Tuesday, August 30, 2005

டார்ட்டாய்ஸ் ஏத்துன குரங்கு!

இந்த 'குரங்கு' எனக்கு 'டார்ட்டாய்ஸ்' ஏத்திவச்சிருச்சு.

'மூக்குக் கண்ணாடி' ஹைதராபாத் குரங்குகளைப் பத்திச் சொன்னப்ப எனக்கு நம்ம பெங்களூர்
குரங்குகளைப் பத்தி எழுதிரணுமுன்னு ஒரு வேகம் வந்துருச்சு!அப்ப நாங்க இருந்தது பெங்களூர். வாசம் கோக்கோகோலா ஃபேக்டரி மாடிலே. அங்கேதான்
அப்ப கோபாலுக்கு வேலை. அங்கேயும் குரங்குங்க ஜாஸ்தி. இவர் அங்கே தனிக்குடித்தனம்.
எனக்கு மெட்ராஸ்லே வேலை. அதனாலே அப்பப்ப வீக் எண்ட், இல்லேன்னா ஒரு வாரம் லீவுன்னு
வண்டி ஓடிக்கிட்டு இருந்துச்சு. இவர் சமையல் செய்யறேன்னு எல்லாப் பாத்திரத்தையும் 'தீச்சு'வச்சுருப்பார்.
அடுப்புலே சோறாக்கிறென்னு வச்சுட்டுக் கீழே ஃபேக்டரிக்குப் போனா,' சோறு' வச்சது
மறந்துட்டு, ரெண்டு மணிநேரம் கழிச்சுவந்து பார்த்தா பின்னே எப்படி இருக்கும்?

நான் அங்கே போனப்ப எல்லாப் பாத்திரத்தையும் தேச்சு, மினுக்கி மொட்டைமாடியிலே காய வச்சுட்டேன்.
கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா 'எல்லாரும்' வந்து ஆளுக்கு ஒண்ணு எடுத்துப் பாத்துக்கிட்டு இருக்காங்க.
விரட்டுனவுடனே கையிலே இருக்கறதை அப்படியே எடுத்துக்கிட்டுப் போறாங்க. அப்புறம் மனுஷங்க எல்லாம் கத்துன
கத்தலிலே அங்கே இருந்து விசிறி அடிச்சுப் பல பாத்திரங்களிலே பெரிய சொட்டை!

அப்புறம் 'பாட்டிலிங் ப்ளாண்ட்'லே கோக் நிறைக்கும் போது சிலது சரியா முழுசும் நிறையாது. அதையெல்லாம்
விற்பனைக்கு அனுப்ப முடியாது. அதெல்லாம்தான் அப்ப எங்களுக்குக் குடிதண்ணி. ஒரு நாள் நான் கொஞ்சம்
குடிச்சுட்டுப் பாக்கியை ஜன்னலிலே வச்சுட்டு வேற வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஒரு கை 'மெதுவா' உள்ளெ நீண்டு
பாட்டிலை எடுக்குது. என்ன நடக்குதுன்னு பார்த்தா, 'ரொம்ப அமெரிக்கையா எடுத்து , சாய்ச்சு வாயிலே வைக்குது. முழுசும்
குடிச்சுட்டு அதே போல மெதுவா ஜன்னல் கட்டையிலே வச்சது.'

அப்பலே இருந்து அங்கங்கே அரை பாட்டில் கோக், ஃபாண்டா வைக்கிறது எனக்குப் பிடிச்சிருந்தது.

ஆனா, ஒரு நாள் அடுக்களைக்குள்ளே ஒரு பெரிய குரங்கு( இவர் இல்லே) வந்துருச்சு. துரத்தரதுக்காகக்
குச்சியை எடுத்துட்டு வந்தா, அது உடனே சாமர்த்தியமா அங்கே இருந்த கரண்டியைத் தூக்கிக்கிட்டு என்னைத்
துரத்த வந்துச்சு. நான் அலறுன்ன அலறல்கேட்டு கீழே வேலை செஞ்ச ஆளுங்கெல்லாம் வந்து ஒரு வழியா
அதை ஓட்டுனாங்க.

இப்படிப் பலதும் சொல்லலாம். அப்புறம் என்ன நடந்துச்சா?

யாருக்குத் தெரியும்? இவர் மூணு மாசத்துக்கு மேலே அந்த வேலையிலே தங்கலே! வேற ஊருக்குப் போயிட்டோம்!15 comments:

said...

//ஆனா, ஒரு நாள் அடுக்களைக்குள்ளே ஒரு பெரிய குரங்கு( இவர் இல்லே) வந்துருச்சு//

சந்தடி சாக்குலே இப்பிடி "கடி"க்கிறது சரியேயில்ல! வலைப்பதிவர் மாநாட்டுக்குரிய வேலையில அவர் ஏதாவது செய்யல்லயா? இப்பிடிக் கடிச்சிருக்கீங்க! ;O)

said...

//மாநாட்டுக்குரிய வேலையில அவர் ஏதாவது செய்யல்லயா..//

நீங்கவேற, எத்தனை ஜாங்கிரி சுத்தணுமுன்னு கேட்டுக்கிட்டே இருக்கார்:-)))

said...

பாத்து...ஜாங்கிரி சுத்தறேன் என்டு சொல்லி உங்களுக்கு சுத்திட்டு ஜாங்கிரியை சுட்டுட்டுப் போயிருவார்! ;O)

said...

ஷ்ரேயா மனசே சரியில்லைப்பா. இந்தக் கார்த்திகெயனோட விபத்தை என்னன்னு சொல்றது.
இப்படியா ஒரு உயிர் அனாவசியமா வேஸ்ட் ஆயிரும்?

said...

அட அங்கேயுமா? நல்ல கதை
நீங்க என் பதிவில் இட்ட பின்னூடம் பார்த்த போது எனக்கு புரியவில்லை, உங்க பதிவை படிக்கும் வரை. லிங்க் கொடுத்திருக்கலாமே?

said...

நல்லவங்களை பூமியிலே விட்டு வைக்க மரணத்துக்கு/கடவுளுக்குப் பிடிக்கிறதில்ல! :O(

said...

நந்தன்,

நானே கணினி கைநாட்டு. இதுலே லிங்க் எப்படிக் கொடுக்க?
அவ்வளவு தெரிஞ்சிருந்தா இப்படியா இருப்பேன்(-:

said...

சுட்டி கொடுக்கிறது பெரிய வேலையில்ல துளசி.

உதரணமா "குரங்கு" என்கிற சொல் இந்த பதிவுக்கு சுட்டியா இருக்கணும் என்டா நீங்க செய்ய வேண்டியது ~a href = "http://thulasidhalam.blogspot.com/2005/08/blog-post_30.html#comments" # குரங்கு ~/a #

இதிலே.. "~" க்குப் பதிலா "<" & "#" க்குப் பதிலா ">" போடவும். கொடுக்க விரும்புற சுட்டி எப்பவும் " " க்கு இடையில இருக்கணும்.

html படிக்க நல்ல ஒரு தளம்

said...

ஷ்ரேயா,

தலையும் புரியலை வாலும்(!) புரியலை.
ஆனாலும் நீங்க கொடுத்த சுட்டிக்குப் போய் படிச்சிட்டுச் சொல்றேன்.
அதுலே க்ளிக்கினா வேற என்னவோ வருது(-:

said...

அவசரக்குடுக்கை வேலைதானெ..அதான்..ஹி ஹி ;O)

சரியான தளம்: www.24hourhtmlcafe.com

தனியஞ்சல் போட்டிருக்கேன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

"நானே கணினி கைநாட்டு. இதுலே லிங்க் எப்படிக் கொடுக்க?
அவ்வளவு தெரிஞ்சிருந்தா இப்படியா இருப்பேன்(-:"

அடடே..நம்மள மாதிரி ஒரு ஆளு...ஆனாலும் நம்ப முடியலையே..
(1)எப்படி ஒரு நல்ல முகப்புப் பக்கம் வச்சிருக்கீங்க?
(2) smilies எல்லாம் போடுறீங்க!!
எப்படி பாய்ண்ட் பாய்ண்ட்டா பிடிச்சிட்டேன்..!

said...

என்னங்க தருமி மருதைக் காரரா இருந்துக்கிட்டு இந்த முக்கியமான பழஞ்சொல்லை மறந்துட்டீரே.

'தம்பி/தங்கை உடையாள் படைக்கஞ்சாள்'
முகப்பு, மற்ற அலங்காரம் எல்லாம் மேற்படியரின் கவனிப்பால்தான்.

இந்த ஸ்மைலியை மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கத்துக்கிட்டேன்:-)

said...

"இந்த ஸ்மைலியை மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கத்துக்கிட்டேன்:-)"

கொஞ்சம் இந்தப் பக்கம் பாஸ் பண்ணுங்க; அல்லது பாஸ் பண்ணச்சொல்லுங்க..

said...

தரமி,
http://www.free-emoticons.org/

இந்தக் கடையிலே இலவசமாக் கிடைக்குதே! இதுபோல நிறைய கடைங்க இருக்கே.
மெய்யாலுமா தெரியாதுன்னு சொல்றீங்க?