Thursday, December 01, 2005

நியூஸிலாந்து பகுதி 30

பரந்த புல்வெளியிலே அலங்காரமா ஒரு கூடாரம் எழும்பியிருக்கு. தோரணம் கட்டி அலங்கரிச்சு,புதுசா டிஸைன் செஞ்ச கொடிகளும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தோட கொடிகளுமா பறந்துக்கிட்டு ஒரே அமர்க்களம்தான்போங்க.


மவோரி 'பெருந்தலை'களுக்கு நல்ல உடுப்பு தயாரிச்சுக் கொடுத்துட்டாங்க. நல்ல சிகப்புக் கலருலே கம்பளிக்கோட்டு, அதுலேநீலம், ப்ரவுன் நிறத்துலே 'சடை'பின்னித்தொங்கவிட்ட அலங்காரம், கறுப்பும் வெளுப்பும் பட்டைபட்டையா இருக்கறபோர்வை( இது ஃப்ளாக்ஸ் நாருலே செஞ்ச மிருதுவான பாய்). கனகம்பீரமா ரொம்ப கர்வத்தோடு உலாத்தறாங்க.


எங்கே பார்த்தாலும் டைஆஹா( Taiaha- Long clubs)ன்னு சொல்ற நீள மரத்தடிகளை மண்ணுலே நட்டுவச்சிருக்கு.நாயோட வெளுத்த ரோமமும், சிகப்புக் கலர் இறகுகளும் வச்சு அந்தத் தடிகளை அலங்கரிச்சு கலர்ஃபுல்லா இருக்குஅந்த இடம்.


இன்னிக்கு விழாவாச்சே. களைகட்டிருச்சு. பிரிட்டிஷ்காரங்களும் அலங்காரத்துலே லேசுப்பட்டவங்களா? இல்லையே.ராஜாங்க உடுப்புலேயும், கோட்டும் சூட்டுமாவும் அவுங்களும் ரொம்பியிருக்காங்க.


1830லே 330தா இருந்த ஐரோப்பிய ஜனங்கள் இப்ப இந்த 1840லே 2000மா ஆகியிருந்தாங்க.


இங்கேயே இப்ப ஒரு 15 வருசமா இருக்கற ஹென்றி வில்லியம், இந்த 'நேச உடன்படிக்கை'யை மவொரி மொழியிலேமொழிமாற்றம் செஞ்சு சொன்னார். இந்தப் பதினைஞ்சு வருசத்துலே மவோரி மொழியை நல்லாக் கத்துக்கிட்டதுக்கு இப்படி ஒரு பலன்.


சுத்தி நின்னு கேட்டாங்க மவொரித் தலைவர்கள். அதுலே சிலருக்கு இது பிடிக்கலை. எதிர்ப்பு காமிச்சாங்க. 'இங்கேபுதுசா வரப்போற அரசாங்கத்துமேலே நம்பிக்கை இல்லை. நமக்கு 'ஆப்பு' வச்சுருவாங்கன்னு ஒரு பயம். நம்மளைஅடிமைப் படுத்தப் போறாங்கன்னு உள்ளுணர்ச்சி எச்சரிக்கை செய்யுது. என்னாத்து இந்த வெள்ளைத் தோலுங்க சகவாசம். பேசாம முன்னே இருந்த மாதிரியே இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும். இந்தக் கம்பளிப் போர்வை,ரொட்டி(Bread) துப்பாக்கிச்சனியன் ( Musket) இதெல்லாம் யாருக்கு வேணும்? இவுங்க வந்தாவுட்டுத்தான் இத்தனைதினுசு ரோகமும் வந்துருச்சு. முந்தியெல்லாம் எப்படிக் கவலையில்லாம ஆரோக்கியமா இருந்தோம். ஒரு வியாதி வெக்கைன்னு படுத்தமா? ஒரு மண்ணும் வேணாம். எல்லாம் திரும்பிப்போங்க'ன்னு கத்தலாமான்னு இருந்துச்சு.


மத்த தலைவர்ங்க இந்த 'ஒரு சிலரை'க் கண்டுக்கலை. ' வெள்ளைக்காரங்க இங்கே இருக்கத்தான் போறாங்க. அவுங்களைஎதிர்த்துக்கிட்டு நம்மாலே ஒண்ணும் செய்ய முடியாது. பேசாம, நம்ம கலாச்சாரத்தையும், நம்ம நிலபுலன்களையும்காப்பாத்திக்க வழி உண்டாக்கிக்கணும்'னு அவுங்க எண்ணம் ஓடுச்சு. ராத்திரியெல்லாம் இதைப் பத்திப் பேசிப்பேசிஓய்ஞ்சுட்டாங்க.


பொழுது விடிஞ்சிருச்சு. ஃபிப்ரவரி மாசம் 6ஆம்தேதி. எல்லோரும் பழையபடி கூடாரத்துலே கூடுனாங்க. உடன்படிக்கைப்பத்திரம் ஆங்கிலத்துலேயும், மவோரியிலேயுமா ரெண்டுவிதமா இருந்துச்சு. மவொரிக்குழுவுக்கு மவொரி மொழிப்பத்திரம். அதை மொழிபெயர்த்து எழுதுன நம்ம ஹென்றி வில்லியம், மவொரி கலாச்சாரத்துலே இல்லாத சிலவார்த்தைகளையும் சொந்த சாகித்தியமாச் சேர்த்துக்கிட்டாராம்.


உதாரணம்:

In the TREATY, Williams used the word 'KAWANATANGA' to describe the idea of rule or sovereignty,but the word 'KAWANATANGA' means governorship only. A better word would have been 'MANA'.The real meaning of MANA is power!


உண்மையான அர்த்தம் சொல்லியிருந்தாங்கன்னா, 'தலைங்க' கையெழுத்து போட்டுருக்காது. ஜேம்ஸ் பஸ்பை,ஒவ்வொரு பேராப் படிக்க, ஒவ்வொரு 'தலைவர்'களும் வந்து கையெழுத்துப் போட்டாங்க. ஹோனெ ஹிகெ(Hone Heke)மொதக் கையெழுத்துப் போட்டுப் பெருமை அடைஞ்சார்.


மவொரிங்கல்லாம் 'ஜேம்ஸ் பஸ்பை'க்கு ஒரு 'பட்டப்பேர்'கொடுத்தாங்க. துப்பாக்கியின்றி யுத்தம்செய்த மாவீரன்!( Man-o-war without guns) இது எப்படி இருக்கு?


மொழிபெயர்த்த ஹென்றி வில்லியமும், உடன்படிக்கையிலே இருந்த நிலபுல விவரங்களைச் சரியாச் சொல்லாமப்பூசி மெழுகிட்டார். காரணம்? இருக்கே! 11000 ஏக்கர் நிலத்தை இதெல்லாம் நடக்கறதுக்கு முன்னேயே ரகசியமா 'விலை'க்குவாங்கியிருந்தாராமே! அதானே, பதினைஞ்சு வருசமா இங்கே இருக்கறவங்க,இப்படி ஆளில்லாம மானாவாரியா இருக்கறஇடத்துலே சொத்து சேர்க்கமாட்டாங்களாமா?


வைட்டாங்கியிலே இருந்த மவொரித் தலைவர்கள் எல்லாம் மவொரி வெர்ஷன்லே கையெழுத்துப் போட்டாங்கன்னா,வைக்காட்டோன்ற ஊர்லே இருந்து வந்தவங்க இங்கிலிஷ் வெர்ஷன்லே கையெழுத்துப் போட்டாங்களாம். ரெண்டுபத்திரத்திலும் வெவ்வேறு உள்ளடக்கம். பிரிச்சு ஆளுறது மட்டும் இவுங்க கொள்கைன்னு நினைச்சோமே.
உண்மையைச்'சொல்லாம' இருக்கறதும் இன்னொரு கொள்கை ஆயிருச்சு.( பொய் தானே சொல்லக்கூடாது?)


The two documents are different. One clause in the English version promises Maori 'full exclusiveand undisturbed possession of their lands and estates, forests and fisheries'.
The Maori version promises the tribes 'the entire chieftainship of their lands, their villages and alltheir property'.


நம்ம நிலபுலன்களை வாங்கற உரிமைகள் மகாராணிக்கு மட்டுமில்லை. யாருக்குவேணா நாம் விக்கலாமுன்னுமவொரிகள் நினைச்சாங்க. ஆனா உண்மை? அதில்லை.


ஆகக்கூடி, 'யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக்கிச்சு'!


இதுக்கப்புறம், இந்த உடன்படிக்கைப் பத்திரம் ஊர் ஊராய்ப் போச்சு. விட்டுப்போன தலைவர்ங்ககிட்டே கையெழுத்துவாங்கிக்கறதுக்காக.


இந்தப் பழக்கம் இப்பவும் இருக்கு. எதுலேயாவது நியூஸிலாந்து ஜெயிச்சா, அந்தக் கப்போ, இல்லை அந்த மெடலோஊரூராக் கொண்டுபோய் காமிக்கறது. அமெரிக்காக் கப்பு, ரக்பியிலே உலகக் கோப்பை, ஒலிம்பிக் விளையாட்டுலேஜெயிச்ச மெடல்ன்னு பலதும் பார்த்திருக்கேன், இங்கே எங்க ஊருக்குக் கொண்டுவர்றப்ப!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

10 comments:

said...

துளசி

உங்கள் பதிவை firefox ல் படிக்க முடியவில்லை. என்னுடைய மை.எக்ஸ்'ரர் உலாவி சரிவர வேலை செய்வதில்லை.

வாசன்

said...

வாசன்,
என்ன செய்யணுமுன்னு தெரியலை.
உங்க இமெயில் ஐடி அனுப்புனீங்கன்னா 'இதை'
அனுப்பறேனே.

என் மெயில் tulsigopal@xtra.co.nz

said...

வாசன்,

நம்ம ஆல்தோட்டபூபதி திலீப்குமார் இதுபற்றி ஒரு பதிவு போட்டுருக்கார் பாருங்க. உதவியா இருக்குமுன்னு நினைக்கிறேன்.

http://aalthotabupathy.blogspot.com/2005/11/firefox.html

said...

அடடா! மக்களைச் சுரண்ட ஒருவ்வொருத்தனும் ஒவ்வொரு வழி. ஒருத்தன் அடிச்சுப் பிடுங்குறான். இன்னொருத்தன் நைசா...ஏமாத்துறான்.....கடவுள்தான் எல்லாரையும் காப்பாத்தனும்.

அது சரி. இப்ப மவோரிகளின் நினை என்ன டீச்சர்?

said...

ராகவன்,

அவுங்களுக்கு அரசாங்கம் நிறைய்ய அதாவது நிறைய்யன்னா நிறைய்ய செய்யறாங்க.
இப்பெல்லாம் அவுங்களை ' வேற யாரும் ' சுரண்டறதில்லை. அவுங்க ஆட்களே சுரண்டிடறாங்க!

said...

நம்மூர் வட்டி தாதாங்கள்ளே பரவாயில்லை போலிருக்கே!

said...

பரந்த புல்வெளியிலே அலங்காரமா ஒரு கூடாரம் எழும்பியிருக்கு. தோரணம் கட்டி அலங்கரிச்சு,புதுசா டிஸைன் செஞ்ச கொடிகளும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தோட கொடிகளுமா பறந்துக்கிட்டு ஒரே அமர்க்களம்தான்போங்க.//

நீங்க சூழல வர்ணிக்கறே அழகே அழுகுங்க. அதுக்காகவே ஒரு +வ் போட்டுட்டேன்.

உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பியிருக்கேன். பதில் போடுங்க.

said...

அதுசரி +வ் போடலாம்னா *யே காணோம்?

said...

TBRஜோ,

ப்ளஸ் மைனைஸ் கூட இல்லாத பரம ஏழையா ஆயிட்டேன் பாருங்க(-:

தாணு,

சுரண்டறவங்க நிறைஞ்ச உலகமப்பா இது. வட்டின்னா வட்டி கந்துவட்டிதான்!

said...

உங்கள் வார்ப்புருவில்

< div id="main" align="justify" >

என்றிருக்கும். align="justify" என்பதை நீக்கிவிட்டால் அனைத்து உலாவிகளிலும் படிக்க ஏதுவாக இருக்கும். எதற்கும் வேறு நண்பர்களிடம் கேட்டு விட்டு திருத்துங்கள்.

-வாசன் மற்றும் விஜி < உங்களது பதிவுகளை தவறாது படிப்பவர். பின்னூட்டம் எழுதாமலிருப்பவர் >