Thursday, September 22, 2005

நியூஸிலாந்து பகுதி 2

சமீப காலமாக இந்த நாட்டின் புகழ் பரப்பும் செயலை, நம் திரைப்பட உலகத்தினர் திறமையாகச் செய்துவருகிறார்களெனத்தெரிகிறது. திரைப்படம் என்பது ஒரு 'mass media'. மக்களை எளிதில்சென்றடைகிறதல்லவா? நானுமே, வலைகளில் வலம்வரும்போது, சினிமாச் செய்திகளைப் படிப்பேன்.சினிமாவுக்கென்று ஒரு கவர்ச்சி உள்ளதை மறுக்க முடியாதல்லவா?


போன வாரம் வெளியான ' குமுதம்' என்ற வெகுஜன இதழில்,இங்கே தனுஷ் நடிக்கும் 'சுள்ளான்' படபிடிப்பிற்கு வந்த இயக்குனர் 'நியூஸிலாந்து' நாட்டைப் பற்றிக்கூறியுள்ளார். தண்ணீர் பாட்டில் விலை 150 ரூபாய் என்றும் சொல்கிறார்.


தண்ணீர் பற்றிப் பேச்சு வந்ததால், தண்ணீர் பற்றித் தெரிவிக்க வேணுமல்லவா?. சும்மா சொல்லக் கூடாது,உண்மையாகவே, மிகவும் உலகத் தரம் உயர்ந்த, சுத்தமான குடினீர் இங்கு, நம் வீட்டுக் குழாயிலிலேயேவருகிறது. அப்படியே குடிக்கலாம். காய்ச்ச வேண்டிய அவசியமில்லை. திரைப்படக்காரர்களின்'பந்தா' தனியாச்சே!
போதாக்குறைக்கு, சினிமா நடிகைகளான சினேகா, ரீமா சென் போன்ற அம்மணிகளும் கொ.ப.செ.ஆகிவிட்டனர் போலுள்ளது.'ஜனா' படத்தில் ஒரு காட்சியில், 'நியூஸிலாந்துக்கு போய்விடலாம், மைக்கிரேஷன் ஆவது ரொம்ப ஈஸி'என்றொரு வசனம். இதுபோல் ஆளாளுக்கு இஷ்டம்போல் அளந்து விடுவதால், நம் ஜனங்களும், இங்கே'தேனும், பாலும்' ஓடுவதாக நினைக்கலாம். (ஊரெல்லாம் ஈ வந்துடாதோ?)



எந்த ஒரு நாட்டையுமே சுற்றுலாப் பயணியாக பார்க்கும் பார்வைக்கும், அங்கேயே தங்கி வாழ்வதற்கும்நிறைய வித்தியாசங்கள் உள்ளன.'பாயிண்ட்' அடிப்படையில் இப்போதெல்லாம் 'பெர்மனெட் ரெஸிடென்சி' தருகிறார்கள். படிப்பு, அனுபவம், வயது, ஆங்கில மொழி அறிவு இன்னும் பல அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண் போல சில எண்கள் தரப்படுகின்றன. மொத்தம் 29 வந்தால், உங்களுக்குக் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள்உண்டு. ஆனால், உங்கள் படிப்புக்குத்தகுந்த வேலை கிடைப்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. இன்னும்சொல்லப்போனால், பல படிப்புகளுக்குக் கிடைத்த 'டிகிரி' களுக்கும் அங்கீகாரமே கிடையாது எனலாம்.உடலுழைப்புக்கு அஞ்சாமல், எந்த வேலையாயினும் சரி என்ற மன நிலையிருப்பவர்கள் ஓரளவு தப்பித்துக்கொள்வார்கள். ஆனால், ' டாக்டர், எஞ்சீனீயர்' போன்ற தொழிலுக்குப் படித்தவர்களின் நிலமை மிகவும் மோசம். அந்தப்படிப்புக்கு இடம் கிடைக்கவே, அவர்கள் 'டொனேஷன்,மற்றும் அந்த நிதி, இந்த நிதிஎன்று எவ்வளாவோ செலவழித்திருப்பார்கள். இங்கே வந்தால், அவர்கள் சில தேர்வுகளை எழுதவேண்டும்.அது அவ்வளவு சுலபமல்ல. சிலசமயம் பார்க்கும்போது, வேண்டுமென்றே அவ்வளவு கடுமையான தேர்வுமுறைகளைவைத்துள்ளனரோ எனத்தோன்றும். அதுவும் 3 முறைதான் வாய்ப்பு. மூன்றாவது முறையும் தவறினால், பிறகுஅவர்களுக்குத் தேர்வு எழுதவுமே அனுமதி இல்லை. தேர்வுகளுக்கு கட்டணமும் கூடுதல். ஒவ்வொரு தேர்வுக்கும்நம்நாட்டு நாணய மதிப்பில் 2 முதல் 3 லட்சங்கள் கட்ட வேண்டும். என்னதான் ஆங்கில அறிவுக் கல்வியில்படித்திருந்தாலும், இவர்கள் பேசும் 'ஆக்ஸென்ட்' புரிந்து கொள்வது முதலில் கொஞ்சம் கஷ்டமே. இந்தியர்களுக்கு'பிரிட்டிஷ்'காரர்களின் உச்சரிப்புக் கூட சற்று சுலபமாகப் புரிந்துவிடும். ஆனால், நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய உச்சரிப்புஉச்சரிப்பு சற்று வித்தியாசமானது.( நியூஸிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கூட வித்தியாசம் உண்டு, அவர்களைஇவர்களும், இவர்களை அவர்களும் கேலி செய்வதும் 'ஜோக்' குகளும் கூட நிறைய உண்டு) என்னடா எல்லாம்எதிர்மறையாகச் சொல்கிறாளே என்று நினைக்க வேண்டாம். அப்படித் தேர்வில் மட்டும் தேறிவிட்டால், எங்கேயோ.....போய்விடலாம். மிகவும் நல்ல சம்பளம், ஆரம்பமே 20 லட்சம் வருடத்திற்கு. வரிகளும் உண்டு. அதை பற்றி அப்புறம்.


இந்தியாவில் கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில், குழந்தைகளை ஓரளவு நல்ல பள்ளிகளில் சேர்ப்பதற்குஓடியாடி, நொந்து நூலாகிப்போன பெற்றோர்க்கு ஒரு இனிப்பான ( ஒருவேளை அவர்கள் வயிற்றெரிச்சலைக்கிளப்புவதற்கோ?)செய்தி! இங்கே தனியார் கல்வி நிலையங்கள் மிகவும் குறைவு.அவைகளும், கிறிஸ்தவ மதத்தைச்சார்ந்தவைகளே. கல்வித்தரத்தில் அரசாங்கப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வேறுபாடு( மத போதனையைத் தவிர) ஒன்றுமே இல்லை எனலாம். பெற்றோர்களீல் 99 சதவிகிதத்தினர் அரசாங்கப் பள்ளீகளையே விரும்புகின்றனர்.அட்மிஷன் கட்டணம், அன்பளிப்பு என்றெல்லாம் அதிகமாக ஒன்றுமில்லை. பெற்றோர், ஆசிரியர் சங்க நிதி மட்டும் உண்டு.அதையும் கட்டாயமாக அடைக்க வேண்டுமென்றில்லை. முடியாவிட்டால் சொல்லிவிடலாம். அதுபோல, மதிய உணவு கொடுத்துவிடமுடியாத ஏழ்மை ( ?) நிலையெனில், மற்ற மாணவர்கள் அறியமுடியாதபடி, அந்த்ப் பிள்ளைகளுக்கும் மிகச் சிறந்த உணவுஏற்பாடு செய்யப்படுகின்றது.என்ன ஏழ்மை என்கிறீர்கள் ? அரசாங்கம் தரும் உதவி பணத்தைப் பெற்றோர் அனாவசியமாக ( குடி, சிகெரெட், லாட்டரி, குதிரை)செலவழித்துவிட்டு, தன் குழந்தைகளைப் பற்றீக் கவலைப்படாதவர்களும் சிலர் உண்டு. ஆனால் இந்த உதவித்தொகை மிகக் குறைந்தஅளவு இல்லை. சில இந்தியர்கள், இதிலேயே, மிச்சம் பிடித்து, விடுமுறைக்கு, இந்தியா வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


ஒவ்வொரு ஏரியாவுக்கும் பள்ளிகள் உள்ளன. அந்தந்த 'zone'ல் உள்ளவர்கள் அங்கங்கே படிக்கவேண்டும். அனுமதி மறுப்பு இல்லை.மூன்றரை வயதானால், ' கிண்டர்கார்ட்டன்' என்ற மழலைப் பள்ளிகளில் சேரலாம். அங்கேயும், 4 வயதுவரை பிற்பகல் 1 முதல் 3 வரையும், 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை 9 முதல் 11.45 வரையுமே கல்வி நேரம். படிப்பு என்று பெரிதாக ஒன்றுமில்லை.சும்மா விளையாட்டுதான். விளையாட்டைத்தவிர வேரொன்றுமில்லை.இங்கு சேர்வதும் கட்டாயமில்லை. குழந்தை, சிலமணி நேரமாவதுபோய்வரட்டும், நமக்கும் கொஞ்சம் ஓய்வு என்றுதான் பல பெற்றோர்களும் நினைக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.
5வது பிறந்த நாளன்று, அது எந்த மாதமானாலும் சரி, ஆரம்பப்பள்ளியில் அனுமதி. அதற்கு ஒரு மாதம் முன்பு விண்ணப்பித்தால் போதும்.கோடைவிடுமுறையான 'டிஸம்பர் 15 முதல் ஜனவரி கடைசிவாரம் வரை என்றால் தான் 5வதுபிறந்தநாளன்றே பள்ளீயில் சேரமுடியாது.அப்போதும் ஒன்றும் பெரிதாகச் சொல்லித்தருவதில்லை. ஸ்கூல் புத்தகங்கள் வாங்குவது, தினமும் மூட்டையாகச் சுமந்துகொண்டு போவதுவீட்டுப்பாடம் எழுதறது இப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. உயர் வகுப்புகளுக்கு பள்ளிப் பாடப்புத்தகங்கள் இலவசமாகமே, பள்ளிகளில்தரப்படுகின்றன.மொத்தம் 13 ஆண்டுகள் படிப்பு.இதில் ஆரம்பக் கல்வி 6 ஆண்டுகள். முதல் 4 ஆண்டு புத்தகம், வீட்டுப்பாடம் ஒன்றுமில்லை. பாக்கியுள்ள 2 ஆண்டுகளில் சில 'நோட்டுப்புத்தகம் வாங்கவேண்டும். கொஞ்சமே கொஞ்சம் வீட்டுப்பாடம் உண்டு.எல்லாம் ' அசைன்மெண்ட்'கள்தான்.தினமும் 40 நிமிடங்களுக்குமேற்படாமல் வீட்டுப்பாடம் தரலாமாம்.அரசாங்கம் நிர்ணயம் செய்த அளவு.
அடுத்து இடைநிலைப் பள்ளி, இது 2 ஆண்டுகள்.'text books' இப்பவும் வாங்கவேண்டாம். வீட்டுப்பாடம் ஒரு மணி நேரம்.இந்த2 வருடங்களில், தச்சுவேலை, சமையல் என்ற விஷயமும் உண்டு. மர ஸ்டூல், பாதி வெந்த கேக் என்று சில தினுசுகள் வீட்டிற்குஅப்பப்ப வரும்.


கடைசியிலே உயர் நிலைப் பள்ளி.5 வருஷம். இப்ப 'text books' பள்ளியிலே இலவசமாகக் கிடைக்கும். வீட்டுக்கு கொண்டுவரலாம். அந்தந்த வருடக் கடைசியிலே அதைத் திரும்ப ஒப்படைக்கணும். வீட்டுப்பாடம் சில மணி நேரம் கூடும். முன்பு இந்த 5 வருஷப் படிப்பில்மூன்றாம் வருடம் ஒரு அரசாங்கத்தேர்வு, (நம்ம ஊர் பத்தாவது மாதிரி)இருந்தது. இப்ப அதுவும் இல்லை.

இன்னும் வரும். இது பொதுப்படையா இருக்கு. சிறப்பு அம்சங்கள் வந்துக்கிட்டு இருக்கு!


நன்றி: சங்கமம் 2004


19 comments:

said...

ஹைய்யா,
இன்னிக்கு 'மழைக்கு' முன்னரே கிளாஸ் பக்கம் ஒதுங்கிட்டேன்..

எல்.கே.ஜி யில ஜாவா சொல்லித்தரும் அவலநிலையில் நம் ஊர் பள்ளிக்கூடங்கள் இருக்கும் போது, நியுஸியில ஸ்கூல் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணும் குழந்தைகள் போலும்! நல்லதுதான்!

அடுத்த கிளாஸ் எப்போ???

ஆர்வக்கோளாறுடன் மாணவன்!

said...

ஆ.கோ.மா.ராமநாதன்,

நீங்க படிச்சுட்டாப் போதுமா? அடுத்தவுங்க முடிக்கணுமா இல்லையா?

நீங்க போய் ஒரு ரவுண்டு 'மதுரை'யை இன்னும் நல்லா சுத்திப் பார்த்துட்டு ஓடியாங்க.
ரேஸ்கார் பத்திரம். ஒரு கீறலில்லாம( காருலேதான்) வந்து சேரணும். சரியா?

said...

நியுசிலாந்து கனவ விட்டுடலாம் என்கிறீங்க

said...

அக்கா,
மதுரல எத்தன வருஷம் இருந்தீங்கன்னு சொல்லலீயே??? 600+10ன்னு கூட்டிக்கிலாமா?

சரி, இப்படியே உக்காந்திருந்தேன்னா, நாளைக்கு காலேஜில எனக்கு ஒன்-வே விஸா கொடுத்து அனுப்சிருவாங்க..

அதனால, குட் நைட்!

said...

மதி சொன்னது மெத்தச் சரி. இது சத்தியமா உங்கட நடையிலேயே இல்ல. தகவல்பூர்வமா(!?) (informative) இருக்குதுதான், ஆனா.. (கோஷம் கேட்குதா) "துளசி, துளசி" :O)

இராமநாதன் - நீங்க கார்லே முந்தி வந்துட்டீங்க! பரவால்லே. இதையே வழக்கமாக்கிடாதீங்க. ;O)

பி.கு: அன்பு - அ.சொ.பொ. விளக்கம் -> மெத்தச் சரி = மிகவும் சரி! :OD

said...

ஜெயச்சந்திரன்,

நியூஸிலாந்துக் கனவை விட்டுராதீங்க. வசிக்க நல்ல இடம்தான். ஆனா இங்கத்து நிலமையை ஓரளவு
நல்லாத் தெரிஞ்சுக்கிட்டு வாங்க. அப்ப ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.
ஆனா ஒண்ணுங்க. இங்கே பணம் பண்ண முடியாது. ஆனா லைஃப் ஸ்டைல் வேற மாதிரி.
வாழ்க்கையிலே மாற்றங்கள் தேவைதானே?

ஆமாம் எப்ப வர்றீங்க?

said...

ஷ்ரேயா,

வந்தாச்சா?

'நடையா இது நடையா, ஒரு நாடகமன்றோ( ஆமா யாரு இந்த மன்றோ? சென்னையிலே சிலை வச்சிருக்காங்களே அவரா?) நடக்குது:-)

said...

ஏங்க ராஜ்,

நீங்க ப.வீ.பட்டியா? நாங்க அதுக்குப் பக்கத்துலே ஆத்தூர்லே ஒருவருஷம் இருந்தோம்
( ராமநாதன் நல்லவேளை தூங்கப் போயாச்சு:-) )

அப்ப ஆத்தூர்லே சினிமாக் கொட்டாய் எல்லாம் இல்லை. அண்ணன் மட்டும் சைக்கிள் எடுத்துக்கிட்டு
செம்பட்டி, சித்தய்யன்கோட்டை, ப.வீ.பட்டி எல்லாம் போய் சினிமாப் பார்த்துட்டுவந்து,
ஃப்ரேம் பை ஃப்ரேம், ஸீன் பை ஸீன் கதை சொல்வார்.
பாட்டோட ஸீன் வந்ததும் என்ன பாட்டுன்னு சொல்வார், நான் பாடிருவேன். எல்லாம்
ரேடியோ சிலோன்ல கேட்டு மனப்பாடம் செஞ்சுக்கறது:-))))

இதுலே மட்டும் ஒருதடவைக் கேட்டாவே போதும் பைஹார்ட் ஆயிரும். பாடம்...?

said...

அதென்ன "பட்டிவீரன்" பட்டி?

ஊர்ப்பெயர் வரக் காரணமென்ன?

said...

துளசி அக்கா., நல்லா பொறுப்பா இருக்குது பதிவு. இங்க மாதிரிதான் அங்கேயும் பள்ளிகள் போல. ஆனா, இங்கு நிறைய தனியார் பள்ளிகள் உள்ளன 'சர்ச்' ஸ்கூல் இல்லாம... அதாவது 'Montessori'., 'Goddard' போல.

said...

டீச்சர்,
நான் என் ஜாவா-ல வந்திட்டேன். பிரசண்ட் போட்டுடுங்க.

துளசி,
"நீங்க ப.வீ.பட்டியா? நாங்க அதுக்குப் பக்கத்துலே ஆத்தூர்லே ஒருவருஷம் இருந்தோம்"- ஏங்க, தெரியாமதான் கேக்கிறன்..உங்க கால்படாத பூமி எதுதான் சொல்லுங்களேன்.

said...

மரம்.
இப்ப எங்க பழைய மேயர் தனியா ப்ரைவேட் ஸ்கூல் திறக்கப் போறாங்களாம்.காசு பண்ணற வழி
கொஞ்சம் கொஞ்சமா தெரியவருது போல:-))

said...

தருமி,

என்னங்க இப்படிக் காலை வாரறீங்க?
ஒரு 12 வருசம் மதுரை ஜில்லாபூராச் சுத்தினதுதான். எத்தனையோ இடம் இன்னும்
பாக்கலை.அதுசரி, தேவதானப்பட்டி தெரியுமா:-)))))))))


ஜாவாவோ, சுமித்ராவோ ப்ரெஸண்ட் போட்டாச்சு.

said...

டி ராஜ்,

கிராமமும் குக், நீங்களும் குக்கா?:-)))))))

அது எந்த குக் கிராமம்?

said...

அட,நீங்க உசிலம்பட்டி ஆண்குட்டியா?:-)))))

ஏங்க, உசிலம்பட்டி தெரியாத மதுரைக்கார்/காரி இருக்க முடியுமா?

ஆனா நான் அங்கே இருந்ததில்லை(-:

said...

இந்த சொந்த ஊர்தாங்க ஒரே பிரச்சனை.

எந்த ஊர் என்றவரே இருந்த ஊரைச் சொல்லவா?
கண்ணதாசனோட பாட்டு ஞாபகம் இருக்கா?

எதுங்க எனது சொந்த ஊர்? மொதல்லே சொந்த ஊர்ன்னா என்ன?

வாழ்நாளில் அதிகப்பகுதி வாழ்ந்த ஊர் சொந்த ஊரா?

ஐய்யோ இப்படிப் புலம்ப வச்சுட்டீங்களே!

said...

நியூசிலாந்து பத்தி நியூஸ் சொல்லுறீங்க. அதுவும் நல்ல விறுவிறுப்பாகவே சொல்றீங்க. கேட்டுக்கிறோம். இன்னும் சொல்லிக்கிட்டேயிருங்க. நாங்க கேட்டுக்கிட்டேயிருக்கோம்.

said...

கொஞ்சம் லேட்டா எட்டிப் பார்த்தால், கடையைச் சுருட்டிட்டு அடுத்த தெருவுக்கு போயிடுவீங்க போலிருக்கே. நாங்கள்லாம் லேட்டுன்னாலும் லேட்டஸ்ட்!
உங்க பதிவுக்கு ` சுற்றிய ஊர்களின் சூப்பர் புராணம்'னு தலைப்பு கொடுக்கலாமோ?

said...

//எந்த ஒரு நாட்டையுமே சுற்றுலாப் பயணியாக பார்க்கும் பார்வைக்கும், அங்கேயே தங்கி வாழ்வதற்கும்நிறைய வித்தியாசங்கள் உள்ளன//

100% உண்மை

அக்கா நல்லா அருமையா போது. பள்ளிகூட முறைகள் எல்லாம் அமெரிக்காவை ஒத்து இருக்க்கும் போல.