Saturday, September 17, 2005

பூ பூவா பூத்திருக்கு.




இந்த வலைப்பதியுற ஆட்களுக்கெல்லாம் என்னவோ ஆயிருச்சு போல!

எல்லாரும் ஒரேதா படம் காமிக்கிறாங்க.

இதுலே ச்சின்னவரும் பூ படத்தைப் போடுங்கன்னு நேயர் விருப்பம்கேட்டுட்டார்.

விடமுடியுதுங்களா?

அதனாலே இங்கே சில பூ படங்களைப் போடறேன்.

அது என்ன பூன்னு சொல்லுங்களேன்.




14 comments:

said...

//அது என்ன பூன்னு சொல்லுங்களேன்.//

குஷ்பூவா?

said...

//குஷ்பூவா? //

இல்லீங்களே!

said...

படத்தோட பெயரை 'palm flower' -ன்னு வச்சிட்டு இது என்ன பூவுன்னு கேட்குறீங்களேக்கா !!! :-)

said...

அட தேவுடா!
பேரை மாத்தணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்துட்டு இப்படிக் கோட்டை விட்டுட்டேனே(-:

போட்டும் எந்த 'palm 'னு சொல்லணும்.

said...

துளசியம்மா, இப்படி கோட்டை விட்டுவிட்டீங்களே!

எனக்கும் விடை தெரியலை.

ஆமாம் சுரேஷ் இது எல்லாம் எப்படி?

எல்லாம் பெயர் ராசி தானே காரணம். பின்ன சுரேஷ் என்று பெயரை வச்சிகிட்டு இப்படி கண்டுபிடிக்காமல் இருந்தால் எப்படி?

said...

கொஞ்சம் தென்னம்பாளை மதிரியும், கொஞ்சம் தாழம்பூ மாதிரியும் தெரியுது, உண்மையாவே என்ன பூ இது, துளசி?

said...

துளசி,
உங்களுக்காச்சி எனக்காச்சி..ரெண்டுல ஒண்ணு பாத்துர்ரதுன்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன்.
நீங்க படம் காமிச்சீங்க; நானும் காமிச்சாச்சு. ஆனா, அதுக்குப் பிறவாட்டி, நான் ஒரு 'கவிதை' (நான் சொல்றேன் அது கவிதைன்னு!) போட்டுட்டேன்; அப்ப நீங்க...? ஹ்..ஹ...ஹா..!!

said...

பரஞ்சோதி,

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க?

நானே க.கை.நா. எனக்கே தெரியுதே. அதை 'சேவ்' செய்யப்
பார்த்தா' எல்லா விவரமும் கொட்டிருதே!

said...

தாணு, மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இன்னும் கொஞ்சம் பொறுக்கவா அல்லது இப்பவே சொல்லிரணுமான்னு ஒரு எண்ணம்.

said...

தருமி,

நான் உங்க 'வெல்லுவிளி'க்கு வரமுடியாது.

கவிதைக்கும் எனக்கும் காத தூரம்.
இதைத் தெரிஞ்சுக்கிட்டுதானே
வார்த்தைங்களைப்பிச்சுபிச்சுப் போட்டு கவிதைன்னு வச்சுருக்கீங்க உங்க பதிவுலே?

இதுக்கு வெள்ளீவிழா வேற? ஹூம்.....

said...

'வெல்லுவிளி'க்கு - அது என்னங்க துளசி? அடிக்கடி இப்படி ஏதாவது சொல்லி திட்டீர்ரீங்களே!

said...

தருமி,

வெல்லுவிளி= (சேலஞ்ச்)அறைகூவல்

இப்படி வாத்தியாருக்கே பாடம் சொல்ல வச்சுட்டீங்களே:-))))

அது ஒண்ணுமில்லை அப்பப்ப வேற
ஒரு பாஷையிலே இருந்து ஒண்ணை எடுத்துவிடறதுதான்.

ச்சும்மா ஒரு திடுக்?

said...

என்ன அழகா இருக்கு பூவு. அதுவே தன்னைத் தானே பூங்கொத்து மாதிரி அலங்கரிச்சிக்கிட்டு நிக்குது பாருங்க....பிரமாதம்.

said...

பதிலைச் சொல்லிரப் போறேன். ரொம்ப நாளு விட்டுட்டா, இந்தப் பக்கம் யாருமே வராம
பதிவு நாறிடாதா?:-)

இது ஒரு வகையான 'பாம் ஃப்ளவர்'தான். 20 வருசம் கழிச்சு மொதமுறையா பூத்திருக்கு.
நாங்க அந்தவீட்டுக்கு வந்தப்பவேஅது 3 வருசமான செடியாம். பழைய ஓனர் சொன்னாங்க.
மூணு பூவு பூத்துச்சு. ஒருநாள் எதேச்சையா அதைப் பார்த்தப்ப ஏதோ ப்ரவுன் பேப்பரதுலே
ஒட்டிக்கிட்டமாதிரி இருந்துச்சு. காத்துலே எதோ பறந்துவந்து ஒட்டியிருக்குன்னு அதை
எடுக்கப் போனேன். (பூ என்னோட கைக்கு எட்டுற இடம்தான்)அப்பத்தான் தெரியுது
அது வெளிப்பக்க மடல்னு. ரெண்டு நாள் கழிச்சு அது தானே பிரிஞ்சிருந்தது.

அன்னைக்குப் பூரா ஒரே சந்தோஷமா இருந்தது. உள்ளே, நம்ம தாழம்பூவுக்குள்ளே
இதழ் எல்லாம் பிரிச்சபிறகு இருக்கும் பாருங்க அதே டெக்ச்சர்லே இருந்தது.