணிக்கிட்டார். அவுங்களோட கலாச்சாரத்தை, பழக்கவழக்கத்தையெல்லாம் எழுதச் சொல்லி ஊக்குவிச்சு அதையெல்லாம் இங்கிலீஷ்லெயும், மவொரியிலேயும் புத்தகமாப் போட்டார். (அப்ப ப்ளொக் இல்லை. இருந்துருந்தா அவரும் ஒரு ப்ளொக் ஆரம்பிச்சிருப்பார்)நிறைய காசு செலவு செஞ்சு அங்கங்கே பள்ளிக்கூடம் கட்டி மவொரிப் புள்ளைங்களுக்கு எழுதப்படிக்க, கணக்குப் போடன்னு சொல்லித்தர ஏற்பாடு செஞ்சுகொடுத்தார். நாலு ஆஸ்பத்திரிங்க கட்டிக் கொடுத்து மவொரிங்களுக்குவியாதிவெக்கைக்கு மருந்து கொடுத்துக் குணமாக்க உதவியா இருந்தார். எல்லாத்துக்கும் மேலா, விவசாயம் செய்யறதுக்குவேண்டிய சாமான்களை வாங்கக் கடனுதவியும் செஞ்சார். நில சம்பந்தமான எல்லா விற்பனைகளும் நியாய விலையிலேயும்,எல்லாருக்கும் ஒரே நியதின்னு இருக்கணுமுன்னும் கவனமா இருந்தார். எல்லாரும் சமமா நடத்தப்பட்டதாலே சண்டைங்ககுறைஞ்சுக்கிட்டே போச்சு. எல்லாருக்கும் வேண்டப்பட்டவரா ஆனார் நம்ம க்ரே.


அரசியல் சாஸனம் ஒண்ணு ஏற்பாடு செஞ்சு, குடியரசு அரசாங்கம், ஓட்டுப்போட்டுத் தேர்தல் நடத்துறது எல்லாம்வந்துச்சு. ஒவ்வொரு பெரிய ஊருலேயும் ஆளுங்க ஜெயிச்சுவந்து அசெம்ப்ளி அமைப்பு உருவாச்சு.ஆனால் ஓட்டுரிமை பெண்களுக்கு இல்லை! ( இது நடந்து 48 வருசமான பிறகுதான் 1893லே பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைச்சது.இதுவே பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்த முதல் நாடு!)


இதெல்லாம் ஒருபக்கம் நடக்கறப்ப, இங்கே 9000 வெள்ளைக்காரங்க கப்பலேறிவந்தாச்சு! அங்கங்கே குடிசைங்க முளைச்சிருச்சு. நம்புங்க, நிஜமாவே குடிசைதாங்க. கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கிட்டுக் குடிசைவாசம்! இங்கேவந்துட்டா வாழ்க்கைத்தரம் உயர்ந்திருமுன்னு வந்தவுங்கதான் இவுங்கெல்லாம்.


" ஏங்க எங்கே கிளம்பிட்டீங்க?"

" சர்ச் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"

" இன்னைக்கு ஞாயித்துக்கிழமைகூட இல்லையே, என்னாத்துக்கு சர்ச்சு?"

" நீ சும்மா கிட புள்ளே. பாதிரியாரைப் பார்க்கத்தான் போயிக்கிட்டு இருக்கேன்"

" அதான் என்னாத்துக்குன்னு கேக்கறேன்லெ"

" ஓ.. அதுவா? ஒரு நன்நடத்தை சர்ட்டிபிக்கேட்டு வாங்கத்தான்"

" என்னாத்துக்கு? நீ நல்லவன்னு யார்கிட்டே காமிக்கணுமாம்?"

" புரியாமப் பேசாதே. நியூஸிலாந்து போலாமுன்னு பேசிக்கிட்டு இருக்கோமுல்லே, அங்கே எல்லாரையும்கொண்டு போகமாட்டாங்களாம்.நல்ல வனா இருக்கணுமாம். உழைப்புக்கு அஞ்சாதவனாவும், தொழில் திறமைஎதுவாச்சும் இருக்கறவனாவும், முக்கியமா நம்பகமான பார்ட்டியாவும் இருந்தாத்தான் அங்கே காலு குத்த முடியுமாம்.அதுக்குத்தான் பாதிரியாருகிட்டே ஒரு கடிதாசு வாங்கலாமுன்னு போறேன். குறுக்கே இவ ஒருத்தி."


இப்படி ஒரு உரையாடல் நடந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. ஏன்னா அப்ப இந்தமாதிரி சர்ச் ஃபாதர்ங்ககிட்டே நிறைய பேர் சர்ட்டிஃபிகேட் வாங்கி கப்பல் ஏஜெண்ட் கிட்டே கொடுத்தாங்களாம். இது எப்படி இருக்கு?


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

9 comments:

said...

குட் மார்னிங் டீச்சர்.

இன்னைக்கி நாந்தான் முத ஆளு..
நடுவில கொஞ்சம் கட் அடிச்சிட்டேனோ...?

said...

~
//கப்பல் ஏஜெண்ட் கிட்டே... //

அங்கயும் ஒரு ஏஜண்டா!

said...

// (அப்ப ப்ளொக் இல்லை. இருந்துருந்தா அவரும் ஒரு ப்ளொக் ஆரம்பிச்சிருப்பார்) //

இது டீச்சரோட நச் கமெண்ட்.

said...

வாங்க தருமி.

இது விருப்பப்பாட வகுப்புன்றதாலே விருப்பம் இருக்கறபோது வரலாம்:-)))


ஞான்ஸ்,

ஏஜெண்ட்ன்னவுடனே ஏஜெண்ட் கண்டுக்கிடறீங்க பாருங்க. அப்படித்தான் இருக்கணூம். நாமே நம்ம ஜனத்தை விட்டுறமுடியாதுல்லே?:-)


வாங்க ராகவன்,

பெர்ஷியா சாப்பாடெல்லாம் அனுபவிச்சிட்டு வகுப்புக்கு வந்துருக்காப்பொலெ!

said...

துளசி
ஒழுங்கீனமா வகுப்பு கட் அடிக்கிறவங்களுக்கு தண்டனை கிடையாதா? கடைசி பென்ச்லே ஏறி நிக்கச் சொல்லுங்க!

said...

தாணு,

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம்ன்றபடியாலே பலரும் வகுப்புக்கு மட்டம்தான்!

அதெல்லாம் பெரியமனசு பண்ணி மன்னிச்சுடறதுதான் எனக்கே (!) நல்லது.

ஆமாம். உங்க + மகளோட ம்யூஸிக் எக்ஸாம் ரிசல்ட் வந்துருச்சா?

said...

// வாங்க ராகவன்,

பெர்ஷியா சாப்பாடெல்லாம் அனுபவிச்சிட்டு வகுப்புக்கு வந்துருக்காப்பொலெ! //

ஆமாம் டீச்சர். நீங்களும் வீட்டுக்கு வாங்க டீச்சர். ஒங்களுக்கும் வாங்கித் தர்ரேன். சாப்புடுவீங்கதானே?

said...

டிராஜ்,

எப்படியோ உங்களை இந்த வகுப்புக்கு வரவச்சுட்டேன்:-))))

ராகவன்,

நிஜம்மா வந்துருவேன். அப்பச் சொல்லுங்க, பெர்ஷியாவா இல்லே வேற எந்த நாடான்னு:-))))

said...

வாங்க பல்லவி.

'பொறுமையில் நான் ஒரு எருமை'ன்னு
ஒரு புதுமொழி போட்டுக்கலாமா?

திறமைதான் கொஞ்சம் டவுட்டு.

இன்னும் எத்தனை பதிவுகளா? போற போக்கைப் பார்த்தா ஒரு நூறு இருநூறு வராது?:-))))