Tuesday, August 02, 2005

உங்க அம்மாவும் எங்க அம்மாவும்!!!

அம்மான்னாவே தெய்வம்தான்.

அதுலே என்ன சந்தேகம்?

ஆனா உயர்ந்த இடத்துலே இருக்கறது
உங்கம்மாவா? இல்லை எங்கம்மாவா?


ச்சீச்சீ, இது என்ன பைத்தியமாட்டம் கேக்கறே? அவுங்கவுங்களுக்கு அவுங்கவுங்க அம்மா
ஒசத்தியில்லையா?

ஓ. அப்படியா? அப்ப அம்மான்னா அவுங்க புள்ளீங்களுக்கு நல்லதுதானே செய்யணும்?

ஆமா. இப்ப செய்யறதுலே எது கெட்டதுன்னு சொல்லறே?

அவுங்களுக்குக் காரியம் ஆகணுமுன்னா மட்டும் நல்லது செய்யறது. மத்த சமயத்துலே யாரையும் கண்டுக்காம
இருக்கறது. இதுமட்டும் நல்லதா?

'அம்மா'ங்களுக்கு இதெல்லாம் சகஜமாச்சே. இதையா ஒரு பெரிய தப்புன்னு சொல்ல வந்துட்டே?

இதெல்லாம் தப்பு இல்லைன்னு ஆயிருச்சா இப்பெல்லாம்?

ஆமாம். எலக்ஷன் வருதுல்லே. அம்மா தேதியைச் சொல்லாம மூடு மந்திரமா கொஞ்சநாளா இருந்துட்டு
இப்ப பட்டுன்னு தேங்காய் ஒடைச்சாப்புலே சொல்லிட்டாங்க செப்டம்பர் 17க்கு எல்லோரும் ஓட்டுப் போடணுமுன்னு!

அதுசரி. உனக்கு விஷயம் தெரியுமா? உலகத்துலே இருக்கற 'பவர் ஃபுல் பெண்மணிகள் வரிசையிலே 24வது
இடத்துக்குப் போயிட்டாங்க.

என்ன? போன வருசம் 43 வது இடத்துலே இருந்தவுங்களா? 19 படியை ஒரே தாண்டா தாண்டிட்டாங்க. உள்ளூர்
ஆளுங்க என்ன சொல்றாங்களாம் இதைப் பத்தி?

அம்மாவைப் பத்தி நல்லாத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அடுத்தவங்க கஷ்டத்தைப் பார்த்துக்கிட்டுச் சும்மா
இருக்க மாட்டாங்க நம்ம அம்மா. பரோபகாரம் ஜாஸ்தி. ஆனா என்ன உதவிக்கரம் நீட்டிக்கிட்டே இருக்கறதாலே
நம்ம வீட்டுலே கஷ்டம் இருக்கறதைக் கூட கவனிக்க நேரமில்லாம இருக்காங்க.

அதுவும் சரிதான். அவ்வளவு பெரிய நாடான ஆஸ்தராலியாவே 'தம்பா' கப்பல் ஆளுங்களை உள்ளே வரவிடாம
பிடிவாதமா நின்னப்ப, எல்லோரையும் இங்கே எடுத்துக்கிட்டு வரிகட்டுற ஆளுங்களோட சுமையை அதிகரிச்சது
இந்த அம்மான்ற வருத்தம் இன்னும் பலபேருக்கு இருக்குது.

தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கறதுலேமட்டும் ரெண்டு அம்மாவுக்கும் வித்தியாசம் கொஞ்சம்கூட இல்லே,
இல்ல?

ஏன்? வித்தியாசம் இருக்கே. அவுங்க தமிழிலே சொல்வாங்க. நம்ம அம்மா இங்கிலிபீஸூ!!!

இப்பப் புதுசா என்ன வாக்குறுதி கொடுத்தாங்க?

எல்லாம் 'ஸ்டூடண்ட்ஸ் லோன்' இருக்குலே அதுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யப்போறாங்களாம். அப்பத்தான்
படிச்சு முடிச்சவங்க இங்கேயே இருந்து வேலை செய்வாங்களாம். இந்தத் தள்ளுபடி இவுங்களுக்கு மட்டும்தானாம்.

அப்படியா? இவுங்க ஓட்டுங்களும் அம்மாவுக்குத்தான்னு சொல்லு!

அப்ப எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கதானா?

பின்னே அரசியல்ன்னா என்னன்னு நினைச்சுக்கிட்டே?

பின் குறிப்பு: இதுலே எங்கம்மா பேரு ஹெலன் க்ளார்க். உங்கம்மா பேரு........ நீங்களே போட்டுக்குங்க.


4 comments:

said...

இந்த "மாணவர் கடன்" இருக்கே...நல்ல விஷயம் தான்.

இங்கே இப்ப பல்கலைக்கழகத்தில படிக்க கட்ட வேண்டிய காசு எகிறிவிட்டது. திரும்ப கட்டி முடிக்கவே எவ்வளவோ காலம் போகும். அதனால இப்பத்தைய அரசுக்கு ஆதரவு கணிசமா குறைஞ்சிருக்கு!

ப.கழகத்திற்குப் போகும் ஒஸ்ரேலியர்களின் எண்ணிக்கையும் "தொபுக்கடீர்" :O(

said...

துளசி அவர்களுக்கு

முதலில் எந்த அம்மாவைக் கூறுகிறீர்கள் என்று ஒரே குழப்பமாக இருந்தது.. பின் தெளிவாகி விட்டேன்.. எத்தனை அம்மாக்கள்??

இந்தப் பட்டியல் குறித்த என் பதிவு

http://contivity.blogspot.com/2005/08/10.html

நன்றி..

said...

அட அங்கையும் ஒரு 'அம்மாவா?' இங்க சைக்கிள், அங்க கடனா?

said...

கன்டிவிடி & அப்படிப் போடு

( என்னய்யா பேருங்க?)

நன்றிங்க.

அம்மாக்களுக்கு உலகத்திலே பஞ்சமே இல்லைங்க.