Thursday, August 25, 2005

தன் பேரை மறந்த ஈ....

நீங்கல்லாம் ச்சின்னப்புள்ளையா இருந்தப்ப இந்தக் கதையைப் படிச்சிருக்கலாம், இல்லேன்னா
யாராவது பெரியவுங்களொ,டீச்சருங்களோ பள்ளிக்கூடத்துலே சொல்லியிருப்பாங்க.போட்டும், தெரியாதவங்களுக்காக இப்பச் சொல்லட்டுமா?

ஒரு ஊர்லே ஒரு(!)ஈ இருந்துச்சாம்.திடீர்னு ஒருநா அதுக்குத் தான் யாரு என்றது மறந்து போச்சாம்.
என்னடா செய்யலாமுன்னு யோசிச்சுப் பாத்துட்டு, அக்கம்பக்கம் இருக்கறவங்ககிட்டே கேக்கலாமுன்னு
போச்சாம். மொதல்லே பாத்தது, ஒரு மாட்டை. அதுகிட்டே போய் என் பேரு என்ன, நான் யாருன்னுச்சாம்.
அப்ப மாடு சொல்லுச்சாம் 'ம்மா ம்மா'னு!

அதுக்கப்புறம் ஆடு, கோழி, பன்னி,காக்கா,குருவின்னு எல்லார்கிட்டேயும் கேட்டுக்கிட்டேப் போச்சாம்.
அதுங்கெல்லாம் 'மே..... க்ளக்க்ளக்,ஹொய்ங்க் ஹொய்ங்க், காகா, ச்சிர்க் ச்சிர்க்' இப்படியெல்லாம்
சொல்லுச்சுங்களாம். தளர்ந்துபோன ஈ கடைசியிலே ஒரு குதிரை கிட்டேபோய் கேட்டுச்சாம்.

அப்ப குதிரை 'ஈஈஈஈஈஈஈஈ'ன்னு சொல்லுச்சாம். அப்பத்தான் ஈக்கு நினைவுக்கு வந்துச்சாம் தான் ஒரு 'ஈ' ன்றது!

சரி. இப்ப என்னாத்துக்கு இந்தக் கதைன்னு கேக்கறீங்களா? சொல்லிப்புடறேன்.

இந்தக் கதை நம்மகிட்டே கிடைச்சா, இஷ்டமுன்னா படிச்சுட்டு, இஷ்டம் இல்லேன்னா இது ஒரு கதையான்னு
நினைச்சுக்கிட்டு கடாசிருவோம். ஆனா இது கிடைச்சது ஒரு சினிமா இயக்குனர் கையிலே! விடுவாரா? இல்லே
விடத்தான் முடியுமா? பின்னே? அப்படியே சினிமாவா எடுத்துப்புடவேண்டியதுதான்! எடுத்தாச்சு!

தலையிலே அடிபட்டதுலே ஒரு ஆளு, (அவர்தாங்க கதாநாயகன்) பழைய நினைவுகளை மறந்துட்டார். அப்புறம்
தான் யாருன்றதை எப்படிக் கண்டுபிடிச்சார், யார் யாரு எப்படி உதவி செஞ்சாங்க, மொதல்லே ஏன் அப்படி தலையிலே
அடிபட்டுச்சு இதெல்லாம்தான் 'செல்வம்'ன்ற சினிமாவா வந்துருக்கு!!!!

இந்த சுதர்சனும், ஷ்ரேயாவும் ரொம்ப அலட்டிக்கிட்டாங்களே, நான் எப்பவும் பழைய படங்களையோ, இல்லே
தியேட்டரையே எட்டாத படங்களையோ மட்டும் பாக்கறேன்னு, அவுங்களுக்குப் பதில் சொல்லத்தான் இத்த
வேலைமெனக்கெட எழுதிக்கிட்டு இருக்கேன்.(ம்ம்ம்ம்ம்...ஆவேசம் வந்துச்சு!)

நான் என்ன புதுப் படங்கள் பாக்காத ஆளா? இல்லே ஒரேடியா பழைய பஞ்சாங்கமா? க்கும்......
புதுசுபுதுசாப் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேனப்பு! ஆனா, இதைப்பத்தியெல்லாம்'தம்பட்டம் அடிக்காமக்
கொஞ்சம் அடக்கிவாசிச்சுக்கிட்டு இருந்தேன்'. என்னை உசுப்பிவிட்டாங்க இவுங்க.ம்ம்ம்ம்ம்ம்ம்....

சாது மிரண்டால்......கதையாகிப்போச்சு இப்ப. சரி எங்கே விட்டேன்?ஆங்....

கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு, இயக்கம் இப்படி எல்லாமெ 'ஒன்மேன் ஷோ' செஞ்சுருக்கார்
அகத்தியன்.

ஒரு பாட்டுலே சிலவரிகளை அப்படியே நைசா நம்ம ஆண்டாளம்மாகிட்டே இருந்து சுட்டுட்டாரு. அவுங்களுக்கே வயசு
நாலாயிரத்துச் சொச்சமுன்னு யாரோ கொஞ்ச நாளுக்கு முன்னாலே அவுங்க பதிவுலே போட்டுருந்தாங்கல்லெ.
சாமிகூடவே போயிட்ட அந்தம்மா இதுக்காக திரும்பிவந்து 'கேஸ்'போடமாட்டாங்கன்ற நம்பிக்கைதானப்பு!

'திட்டாதே பேசாதே செல்லப்பெண்டாட்டி'ன்னு பாட்டுவந்தப்பவே எங்கேயோ கேட்டமாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்.
போட்டும், நம்ம ஆண்டாளம்மா அனுக்ரகம் இருக்கும்!!!

இசை நம்ம தேவா! பாட்டுங்க நல்லாவே இருக்கு. பின்னணி இசைகூட அருமை. ரீரிகார்டிங்ன்னுட்டு இரைச்சலா
இல்லாம வசனம் எல்லாம் தெளிவாக்கேக்குது.இல்லேன்னா மிருதுவாப் பேசற உமா வோட டயலாக் கேக்காதுல்லெ!
அந்த மாரியாத்தா பாட்டுதான் நீஈஈஈஈஈஈஈஈஈளமாப்போச்சு. கிளைமாக்ஸ்ம் இப்படித்தான் நீண்டுக்கிட்டே போகுது.
'அட, பஸ் போயிரப்போகுது, சீக்கிரம் ஏறுங்க'ன்னு நான் கத்தவேண்டியதாப் போச்சு!

சரி, படம் நல்லா இருக்கா இல்லையா? அத்த நீங்க பாத்துட்டுல்லெ சொல்லனும்:-)

34 comments:

said...

அக்கதையில் ஒரு பாட்டு வரும்.. சமீபத்தில் 1952-ல் என் அம்மா அதை எனக்கு சொல்லியிருக்கிறார்.
"கொழு கொழு கன்றே என் பேர் என்ன" என்று கன்றிடம் ஆரம்பிக்கும் பாட்டு பசுவிடம் செல்லும் போது "கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, என் பேரென்ன" என்று விரிவடையும். அப்படியே ஒவ்வொருவராகப் போகும் போது பாடல் 'அடியைப் பிடிடா பாரதப் பட்டா' என்ற ரேஞ்சில் விரிவடைந்து செல்லும். ஒவ்வொரு முறையும் கொழு கொழு கன்றே என ஆரம்பித்து, கன்றின் தாயே, தாயின் மாட்டுக்காரனே என்றெல்லாம் சொல்பவர் கற்பனைக்கேற்ப விரியும்.

ன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஆமாங்க டோண்டு,

ஒருவேளை நம்ம வயசு இருக்கறவங்களுக்கு மட்டும்தான் இந்தக் கதை தெரியுமோ?

என்றும் அன்புடன்,
துளசி

said...

//ஒருவேளை நம்ம வயசு இருக்கறவங்களுக்கு மட்டும்தான் இந்தக் கதை தெரியுமோ?//


இல்லையே..எனக்கும் தெரியுமே! ;O)

said...

ஆஹா, வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க :-))))))

ஷ்ரேயா,

இந்தப் படம் பார்த்தாச்சா?

said...

//இத்த வேலைமெனக்கெட எழுதிக்கிட்டு இருக்கேன்.(ம்ம்ம்ம்ம்...ஆவேசம் வந்துச்சு!)//

அய்யோ சாமி சீக்கிரமா மலை ஏறுங்க....

செல்லாத்தா செல்ல மாரியாத்தா....(L.R.ஈஸ்வரி குரலில் பாடவும்)

said...

படம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க.,... பார்ப்போம் !!
அகத்தியன் தமிழ்நாட்டிலிருந்து இயக்கத்திற்க்காக தேசிய விருது பெற்ற ஒரே இயக்குனர் அப்படித்தானே... ஏதாச்சும் சரக்கு வச்சிருக்காமலா போவாரு

said...

சுதர்சன்,

'மலை ஏறணுமுன்னா' படையல் வைக்கணுமே! எங்கே எனக்குண்டானது?

said...

கணேஷ்,

படம் பார்த்துட்டுச் சொல்லுங்க சரக்கு இருக்கான்னு!

said...

அக்கா, கொஞ்சம் பயத்தோடத் தான் கேட்கறேன்!! :-) நான் இன்னும் இந்தப் படத்தை பத்தி கேள்விப்படவே இல்லையே? தியேட்டரை எட்டின படம் தானா இது?? (அக்காவுக்கு திருப்பி சாமி வந்துடுதுங்கோ!!!!!)

said...

ஆஹா ரம்யா,

என்னை மலையேற விடமாட்டீங்களா?:-))))))

'காதல்கோட்டை'ன்னு ஒரு படம் வந்துச்சுல்லே. ஞாபகம் இருக்கா? அவார்டு வாங்குச்சு!

அதோட டைரக்டர் எடுத்தபடம்.நல்ல படம்தான். கிடைச்சாப் பாருங்க.

அட்டாடா, சிங்கையைப் பின்னுக்குத் தள்ளிட்டுப் படம் நியூஸிக்கு வந்துருச்சு:-)))))

said...

எல்லாம் சரி, நீங்க எந்த கடேசி வரைக்கும் படத்தோட பேர சொல்லவே இல்லையே...

// அட்டாடா, சிங்கையைப் பின்னுக்குத் தள்ளிட்டுப் படம் நியூஸிக்கு வந்துருச்சு // இதுக்கு சந்தோஷம் வேற படறீங்களா.. படம் வரலயின்னாத்தான் நாங்க சந்தோஷப்படுவோம்

said...

1. சிறிகாந் சூர்யா விக்ரம் மாதவன்
2. கமல், பார்த்திபன்

மேற்கூறியவர்கள் நடித்தவை (மட்டும்) பார்க்கும் "விரதம்"

3. கதையுள்ளதென்று சொன்னாங்க என்றா நடிகர் பார்க்காமல் பார்ப்பேன்!

யாருதான் வந்து என்னதான் படம் நடிச்சாலும் என் அபிமான நடிகர் இப்ப நடிக்கிறதில்லையே! என்னத்தப் பாத்து என்ன பயன்? ஹூம்ம்!

said...

என்னங்க முகமூடி,

//மொதல்லே ஏன் அப்படி தலையிலே
அடிபட்டுச்சு இதெல்லாம்தான் 'செல்வம்'ன்ற சினிமாவா வந்துருக்கு!!!!//

இதைக் கவனிக்கலையா?

said...

//யாருதான் வந்து என்னதான் படம் நடிச்சாலும் என் அபிமான நடிகர் இப்ப நடிக்கிறதில்லையே!//
யாருங்க அது 'மைக்' மோகனா இல்ல பசுநேசனா?

said...

ஷ்ரேயா,
அந்த 'விரதத்தை' கொஞ்சம் ஒதுக்கி வையுங்கோ.

நந்தா, உமா நடிச்ச படம்.

வளர்ந்துவரும் கலைஞனை வளரவிடமாட்டீங்களே:-)

said...

சுதர்சன் - மைக் மோகனா? ஓஓஓ...ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. ;O)

பசுநேசன்? கிராமத்து ராஜனையா கேட்கிறீங்க? கண்ல காட்டேலாது அந்தாள.

நான் சொன்னது அரவிந்த்சுவாமிய! (கொஞ்சம் அழகா யோசிக்க மாட்டீங்களே!! :OP

துளசி - என்ன்ன்னனது...விரதத்தை ஒதுக்குறதா? நடக்கவே நடக்காது! (நந்தா பார்க்க க்யூட்டா இருப்பாரா?)

said...

அட "ஈ" கதை ரொம்ப நன்னாயிருக்கு.

said...

"ஒருவேளை நம்ம வயசு இருக்கறவங்களுக்கு மட்டும்தான் இந்தக் கதை தெரியுமோ?"

ஆக, இது என் காலத்துக்குப் பிந்திய கதை போலும்.

அது சரி, செல்வம் என்ன நியூசில மட்டும் ரிலீசா? இங்க சத்தமே காணோமே! உங்க தலைவிதி, அனுபவியுங்க...

said...

ஷ்ரேயா,
'உங்க ஆளை' எனக்கு 'புதையலில்'ரொம்ப புடிச்சுது.

said...

அதெல்லாம் ஒரு காலம்...ஹூம்ம்!!

ஏன் துளசி மனவருத்தத்தைக் கிளறுறீங்க!! :O(

said...

ஷ்ரேயா,
சூப்பர் ரசினிய உங்கட லிஸ்டிலயே காணேலயே?
சும்மாவெண்டாலும் சேத்துவிடுங்கோ. பிறகு வில்லங்கமாயிடும்.
துளசி, செல்வம் நல்லபடம். இன்னொரு படமுமிருக்கு 'பொன்னயின் செல்வன்'. பாத்திட்டுச் சொல்லுங்கோ.

said...

"பொன்னியின் செல்வன்"

said...

------------------------------------------------
தன் பெயரை மறந்த ஈ
-------------------------------------------

கொழு கொழு கன்றே என் பெயர் என்ன?
கன்றின் தாயே என் பெயர் என்ன?
கன்று மேய்க்கும் ஆயனே என் பெயர் என்ன?
ஆயன் கைக் கோலே என் பெயர் என்ன?
கோலை வளர்த்த கொடி மரமே என் பெயர் என்ன?
கொடிமரத்துக் கொக்கே என் பெயர் என்ன?
கொக்குண்ணும் மீனே என் பெயர் என்ன?
மீன் பிடிக்கும் வலையா என் பெயர் என்ன?
வலையன் கைக் கலையமே என் பெயர் என்ன?
கலையம் செய் ......
மண்ணில் வளரும் புல்லே என் பெயர் என்ன?
புல்லைத் தின்னும் குதிரையே என் பெயர் என்ன?
ஈ ஈ ஈ ஈ ஈ ....!!!
---------------------------------------------------------

ரெண்டாம் வகுப்பிலே படிச்சது. இன்னும் மறக்கலே. ஆனா காலேஜ்ஜில படிச்சதெல்லாம் போயே போச்.

அருள்

said...

ஹைய்ய்ய்....இந்த பாட்டு என் மனைவிக்குத் தெரியுமே...என்குழந்தைகளுக்குப் பாடிக்காட்டுவாங்க...

said...

அதானே பார்த்தேன்.. படம் வந்து இவ்ளோ நாளாச்சு,
அக்கா இன்னும் ரிவ்யூ பன்னலயே, ஒருவேளை அக்கா சிவகவி, மகாகவி காளீதாஸ், குலேபகாவலி மாதிரு புத்தம் புதிய படங்களை மட்டும் தான் ரிவ்யூ பன்னுவாங்களோனு நெனைச்சேன்.. பரவாயில்லை..!

ஈ கதைக்கு ரொம்ப நன்றிக்கா, இப்போ தான் மொத தடவ இந்த கதைய கேக்கறேன்..

வீ எம்

said...

துளசியக்கா,

அந்தப் படத்தை பற்றி நானும் கேள்விப்படவே இல்லை! இது எப்ப ரிலீஸ் ஆச்சு? வீடியோ கடைல இருக்கான்னு பார்க்கிறேன்.

தாரா.

said...

//தலையிலே அடிபட்டதுலே ஒரு ஆளு, (அவர்தாங்க கதாநாயகன்) பழைய நினைவுகளை மறந்துட்டார். அப்புறம்
தான் யாருன்றதை எப்படிக் கண்டுபிடிச்சார், யார் யாரு எப்படி உதவி செஞ்சாங்க, மொதல்லே ஏன் அப்படி தலையிலே
அடிபட்டுச்சு இதெல்லாம்தான் 'செல்வம்'ன்ற சினிமாவா வந்துருக்கு!!!!
//

இதே கதையுள்ள படம் வெற்றிவிழா அப்படினு கமல், பிரபு நடித்து அப்போதைய கனவுக்கன்னி குஷ்பு வினால் படம் வெள்ளிவிழா கண்டு என்னென்னவோ ஆனதே, அந்த படத்திற்கு தான் விமர்சனம் எழுதினீர்களோ என்று நினைத்தேன்,

அது சரி துளசியக்கா தான் 15 வருட காலப்படங்களை பார்க்கமாட்டாங்க, அவங்களை பொறுத்தவரை அதெல்லாம் லேட்டஸ்ட் ரிலீஸ் படங்கள்.

said...

சூப்பர் ரசினிய தில்லுமுல்லு மாதிரி இன்னொரு படம் நடிக்கச் சொல்லுங்க..என் லிஸ்டில சேர்க்கிறதில பிரச்சனையேயில்ல. :O)

said...

அன்புள்ள தருமி, தாரா, குழலி

நம்ம 'கொழுவி' சொல்லியிருக்காங்க பாருங்க 'செல்வம்'நல்ல படமுன்னு.

இப்பவாவது நம்புவீங்களா இப்படி ஒரு படம் வந்திருக்குன்னு?

படம் கொஞ்சம் 'ஸ்லோ பிக்அப்'னு நினைக்கிறேன்.

அவார்டு வாங்குன ஆளுக்கு வந்த கதியைப் பார்த்தீங்களா?

said...

ரொம்ப நன்றி அருள்.
எனக்கு முழுப்பாட்டும் ஞாபகம் இல்லே. அதுனாலெதான் அதைப் பத்திக் குறிப்பிடாம இருந்தேன்.

போய், மறுபடி காலேஜ் பாடங்களையெல்லாம் எடுத்துவச்சுப் படிங்க:-))))))

said...

வீ.எம்,

குலேபகாவலி யிலே பாட்டுங்கெல்லாம் அட்டகாசமா இருக்கும்.

ஈ கதையை ஞாபகம் வச்சுக்கிட்டு, சந்ததிங்களுக்குச் சொல்லோணூம், ஆமா:-)

said...

//அவார்டு வாங்குன ஆளுக்கு வந்த கதியைப் பார்த்தீங்களா?//

"துள்ளித்திரிந்ததொரு காலம்..." மாதிரி "அவார்ட் வாங்கினதொரு காலம்..." என்று பாட வேண்டியதுதான்! ;O)

said...

டுபுக்கு,

உங்க மனைவிக்கு என்னோட வாழ்த்துக்களைச் சொல்லுங்க.
பயங்கர ஞாபகசக்தி இருக்க்றவங்க போல. நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்:-)))

said...

குழலி,

நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு 'வெற்றிவிழா' ஞாபகமே வந்தது. நன்றி.

எனக்குத் தலையிலே அடிபட்டுச்சான்னு தெரியலை:-))