Monday, September 12, 2005

ஏங்க, வாங்கிறலாமா?

"ஏங்க, சிங்கப்பூர்லே எவ்வளவு நேரம் இருக்கு? செராங்கூன் ரோடு வரை போய் திரும்பி வரநேரம் இருக்குமா?"

" எதாவது வாங்கணுமா? சொல்லு. போறப்ப ரெண்டு நாள் அங்கெ தங்கறேன்தானே. அப்ப நேரம் இருக்கும்."



" இல்லே, போறப்ப வாங்குனா அதையெல்லாம் எடுத்துக்கிட்டு உங்க டூர் முடியறவரை தூக்கிக்கிட்டு அலையணும்.
அதனாலே திரும்ப இங்க வர்றதுக்கு முன்னாடி வாங்கினா கொஞ்சம் செளகரியமா இருக்கும்"

" என்ன வேணுமுன்னு சொல்லேன். சீக்கிரம் கெட்டுப் போற சாமானா?"

" ச்சீச்சீ, கெடவே கெடாதுங்க"

" அப்புறம் என்ன? போறப்பவே வாங்கிடறேன்."

" அதுவந்து......."

" சீக்கிரம் சொல்லும்மா, ஏகப்பட்ட வேலை இருக்கு. இன்னும் துணிமணி பேக்கிங்கே ஆரம்பிக்கலை"

"திரும்ப வர்றப்ப எவ்வளவு நேரம் இருக்குமுன்னு சொல்லுங்க"

" அங்கே பாரு, மேசை மேலே ஐட்டினரி இருக்கு. அதுலே பாரேன்"

" ம்ம்ம்ம்...... ஒரு அஞ்சுமணி நேரம் இருக்குன்னு அந்த 'நரி'லே போட்டுருக்குங்க. அதுலே ஒரு மணி நேரத்தைக்
கழிச்சாலும் நாலுமணி இருக்கே. டாக்ஸி எடுத்துக்கிட்டு நேரே செராங்கூன் ரோடு போய் வாங்கிட்டு வந்துரலாம்."

"இன்னும் என்னா வேணுமுன்னு சொல்லலியே?"

" ஒண்ணு செய்யுங்களேன். போறப்ப நேரம் இருக்கே, அப்ப கடையிலே போய் செலக்ட் செஞ்சு வச்சிட்டு, திரும்ப
வர்றதுக்கு முன்னாலே போய் கலெக்ட் செஞ்சுக்கலாமே"

" அதுவும் நல்ல ஐடியாதான். ஆனா நான் வேலை முடிச்சு ஹோட்டலுக்கு வரவே ஒம்போது மணியாயிரும்.
முஸ்தாபா இப்பல்லாம் 24 மணி நேரம் திறந்துதானே இருக்கு,வாங்கிரலாம். அங்கேதானே வாங்கணும்?"

" ஆமாங்க. ஆனா இப்பப் புதுசா பின்னம்பக்கம் ரோடுலே திறந்துருக்கற கடையிலே தாங்க வாங்கணும்."

" அது நகைக் கடையாச்சேம்மா. வாங்கிரலாம் வாங்கிரலாம். உனக்கா, பொண்ணுக்கா? கம்மலா, மோதிரமா?
மோதிரம்னா சரியான அளவைச் சொல்லு. போனமுறை மாதிரி 'லூஸ்'ஸா இருந்துரப்போகுது!"

"இருங்க , இஞ்சு டேப்பைக் கொண்டு வாரேன்"

" மோதிரத்துக்கு எதுக்கு இஞ்சு டேப்புல்லாம்? அளவு மோதிரத்தைக் கொண்டா, என் விரல்லே போட்டுப் பாத்துக்கறேன்"

" இல்லீங்க. என் தலையோட சுத்தளவைப் பாக்கணும்"

" எதுக்கு?"

" நம்மல்லாம் அப்பப்பக் கோயிலுக்குப் போறமுல்லே?"

" ஆமாம். அதுக்கும், தலைக்கும் என்ன சம்பந்தம்?"

" கோயிலுக்குப் வர்ற பெண்ணைப் பார்த்தா அம்மனே நேரில் வர்றான்னு நினைச்சுக் கையெடுத்துக் கும்பிடுற
மாதிரி இருக்கணுமாம். நம்ம மதுரை ஆதீனம் சொல்லியிருக்கார். என்ன இருந்தாலும் பெரியவரு. அவர்பேச்சை
எப்படிங்க கேக்கமா இருக்கமுடியும்? அதான் ஒரு கிரீடமும், பட்டைபட்டையா நெக்லேஸ், கல்லுவச்ச மாங்கா
மாலை, வைரத்துலே ஒரு ஒட்டியாணம், ரெண்டு கைநிறைய அடுக்கடுக்கா வளை, இன்னும்.... கொஞ்சம் இருங்க. சாமிப் படத்தைப் பார்த்து லிஸ்ட்
சொல்றேன். நீங்க உங்க எலெக்ரானிக் டைரிலே குறிச்சுக்குங்க. மறந்துறப்போகுது. கொஞ்சம் கனம்குறைஞ்சதாப்
பாருங்க. எல்லாம் சேந்து ஒரு 200 பவுனுக்குள்ளே அடங்கறமாதிரி. கனம் கூடுனா கிரீடம் தலையை அழுத்தி அந்த
வலிவேற வந்துறப்போகுது? என்னங்க நான் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டேப் போறேன்,ஒரு 'உம்'கூடப் போடாமப்
பொட்டியை அடுக்கிட்டே இருக்கீங்களா?"

" ..............................."

" ஐய்யய்யோ, என்னங்க, என்ன ஆச்சு? ஏன் இப்படிப் பேச்சு மூச்சில்லாமக் கிடக்கறீங்க?என்னங்க என்னங்க...."




74 comments:

said...

:O)

//கோயிலுக்குப் வர்ற பெண்ணைப் பார்த்தா அம்மனே நேரில் வர்றான்னு...//

ஏஞ் சொல்ல மாட்டாங்க! அப்ப கோயிலுக்கு வர்ற ஆண்களைப்பாத்தா சிவனே/முருகனே/பிள்ளையாரே(இன்னும் யாராரோ அவங்களும்) போலே இருக்கணுமாமா? பாத்துங்க..மான் தோல் புலித்தோல் சூலம் வேல் பாம்பு மயில் சகிதம் அவங்க வர வனப்பாதுகாப்புத்துறை ஒருபக்கம் வன விலங்குகளை வேட்டையாடி தோல் எடுத்ததுக்கும், ஆயுதங்களை மக்கள் புழக்கம் அதிகமிருக்கிற இடத்துக்குக் கொண்டு வந்ததுக்கு இன்னொரு பக்கம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவும் வந்து ஒரே அமுக்கா அமுக்கிருவாங்க. கூடவே கோயில்லே இருக்கிறவன்(ள்) எல்லாம் பயந்ததினாலே இரத்த அழுத்தம் கூடிச்சு என்று நட்ட ஈடு கேட்டு வழக்கு வேறே போடுவான். தேவையா?

said...

ஏங்க எங்கிட்டே கேட்டா? பெரியவங்ககிட்டே இல்லே கேக்கணும்?

said...

:-)))))))))))))))))))))))

said...

Thanks Mugamoodi!

said...

சொல்லறது மதுரை ஆதீனம், தண்டனை கோபால் சாருக்கா? இது என்ன அநீதி?

said...

இப்புடித்தான் ஒரு கட்டுரை காமகோடி தளத்திலே வாசிச்சு இரத்த அழுத்தம் எக்கச்சக்கமா எகிறிச்சுது. கோயிலுக்கு பொண்ணைப் பார்க்க வாறாங்களா சாமியைப் பார்க்க வாறாங்களா!

said...

சுரேஷ்,
அப்ப ஆதீனம்கிட்டேயே கேட்டுவாங்கலாமா? அச்சச்சோ,
இதுதெரியாமப் போச்சே!

இன்னும் பாருங்க ஆன்மீகவாதிகள் எல்லாம் என்னாகூத்து கட்டப்போறாங்கன்னு:-)

ந்ன்றி சுரேஷ். கோபாலுக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்குன்னு தெரிஞ்சா அவ்ளதான்.

said...

உங்க ஊட்டுக்காரரு ரொம்பப் பாவங்க..

said...

அது சரி,

நல்லவேளை, நீங்கள் அம்மன் போல் நாலு கைகளுடன் போக நினைக்கவில்லை !!!

இதையே சாட்டாக வைத்து தங்க நகைகளை சேகரிக்க முற்பட்டுள்ளீர்கள்

said...

பிரகாஷ்,

நீங்களும் கோபாலுக்கு சப்போர்ட்டா? :-)

said...

குமரேஸ்,

என்னங்க நீங்க? எய்தவன் இருக்க அம்பை நோகறீங்க? நான் எங்கே தங்கநகை சேகரிக்க இருக்கேன்? அப்ப கோயில் குளமுன்னு போகவேணாமா?

said...

அக்கா நல்ல வேளை கோபால் சார் Africa பக்கம் போகலை... போயிருந்தா துர்கா தேவி மாதிரி கோயிலுக்கு போகணும்னு சிங்கம் கேட்டாலும் கேட்டிருப்பீங்க நீங்க!!!! :-))

said...

ரம்யா - போட்டிங்களே ஒரு போடு! :OD

said...

// கொஞ்சம் இருங்க. சாமிப் படத்தைப் பார்த்து லிஸ்ட்
சொல்றேன். //

:-)))))))))))

said...

என்ன ரம்யா, எங்க கிறைஸ்ட்சர்ச்சை அவ்வளவு 'கேவலமா' நினைச்சுட்டீங்க? எங்க Zooவுலே சிங்கக்குட்டிங்க
இருக்கேம்மா. அங்கே இருந்தே எடுத்துக்கிட்டுக் கோயிலுக்குப் போயிறமாட்டேனா?:-)

ஆனா ஒண்ணு. ஆதீனம் இன்னும் சிங்கம் புலி, யானை போன்ற அக்செஸரீஸ் பத்திச் சொல்லலை. அதுக்குள்ளே நாமா எப்படி
கூடக்கூட்டிக்கொண்டு போறது? நல்லாவா இருக்கும்?

எங்க ஊர்( நாடு) பத்தி அருணாவோட பதிவை இன்னும் படிக்கலையா?

said...

அருணா,

வருகைக்கு நன்றி. உங்க கிரீடம் ரெடியா?

said...

200 பவுனா....... ஏங்க துளசி இதெல்லாம் அநியாயமா தெரியல.......
விட்டா எடைக்கு எடை கேப்பீங்க போல :-)

said...

அடுத்து நான் தான் அம்மன் என்று சொல்லிவிடுவீர்களோ என்னமோ. இப்படி பெண்கள் எல்லோரு அம்மன் மாதிரி உடை, நகை அணிந்து கோயிலுக்குப் போனால் நிஜ அம்மன் எழுந்து எங்காவது ஒடிப்போய்விடுவார்.

said...

கணேஷ்,

அங்கங்கே ஆதிகேசவன் மாதிரி ஆளுங்க 108 பவுன்லே கழுத்துச் சங்கிலி( மைனர் செயினா?) போடறப்ப
அம்மன்/லக்ஷ்மி மாதிரி சாமி எவ்வளோ போடணும்? நானே மனசாட்சி இடிக்குதேன்னு கஷ்டப்பட்டுக்கிட்டு,
கோபாலும் பாவமாச்சேன்னு ஒரு இரக்கத்தாலே வெறும் 200 பவுன்லே கிரீடம் இத்யாதி கேட்டுருக்கேன்.
நீங்கவேற!

எடைக்கு எடை ஐடியாவுக்கு நன்றி. அதைஎல்லாம் போட்டுக்கிட்டாகோவிலுக்குப்போக 'ரதம்' வேணாமா?

said...

விட்டா "பட்டத்தரசி" ரேஞ்சுக்கு போயிருவீங்க போலருக்கே. :O)

கோபால் அங்கிள் எதுக்கும் கொஞ்ச நாளைக்கு ஜி.கே. சகிதம் தலைமறைவாயிடுறது நல்லது போலருக்கு! ;O)

துளசி, அவரும் "ஆண்" சாமி மாதிரி வர்றேன் என்டா என்ன செய்வீங்க?

said...

ஆமாங்க டி.ராஜ். இப்படி ஆன்மீகவாதிங்க எல்லாத்திலேயும் மூக்கைநுழைச்சா இப்படித்தான்(-:

said...

என்னங்க ரவி,

நாங்களா சொன்னோம் அம்மன்'வேஷம்' போட்டுக்கிட்டு வரோமுன்னு?
சொன்னது 'பெரிய இடமா'ச்சுங்களே!
ஆமாம், அது என்னங்க 'நிஜ அம்மன்'?

said...

ஷ்ரேயா,

கோபால் ஏற்கெனவே 'ஆண் சாமி'யாத்தான் இருக்கார். சிலநாள் சிவன் வேஷம்! சிலநாள் 'பழனி ஆண்டி'.
அதான் எல்லாக்காசையும் 'டாக்ஸ்'ன்னு வரிவசூல் செஞ்சுருதே எங்க 'அம்மா'

said...

சோகக்கதை(tax) எல்லா இடத்துக்கும் பொது போலருக்கு! :O(

said...

இன்னிக்கு காலைல,
பாவம் ஏதோ வாங்கிட்டு வரச்சொல்லி புலம்பிண்டிருக்காங்களே, நாம வேணா முன்னரே வாங்கி கோபால் சார் வரும்போது கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கைலதான் படிக்க ஆரம்பித்தேன். அப்புறம் பெரிய இடத்து மேட்டரா முடிஞ்சதால - சந்தடியில்லாம நடையைக்கட்டிட்டேன்:)

இருந்தாலும் அக்காக்கு கேட்டவரம் ஒருவேளை கெடச்சுட்டா... அதான் எதுக்கும் ஒரு சலாம் போட்டு வச்சுடுலாம்னு மறுவிஜயம்...
எனிவே, (வருங்கால) அம்மனுக்கு ஆல் தி பெஸ்ட்....:)

said...

அன்பு,

அக்காவுக்கு வாங்கறது இருக்கட்டும். ஆதீனம் எல்லாப் பொண்ணுங்களுக்கும் சொல்லியிருக்கருல்லெ. எனக்கு
மட்டுமா சொன்னாரு?

சீக்கிரம் அவுங்கவுங்க வீட்டம்மாவுக்கு வாங்குற வழியைப் பாருங்கப்பா.
கோவிலுக்குப் போக நேரமாகலே?

கல்யாணம் கட்டாத தம்பிங்கெல்லாம் இதை வரதட்சணை லிஸ்டுலே சேர்த்துராதீங்கப்பா. இப்பவே நாலுகாசு மிச்சம்
பண்ணி இதையெல்லாம் செஞ்சுவச்சு, வரப்போறவங்களை வரவேற்க ரெடியாயிருங்க.
( புதுமாப்பிள்ளையும் புதுப்பொண்ணும் மொதல்லே கோயிலுக்குப் போணுமுன்னு சாங்கியம் இருக்கேப்பா!)

said...

இவ்வ்ளோ பாரமா போட்டுட்டு யாருங்க எங்கேயும் போறது? நானெல்லாம் பளுவேயில்லாத தங்கமேயில்லாத விலை அதிகமில்லாத costume jewellery தான் போடுறது. வீட்டுல அநேகமான நேரத்துல இது நல்ல பெயரை வாங்கித்தரும்! :O)

said...

//சீக்கிரம் அவுங்கவுங்க வீட்டம்மாவுக்கு வாங்குற வழியைப் பாருங்கப்பா.
கோவிலுக்குப் போக நேரமாகலே? //

துளசி அக்கா!,
நல்ல வேளை சர்ச்-ல இப்படி சொல்லல .எதுக்கும் இந்த சங்கதிய மறைச்சு வைக்குறது நல்லது .இல்லின்னா மதம் மாறுனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.

said...

யாரும் கவலையே படாதீங்க. அந்த காலத்துல ஒட்டியாணம் முப்பது பவுனாம், காசுமாலை முப்பது பவுனாம்( எங்க பாட்டி சொல்லியிருக்காங்க) ஆனா இப்ப, லைட் வெயிட்டுன்னு மூணுகிராம்ல காசு மாலை கெடைக்குது. என்ன ஒண்ணு இதப் போட்டுக்கிட்டு
அலுங்காம பத்திரமா காருல போயி, கூட்டமில்லாத கோவில்ல சாமி கும்பிட்டுட்டு வந்துடணும். கூட்டத்துல நசுங்கிப் போயிடும்ல!
அப்படி கூட்டம் இருக்கிற கோவில்னா, நாலு அடியாட்கள அரேஜ் செஞ்சி, வழி விடுங்கன்னு கூட்டத்த ஒதுங்கி நிக்க சொல்லலாம்.
ஆனா துளசி, இந்த கெட்டப்புல போனா, கூட்டம் தானே வெலகிடும் :-) ( தலைய விரிச்சிப் போட்டுக்க, விக்கு சொல்லிட்டூங்களா?
ரம்யா, மண்டை ஓட்டு மாலைய விட்டுட்டீங்களே?????????

said...

:)))))))) உங்கள் பதிவும், அதன் பின்னூட்டங்களும் ரொம்ப நல்லா இருக்குது.

said...

உஷா,

நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க.

'விக்' ஆர்டர் செஞ்சுருங்க. இருக்குற எலிவால் முடிக்கு அம்மன் வேசம் நல்லாவே இருக்காது:-)

ரம்யாகிட்டே ஏன் மண்டையோட்டுமாலைக்குச் சொல்றிங்க? அவுங்கதான் 'ஹோல்சேலா'?

காளிவேசம் வேணாம்உஷா. மூஞ்சுலே இருக்கர கறுப்புப் பெயிண்டைக் கழுவ எக்ஸ்ட்ராஷாம்பூ வாங்கணும்.

சென்னையிலே இருக்கற தண்ணிப் பஞ்சத்துலே... ஊஹூம் வேணாம்.

said...

ஜோ,
//இல்லின்னா மதம் மாறுனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல//

இப்படி ஒண்ணு இருக்கா? பேஷ் பேஷ்.

சர்ச்சுலேயும் மேரிமாதா கிரீடம் வச்சுருக்காங்களே ஜோ! அதைக் கவனிக்கலையா நீங்க?

said...

வாங்க கலை. நன்றிங்க.

said...

//சர்ச்சுலேயும் மேரிமாதா கிரீடம் வச்சுருக்காங்களே ஜோ! அதைக் கவனிக்கலையா நீங்க?//

துளசி அக்கா! இப்படியா போட்டுக் குடுக்குறது .மேரி மாதா தலையில் பன்னிரு விண்மீன்களை சூடி காட்சி தந்ததா வேற உவமானம் இருக்கு .விண்மீனுக்கு நான் எங்க போறது ?.சாதாரண கிரீடம் -ன்னாலே நான் பக்கத்துல நிஜ ஜோ (சூசையப்பர்) மாதிரி தாடி வளர்த்து கம்பு ஊணிகிட்டு வர வேண்டியது தான்.

said...

ஆஹா.....
//மேரி மாதா தலையில் பன்னிரு விண்மீன்களை சூடி ...//
அந்த விண்மீனுக்கு எங்கே போறதா?
இதெல்லாம் தெரியாம ச்சின்னப்புள்ளையா இருக்கீங்களே ஜோ.

அதான் ஜோ, வைரக்கல் இருக்குல்லே அதைப் பதிச்சிட்டாப் போதும்.
விண்மீன் கணக்கா ஜொலிக்கும்.

said...

//அதான் ஜோ, வைரக்கல் இருக்குல்லே அதைப் பதிச்சிட்டாப் போதும்.//

ஐயையோ! நான் இந்த ஆட்டதுக்கே வரலைப்பா! பேசாம நாத்திகனாயிடுரேன்.

said...

அப்படி கூட்டம் இருக்கிற கோவில்னா, நாலு அடியாட்கள அரேஜ் செஞ்சி, வழி விடுங்கன்னு கூட்டத்த ஒதுங்கி நிக்க சொல்லலாம்.
ஆமாமா அது சரிதான்... ஐஜி-யெல்லாம் நமக்கு ரோட்டுல காவலுக்கு வரமாட்டார்ல:)

said...

அன்பு,

// ஐஜி-யெல்லாம் நமக்கு ரோட்டுல காவலுக்கு வரமாட்டார்ல:) //

ஏன் வரமாட்டாரு? இந்த அக்காவுக்கு உ.பி.தங்கையா அக்காமாறியே 'நகை நட்டு' எல்லாம் போட்டுக்கிட்டுவந்து பாருங்க

said...

// கோபாலும் பாவமாச்சேன்னு ஒரு இரக்கத்தாலே வெறும் 200 பவுன்லே கிரீடம் இத்யாதி கேட்டுருக்கேன். நீங்கவேற! //
ஆமாங்க!! உங்களுக்கு ரொம்ப ரொம்ப இளகின மனசு. நான் கூட இந்த ரதம் மேட்டர மிஸ் பண்ணிட்டேன்.
துளசி madam !! எப்போ நேத்திக்கடனை செலுத்த வர்றீங்கன்னு சொல்லுங்க.... flight பிடிச்சாவது கடத்திட்டுப் போக வந்திடறேன்.... :-))

said...

கூத்து நடக்குது. அந்த ஆதீனத்துக்கு ஒரு தொடுப்பு குடுங்களேன் (தொடுப்புன்னா நகையில்ல)!

said...

சுந்தரவடிவேல்,
http://www.vikatan.com/jv/2005/sep/11092005/jv0201.asp

இதுதான் 'தொடுப்பு'.
ஆனா இது ஜூ.வி.ன்றபடியாலே
காசு கட்டுனவங்களை மட்டுமே பாக்கவிடுவாங்களாம்.

நீங்க சந்தாதாரர்ன்னா பிரச்சனை இல்லை.

said...

அக்கா,
சூப்பர். நல்லாத்தான் யோசிக்கிறீங்க. கோபால் சாருக்கு இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் வேற அப்பப்ப நடக்குதுன்னு தெரியுமா? :)

ஏற்கனவே நம்ம ஊர்ல வெயில் அதிகம். கோயிலுக்குள்ளேயோ கேட்கவே வேண்டாம். இந்த வெக்கையில நம்ம ஊர் அம்மன்களெல்லாம் பாவம், எட்டு கஜ புடவ கட்டிகிட்டு, டன் கணக்கா நகையும் போட்டுகிட்டு வியர்த்து விறுவிறுத்துக்கிட்டு இருக்காங்க. ஆதீனம் அவங்க மேலல்லாம் பாவப்பட்டு, அம்மன்களெல்லாம் சவுகரியமா ஜீன்ஸும் டாப்ஸும் இல்ல அட் லீஸ்ட் சுடிதாராவது அணியலாம்னு சொன்னாலே அம்மன்கள் ரெகமண்டேஷனில் அவருக்கு பரமபதம் நிச்சயம். ஏனோ இப்படியெல்லாம் சொல்லி தானே சொர்க்க வெயிடிங் லிஸ்ட் லேர்ந்து கழண்டுக்கிறேன்கிறாரு.

said...

ராமனாதன் தம்பி,
//கோபால் சாருக்கு இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் வேற அப்பப்ப நடக்குதுன்னு தெரியுமா? :)//

நல்ல கேள்வி. அருமையான கேள்வி.
இந்தக் காலத்துக்குத் தகுந்த கேள்வி... இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்.

இதைப் பத்தி ஒரு தனிப் பதிவே போடலாமுன்னு இருக்கேன்.

அவுங்கவுங்களுக்கு அவுங்கவுங்க உலகம்!

சாமிக்கு ஜீன்ஸா? ஆதீனம் அடிக்கவந்துருவார். ஆனா அவ்வளவு தூரம் நீங்க இருக்கற இடத்துக்கு வரமாட்டார்:-)))))

said...

ஹா ஹா ஹா ..
சூப்பர் அக்கா,எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ உங்களால..
அப்புறம் அந்த ஒட்டியானம்..அதுக்குத்தான் இன்ச் டேப் வேனும் முக்கியமா..

சரி சரி, மொதல்ல கோபால் சாரை தண்ணி தெளிச்சு எழுப்புங்க.. பாவம் அவரு..

ஷ்ரேயா அக்கா,
//மான் தோல் புலித்தோல் சூலம் வேல் பாம்பு மயில் சகிதம் அவங்க வர ///
இதெல்லாம் எதுக்கு..??
பழனி முருகனை நெனச்சு பாருங்க..
---------
இதை என்னனு சொல்றது? லேடிஸ் சாமிக்கு கிரிடம், வளையல், நெக்லஸ், ஒட்டியானம்.. பட்டு..ஜென்ட்ஸ் சாமிக்கு
கோமனம்.. உடுக்கை , , பாம்பு,வேல் மிஞ்சிப்போனா ஒரு மான் தோல்..... அட தேவுடா.. :)
//விட்டா எடைக்கு எடை//
கனேஷ், என்ன நீங்க அக்காவை ரொம்ப குறைத்து எடைப்போடறீங்க... ஹ்ம்ம்ம்ம்ம்
அக்கா அப்படியெல்லாம் கேட்க மாட்டாங்கனு சொல்லவந்தேன்.. எடைக்கு டபுளா தான் கேட்பாங்க...

said...

வீ.எம்.

எப்ப நம்ம வீட்டுப் பக்கம் வந்தீங்க? சொல்லாமக்கொள்ளாம இப்படி வந்தது தெரியாம என்னைப் பார்த்துட்டுவேற போயிருக்கீங்க? ஒரு அறிமுகம் செய்திருக்கணுமா இல்லையா? போங்க. எனக்கு உங்கமேலே கொஞ்சம் கோவம்தான்.

என்னன்னு முழிக்கிறீங்களா?
எல்லாம் அந்த இஞ்சுடேப் விவகாரம்தான்.

//அந்த ஒட்டியானம்..அதுக்குத்தான் இன்ச் டேப் வேனும் முக்கியமா.. //

said...

பழைய நியுஸ் இப்ப எழுதலாமா? பவுன் விலை ஏறியே போச்சு. நான் கூட படிச்சேன். நீங்க வேற நகை பத்தி எழுதினீங்கன்னா, அதுவும் வரதட்சணை லிஸ்ட்லே சேர்ந்துடும். அவர் சேலையை பத்தி மட்டும்தான் சொல்லி இருக்கிறார்

said...

என்னங்க பத்மா,

தகதகன்னு வெறும் பட்டுச் சேலையை மட்டும் கட்டிக்கிட்டா எப்படி 'அம்மன் லுக்' வரும்? அதுக்குத்தகுந்த 'ஆக்ஸெசரீஸ்' வேணுமா இல்லையா?

அதுக்குத்தான் கல்யாணமாகாத தம்பிங்களுக்கு இதை வரதட்சணையிலே சேர்க்கவேணாமுன்னு ஒரு 'நோட்' போட்டுட்டோமுல்லெ:-)

said...

//ஷ்ரேயா அக்கா,
//மான் தோல் புலித்தோல் சூலம் வேல் பாம்பு மயில் சகிதம் அவங்க வர //..
இதெல்லாம் எதுக்கு..??
பழனி முருகனை நெனச்சு பாருங்க..//


அதான் சொன்னேனே..அதிகாரிகள் வந்து அமுக்கிருவாங்க. பழனிமுருகன் மாதிரி வந்தீங்க.. பொது இடத்தில ஆபாசமா உடையணிந்து வந்தீங்கன்னு வழக்குத்தான். ;O)

சேலைதான் கட்டச் சொன்னாரா Mr. ஆதீனம்? ஏன் சல்வாரெல்லாம் போடக் கூடாதா? அது சேலைய விட எல்லாப் பிரதேசத்தையும் நல்லாவே மூடி மறைக்குமே! :O)

said...

நல்ல காலம் லஷ்மி மாதிரி வரணும் என்று சொல்லவில்லை. கோபால் அங்கிள் பாவம், தங்கக் குடத்துக்கும், அதிலேர்ந்து கொட்டிக் கொண்டேயிருக்கிற தங்கக்காசுக்கும் எங்கே போவார்? (ஆனா இந்த கெட்டப்பில வந்தா துளசி பயங்கர பிரபலமாயிடுவா..பின்னே..போற இடமெல்லாம் காசு கொட்டுமே!)

(அப்படிப்பாத்தா கோபால் அங்கிள் பிரச்சனை தீர்ந்திடும் போலிருக்கே.. recursive? :O)

said...

ஹா ஹா ஹா

துளசி அக்கா! என்ன இப்படி பயம்காட்டுறிங்க,நான் கல்யானம் ஆகாத ஆளூ,கல்யானம் செய்யலாமா வேனாமான்னு யோசிக்கிறேன்.

உங்கள் பதிவும், அதன் பின்னூட்டங்களும் ரொம்ப நல்லா இருக்குது.

said...

கார்த்திக்,

இதுக்கெல்லாம் பயந்துறலாமா? மனதில் உறுதி வேணூமுன்னு 'முண்டாசுக்கவிஞர்'
சொல்லியிருக்காரேப்பா!

ஷ்ரேயா,

கோபாலுக்கு சப்போர்ட் செய்யற ஜனங்க கூடிக்கிட்டேவர்றது நல்லாவா இருக்கு?

கீழே உள்ள செய்திக்கும் இந்தப் பதிவுக்கும் எதாவது சம்பந்தம் இருந்தால் அதற்கு நான்
பொறுப்பல்ல.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு. 10 நாளில் பவுனுக்கு 72 ரூபாய் விலை அதிகரிப்பு.

( தினமலர் 12/09/05)

said...

//கோபாலுக்கு சப்போர்ட் செய்யற ஜனங்க கூடிக்கிட்டேவர்றது நல்லாவா இருக்கு?
//


இவங்களுக்குத்தானே இரக்கப்பட முடியும்? கேக்கிறவங்க கேட்பீங்க... தேடியெடுத்துக் கொண்டர வேண்டியது அவர்தானே.. ஆதரவு கொடுக்காம விட்டா பாவமாகிராது? ;O)

said...

இப்படியே பேசிகிட்டு கிடங்க. அங்க எல்லா கிரீடமும் வித்து போச்சி...

// சேலைதான் கட்டச் சொன்னாரா Mr. ஆதீனம்? ஏன் சல்வாரெல்லாம் போடக் கூடாதா? //

தலைவிரி கோலமா, கிரீடம் எல்லாம் வச்சி, 2 ரூபா காயின் சைஸ்ல பொட்டு வச்சி சிங்ககுட்டி மேல சல்வார் போட்டு வர்ற மாதிரி கற்பனை பண்ணி பாருங்க. நல்லாவா இருக்கு

said...

முகமூடி,

:-)))))))))

வயிறு வலிக்குது சிரிச்சுச் சிரிச்சு!

said...

அடேங்கப்பா......ஆதினத்தின் கமெண்ட்டே காமடி. அதில் துளசி கோபாலின் கதை கலக்கலோ கலக்கல். அதுக்கு இன்னும் சேக்குற மாதிரி மத்தவங்களோட கருத்துகள்.

பழநி முருகன் வரைக்கும் யோசிச்சீங்களே.....நரசிம்ம சாமி கோயிலுக்கும் அர்த்தநாரீஸ்வரைப் பாக்கவும் எப்படிப் போறதுன்னு யோசிச்சீங்களே. Face off மாதிரி சிங்க மூஞ்சி வெச்சுக்கனும். ஆனா அர்த்தநாரீஸ்வரர் கோயிலை நெனைக்கும் போதுதான் எனக்கு அடிவயித்துல ஜில்லுங்குது.

said...

ராகவன்,

சிங்க முகம் எல்லாம் வேணாம். நாங்க சிம்மாச்சலம்போயிருக்கோம். அங்கே மூலவரைப்
பார்க்கவே முடியாது. உக்ரமா இருக்காராம்.

அப்புறம் அர்த்தநாரீஸ்வரர் கோயில்னா எதுக்கு பயம்? எப்பவும் நாங்கதானே முன்னாலே போறோம்.
உங்களுக்குப் பாதி இடம் கொடுத்திருக்கொம்ல, பயப்படாதீங்க:-)

நாம என்ன மேக்கப்மேன் /வுமன் வச்சு வேஷம் போட்டுண்டா போறது? சொல்லுங்கோ,
நன்னாயிருக்குமோ?

இங்கே ஆடை அலங்காரம் அம்மனைப் போலிருக்கறதுதானே ஒழிய கோவிலுக்கேத்த மாதிரிப்
போகணும் என்றதில்லை. எப்பவுமே அம்பாள்,அம்பாள் தானே. சர்வ அலங்காரபூஷிதையா இருக்கணும்ன்றதுதான்
அவர் சொன்னது. என்ன பட்டுப் பொடவைங்கதான் கொஞ்சம் கூடுதலா வாங்கிக்கணும். ஒரே புடவையைக்
கட்டிண்ட்டு எல்லாக்கோயிலுக்கும் போனா நல்லா இருக்காதில்லையா?

வேணுமுன்னா கிளியைக் கையில் வச்சு மீநாக்ஷி, தோளீலே ஏத்திக்கிட்டு ஆண்டாள், கரும்பைக் கையிலே
வச்சுண்ட்டா புவனேஸ்வரி ன்னு அலங்காரம் இருக்கலாமுன்னு நினைக்கிறேன்.

said...

// வேணுமுன்னா கிளியைக் கையில் வச்சு மீநாக்ஷி, தோளீலே ஏத்திக்கிட்டு ஆண்டாள், கரும்பைக் கையிலே
வச்சுண்ட்டா புவனேஸ்வரி ன்னு அலங்காரம் இருக்கலாமுன்னு நினைக்கிறேன். //

அப்படியே ஹோண்டா வாகனத்தை விட்டுட்டு சிம்ம வாகனத்தைப் பிடிங்க. (வாகனத்துக்கு இரை போடுறேன்னு நாமளே இரையாகாம இருக்கனும்). ஆளுயர மாலை அவசியம். நெறைய ரோஜாப்பூவா வெச்சதா பாத்து வாங்குங்க.

said...

துளசி, தங்களின் இத்தகைய பெண்ணீய கருத்துக்களை வன்மையாய் கண்டிக்கிறேன். ( பாருங்க ஸ்மைலி போடலை :-)
வரதராஜபெருமானையும், ஸ்ரீரங்கரையும், பழனி அல்லாத முருகன், இன்ன பிற ஆண் தெய்வங்களின் ஆடை அலங்காரத்தை தாங்கள் கண்டதில்லையா?
ஒரு முறை கரூர் என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்தில் பிச்சாண்டார் (உற்சவ மூர்த்தி) தெருவில் பிட்சைக்கு வந்தார். இடுப்பில் கோவணம்
என்றாலும் மாணிக்க, மரகதமாலையில் ஜொலித்தார். நல்லா நெல்லிக்காய் அளவான பச்சை மரகதம். இன்னும் கண்ணிலேயே இருக்கிறது.
நானும் தேடரேன் அந்த மாதிரி கிடைக்கவில்லை. (அப்போது வயது பதினாலு)
101 டிகிரி ஜூரம், வம்படித்தால் ஜூரம் இறங்கிவிடும் என்று நினைக்கிறேன்.
உஷா

said...

உஷா,
ஆம்பிளைங்களைப் பத்தி நமக்கென்ன கவலை. அதெல்லாம் அவுங்களுக்குத் தனியா 'ஆதீனமே' சொல்வார்.

ஆமா எந்தக் 'கரூர்'? ஈரோடு பக்கத்துலே இருக்கறதா? அதுதான்னா அங்கெ ஒரு விசேஷம்
நடந்திருக்கணுமே? அதுதான் நான்
'அவதரித்த' புண்ணியபூமி!
மரகதமாலையிலே நெல்லிக்காய் அளவு மரகதமா? பேஷ் பேஷ்.
அம்மனுக்கும் அதுமேல ஆசை வந்துருச்சு இப்ப:-))))
அடுத்தவாட்டி 'சாமியாடறப்ப'
மறக்காம பக்தர்கள்கிட்டே கேட்டுரணும்.

'டேய்ய்ய்ய்ய், அம்மாவுக்கு மரகதக்கல் மாலை எங்கேடா? அதைப்போட்டாத்தாண்டா மனம் குளுந்து ஊரைப் பசுமையாக்குவேன்...ம்ம்ம்ம்ம் டேய்ய்ய்ய்ய்'

ஜுரம் இப்பவா? இல்லே அப்பவா?
இப்பன்னா கொஞ்சமாச் சிரிச்சுட்டு ஓய்வெடுங்க.

said...

விடுங்க அக்கா , வந்துட்டு போயாச்சு அப்புறம் என்ன...
அடுத்த முறை நிச்சயமா சொல்றேன்..
அப்புறம் கடைசி 2 பதிவு இருக்கு.. வாங்களேன் அரட்டை அரங்கம் பக்கம்..

said...

நீங்க நம்ம பதிவில 'உங்க twin sister'-ன்னு சொன்னப்பவே நினச்சேன் இந்த கோபால் பாவம்னு..அதுக்குன்னு இப்டியா??

said...

அடாடா...ஆதினம் தெரியாம வாயவிட்டாலும் விட்டார்...இங்க கல்யாணமான அம்மணிகளின் அட்டகாசம் தாங்கமுடியலைப்பா...

ஆத்தாக்களா...மலையேறுங்க....:)

said...

200 பவுன் கிடைக்கிறது சந்தேகம், ஆனால் எப்படியும் 200 பின்னூட்டம் வந்துவிடும் :)

said...

101 டிகிரி ஜூரம், வம்படித்தால் ஜூரம் இறங்கிவிடும் என்று நினைக்கிறேன்.
உஷா
ஜாக்கிரதை நீங்கள் ஏதாவது நகை கேட்கப்போக காய்ச்சலில் பிதற்றுகிறீர்கள் என்று நினைத்து கொண்டுவிடுவார்கள். காய்ச்சல் குணமான பின் உங்கள் பட்டியலை முன் வையுங்கள் :)

said...

வேணுமுன்னா கிளியைக் கையில் வச்சு மீநாக்ஷி, தோளீலே ஏத்திக்கிட்டு ஆண்டாள், கரும்பைக் கையிலே
வச்சுண்ட்டா புவனேஸ்வரி ன்னு அலங்காரம் இருக்கலாமுன்னு நினைக்கிறேன்.

இதுக்குத்தான் சொல்றது படம் பார்க்கிறேன் என்று அம்மன் படங்களாகவே பாக்காதீங்கன்னு :)
கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன் எங்கிருந்தாலும் ஒடி வரவும், இங்கே ஒரு போட்டியாளார்
இருக்கிறார் :)

said...

ராகவன்,

இங்கே ரோஜாங்க எக்கச் சக்கம். ஆனா மாலை கட்டத்தான் ஆளில்லை. உங்களுக்கு மாலை
கட்ட வருமா? :-)


வீ.எம்,

வந்துட்டுப் போனதுக்கு நன்றி. நானும் அ.அ. பக்கம் வரேன்.

தருமி,

சந்தேகம் தீர்ந்துருச்சுல்லே. இப்பப், 'பாவம் கோபால்' இல்லே! நீங்கதான். உங்க
வீட்டம்மா அதான் சகதர்மிணிக்கு போட்டுக் குடுக்கணும் விண்மீன் க்ரீடம் பத்தி.
அவுங்க இந்தப் பக்கம் எல்லாம் வர்றதில்லைபோல.

டுபுக்கு,
அதெப்படி அவ்வளோ சீக்கிரம் மலை ஏறுறது? இப்பத்தானே 'விழிப்புணர்வே'
வந்திருக்கு:-)

ரவி,

200 பின்னூட்டத்தை ஏத்தறதுக்கு இதையே தனித்தனியாப் போட்டா நம்பர் கூடிக்கிட்டே
போயிருமில்லே?

ஒரு 200 பவுனுன்னு தடாலடியாக் கேட்டாத்தான் ஒரு 100ஆவது தேறும். முகமூடி
வேற, அங்கே 'கிரீடம் எல்லாம் வித்துப் போச்சு'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்.

ஆமா இப்ப எதுக்கு கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன் இவுங்களை இழுக்குறீங்க?
நமக்கு அசல் வேணும். சினிமா நக்லி நகை வேணாமே ப்ளீஸ்.

அதுவும் இப்ப இருக்கற ஊர்லே தைரியமா தங்கம் போட்டுக்கிட்டே வெளியே போகலாம்.
யாரும் சட்டை செய்யப்போறதில்லை(-:

said...

துளசி - இவ்வ்ளோ பவுன்லே நகை சேர்த்துப் போட யோசிக்கிறீங்க. சில வெளிநாடுகள்லே நம்மாளுங்க அடுத்தவன் 10 - 20 பவுன்லே கட்டினதுக்குப் போட்டியா 50, 75 பவுண்லேயே தாலி போடுறாங்களாம்!!

(பொண்ணு கழுத்து என்னாகும்ன்ற கவலையை இப்பத்தைக்கு கொஞ்சம் ஒதுக்கி வைச்சிட்டு யோசிங்க - அவ சேர்க்க வேண்டியதே 125 - 150 பவுண் மட்டுமே!! ;O)

said...

// ராகவன்,

இங்கே ரோஜாங்க எக்கச் சக்கம். ஆனா மாலை கட்டத்தான் ஆளில்லை. உங்களுக்கு மாலை
கட்ட வருமா? :-) //

மாலை கட்ட வராது. ஆனால் கட்டிய மாலையை சாமி படத்துல கட்ட வரும்.

said...

ராகவன்,

இந்த ரோஜா மாலைன்னதும் ஒண்ணு ஞாபகம் வருது. அப்ப எனக்கு எட்டு வயசு.

'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' நாடகத்துலே பால 'ஆண்டாளா' நடிச்சப்ப இப்படித்தான்
ஒரு பெரிய பூமாலையை( அப்பெல்லாம் இந்தக் காகிதப்பூக் கலாச்சாரம் வரலை)
சுமக்கமுடியாம கழுத்துலே போட்டிருக்கவேண்டியதாப் போச்சு. நாடகம் ஊர் ஜனங்க
கூடிய திடலில். அதுக்கு எங்க வீட்டிலே இருந்து யாருமே வரலை.
எங்க பாட்டு வாத்தியார்( அவர்தான் நாடக டைரக்டர்) வீட்டுக்குக் கொண்டுவந்து
விடவந்தார். வர்றவழியிலே எல்லாம் மாலையைக் கழட்டவே விடலை. மாலையோடு
இருக்கற அலங்காரத்தை அம்மா பார்க்கணுமாம்!ஆட்டோ இல்லாத
காலம். நடந்தே வந்தோம் இருட்டுலே.அப்ப இருந்த ஊர் எதுன்னா 'மேலூர்'
மதுரைமாவட்டம்.

பரிசு எல்லாம் கிடைச்சது.

said...

:))) செம காமெடி

said...

வாங்க கயலு.

பொழைப்பே சிரிப்பாச் சிரிக்குதேப்பா:-)))))

said...

வாங்க பிரியமுடன் பிரபு.

அஞ்சுவருசமாச்சு. ஆதீனம் கொள்கைப் பிடிப்போட(வே) இருக்கார் பாருங்க.

said...

:D :D

said...

'ஏங்க, வாங்கிறலாமா?'
சிரிச்சு மாளல!
பதிவுல நீங்கள் போட போட்டை பின்னூட்டத்துல அவங்கவங்க கலாய்ச்சது இன்னும் வயத்த வலி அதிகமாக்கிடுச்சு!