Sunday, September 18, 2005

எங்க தேறுதல் 2005

இங்கே எங்க நாட்டுலே எலீக்க்ஷன் முடிஞ்சுருங்க. எல்லாம் நேத்துதான். சாயந்தரமா ஓட்டு எண்ணஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொருத்தரும் ரெண்டு ஓட்டுப் போடணும். நம்ம தொகுதியிலே நிக்கறவங்களிலேயாரை உங்களுக்குத் தெரிவு செய்யணுமுன்னு இருக்கோ அவுங்களுக்கு. இன்னொண்ணு எந்த கட்சி உங்களுக்குப்பிடிச்சிருக்கோ அதுக்கு.


இந்த 'பார்ட்டி' ஓட்டு கிடைக்கிற விகிதாச்சாரத்தைப் பொறுத்து அந்தந்தக் கட்சிங்களே சிலரை எம்.பி. ஆக்கிரும்.இவங்களுக்குப்பேரு 'லிஸ்ட் எம்.பி'. முந்தி நம்ம ஊர்லே வேண்டப்பட்டவங்களுக்குக் கொடுக்கறதுக்குன்னே'ராஜ்ய சபா எம்.பி.' இருந்தாங்களே அதே போல!


18 வருசத்துக்கு முன்னாலே ( அதென்ன ஆன்னா ஊன்னா 18 வருசம்னு கேக்கறீங்களா? அதுதாங்க நம்ம சரித்திரம்இங்கே. அப்ப இருந்து என்ன தெரியுமோ அதைத்தானே சொல்லணும்?) இங்கே ரெண்டே ரெண்டு அரசியல் கட்சிங்க தான். இப்ப கணக்கிலடங்கான்னு ஆயிருச்சு. அதிலும் முக்கியமாச் சொல்ரதுன்னா 8 கட்சிங்களைச் சொல்லலாம்.அந்த எட்டுலேயும் ரொம்ப முக்கியமானது ரெண்டுதான். ( அதாங்க அந்தப் பழைய ரெண்டு. மத்தது தாய்கட்சியிலே இருந்து பிரிஞ்சதுங்க.)


லேபர் 50நேஷனல் 49 நியூஸி ஃபர்ஸ்ட் 7 க்ரீன் 6மவோரி 4ஆக்ட் 2யுனைட்டட் ஃப்யூச்சர் 3பிராக்ரஸிவ் 1


இதுதான் இன்னைக்கு இருக்கற நிலமை. இனிமேத்தான் பேரம் பேசத் தொடங்குவாங்க. கூட்டணி ஆட்சிதான்.இதெல்லாம் நமக்கு ஜுஜுபியாச்சே.


இதுலே அம்மாதான் பிரதமரா வருவாங்கன்னு நம்மத்தகுந்த வட்டாரங்களிலே இருந்து சேதி வந்துக்கிட்டு இருக்கு.


நேஷனல் தலைவர் முந்தி ரிசர்வ் பேங்க் கவர்னரா இருந்தவர்.பணம் காசைப் பத்தித்தான் தெரியும், பாலிடிக்ஸ்தெரியாது அவருக்குன்னு ஒரு பரவலான நம்பிக்கை.


அம்மா? பழம் தின்னு கொட்டை போட்டவங்க. 1999 லே இருந்து பிரதமர். ஈஸியா அடிச்சுட்டுப் போயிருவாங்கன்னுஒரு நினைப்பு.


இதுலே பாருங்க போன 2002 தேர்தல்லே லேபர் வாங்குன ஓட்டுலே ஏறக்குறைய பாதிதான் நேஷனல் வாங்குச்சு.ஆனா இந்த எலக்ஷ்ன்லே சரியான போட்டி. வெறும் 22751 வோட்டுதான் வித்தியாசம். சபாஷ், பலே பலே!


ஓட்டுப் போட்ட ஜனங்க 2052813. ஓட்டுப் பதிவு 73%
ஆஸ்த்ராலியாவுலே கட்டாயம் கட்டாயம் ஓட்டுப் போடணுமாம்.


போடலேன்னா 300$ அபராதமுன்னு சொல்லக் கேள்வி. ஷ்ரேயாதான் இது உண்மையான்னு சொல்லணும்.


ஆமாம், நான் ஓட்டுப் போட்டேனான்னு கேக்கறீங்களா? புத்தம் புது புடவை, நகை நட்டுன்னு அலங்காரமாப் போய்ஓட்டுப் போட்ட ஆளு நானாத்தான் இருப்பேன். அது ஏனா? போனவாரம் இங்கே நம்ம கேரளா அசோஸியேஷன்லேஓண்ம பண்டிகைக் கொண்டாட்டத்துக்குப் போனோமில்லெ, அப்பவே ஸ்பெஷல் ஓட்டுப் போட்டுட்டுப் போனோம்.கோபால் எலிக்ஷன் அன்னிக்கு இங்கே இருக்கமாட்டருல்லே. இந்தமாதிரி ஆக்களுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னேயே ஸ்பெஷலா ஓட்டுப் போட ஏற்பாடு இருக்கே. போஸ்டல்லேயும் போடலாம்தான். பக்கத்துலே இடம் இருக்கறப்பஎன்னாத்துக்குன்னு தான். அவரு போட்டப்பயே, நானும் எனக்கும் அன்னைக்கு வரமுடியாதுன்னு சொல்லி ஓட்டுப்போட்டுட்டு வந்துட்டேன். ஒரு வேஸ்ட் பண்ணக்கூடாதுல்லே?


ச்சின்ன நாடா இருக்கறதாலே இங்கத்து தேர்தலைப்பத்தி, உலகத்துலே யாரும் அவ்வளவாக் கண்டுக்கறதில்லை.அதனாலே நம்ம வலை மகா ஜனங்களுக்கு விசயத்தைச் சொல்லிரலாமுன்னுதான்..........


யார் 'முடிசூட'ப்போறாங்கன்னு அறிவிப்பு வந்ததும் சொல்றேன். இப்பப் போயிட்டு வரட்டா?


4 comments:

said...

உங்க ஊருல அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?... சரி காலையில எழுந்திருச்சால் முடிவு தெரிந்திருக்கும்...Have a nice day..

said...

சுரேஷ்,

//உங்க ஊருல அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?...//

என்ன விடிஞ்சிருச்சாவா?

நாங்க டேட் லைன்லே இருக்கறது மறந்துருச்சா? உங்களுக்கும் எங்களுக்கும் சரியா 12 மணி நேரம் வித்தியாசம் இருக்குல்லே.

நேத்து ராத்திரி 12க்கே ரிசல்ட் பூரா வந்துருச்சு.

பேரம்தான் முடியலை:-))

இப்பச் சரியா இங்கே நேரம் காலை மணி 10.

நீங்கபோய்த் தூங்குங்க.

குட் நைட்.

said...

அங்கேயும் அம்மா ஆட்சி தானா? :)

said...

வாங்க இல்யாஸ்.

ஆமாங்க............ அம்மா என்றழைக்காத உயிரில்லை:-)))))

( பரணால் மறுவாழ்வு கிடைக்குது)