Sunday, August 14, 2005

The Greatman of NZ is no more.

திரு.டேவிட் லாங்கி நேற்று இரவு காலமானார்.
இந்தச் செய்தி தெரிஞ்சப்போ கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. உடம்பு சரியில்லாம
ஆஸ்பத்திரியில்தான் இருந்தார். கடுமையான சக்கரை வியாதி. அதன் காரணம் போனவாரம்
ஒரு காலைவேற எடுக்கும்படியா ஆனது. அது எடுத்த ரெண்டுநாளுலே அவருக்கு 63வது பொறந்தநாள்.இவர் யாருன்னே தெரியாதவங்களுக்காக:

நியூஸிலாந்து நாட்டின் பழைய பிரதமர் இவர். நாங்க இங்கே வந்தப்ப இவரோட ஆட்சிதான். தொழிற்கட்சியைச்
சேர்ந்தவர். இவர் வந்த பிறகுதான் இமிகிரேஷன் விதியெல்லாம் தளர்த்தப் பட்டுச்சு. அதுவரை வெள்ளைக்காரங்க
மட்டுமெ இங்கே குடியேறி வரமுடியும். குஜராத்திங்க பலர் இருந்துருக்காங்களென்னு கேக்கலாம். அவுங்க
இடிஅமீன் காலத்துலே அங்கிருந்து தப்பிப் போய் பிரிட்டன்லே தஞ்சம் அடைஞ்சவுங்க. பிரிட்டிஷ் பாஸ்போர்ட்
வச்சிருந்ததாலேதான் அவுங்களாலெ இங்கெ வரமுடிஞ்சது.

இவரோட அரசாங்கம் வந்தபிறகுதான் பல நல்ல விஷயங்கள் நடந்ததுன்னு இங்கே இருக்கற அனைத்துக்
கட்சியினரும் ஒத்துக்கிட்டு இருக்காங்க. நியூஸியின் nuclear free policies அப்பதான் உருவாச்சு. இதை
எல்லோரும் ஏத்துக்கிட்டாங்க. இன்னைவரைக்கும் அதுலே மாத்துக் கருத்து இங்கே எந்தக் கட்சிக்கும் இல்லை.
ஆளும்கட்சி சொல்றதெல்லாம் அபத்தம்னு கூவுற வழக்கம் இன்னும் இங்கே வரலை.

பல அரசாங்க நிறுவனங்களைத் தனியாரிடம் கொடுத்ததும் இவர்காலத்துலெதான். இதனாலெ நாட்டின் செல்வநிலை
உயர்ந்துச்சு. சேவைகளும் தரம் மிகுந்ததா ஆயிருச்சு.

ரொம்ப நகைச்சுவை உணர்வுள்ள பிரதமர் இவர். எப்பவுமே சிரிச்ச முகம். அதுவும் பார்லிமெண்டுலே இவர்
ஒன் லைன் ஜோக் அடிச்சே எல்லோரையும் சிரிக்க வச்சுருவார். நம்ம ஸர்.எட்மண்ட் ஹிலரி( எவெரெஸ்ட் வீரர்)
இவரோட நெருங்கிய நண்பர். அதனாலேயே இந்தியர்கள்மேலே இவருக்கு நல்ல மதிப்பு இருந்தது.

மிகவும் எளிமையான மனிதர். பொதுமக்கள் கிட்டேயும், குறிப்பாக ஆரம்பப்பள்ளி மாணவர்கள்கிட்டேயும்
கலந்து பேசறதுலே மன்னன். இன்னும் சொல்லப்போனா அவரோட பிறந்த ஊர்லேயும் அவரோட தொகுதியிலேயும்
எல்லோரோடும் சுலபமாப் பழகிடுவாராம். சிம்பிள்ன்னா சிம்பிள் அப்படி ஒரு சிம்பிள்!

பிரதமராக இருந்தபோதே, பதவி வேண்டாம் என்று நாற்காலி ஆசையில்லாமல் அதை விட்டுவிட்டு, சாதாரண
பார்லிமெண்ட் அங்கத்தினராகப் போய்விட்டார்.

இவ்வளவும் நாங்கள் இங்கே வந்தபின்பு நடந்த சம்பவங்களே. அதனாலேதான் மனசுலே நின்னுட்டார்.

இப்படிப் பட்ட மகத்தான மனிதரின் மறைவுக்கு அரசாங்கத்தின் தரப்பில் சவ அடக்கத்தின்போது தரப்படும்
அரசாங்க மரியாதையை வேண்டாம் என்று இவரது குடும்பம் முடிவு செஞ்சிருக்கு.

எனக்கு ஒரே ஆச்சரியம்.எத்தனை பேருக்கு இப்படிச் சொல்லமுடியும்னு!

பின் குறிப்பு:
இதையெல்லாம் எழுதறப்பவே சிலவிஷயங்கள் மனசுலெ தானா வர்றதை நிறுத்தமுடியலை.எதுக்கெடுத்தாலும்
நம்ம நாட்டோட நிலையை கம்பேர் பண்ணிப் பாக்குறதை விடமுடியலை.

பாழாப்போன மனசே, அடச் சீ, அடங்கு! துக்கம் கொண்டாடுற சமயத்துலே இதெல்லாம் வேணாம்.

3 comments:

said...

//ஆளும்கட்சி சொல்றதெல்லாம் அபத்தம்னு கூவுற வழக்கம் இன்னும் இங்கே வரலை//

சே...என்ன அரசியல் நடக்குது உங்க ஊர்ல? இன்ட்ரஸ்டிங்கே இல்லாம!! ;O)

said...

ஷ்ரேயா, வீக் எண்ட் நல்லாப் போச்சா?

உங்க ஊர்லே டேவிட் லாங்கி நியூஸ் ஒண்ணும் சொல்லலியா?

ச்சும்மா நியூஸ்லே ஒரு அரை வரி வந்துருக்குமே.

துளசி.

said...

//ச்சும்மா நியூஸ்லே ஒரு அரை வரி வந்துருக்குமே//

இந்த வார இறுதியிலே தொ.காவிலே நான் பார்த்தது(பார்க்க வைக்கப்பட்டது) அவுஸ்திரேலியாக்கும் இங்கிலாந்துக்கும் நடக்கிற "சாம்பல்" தொடர் & கதிர்காமர் (இலங்கை வெளிவிவகார அமைச்சர்) கொலை தான்.

மற்றும்படி வார இறுதி பரவால்லே. ஒரு விஷயம் கண்டு பிடிச்சிருக்கிறன். 9 மணிக்கு முதலே எழும்பினா வீட்டு வேலைகள் செய்ய நிறைய்ய்ய்ய்ய்ய நேரம் கிடைக்குது. ;O)