Thursday, August 18, 2005

நியூஸி முதல்!!!!

இங்கே தேர்தல் வரப்போகுது. எல்லா நாட்டுலேயும் இருக்கற வழக்கமா அந்தந்தக் கட்சிங்க அவுங்கவுங்க
பாரம்பரியத்தைச் சொல்லிக் கூவிக்கிட்டு இருக்குதுங்க. என்ன நம்ம ஊர் மாதிரி பொதுக்கூட்டமெல்லாம்
கிடையாது. கட்சிக் கொள்கையைப் பத்தி அழகா ப்ரோஷர், (இதுக்குத் தமிழ் என்ன?) அச்சடிச்சு வீட்டு மெயில்
பாக்ஸ்க்கு வந்துருது. இந்த வருஷம்தான் அங்கங்கே பில்போர்டு வைக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இன்னும்
வருசம் போகப்போக போஸ்ட்டர் கலாச்சாரம் வந்துருமுன்னு நினைக்கிறேன்.( ஒரு அச்சாபீஸ் வச்சுரணும்.
செமலாபம் பாக்கலாம்!)


இங்கே நேஷனல், லேபர்னு ரெண்டு பெரிய கட்சிங்கதான் நாங்க இங்கே வந்தப்ப இருந்தது. இந்த 18 வருச
காலத்துலே ச்சின்னச் சின்னதா அதுலே இருந்து பிரிஞ்சவுங்க, அதென்ன சொல்றது, தாய்க் கட்சி/கழகம்ன்னா?
வெவ்வேறு கட்சி ஆரம்பிச்சுட்டாங்க. அப்படியே எலக்ஷன்லெ நின்னு கிடைச்ச சில சீட்டுக்களை வச்சுக்கிட்டு
கூட்டணியா அப்பப்ப அங்கங்கே சேர்ந்துக்கிட்டுதான் இங்கேயும் இப்ப ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு. பேரம்
எவ்வளவு தூரம் போகுதுன்னு சரியாத் தெரியலை:-)))

ஆக்ட், கிரீன், நியூஸிலெண்ட் ஃபர்ஸ்ட், கிறிஸ்டியன் ஹெரிடேஜ், அல்லயன்ஸ், மவோரி, டெஸ்டினி நியூஸிலண்ட் ,
அயோடீரோவா லீகலைஸ் கேன்னிபஸ் பார்ட்டி இப்படி சில்லரையாவும் மொத்தமாவும் 18 கட்சிங்க! இத்துனூண்டு
நாட்டுக்கு இத்தனை அடுக்குமா?

இதுலே நியூஸிலெண்ட் ஃபர்ஸ்ட் கட்சியோட பல கொள்கைகள் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. இதோட தலைவர்
வின்ஸ்ட்டன் பீட்டர் என்றவர். இவர் எதைப் பத்தியும் கவலைப்படாம வெளிப்படையாப் பேசறவர். அதோடு இந்த
'வழவழா கொழகொழா' பேச்செல்லாம் இல்லை. ஒரே கட் அன்ட் ரைட்டுதான். அதனாலே இவர் ஒரு இனவாதின்ற
மாதிரி ஒரு இமேஜ் முந்தி உருவாச்சு. ஆனா அது உண்மை இல்லை. இவுங்க கட்சியோட கொள்கைகள் உண்மைக்குமே
நியாயமானதாகவும் இருக்குன்றதாலே எனக்கு இதுலே ஒரு ஈடுபாடு வந்துருச்சு.

ரெண்டு நாளைக்கு முன்னாலே இவுங்க 'தலை'க்கு ஒரு இமெயில் தட்டிவிட்டேன், இன்னும் கொஞ்சம் விலாவரியா
விளக்கம் வேணுமுன்னு! இப்பக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே ஒரு ஃபோன் வந்துச்சு. எனக்கு நேரம் இருந்தா,
'கட்சிக் கொள்கை' விளக்கம் சம்பந்தமா வந்து பாக்கறதாக 'ப்ரையன் ராஸ்வெல்'ன்றவர் பேசுனார். எப்பன்னு கேட்டதுக்கு
ஒரு 15 நிமிஷத்துலே வரேன்னார். சரி வாங்கன்னு சொன்னேன். அட்ரஸ் தெரியுமான்னு கேட்டதுக்கு, அவுங்க தலை
என் மெயிலை ஃபார்வேர்டு பண்ணியிருக்கார்னு சொன்னார்.

வந்தவர்தான் இங்கே எங்க பகுதிக்கு எலக்ஷன்லே நிக்கறவராம். ஒரு ஆள், அம்பு இல்லாம 'ஜிலோ'ன்னு தனியாத்
தானே காரை ஓட்டிக்கிட்டு வந்தார். இதுலே அதிசயம் ஒண்ணுமில்லேதான். இங்கெல்லாம் 'அண்ணன் வாழ்க'ன்னு
கூவறதுக்கு கூட்டம் (இதுவரைக்கும்) இல்லைதானே?

ஒரு இந்தியர் அதுவும் பெண்மணி (என்னைப் பத்தி இவருக்கு இன்னும் தெரியாதுல்லெ) இந்தக் கட்சியிலே
ஆர்வமா இருக்கறது இவருக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்காம். விளக்கவுரையெல்லாம் கொடுத்துட்டு, 'கட்சியிலே
அங்கத்தினரா சேர்ந்துடறீங்களா'ன்னு கேட்டார். நான் மதிப்பா, 'இப்ப இல்லை. இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாத்
தெரிஞ்சுக்கிட்டு அப்புறம்'னு சொன்னேன். எதா இருந்தாலும் ஒருஃபோன் போட்டீங்கன்னா, உடனெ நேர்லேவந்து
விளக்கம் சொல்வோம். தலைவரைச் சந்திக்கணுமுன்னாலும் சொல்லுங்கன்னார்!

'உங்க கணவருக்கு இந்தக் கட்சியிலே விருப்பம் இருக்கா'ன்னு கேட்டதுக்கு, 'எனக்குத் தெரியாது'ன்னு சொன்னேன்.
கோபால் என் கிட்டே ஏற்கெனவே சொல்லியிருக்கார், 'நீ மட்டும் இந்தக் கட்சியிலே சேர்றேன்னு சொல்லு, 'லட்டு'
மாதிரி எடுத்துக்குவாங்க'ன்னு!

இன்னும் சரியா 4 வாரம்தான் இருக்கு,தேர்தலுக்கு. அதுக்குள்ளே தெரிஞ்சுக்கவேண்டிய விவரமெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா
கட்சிப் பிரச்சாரத்தை ஆரம்பிச்சு( எல்லாம் நம்ம வீட்டுலேதான்!) இன்னும் ஒரு ஓட்டுக்கு வழி செஞ்சுரலாம்!

19 comments:

said...

தங்கத்தலைவி தூள்சி (நியூஸி ஆளுங்களுக்கு துளசின்னு வருமோ வராதோ) வாழ்க!

said...

ஆமாங்க சிலந்தி. சரியாச் சொன்னீங்க. இங்கே நானு 'டூஊஊஊல்ஸி'தான்.

said...

//வருசம் போகப்போக போஸ்ட்டர் கலாச்சாரம் வந்துருமுன்னு நினைக்கிறேன்//

பேசாம அவங்களையெல்லாம் நம்ம தமிழ்நாட்டுப்பக்கம் அரசியல் சுற்றுலான்னு வரச்சொல்லுங்க. போஸ்டர் உள்ளது, சோடா பாட்டில் எறிவது, ரோடு குறுக்க மீட்டிங் போடுறது, மத்த எல்லா விசயத்திலும் பெரிய ஆளாகிருவாங்க.. :))

said...

//இங்கே நானு 'டூஊஊஊல்ஸி'தான்.//
: ))))))))))))) LOL

said...

// ஒரு இந்தியர் அதுவும் பெண்மணி (என்னைப் பத்தி இவருக்கு இன்னும் தெரியாதுல்லெ) இந்தக் கட்சியிலே ஆர்வமா இருக்கறது இவருக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்காம். //

ஒரு சீட் ரெடி பண்ணிட்டீங்க போல...
சரி சரி நம்ம 'அம்மா' பாணி அரசியல் பண்ணாம நல்ல பிள்ளையா "மம்மி" அரசியல் பண்ணிங்க........

said...

//இங்கே நானு 'டூஊஊஊல்ஸி'தான்.//

கவனிச்சிருக்கீங்களா. இவங்க பெரும்பாலும் நம்ம பேர்ல வர்ற சில vowelsஐ நீட்டி முழக்கிடறாங்க. நான் அவங்களுக்கு ரமாணி. குமார் எல்லாம் 'கூமார்'தான்.

said...

தங்கத் தலைவிக்கு ஆட்டோ வேணுமா, ஆள் அம்பு வேணுமா, போஸ்டர் வேணுமா, பிரியாணி பாக்கெட், சைட் டிஷ் வேணுமா?

கட்டளையிடுங்கள் - காத்திருக்கிறோம்.

(service charges Extra!)

said...

பாஸிட்டிவ் ராமா,

டூர் ஏற்பாடு செஞ்சுரலாம். 'எஸ்கார்ட்டட் டூர்'னு போட்டுட்டு அதுலே கொஞ்சம் காசு பாத்துரலாம்.
அட்லீஸ்ட் ஓசியா ஒரு சென்னை விஸிட் உத்திரவாதம்:-)

துளசி

said...

தேங்ஸ் ஜெயந்தி

said...

கணேஷ்,

நல்லாட்சி கொடுத்துரமாட்டேனா?
ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே. நம்ம வீட்டுக்குள்ளே செருப்புக்காலோடு வரமுடியாதுல்லையா? வந்தா
நம்ம கலாச்சாரம் என்னாவறது?

வந்தவர், வெளியே ஷூவைக் கழட்டிட்டு வந்தப்ப என்ன சொன்னார் தெரியுமா? 'என் சாக்ஸ்லே ஓட்டை இருக்கு.
அடுத்தமுறை வரும்போது நல்ல சாக்ஸாப் போட்டுட்டு வரேன்'னு:-)) எம்.பி. சீட்டுக்கு நிக்கிறவரோட பேச்சா இது!!!

said...

சிலந்தி ரமாணி,

:-)))))))

said...

சுரேஷ்,

அந்த ஆளே தனியா அம்போன்னு வந்தார். ஆனா அதுக்குள்ளே பார்த்தீங்களா,
என் தங்கத் தம்பிகள் எனக்காக ஒரு படையையே உருவாக்கி, தேர்தல் வேலையெல்லாம்
ஜரூராப் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களே!

என் உடன் பிறப்புக்களே, என் முதல் வணக்கம் உங்களுக்கே!

துளசி.

said...

ஆஹா...கொஞ்ச நேரத்துக்குள்ளே இவ்வளவும் நடந்து போச்சா!!

டூ...ஊ...ஊ..ள்சி ..வென்றதும் சொல்லுங்க. கொண்டாட்டத்துக்கு வந்தி இறங்கிர்றேன்! ;O)

said...

ஷ்ரேயா,

இன்னும் டிக்கெட் ப்ரிண்ட் ஆகலை:-)

said...

கழகக்கண்மணிகளால் முடியாததா! உத்தரவு போடுங்க தாயே!

(நான் நியுஸிலாந்து பார்க்கணும்! ;O) )

said...

ஷ்ரேயா,

எனி டைம்!

said...

//எனி டைம்! //

வேலையிலே any time விடுப்பு தர மாட்டாங்களே! :O(

said...

துளசி அக்கா,
பேசாம 'துளசிலாந்து முன்னேற்ற கழகம்' -னு ஒரு கட்சி ஆரம்பிச்சுடுங்க.

said...

ஜோ,

இது நல்லா இருக்கே. து.மு.க!!!

சூப்பர் ஐடியா. தேங்க்ஸ்.