Monday, August 08, 2005

எல்லோரும் எல்லாமாய்....

எப்படியெப்படியெல்லாம் மனசைத் திருப்பிக் கொண்டு போனாலும், சண்டிக் குதிரைபோல சுத்திச் சுத்தி சினிமா
வுக்கே வந்துருதே. ஹங்.. என்ன செய்யலாம்? மனசை அதும்போக்குலேயே விட்டுப் புடிக்கவேண்டியதுதான்...ஒரு சினிமாவைப் பத்தின செய்தியோ, அதுலே நடிச்சவுங்க பெயர்ப் பட்டியலோ வருதுன்னு வையுங்க. அதைப் பார்க்கறப்பவே
சுமாரா அந்தக் கதை மனசுக்குள்ளெ ஓடுதுல்லே? வில்லன் முகம், கதாநாயகன் முகம், காமெடி ஆளுங்க முகம்ன்னு
பலமுகங்களும்தான் மனசுலே பதிஞ்சுபோய்க் கிடக்கே!

அப்ப, அந்தந்த முகம் இருக்கறவங்க அந்தந்த ரோல் செஞ்சுரணும். இல்லையா? இது ஏன் மாத்தி இருக்கக்கூடாது?

எனக்குத் தெரிஞ்சவரையிலே தமிழ்ப் பட உலகத்துக்கு எல்லோருக்கும் ஏற்கெனவே ஒரு 'செட்' ரோல் இருக்கு.ஆனா
மலையாளப் பட உலகத்துலே கொஞ்சம் வேற மாதிரி இருக்கே! இதுலேயும் பெரிய ஆளுங்களை விடுங்க. சாயி
குமாரையும், ராஜன் பி தேவையும் பார்த்தவுடனே வில்லன்கள்னு தெரியுதுல்லே. நாஞ்சொல்றது, சாதாரணமா
ச்சின்ன ரோல்லே வர்ற கொச்சின் ஹனீஃபா, ஜகதி ஸ்ரீகுமார், ஜகதீஷ்,சைனுத்தீன், ஹரிஸ்ரீ அசோகன், ஒடுவில் உன்னி கிருஷ்ணன்,
ஜனார்தனன், இன்னொசெண்ட், சித்திக், குஞ்சன் இப்படி பலரைப் பத்தி நினைச்சா, இவுங்க எல்லோருமே எல்லாவிதமான பாத்திரங்களிலும்
வராங்க.

நான் என்ன நினைக்கிறேன்னா, ஒரு ச்சீட்டுக் குலுக்கல் போல, சின்னதும் பெருசுமா வர்ற கேரக்டர்ஸ் பேரையெல்லாம் எழுதிப் போட்டுரணும்.
அவுங்கவுங்களுக்கு எதுவருதோ அதையே நடிச்சிரணும். எல்லாப் படத்துலேயும் அநேகமா எல்லாருமே வர்றாங்கன்னா இப்படி ஏதாவது
ஏற்பாடு இருக்கணும்,பார்த்தீங்களா?

ஒவ்வொரு படம் பார்க்க ஆரம்பிக்கறப்பவும் எங்க இவர் கிட்டே கேப்பேன்,'எல்லாரும் வந்தாச்சா?' 'வந்துக்கிட்டே இருக்காங்க'ன்னு
பதில் வரும். கெட்டவன், நல்லவன், அப்பாவி, கதையை நகர்த்துரவன் இப்படி எல்லோரும் எல்லாமாயும்.... எல்லாருக்கும் எல்லாவகை நடிப்பும்!!

தமிழ்ப் படத்துலே இப்படி வர்ற ஒரே ஆளு பிரகாஷ் ராஜோ? இல்லே வேற யாரும் இருக்காங்களா?


16 comments:

said...

ரகுவரன், மணிவண்ணன் ???

said...

சோ அவர்களின் நாடகக் குழுவில் நடிகர்கள் தங்கள் பாத்திரங்களை சமயத்துக்கேற்றாப்போல் மாற்றிக் கொள்வார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். அம்பி செய்த ரோலை சோவும், சோ செய்த ரோலை அம்பியும் செய்திருப்பத்தாக படித்திருக்கிறேன்.

மற்றப்படி நீங்கள் சொல்வது நாடகங்கள் சினிமாவாக மாற்றப்படும்போது நடக்கும். ஞான ஒளி நாடகம் சினிமாவாக வந்தபோது மேஜர் செய்த ரோலை சிவாஜி ஏற்று நடித்தார். மேஜர் அவர்களோ வீரராகவன் நாடகத்தில் செய்த இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ரோலை ஏற்று நடித்தார்.

அதே போல விஸ்வாமித்திரராக நாடகத்தில் நடித்த மனோஹர் அவர்கள் அதன் சினிமாவாக்கத்தில் (ராஜரிஷி) துர்வாசராக நடித்தார்.

ஏனெனில் சினிமாவில் ஸ்டார் வேல்யூ ரொம்ப முக்கியம். அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாது டைகர் தாத்தாச்சாரியாக மேஜர் சினிமாவிலும் கண்டின்யூ செய்ததில் கையை சுட்டுக் கொண்டார்.

இன்னுமொரு விஷயம். எல்லோரும் நல்லவரே என்னும் படத்தில் முதல் பாதியில் வில்லனாக வரும் பாத்திரம் இரண்டாம் பாதியில் ஹீரோ ரேஞ்சுக்குப் போயிற்று. ஜனங்களால் அதை புரிந்து கொள்ள முடியாமல் போனதால் படம் ஊற்றிக் கொண்டது. ஜெமினி ஸ்டூடியோவுக்கு பயங்கர அடி.

அதனால்தான் இமேஜை பாதுகாப்பதில் எல்லோரும் கவனம் செலுத்துகின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஷ்ரேயா,

மணிவண்ணன்,ரகுவரன் சரிதான். எனக்குத் தோணலை பாருங்க.

இப்பத்தெரிஞ்சதா, எந்தப் புத்துலே என்ன பாம்பிருக்குமுன்னு?:-)))))

said...

ஆமாங்க டோண்டு,

நீங்க சொல்றதுபோல சினிமாவுக்கு 'ஸ்டார் வேல்யூ' இல்லேன்னா 'பொட்டிக்குள்ளே போயிரும்'தான்.

நாடகம்னு சொன்னா, அது 'லைவ்'ன்ற படியாலும், யாராவது வரலைன்னா அவுங்க பாத்திரத்தைச் செய்யறதுக்காகவும் சிலபேர் எல்லா ரோலையும் பழகிக்கறதும் உண்டுதான்.

'எல்லோரும் நல்லவரே' நான் பார்க்கலையே. அதுலே யார் யார் வராங்க? கதைசுருக்கம் ஒண்ணு சொல்லுங்களேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

அக்கா, நாசரும் அது போன்ற நடிகர் என்று சொல்லலாமோ?

said...

ரம்யா, சொல்லலாம்தான். நல்ல நடிகர். ஆனா அவருக்குக் கிடைக்கறது அநேகமா வில்லன்ரோல்தான். அதனாலேதான் அவர் சொந்தப் படத்துலே வேறவிதமா செய்யறார். நம்ம டோண்டு சார் சொன்னாப்புலே 'ஸ்டார் வேல்யூ' இல்லாம படம் புட்டுக்குது!

said...

"இந்த வியாதி நாலு நாள்லே குணமாகலாம், நாப்பது நாளாகலாம், ஏன், நாலு வருஷம் கூட ஆகலாம்"
"அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட் / ஸஸ்டெயின்ட்"
"என்ன ஆனாலும் என் பெண்ணை உனக்கு கல்யாணம் செய்து தரமாட்டேன்"

இந்த வசனங்கள் தவிர வேறு எதையும் பேசாத சில தமிழ் நடிகர்கள் (உதா: பூர்ணம் விஸ்வனாதன், வீரராகவன், கோபால கிருஷ்ணன்) தங்கள் நாடகங்களில் பலதரப்பட்ட வேடங்களையும் ஏற்று நன்றாகவே செய்தனர்.

ஆக, பிரச்சினை நடிகர்களிடம் இல்லை, "போஸ்ட்மேனாக நடித்தவன் இறுதிவரை போஸ்ட்மேனாகவே ரிட்டயர் ஆக வேண்டும்" எனும் சென்டிமெண்ட் கொண்ட சினிமா உலகத்தினுடையது.

said...

சுரேஷ், இதுலே தமிழ் சினிமா உலகம்தான் இந்த 'முத்திரை குத்தறது'லே முன்னாலெ நிக்குது.

கதாபாத்திரங்கள் மட்டுமில்லே, கதைகளையும் இப்படித்தானே செஞ்சுவச்சிருக்காங்க.
ஒரு படம் ஜெயிச்சா அதே போல ஒரு நூறு வந்துருதே!

said...

இந்தி சினிமாவிலே 100 மேற்பட்ட படங்களில் வெறும் இன்ஸ்பெக்டர் , அம்மா பாத்திரம் மட்டும் பண்ணி ரிடயர் ஆன நடிகர்கள் எல்லாம் இருக்காங்க.
முத்திரை குத்தறது எல்ல இடத்திலும் உண்டு, Hollywood ல் கூட.

said...

சரியா சொன்னீங்க...
இப்பல்லாம் கொச்சின் ஹனீஃபா, ஜகதி ஸ்ரீகுமார், சலீம் குமார் இல்லாம மலையாள சினிமாவே பார்க்க முடியறதில்லே...எல்லா படத்திலேயும் எதாவது ரோல்ல வந்துருங்க....எனக்கென்னவோ Script[ அப்படினு ஒண்ணுருக்கா என்னா? ;-)] ரெடியாகிறதுக்கு முன்னமே சொல்லிக்குவாங்க போலிருக்கு இந்த மூணு பேருக்கும் ஒரு character போட்டுடங்கப்பான்னு.....

ஆனா...போரடிக்காத நடிப்புதான் இந்த மூம்முர்த்திகளோடது.

said...

ஆனந்த்,

//100 மேற்பட்ட படங்களில் வெறும் இன்ஸ்பெக்டர் //

இவுங்க சொந்தமாவே போலீஸ் யூனிஃபாம் தைத்து வச்சிருக்காங்க:-))))

said...

ரா.சு,

அதுதாங்க எல்லாரும் எல்லாமாய் வர்றது. குதிரைவட்டம், பிலோமினாவும் இதுலே சேர்த்திதான். ஆனா 'பப்பு' போயிட்டரே!

said...

// கொச்சின் ஹனீஃபா, ஜகதி ஸ்ரீகுமார், ஜகதீஷ்,சைனுத்தீன், ஹரிஸ்ரீ அசோகன், ஒடுவில் உன்னி கிருஷ்ணன், ஜனார்தனன், இன்னொசெண்ட், சித்திக், குஞ்சன் //

இவங்கெல்லாம் இந்த பதிவ படிச்சா சிலித்துக்குவாங்க... நம்மளயும் தமிழ்நாட்டுகாரர் ஒருத்தருக்கு 'பேர்' சொல்ற அளவு தெரியுதேன்னு...

said...

மிஸ்டர் டோண்டு,

அது ஏன் சோ அவர்களின் நாடகக் குழு மட்டும் டோண்டு அவர்களுக்கு ஞாபகம் வந்தது? கிரேசிமோகன் குழு, எஸ்விசேகர் குழு, முன்னாளில் சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோர் நடித்த குழு, சாண்டோ சின்னப்பாதேவர் குழு எல்லாம் அவருக்கு ஞாபகம் வரவில்லை???

துளசி அவர்களே...

மிக நல்லதொரு பதிவு.

said...

அன்புள்ள முகமூடி,

அநேகமா எல்லா மலையாள நடிகர்/நடிகைகளும் சென்னையிலேதாங்க இருக்காங்க.

தமிழ்மணம் பாக்கற அளவுக்கு தமிழ் தெரியாது:-)))))

said...

நன்றி மத்தளராயன் அவர்களே.