பயண விவரம் பகுதி 23
இன்னிக்கு முழிச்ச நேரம் சரியில்லை போல. இன்னும் நாலு நாளையிலே கிளம்பறதுன்னு முடிவாச்சு.
அண்ணன்இப்ப இங்கே இருக்கார். அவுங்களோட போய் ரெண்டு நாளாவது தங்கறதுதானே நியாயம்? வீட்டுக்கு வந்து இருன்னுஅண்ணனும் அண்ணியும் சொல்லிச் சொல்லித் தளர்ந்துட்டாங்க. எனக்கு ஏது நேரம்? 'அதுவுமில்லாம அவுங்களும் இன்னும் புது வீட்டுக்கு மாறலை. அங்கேயே இன்னும் கொஞ்சம் வேலை பாக்கின்னு நடந்துக்கிட்டு இருக்கு. நம்மாலே அந்தவேலை கெட்டுருமே'ன்ற நல்லெண்ணம்னு வையுங்களேன்.
நானே வந்து கூட்டிட்டுபோறேன்னு சொன்னவரை,'அட அதெல்லாம் எதுக்கு? நானெ வந்துடறேன். இது என்ன பிரமாதம்?'னு சொல்லி வாயை அடைச்சாச்சு.
ஞாயிறு காலை ப்ரேக்ஃபாஸ்ட் முதல், அவுங்களோடுன்னு ஒரு ஏற்பாடு. எட்டுமணிக்கெல்லாம் கிளம்பிட்டேன்.ஒரு ஆட்டோகாரர்கிட்டே போகவேண்டிய இடத்தைச் சொன்னேன், குமரன் நகர், கோயம்பேடு மார்கெட்டுக்குப் பக்கத்துலே.இடம் தெரியுமான்னு கேட்டதுக்கு அதெல்லாம் தெரியும். வேணுமுன்னாக் கேட்டுக்கலாம்மா'னுட்டார். குறுக்குவழின்னு எனக்குப் பழக்கம் இல்லாத
சந்து பொந்தெல்லாம் போய்க்கிட்டு இருக்கோம். நானும் விடாம, 'இந்தப்பக்கம் எல்லாம் எதுக்கு வரணும்? சாலிகிராமம்வழியாப் போங்க'ன்னு சொன்னேன். பழையபடி அங்கே இங்கேன்னு சுத்தி 100 அடி ரோடுக்குப் பேரலல் ரோடுலேபோறார். 'இடம் தெரியும்னுட்டு இங்கே எதுக்கு திரும்பணும்? நேரா அதுலேயே போகவேண்டியதுதானே?'ன்னதும்கபால்னு வண்டியை நிறுத்திட்டு "இல்லேம்மா, நீ வேற ஆட்டோலே போய்க்கம்மா. இறங்கும்மா'ன்னதும் எனக்குக்கோபம் வர ஆரம்பிச்சது.
'காரணம் என்ன?'ன்னு கேட்டதுக்கு ' அட்ரஸ் சரியாச் சொல்லலை'யாம். இடம் தெரியாதுன்னாதெரியாதுன்னு சொல்லியிருக்கலாமுல்லையா? நான் உடனே' இங்கே இறங்க மாட்டேன். வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு'ன்னேன்.
"என்னாத்துக்கும்மா என்னாத்துக்கு? "
"கம்ப்ளெயிண்ட் பண்ணறதுக்கு. வேற எதுக்கு?"
"அட்ரஸ் சரியாச் சொன்னாத்தானே போமுடியும்? "
"இந்தா இதைப் பாரு. இதான் அட்ரஸ்"
நீட்டுனதாளை பார்த்துட்டு ஏதோ முணங்கிக்கிட்டே வண்டியைக் கிளப்பி வடபழனி கோயில் பக்கம் திரும்பி,அங்கே தெருமுனையில் இருந்த இட்டிலிக்கடைக் கையேந்தி பவன்லே 'ஏம்பா.. இந்த குமரன் இது எங்கேஇருக்கு?' அந்த ஆள் கை நீட்டுன திசையிலே போறோம். குமரன் காலனி!
"அது என்னா குமரன் இதுவா? அந்த இது அது இல்லை. பேசாம சாலிகிராமம் வழி போ."
செல்லுலே அண்ணனைக் கூப்பிட்டு, இப்பத்தான் வடபழனி கோயிலைச் சுத்திக்கிட்டு இருக்கோம். எப்படியும்சாயங்காலத்துக்குள்ளே வீட்டுக்கு வந்துருவேன்னு சொன்னென்.
என்னைத் திரும்பிப் பார்த்தவ(ன்)ர் உர்ருன்னு சாலிகிராமம் வந்தவுடன், நானே வழி சொல்லிவர ஒருவழியாஅண்ணன் வீட்டு வாசலுக்கு வந்தோம்.
இறங்கும்போது நான் கேட்டேன், 'முதல்லேயே வழி தெரியாதுன்னுசொல்லி இருந்தா,சாலிகிராமம் வழி நானெ சொல்லி இருப்பேன்லே'ன்னதும் தலையைக் கவிழ்ந்தபடிநின்னுக்கிட்டு இருந்தா(ன்)ர். பேசுன தொகைக்கு மேலே 10 ரூபாயை நானாகக் கொடுத்ததும், 'நான் இந்தப்பக்கம் புச்சும்மா. அதான் வழி தெரியாமச் சுத்தறதாப் போச்சு. அட்ரஸ்கண்டி கரீட்டாச் சொல்லி இருந்தாஅப்பவே வந்துருக்கலாம்'ன்னா(ன்)ர்.
"நான் அட்ரஸ்ஸைக் காமிச்சப்ப பார்த்துட்டு நேராக் குமரன் காலனிக்கு ஏன் போனே?"
" இங்க்லீஸ் படிக்கத்தெரியாதும்மா"
" அப்பத் தெரிஞ்சமாதிரி போனெ?"
பேசாம தலையைக் குனிஞ்சுக்கிட்டு இருந்த ஆளைப் பார்த்ததும் பாவமாவும், அதே சமயம் கோபமாவும்இருந்தது.
'நான் இதுவரை பாத்த ஆட்டோ ட்ரைவர்கள் எல்லாம் நல்லவங்க. நீ ஒருத்தன் தான் அடாவடி'ன்னு சொன்னதும் முகம் சுண்டிவிட்டது.
அதுக்குள்ளே பால்கனியிலே இருந்து பார்த்துக்கிட்டு இருந்த அண்ணன் கீழே இறங்கிவந்துட்டார், சில்லறை இல்லாம தடுமாறிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு.
'கொஞ்சம் குமரன் காலனியைச் சுத்திக் காமிச்சார். பார்த்துட்டு வந்ததாலே லேட் ஆயிருச்சு'ன்னு சொன்னதும் அசட்டுச்சிரிப்போடு ஆட்டோவைக் கிளப்பிக்கிட்டுப் போனார் அந்த ட்ரைவர்.
வீட்டுக்குள்ளே வந்து விஷயத்தைச் சொல்லி இப்படி கூவம் ரிவர் பக்கத்துலேன்னு சொல்லியும் ஆட்டோ ட்ரைவருக்கு வழி தெரியாமப் போச்சுன்னு புலம்புனப்ப அண்ணி ஒரே போடா போட்டாங்க.'கூவம் ரிவர்னு சொல்லக்கூடாதுங்க.அந்த காவா(ய்) பக்கமுன்னு சொல்லியிருக்கணும்'
மத்தியானம் மூணு மணிக்கு இலக்கியக்கூட்டம் போகணுமுன்னு முன்னாலெயே சொல்லி, எழுத்தாளர்பெருமைக்குக் கொஞ்சம் 'பில்ட் அப் 'கொடுத்தேன். சாப்பாட்டுக்கப்புறம் கிளம்புனோம். அண்ணாநகர்லேதான்கூட்டம்(!)ங்கறதாலெ வசதியாப் போச்சு. 'இரவா'ன்னு எல்லாரும் அன்பாக்கூப்புடற டாக்டர் வாசுதேவன் இடம் விவரம் கொடுத்துருந்தார்.
அண்ணாநகர் அமுதம் அங்காடிக்குப் பக்கத்துக் கட்டிடம். அங்கேபோய் இறங்கிட்டுச் சுத்திச்சுத்திப் பார்த்தாலும்அவர் சொன்ன அடையாளத்தைக் காணொம். எதுக்கு இருக்கு செல்? போடு போனை.
ஜிப்பா போட்டுக்கிட்டு செல்லுலே பேசிக்கிட்டே ( என்கிட்டேதான்) ஒருத்தர் வரார். எழுத்தாளர்ன்றது பார்த்தவுடனேதெரிஞ்சது. எப்படின்னு கேக்கக்கூடாது. அது அப்படித்தான்.
அங்கேயெ காரை நிறுத்திட்டு அவர்பின்னாலேயே போனோம். அங்கே நம்ம மது, இன்னும் சிலர் இருந்தாங்க.நம்ம அண்ணனையும் அண்ணியையும் உக்காரச் சொன்னாங்க.
'நீங்க சண்டையெல்லாம் போட்டு முடிங்க. அப்புறமா வர்றோமு'ன்னு அவுங்க கிளம்பிட்டாங்க.
'அது என்னாங்க சண்டை?'ன்னு கேட்டதுக்கு, 'இது இலக்கியக்கூட்டம்தானே?'ன்னு கேட்டுத் தெளிவுபடுத்திக்கிட்டுப்போனார் நம்ம அண்ணன்.
படம்: டாக்டர் இரா. வாசுதேவன்.
Friday, May 05, 2006
சுத்தி சுத்தி வந்தேங்க.....
Posted by
துளசி கோபால்
at
5/05/2006 12:55:00 PM
22
comments
Thursday, May 04, 2006
கதை கேளு கதை கேளு
ஒரு ஊர்லே ஒரு வீடு. புருஷன் , பொண்டாட்டி , மூணு புள்ளைங்கன்னு இருக்காங்க. புருஷன் வேலைக்குப் போறவர். பொண்டாட்டி வீட்டுலே இருக்கறவங்க.
எப்பவும் வேலைக்குப் போறது வர்றதுன்னு இருந்த புருஷனுக்கு ரொம்ப போரடிச்சுப்போச்சு இந்த வாழ்க்கை. ஒரு நாள்சாமிகிட்டே வேண்டிக்கறார். 'சாமி, நானே எப்பவும் வேலைக்குப் போய் சம்பாரிச்சுக் கொண்டுவந்து போடணும். இவ வீட்டுலே ஜாலியா இருக்கா. ஒரு நாளைக்கு என்னை அவளாவும், அவளை நானாவும் மாத்திரு. ச்சும்மா ஒரே ஒருநாள்,ஜஸ்ட் ஒரே ஒருநாள் நானும் 'ஜாலி'யா இருக்கேன்'ன்னு கேட்டார். சாமியும் 'நீயே இஷடப்பட்டுக் கேக்கறப்ப நானு ஏன் வேணாங்கணும்? அப்படியே ஆகட்டும்'னு சொல்லிட்டார்.
பொழுது விடிஞ்சது.
இவுங்க வீட்டுலே வேலைக்கு உதவியாளர்கள் எல்லாம் கிடையாது. பொண்டாட்டி ரூபத்துலே இருக்கற புருஷி(!) காலையிலே எழுந்து, ப்ரேக்ஃபாஸ்ட் தயாரிச்சாங்க. பிள்ளைங்களை எழுப்பி பள்ளிக்கூடம் போக உடுப்பு எல்லாம் எடுத்துக்கொடுத்து, தலைவாரி, ரெடி செஞ்சாங்க. அதுங்களுக்குக் காலை சாப்பாடு கொடுத்தாங்க. சாப்புட்டு முடிச்சதும் எல்லாரையும்ஸ்கூல் கொண்டுபோய் விட்டாங்க. வீட்டுக்கு வந்தவுடன், துவைக்கிற துணிமணிகளை மெஷீன்லே போட்டாங்க.
கடைக்குக் கிளம்புனாங்க. போற வழியிலேயே பேங்குக்குப் போய், போடவேண்டிய செக்கைப் போட்டுட்டு, வேணுங்கறக் காசை எடுத்துக்கிட்டு சூப்பர் மார்கெட் போய் சாமான் எல்லாம் வாங்கி வந்தாங்க. வீட்டுக்கு வந்து சாமான்களை எல்லாம் எடுத்து அதனதன் இடத்துலே வச்சுட்டு, பூனையோட 'லிட்டர் ட்ரே'யைச் சுத்தம் செஞ்சாங்க. அதுக்கு சாப்பாடு, தண்ணி எல்லாம் எடுத்துவச்சாங்க. நாயைக் குளிப்பாட்டுற நாளா இருந்ததாலே, அதையும் குளிப்பாட்டுனாங்க. அப்புறம் அதுக்கும் சாப்பாடு கொடுத்தாங்க. மெஷின்லே இருந்து துவைச்ச துணிகளை எடுத்து வெளியே காயப் போட்டாங்க.
இப்ப மணியைப் பார்த்தா 1 மணி. வேகம் வேகமா பிள்ளைங்க பெட்ரூமைக் கொஞ்சம் டைடி செஞ்சு பெட் விரிப்பு எல்லாம் சரியாப் போட்டாங்க. அப்படியே இவுங்க பெட்ரூமையும் சரி செஞ்சாங்க. வேக்கும் க்ளீனரை எடுத்துவீட்டைச் சுத்தம் செஞ்சுட்டு, அடுக்களைத் தரையை சோப்புத்தண்ணி போட்டு துடைச்சு விட்டாங்க.மணி மூணாகப்போகுது.
பள்ளிக்கூடத்துக்கு ஓடிப்போய் பிள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. வர்றவழியெல்லாம் பிள்ளைங்க அதுவேணும், இதுவேணும், இங்கே போகணும் அது இதுன்னு சொல்லிக்கிட்டே விவாதம் செஞ்சுக்கிட்டு வர்றதையெல்லாம் பொறுமையாக் கேட்டுக்கிட்டே வீட்டுக்கு வந்து எல்லாருக்கும், பாலும் பிஸ்கெட்டும் கொடுத்தாங்க. அப்புறம் அதுங்களையெல்லாம் ஹோம்வொர்க் செய்யச் சொல்லிட்டு, வெளியே காய்ஞ்சுகிட்டு இருந்த துணிங்களை எடுத்துவந்து அயர்ன் செய்ய ஆரம்பிச்சாங்க.போரடிக்காம இருக்க,அப்ப மட்டும் கொஞ்ச நேரம் டிவியைப் போட்டுக்கிட்டாங்க.
மணி அஞ்சாயிருச்சு. உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவினாங்க. ராத்திரி சமையலுக்குக் காய்கறிகளைச் சுத்தம்செஞ்சு , சமையலை முடிச்சாங்க. வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தார் துணைவன்(!)எல்லாரும் உக்காந்து சாப்பாட்டை முடிச்சாங்க. அடுக்களையைச் சுத்தம் செஞ்சு, பாத்திரங்களையெல்லாம் டிஷ் வாஷரிலே அடுக்குனாங்க.
பசங்களையெல்லாம் குளிக்க வச்சாங்க. ( வெள்ளைக்கார ஊர்களிலேபசங்க ராத்திரிதான் குளிக்குதுங்க) அப்புறம் எல்லாருக்கும் பெட் டைம் ஸ்டோரி சொல்லி படுக்க வச்சாங்க.
பூனை, நாய்க்கு ராச்சாப்பாடு கொடுத்தாங்க. மணி 10 ஆகப்போகுது. வீட்டுவேலை எல்லாம் முடிஞ்ச பாடு இல்லை.துவைச்ச துணிங்களை இன்னும் முழுசா அயர்ன் செய்யலை. பெட் ஷீட்டுங்க எல்லாம் மடிக்காம அப்படியே கிடக்கு.ஆனால் ரொம்பக் களைப்பா இருக்கு. நாளைக்குப் பார்த்துக்கலாமுன்னு படுக்கப்போனாங்க. அங்கே பார்ட்னர் ஏதோஆஃபீஸ் வேலை மடிக்கணிலே செஞ்சுக்கிட்டு இருந்தவர், அதை முடிச்சுட்டு துணையோடு கொஞ்ச நேரம் 'ஜாலி'யாஇருந்தார். ரொம்ப டயர்டா இருக்குன்னாலும் அதைச் சொல்லாம பொறுமையா இருந்துட்டாங்க.
மறுநாள் பொழுது விடிஞ்சது. படார்னு படுக்கையை விட்டு எழுந்த மனைவி( ரூபத்தில் இருக்கற புருஷன்) சாமிகிட்டே பிரார்த்தனை செய்யறார்,' கடவுளே, நான் தப்பா நினைச்சுட்டேன். பொண்டாட்டி ச்சும்மா வீட்டுலே இருக்கு. நான் மட்டும் குடும்பத்துக்கு உழைக்கிறேன்னு. இப்பத்தெரிஞ்சு போச்சு. தயவு செஞ்சு எங்களைப் பழையபடியே மாத்திரு. ஒரு நாளே போதுமுன்னு ஆயிருச்சு'ன்னு.
அப்ப சாமி சொன்னார்,' அது இப்ப முடியாது. ஏன்னா நேத்து நீ கர்ப்பமாயிட்டே. குழந்தை பிறக்கறவரைக்கும் நீஇப்படியேதான் இருக்கணும். வேற வழி இல்லே'ன்னு!
பி.கு: நண்பர் அனுப்புன மின்னஞ்சல். கொஞ்சம் நம்ம வேலையையும் காட்டினேன்.
Posted by
துளசி கோபால்
at
5/04/2006 11:47:00 AM
22
comments
Wednesday, May 03, 2006
மக்கள்ஸ்,
மக்கள்ஸ்,
ஒரு விஷயம் உங்ககிட்டே சொல்லிக்கலாமுன்னு இந்தப் பதிவு.
தமிழோவியத்துக்கு ஒரு ச்சின்னத் தொடர் எழுதறேன்.
போனவாரம் அறிவிப்பு போட்டுருந்தாங்க.
அதையே மறுபடி போடவேணான்னு ஒரு சுட்டி கொடுத்துருக்கேன்.
வழக்கம்போல் உங்கள் 'ஏகோபித்த ஆதரவைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..........................'
எலக்ஷன் நியூஸ் படிச்சுப் படிச்சு இப்படித்தான் ஆரம்பிச்சா நிறுத்த முடியறதுல்லை.
நேரம் கிடைக்கிறப்பப் படிச்சுப் பாருங்க.
என்றும் அன்புடன்,துளசி(அக்கா)
நன்றி: தமிழோவியம்
Posted by
துளசி கோபால்
at
5/03/2006 09:38:00 AM
22
comments